Mh 1
பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும் கோயம்புத்தூர் நகரம்… காலையில் டிராபிக்கில் சிக்கி தவிக்கும் வாகனங்கள்.. எறும்பு கூட்டமாய் செல்லும் மக்கள்.. அந்த காலை நேரத்திலேயே அவ்வளவு பரபரப்பாக காணப்படும் கோயம்புத்தூர்….
ஏர்போர்ட்…
பயணிகள் எல்லாரும் பிளைட்டில் ஏறி இருக்க அவர்களோடு ஒருத்தியாக நம் நாயகி ஆருத்ராவும் அமர்ந்து இருந்தாள். எப்பொழுதும் கலகலப்பாக இருக்கும் அவள் அன்று சோகமே உருவான முகத்தோடு அமர்ந்து இருந்தவள் மெல்ல கண்களை மூடி சாய்ந்து அமர்ந்தாள்.
ஆருத்ரா.. 21வது வயதில் அடியெடுத்து வைக்கும் அழகு தேவதை.. அவளை கடந்து செல்லும் ஆண்கள் யாராக இருந்தாலும் அவளை ஒரு தடவையாவது திரும்பி பார்க்க வைக்கும் அழகி.. கணேஷ் சிவனின் பக்தன் என்பதால் தன் மகளுக்கு ஆசை ஆசையாக ஆருத்ரா என பெயர் வைத்தார்.
“ ஆருத்ரா.. ஆருத்ரா.. “ என அவளது அப்பா கணேஷன் வெளியே கதவை தட்ட அறக்க பறக்க எழுந்து அமர்ந்தவள் முடியை க்ளிப்பிற்குள் அடக்கி கொண்டு பெட்டில் இருந்து கீழே இறங்கியவள் வேகமாய் ஓடி சென்று கதவை திறக்க கையில் ஆவி பறக்கும் காபியுடன் நின்றிருந்தார் அவர்.
“ விஷ் யூ ஹாப்பி பர்த்டே மை டியர் பிரிண்சஸ்.. “ என அவர் வாழ்த்து சொல்ல சிரித்து கொண்டே அவரை அணைத்து கொண்டாள் அவள்.
“ இந்தா இது நான் உனக்காக வாங்குன பர்த்டே ட்ரெஸ்.. “ என கணேஷ் அந்த கவரை நீட்ட ஆவலுடன் அதை வாங்கி பிரித்து பார்த்தவள் உள்ளே இருந்த சேரியை பார்த்ததும் முகம் மலர்ந்தாள்.
“ அப்பா.. சேரியா.. ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்பா.. இதுதான் என்னோட பர்ஸ்ட் சேரி.. ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்பா.. லவ் யூ ப்பா.. “ என்ற ஆருத்ரா கணேஷை அணைத்து கொள்ள அவளது உச்சந்தலையில் முத்தமிட்டார் அவர்.
“ சரி ஓகே.. உனக்கு பிடிச்ச பில்டர் காபி கொண்டு வந்து இருக்கேன்.. இதை குடிச்சுட்டு சீக்கிரம் ரெடியாகி வா.. நான் இன்னிக்கு லீவு போட்டுட்டேன்.. நீயும் காலேஜ் லீவு போட்டுரு.. இன்னிக்கு புல்லா உனக்கு பிடிச்ச இடத்துக்கு எல்லாம் போக போறோம்.. இதுதான் என்னோட பர்த்டே கிப்ட்.. ஓகேவா.. “ என கணேஷ் கேட்க மறுபடியும் அவரை அணைத்து கொண்டு தேங்க்ஸ் சொன்னாள் ஆருத்ரா.
“ ஹலோ… ஹலோ.. “ என குரல் கேட்க தந்தையின் நினைவில் இருந்து மீண்டவள் கண்களை திறந்து பக்கத்தில் இருந்தவனை பார்க்க,
“ சீட் பெல்ட்.. “ என சொல்லியவன் அவன் வேலையை தொடர ஆருத்ரா அவன் சொல்லியதை காதில் வாங்காதது போல் உட்கார்ந்து இருந்தவள் ஏர்கோஸ்ட் வந்து சொன்னதும் சீட் பெல்ட்டை போட்டு கொண்டாள்.
