அந்த மண்டபம் உறவினர் நண்பர்களால் நிறைந்து இருந்தது…
திரும்பிய பக்கம் எல்லாம் சந்தோசமான சிரிப்பு சத்தமும் பேச்சு வார்த்தைகளும்தான் கேட்டது..
இன்னும் சில நிமிடங்களில் அங்கு இரு மனங்கள் இணைந்து ஒரு புது வாழ்க்கை தொடங்க போகிறது…
வள்ளி பதட்டம்மாய் மாப்பிள்ளை அறையில் இருந்து வெளியில் வந்தவர்கள் குரூப்பாக சிரித்து பேசிகொண்டிருந்தவர்கள் அருகில் சென்றார்.
“சதீஸ்…”
அதில் ஒருவன் திரும்பி பார்த்தவன் “சொல்லுங்கம்மா…”என்றபடி முன்னாடி வந்தான்..
“எழில் எங்கடா அவனோட ரூம்ல காணோம்?…”என அவர் தன் மகனை காணாமல் பதட்டம்மாய் கேட்க
“எழில காணோமா… ரூம்லதான ரெடியாகிட்டு இருந்தான்….”
“காணோம்டா… இன்னும் கொஞ்சநேரத்தில அவனை கூப்பிட்ருவாங்க போய் எங்க இருக்கான்னு பாருங்கப்பா…”
“நாங்க பாக்கறோம்மா…”என்றவர்கள் ஆளுக்கு ஒரு திசையில் மாப்பிள்ளை எழிலை தேடி சென்றனர்..
ஆகாஷ் மாடிபக்கம் சென்று பார்க்க அங்குதான் எழில் சிகரெட் பிடித்தபடி நின்றிருந்தான்..
தன் நண்பனை பார்த்தபின் தான் ஆகாஷ் நிம்மதியானான்..
வேகமாய் அவன் அருகில் சென்றவன் ‘அங்க எல்லாரும் உன்னை காணோம்ன்னு தேடிட்டு இருக்கோம் நீ இங்க சிகரெட் பிடிச்சுட்டு இருக்கியாடா….’என்று கோபம்மாய் கேட்க
“பச்…”சலித்துகொண்ட எழில் அவன் பக்கம் திரும்பி பார்த்து “உங்களை யாரு தேட சொன்னா…”என்றான் அலட்சியம்மாய்…
ஆகாஷ் அவன் தோளில் கைவைத்தவன் “என்னடா இப்படி பேசற முகுர்த்த நேரத்தில மாப்பிள்ளையை காணோம்ன்னா தேடத்தான செய்வாங்க…”என்றான்.
“அதெல்லாம் ஓடமாட்டேன்…. அதான் பிளாக்மெயில் பண்ணி எல்லாரும் கல்யாணத்துக்கு சம்மதிக்க வச்சுட்டீங்கல்ல….”
வாழ்க்கையே வெறுத்து போய் பேசும் தன் நண்பனை பார்க்கவே ஆகாஷ்க்கு கஷ்டமாக இருந்தது.
“இங்க பாருடா நடந்ததையே நினைச்சு உன் லைப் ஸ்பாயில் பண்ணாத… அம்மாவை நினைச்சு பாரு அவங்க உனக்காகதான் உயிர் வாழறதே….”
“போதும்டா டைலாக் எல்லாம் பேசுனது… இப்போ என்ன நீங்க எல்லாம் எனக்காக பார்த்து இருக்க பொண்ணை கல்யாணம் பண்ணனும் அதான… ஓகே பண்ணிக்கறேன்…”என்றவன் சிகரெட்டை கீழே போட்டு காலில் மிதித்துவிட்டு அங்கிருந்து செல்ல “டேய் நில்லுடா…”என்றபடி ஆகாஷ் அவன் பின்னாடியே ஓடினான்…
*********
ஐயர் சொன்ன மந்திரங்களை எழில் வேண்டா வெறுப்பாய் சொல்லிக்கொண்டிருக்க ஐயர் “பொண்ணை அழைச்சுட்டு வாங்க…”என்றார்..
மணப்பெண் சத்யாவை அழைத்துவர எல்லாரும் திரும்பி பார்த்தனர் மாப்பிள்ளை எழிலை தவிர..
சதீஸ் கீழே சரிந்து அமர்ந்தவன் எழிலுக்கு மட்டும் கேட்கும் குரலில் “டேய் சத்யா வர்றா..நீ கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணுடா உன்னோட லைப் பார்ட்டனர் போட்டோலதான் பார்க்கல இப்போயாவது பாரு… பாருடா…”என்றான்.
அவன் கட்டாயப்படுத்த எழில் நிமிர்ந்து பார்த்தான்…சொர்க்கத்தில் இருந்து இறங்கி வந்த தேவதைபோல் அவனை நோக்கி நடந்து வந்துகொண்டிருந்தாள் சத்யா..
ஒரு நொடிதான் அவளை பார்த்தான் பின் பார்வையை திருப்பி கொண்டான்..
சத்யா அவன் பக்கத்தில் வந்து அமர ஐயர் எழிலிடம் அவள் கழுத்தில் மாலையை போட சொல்ல மாலையை போட்டான்..
“மாங்கல்யம் தந்துனானே ந
மம ஜீவன ஹேதுனா
தண்டே பத்னாமி சுபகே
த்வம் ஜீவ சரதாம் சதம்….”
ஐயர் மந்திரம் சொல்லி தாலி எடுத்துகொடுக்க அதை வாங்கியவன் சத்யா கழுத்தில் கட்டினான்..
மூன்றாவது முடிச்சு போடும்பொழுது சத்யா நிமிர்ந்து அவனை பார்க்க எழிலும் பார்த்தான்.. இருவரின் விழிகளும் ஒருவரை ஒருவர் தழுவியது… உடனே எழில் பார்வையை திருப்பிகொண்டான்.
அவள் நெற்றியில் குங்குமம் வைத்து அக்னி சுற்றி வந்தவன் பெரியவர்கள் ஆசீர்வாதம் வாங்க சொல்ல தன்னுடைய அம்மா காலிலும் சத்யாவின் அம்மா அப்பா காலிலும் ஆசிர்வாதம் வாங்கினான்..
ஒருவழியாக எழில் சத்யாவின் திருமணம் நல்லபடியாக முடிந்தது..
நிலாமகள் வானில் உலா வந்துகொண்டிருந்த இரவு நேரம்…
எழில் கார்டனின் நின்று சிகரெட் பிடித்து கொண்டிருக்க அவன் அருகில் வந்தான் சதீஸ்…
“எழில் இங்க என்ன பன்ற?…”
“பார்த்தா தெரியலயா…”
“டேய்…நீ எல்லாம் தெரிஞ்சுதான் பேசறியா இன்னிக்கு உனக்கு பர்ஸ்ட் நைட்டா….”என்ற சதீஸ் எழில் திரும்பி பார்த்து முறைக்கவும் “அதான் கல்யாணம் ஆகிடுசுல்லடா இன்னும் என்ன…”என்றான்..
“எனக்கு பிடிச்சா கல்யாணம் நடந்துச்சு…”
“இங்க பாரு எழில் நடந்ததையே நினைச்சிட்டு இருக்காத…புது லைப் கிடைசிருக்குடா அதை சந்தோசமா வாழப்பாரு… புரிஞ்சுக்கோடா..”என்ற சதீஸ் அவன் தோளில் கைவைத்து “போக போக எல்லாம் சரியாகிடும்… இப்போவே உன்னை இந்த லைப்பை ஸ்டார்ட் பண்ண சொல்லி கம்பல் பண்ணல உனக்கு எப்போ இந்த லைப் பிடிக்குதோ அப்போ ஸ்டார்ட் பண்ணு பட் அந்த பொண்ணுக்கும் பீலிங்ஸ் இருக்கு அதுக்கும் ரெஸ்பெக்ட் கொடு… சத்யா வெயிட் பன்றா போ….போடா…”என்றவன் அவனை அனுப்பி வைக்க எழில் தன்னுடைய அறைக்கு சென்றான்.
***********
எழில் அறை மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது… அவன் கதவை திறந்து உள்ளே வர சத்யா பெட்டில் அமர்ந்து இருந்தவள் எழுந்து நின்றாள்.
கதவை லாக் செய்தவன் திரும்ப சத்யா “என்னாச்சு?… ஏன் இவ்வளவு நேரம்?… ஓ சிகரெட் பிடிக்க போயிருந்தீங்களா?…”என்று கேட்க எழில் கண்கள் சுருக்கி பார்த்தான்..
“பிரண்ட்ஸ் சொன்னாங்க உங்களுக்கு சிகரெட் பிடிக்கிற பழக்கம் இருக்குன்னு… நானுமே பார்த்தேன்…”என்றவள் நிறுத்தி “அப்பறம் என்னை பிடிச்சிருக்கா?…”என்று கேட்க
அவளின் இந்த கேள்வியில் எழில் அவளையே பார்த்தானே தவிர பதில் சொல்லவில்லை..
அவன் கட்டிய தாலியை எடுத்துகாட்டி “என்னடா இதை கட்டியாச்சு இப்போபோய் பிடிச்சிருக்கான்னு கேட்கறா இவ என்ன பைத்தியம்மான்னு நினைக்கறீங்களா…”என்றவள் முகம் அப்படியே கோபத்தில் மாற “நீயெல்லாம் மனுஷனா…”என்றாள்.