இந்த உலகத்தில் அவள் அளவுக்கு அதிகமாக நேசிக்கும் ஒருவர் என்றால் அது அவளது அப்பா கணேஷ் மட்டுமே.. அவரை எந்த அளவுக்கு நேசிக்கிறாளோ அதே அளவுக்கு அவள் வெறுக்கும் ஒரே நபர் அவளது தாய் மரகதம்.. யாராவது அவளது அம்மா பற்றி பேசினால் பெயருக்கு ஏற்றது போல ருத்ரதாண்டவம் ஆடி விடுவாள்.
அவளை பற்றி தெரிந்த யாருமே அவளிடம் அம்மாவை பற்றியோ அம்மா என்ற வார்த்தையோகூட அவளிடம் சொல்ல பயப்படுவர்.
ஆருத்ரா தன் கனவில் கூட எதிர்பார்க்காத ஒன்றாக தான் உயிருக்கு உயிராக நேசித்த தந்தையை அவளிடம் இருந்து பறித்து கொண்டு அவள் அளவுக்கு அதிகமாக வெறுக்கும் அம்மாவிடமே கொண்டு போய் சேர்க்கிற விதியை நினைத்து சிரித்தவள் பிளைட் கிளம்பியதும் அவளது இதயம் வேகமாய் துடித்தது.
பிளைட்டின் ஜன்னல் கண்ணாடி வழியாக வெளியே தெரிந்த ஆகாயத்துக்குள் தன் தந்தை தெரிகிறாரா என ஆவலாய் தேடியவள் அவரை காணாது ஏமாந்து போனவளின் கண்ணில் இருந்து கண்ணீர் வழிந்தது…
சென்னை ஏர்போர்ட்..
பிளைட் லேண்ட் ஆனதும் ஆருத்ரா மெல்ல கண்களை திறக்க பக்கத்தில் இருந்தவனை காணாது குழம்பி போனாள். பிளைட்டில் இருந்து எல்லாரும் இறங்கிக்கொண்டு இருக்க அவளும் எழுந்து வேகமாய் வெளியே வந்தாள்.
வெளியே வந்ததும் தன்னை அழைத்து வந்தவனை தேட அவனோ எங்கேயும் காணவில்லை. ஆருத்ராவிற்கு பயங்கரமாக கோபம் வர தன் போனை எடுத்து ஆன் செய்தாள். கால் லாங்க்குள் செல்ல போக பின்னாடி யாரோ சொடக்கு போட்டு கூப்பிடும் சத்தம் திரும்பி பார்த்தாள் ஆருத்ரா.
கண்களில் கூலிங் கிளாஸ் போட்டிருந்த அதிதேவ் அதை கழட்டிவிட்டு அவளை பார்த்து தீயாய் முறைத்தவன், “ யூ இடியட்.. அறிவில்ல உனக்கு.. இப்படித்தான் உன் பாட்டுக்கு இறங்கி வருவியா.. நான் உன்னை காணோம்னு உள்ள தேடிட்டு இருந்தேன்.. “ என சொல்ல ஆருத்ராவும் பதிலுக்கு அவனை தீயாய் முறைத்தாள்.
“ ஹலோ மிஸ்டர்.. என்ன உங்க இஷ்டத்துக்கு பேசிட்டே போறீங்க.. நான் ஏதோ என்னையும் மறந்து அசந்து தூங்கிட்டேன்.. கண் முழிச்சு பார்த்தேன்.. உங்களை உள்ள காணோம்.. எல்லாரும் இறங்கிட்டு இருந்தாங்க.. அதனால நானும் இறங்கிட்டேன்.. இதுல என்ன இருக்கு.. ஆமா நீங்க எங்க போனீங்க.. “ என ஆருத்ரா கோபமாய் கேட்க எதிரே இருந்தவனோ கோபத்தை கட்டுப்படுத்திக்கொண்டு அவளை பார்த்தான்.