எழில் அவள் கோபத்தில் அதிர்ந்தவன் அடுத்தநொடியே அவனும் கோபம்மாய் “ஏய்… என்ன ஓவரா பேசற?…”என்றான்.
“ஓவரா பேசறன்னா இதுக்கு மேலையும் பேசுவேன்… ஆமா நீ என்ன லவ் பெய்லியர் கேஸ்தான…சொன்னாங்க உன்னை நீ லவ் பன்ற பொண்ணு விட்டுட்டு போயிட்டாளாம்… என்ன உன் டார்ச்சர் தாங்க முடியாம விட்டுட்டு போயிட்டாளா…அதுக்கு அப்பறம் சிகரெட் ட்ரிங்ஸ்ன்னு நல்லா என்ஜாய் பண்ண போல….”
எழில் கோபத்தில் பற்களை அழுந்தகடித்தவன் “இப்போ எதுக்கு என்னை பத்தி பேசிட்டு இருக்க….”என்று கேட்க
“ஏன்னா…இப்போ உன்னால நானும் சப்பர் ஆகறேன்ல அதனாலதான்… நீ லவ் பண்ணுவ அந்த பொண்ணு உன்னை விட்டுட்டு போவா அதனால நீ குடிச்சிட்டு உன் லைப்பை ஸ்பாயில் பண்ணிப்ப இதுல நான் வந்து உன்னை திருத்தனுமா… எனக்கு வேற வேலை இல்ல….”
அவள் கோபத்தை பார்க்கும்பொழுது அவளுக்கு தன்னை பிடிக்கவில்லை என்று எழில்க்கு நன்றாகவே புரிந்துவிட
“நான் லவ் பண்ண கதை எல்லாம் உனக்கு முன்னாடியே தெரிஞ்சிருக்குல்ல அப்பறம் எதுக்கு என்னை கல்யாணம் பண்ணுன?…”
“ஏன்னா…”என கோபம்மாய் ஆரமித்தவள் “நோ சத்யா இவன்கிட்ட சொல்லாத… ரொம்ப திமிரு பிடிச்சவனா தெரியறான்…நீ போட்ருக்க பிளான் தெரிஞ்சு சொதப்பி விட்டுட்டான்னா…”என தனக்குள் சொல்லிக்கொண்டவள் அமைதியாக எழில் அவளையே பார்த்தவன் முகத்திற்கு நேராக சொடக்கிட சத்யா நிமிர்ந்து பார்த்தாள்..
எழில் சொடக்கிடவும் நிமிர்ந்து பார்த்தவள் தன் விழிகளாலயே அவனை எரிப்பதுபோல் பார்த்தாள்.
புருவம் உயர்த்தியவன் “என்னை பிடிக்கல… என்னோட லவ் பெயிலியர் கதை எல்லாம் தெரிஞ்சு எதுக்கு என்னை மேரேஜ் பண்ணிக்கிட்ட?..”என்று மறுபடியும் கேட்க
“என் வீட்ல கம்பல் பண்ணி மேரேஜ் பண்ணி வச்சாங்க….”
“சேம் என்னையும் என் அம்மா பிரண்ட்ஸ் பிளாக்மெயில் பண்ணிதான் மேரேஜ் பண்ணி வச்சாங்க… உனக்கு எதாவது திட்டனும் கோபப்படனும் உன் அப்பா அம்மாகிட்ட கோபத்தை காட்டு…என்கிட்ட கோபமா பேசறது எல்லாம் வச்சுக்கிட்ட…”என்றவன் விரல் நீட்டி எச்சரிக்க
அவன் அருகில் நெருங்கி வந்து நேருக்கு நேர் அவன் பார்வையா எதிர்கொண்டவள் “என்ன பண்ணுவ?…”என்றாள்..
நீட்டிய விரலை மடக்கியவன் “உனக்கு என் கோபத்தை பத்தி தெரியாது… அடங்கி அமைதியா இருக்கிறது உனக்கு நல்லது…”என்றான்.
இதழ் சுழித்து திமிராய் சிரித்தவள் “உனக்குதான் இந்த சத்யா பத்தி தெரியல…கூடதான இருக்க போற சீக்கிரம் தெரிஞ்சுப்ப…”என்றாள்..
“உன்கிட்ட பேசி டைம் வேஸ்ட் பண்ண முடியாது…”என்றவன் பெட் அருகில் சென்று பில்லோவை எடுக்க சத்யா அவன் பக்கம் திரும்பி பார்த்து “வெளிய போய் படுக்க போறியா?…”என்றாள்..
திரும்பியவன் “நான் எதுக்கு வெளில போகணும்… திஸ் இஸ் மை ரூம்….”என்றான்..
“இப்போ இது என்னோட ரூமும்தான்..”