அவன் பதில் எதுவும் சொல்லாமல் நடந்து செல்ல ஆருத்ராவும் அவனுக்கு பின்னால் கொஞ்சம் இடைவெளிவிட்டு நடந்து சென்றாள்.
புரோசிஜர் எல்லாம் முடிந்து இருவரும் வெளியே வர அவர்களது லக்கேஜூம் வெளியே வந்தது. ஆருத்ரா அவளது பெட்டியை எடுத்துக்கொள்ள தேவ் அவனது பேக்கை எடுத்துக்கொண்டு வெளியே வர அவர்களுக்காக காத்துக்கொண்டிருந்தான் அதிதேவின் தம்பி ஆகாஷ்.
தேவ்வின் பேக்கை வாங்கிக்கொண்ட ஆகாஷ் ஆருத்ராவை பார்த்தவன், “ உங்க பெட்டியை கொடுங்க.. “ என சொல்ல,
“ ஆகாஷ்.. அதெல்லாம் ஒன்னும் தேவையில்ல..போய் காரை எடு.. “ என சொல்லிய அதிதேவ் காரின் முன்னாடி கதவை திறந்து உள்ளே ஏறிக்கொள்ள ஆருத்ராவோ அவனை முறைத்தபடியே நின்றிருந்தாள். ஆருத்ராவை பார்த்த ஆகாஷ்,
“ அண்ணா அப்படித்தான்.. நீங்க தப்பா எடுத்துக்காதீங்க.. டிக்கி ஓபன் பண்றேன்.. நீங்க பெட்டியை அதுல வச்சுக்கோங்க.. “ என சொல்ல ஆருத்ரா வெறுமனே தலையை மட்டும் ஆட்டினாள்.
ஆகாஷ் சென்று டிக்கியை ஓபன் செய்து தேவ்வின் பேக்கை வைத்துவிட்டு வர ஆருத்ரா அவளது பெட்டியை எடுத்துக்கொண்டு பெட்டியை எடுத்துக்கொண்டு பின்னாடி சென்றாள்.
“ அந்த நெட்டயனுக்கு எவ்ளோ திமிரு.. முதல் தடவையா பார்க்கற பொண்ணுகிட்ட ஒருத்தன் இப்படியா நடந்துப்பான்.. இந்த அப்பா மட்டும் என்கிட்ட சத்தியம் வாங்குல அப்படினா நான் இங்க வந்துருக்கவேமாட்டேன்.. இந்த மாதிரி ஒருத்தனை என் லைப்ல நான் பார்த்திருக்கவும் மாட்டேன்.. ச்ச.. “ என காலை தரையில் ஓங்கி மிதித்தாள்.
அவளை இன்னும் காணாது இறங்கி வந்த ஆகாஷ், “ என்னாச்சுங்க.. பெட்டியை உள்ள வைக்க முடியலயா.. “ என கேட்க ஆருத்ரா அவனிடம் பதில் எதுவும் சொல்லாமல் பெட்டியை டிக்கியின் உள்ளே வைத்துவள் நடந்து சென்று பின்னாடி கதவை திறந்து அதில் ஏறி உள்ளே உட்கார்ந்தாள்.
அவளது நடவடிக்கையை கண்டு சிரித்த ஆகாஷ், “ ஷி இஸ் சம்திங் டிபரண்ட்.. “ என தனக்குள் சொல்லிக்கொண்டவன் சிரித்துக்கொண்டே காரில் போய் உட்கார தேவ் அவனிடம் காரை எடுக்க சொன்னான்.
அவனிடம் சரியென தலையசைத்த ஆகாஷ் காரை ஸ்டார்ட் செய்து அங்கிருந்து கிளம்ப ஆருத்ராவின் புதிய வாழ்க்கை அத்தியாயம் இங்கிருந்து தொடங்கியது..
No comments yet.