“உன்னோட ரூமா?…”
‘அப்கோர்ஸ்… “என்றவள் கழுத்தில் கிடந்த தாலியை எடுத்துகாட்டி “நான் பெட்ல படுப்பேன்.. நீ சோபால படுத்துக்கோ…”என சொல்ல
இதழ் சுழித்தவன் “நான் ஏன் சோபாவுக்கு போகணும் இது என் ரூம் இது என்னோட பெட்…உனக்கு வேணும்ன்னா நீ போய் சோபால படுத்துக்கோ…”என்றவன் எடுத்த தலையனையை பெட்டில் போட்டுவிட்டு அதில் படுத்துகொண்டான்..
எழில் விழிமூடிக்கொள்ள சத்யா அவனை முறைத்து பார்த்துகொண்டிருப்பதை அவனால் உணர முடிந்தது..
“நீ என்ன முறைச்சாலும் கோபப்பட்டாலும் ஐ டோன்ட் கேர்… பொண்ணை பார்த்து கட்டி வச்சிருக்காங்க பாரு..”என தன்னுடைய அம்மாவையும் பிரண்ட்ஸையும் திட்டிகொண்டவன் சில நிமிடங்களிலேயே தூங்கிவிட்டான்..
சத்யா அவனையே பார்த்தபடி நின்றவள் பின் பெருமூச்சு இழுத்துவிட்டு முதலில் சோபாவுக்கு செல்லபோய் “ம்ம்ஹும் என்னோட பிரீடம்மை பறிச்சவன் இவனை பர்ஸ்ட்டேவே இப்படி விட்டுட்டா அப்பறம் இந்த சத்யான்னா ஒரு பயம் இல்லாம போய்டும்…நான் எதுக்கு சோபால தூங்கணும் இது இவனோட ரூம் பெட்ன்னா எனக்கும்தான… தாலி கட்டுனான்ல டுடேல இருந்தே என்னோட டார்ச்சர அனுபவிக்கனும்…”என கொடூரத்தனம்மாய் தனக்குள் சொல்லிக்கொண்டவள் அந்த கிங் சைஸ் பெரிய பெட்டில் அவன் ஓரமாய் படுத்திருக்க அதற்கு ஆப்போசிட் சைடில் சென்று படுத்தான்..
காலையில் இருந்து கல்யாண அலைச்சலில் சோர்வாக இருக்க பிடிக்காத திருமணம் என்று எல்லாம் யோசித்து அவள் அழவில்லை.. அப்படி அழும்பெண்ணும் அவள் கிடையாது… சோர்வாக இருக்கவும் விழிமூடி தூங்க முயற்சி செய்ய சில நிமிடங்களிலேயே உறக்கம் அவளை தழுவியது..
இருவரும் நன்றாக தூங்கிக்கொன்டிருக்க சத்யா புரண்டு படுக்கும்பொழுது ஓங்கி தூக்க கலக்கத்தில் ஒரு உதை எழில் பெட்டில் இருந்து கீழேயே விழுந்துவிட்டான்.
கீழே விழுந்த வேகத்தில் அவன் நெற்றியில் அடிபட “அம்மா…”என்று வலியில் முனுமுனுத்தபடி நிமிர்ந்து பார்த்தான்..
சத்யா அவனை உதைத்து தள்ளிவிட்டு தலையணையை கட்டிபிடித்துகொண்டு தூங்கிக்கொண்டிருந்தாள்..
“என்னை தள்ளிவிட்டுட்டு எப்படி தூங்கிட்டு இருக்கா பாரு….இவளை…”எழுந்தவன் அவள் அருகில் செல்லபோக சத்யா மறுபடியும் புரண்டு படுத்தாள்..
இப்பொழுது அவள் சென்டருக்கு வந்து முழு பெட்டையும் ஆக்ரமிப்பது போல் படுத்துவிட எழில் தூக்கம் கலைந்த கோபம் அவள் உதைத்து தள்ளிய கோபம் என்று எல்லாம் சேர்ந்துவிட நெற்றியை தேய்த்தபடி “இவ
வேணும்ன்னு பன்றாளா இல்ல தூக்கத்துல பன்றாளா…உன்னை காலையில பார்த்துக்கறேன்டி…”என முனுமுனுத்துகொண்டவன் பில்லோ ஒன்றை எடுத்துகொண்டு சோபாவில் சென்று படுத்துகொண்டான்…
சோபா அவனுக்கு கம்பர்ட்டபிளாக இல்லை.. புரண்டு புரண்டு படுத்தவன் நள்ளிரவுக்கு மேல்தான் தூங்கவே ஆரமித்தான்..
இப்படி இருவரின் முதல் இரவே மோதலுடன் ஆரமிக்க இனி இவர்கள் வாழ்க்கை எப்படி இருக்க போகிறதோ…
No comments yet.