அத்தியாயம் -9
கதவருகில் நின்று இருந்த தீனாவை தள்ளிக்கொண்டு உள்ளே புகுந்த குருவை பார்த்து முறைத்து தள்ள மட்டும் தான் தீனாவால் முடிந்தது…
ஏண்டா!! “ஒழுங்கா வர மாட்டியா இவ்வளோ இடம் இருக்கும்போது என்ன இடிக்கணுமா??
அது வந்து சார்ர்ர்!!!! நீங்க கதவு பக்கத்துல நின்னு எதயோபார்த்துட்டு சிலை மாறி ரொம்ப நேரமா நின்னுட்டே இருந்திங்களா
ஒருவேளை எனக்கு தெரியாம நீங்க கண்ணாமூச்சி விளையாடுறிங்கனு! என் போலீஸ் மூளை சொல்லுச்சு அதனால நான் உங்கள தொட்டுட்டேன் .நீங்க இப்ப அவுட் நான் போய் ஒழுஞ்சுப்பேனாம் நீங்க வந்து கண்டுபிடிங்க ஓகே வா….எடு ஜூட்ட்ட்!!!!என்று தீனாவை பேச விடாமல், நின்றால் கண்டிப்பாக முதுகில் டின் கட்டிவிடுவார் என்று வாயில் வந்ததை உளறிவிட்டு ஓடி விட்டான்.
உள்ளே குடுகுடுவென்று ஓடி வந்தவனை நோக்கி கேள்வியாக ….
யார் நீங்க? உங்களுக்கு யார் வேணும் எதுக்காக இப்படி ஓடி வர்றீங்க
எங்க வீட்ல ஏதாவது திருட வந்து இருக்கீங்களா உங்கள பாத்தா அப்படித்தான் தெரியுது…
எங்க மேடம் கொஞ்சமாவது மனசாட்சி வேண்டாமா? என்ன பாத்தா உங்களுக்கு திருடன் மாதிரி இருக்கா ?
எவ்ளோ பெரிய சின்சியரான போலீஸ் தெரியுமா? என்னோட வாழ்க்கை சரித்திரத்தில் நான் எவ்வளவு திருடங்களை புடிச்சு கொடுத்திருக்கேன் என்ன பாத்தா உங்களுக்கு திருட மாதிரி தெரியுதா?
பின்னால் நடந்து வந்து கொண்டிருந்த தீனாவை பார்த்த மது “சார் இங்க பாருங்க நம்ம வீட்டுக்கு யாரோ ஒருத்தன் வந்து தேவையில்லாம பேசிட்டு இருக்கா எனக்கு தெரிஞ்ச ஏதோ நம்ம வீட்ல திருட தான் வந்து இருக்காரு நீங்க என்னனு கொஞ்சம் பாருங்களேன்…
என்னனனன? ஃபேமிலியா சேர்ந்து என்ன கலாய்க்கிறீங்களா? நான் யார் தெரியுமா?என் போஸ்டிங் என்ன தெரியுமா? நான் எவ்வளவு பெரிய டான் தெரியுமா? இந்த ஊர்ல என் பேரை கேட்டா நடுங்காத திருடங்களே இல்ல தெரியுமா? என்ன பார்த்து நீங்க திருடன் சொல்றீங்களா!…
டேய் கொஞ்சம் வாயை தான் மூடேண்டா..
இங்க பாருங்க மது.. இவன் என் பிரண்டு என்கூட தான் ஒர்க் பண்ணிட்டு இருக்காரு .நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து தான் இப்போ ஒரு கேஸ் பாக்குறோம் அத பத்தி பேச அடிக்கடி வருவான் .. என்ன இவ்வளவு பேசுறாங்களா யோசிக்காதீங்க மது எப்பவுமே அப்படித்தான்.
அவங்க என்னை யாருன்னு மட்டும் தான்டா தீனா கேட்டாங்க?
உன்னை நான் இப்படி வாய் பேசுறத அதெல்லாம் சொல்ல சொன்னாங்களா? நீயே போதுண்டா…
நம்ம குட்டி பையன பார்த்துக்கறதுக்காக கேர்டேக்கர் வந்து இருக்காங்கன்னு சொன்னேன்ல! அவங்க தானே இவங்க
ஹாய் சிஸ்டர்! என் பேரு குருநாத் நானும் இவனும் தான் படா தோஸ்து அடிக்கடி வருவேன் முடிஞ்ச அளவுக்கு எனக்கு ஏதாவது ஸ்நாக்ஸ் செஞ்சு வைக்காம பெரிய விருந்தாவே எப்பவும் வச்சிருங்க.
முடிஞ்சா நான் எனக்கு என்ன என்ன வேணும்னு மெனு வேணும்னா கொடுத்துடுற. நான் வரும்போதுலாம் அதை செஞ்சு கொடுத்துட்டீங்கன்னா இன்னும் கொஞ்சம் நல்லா இருக்கும்.
மதுவிற்கு குருவின் பேச்சு வியப்பாகவும் பிடித்தும் இருந்தது…போலீஸ் என்றாலே விரைப்பாக இருப்பார்கள் என்ற அவள் எண்ணம் சுக்குநூறாக உடைந்தது..
குருவின் பேச்சிற்கு சிநேகபுன்னகையுடன் சரி என்று சொல்லி கொண்டிருக்க.
குரு கண்ணா !!வந்தது உன் வேலையை ஸ்டார்ட் பண்ணிட்டியா!!! நீ இப்படி பேசிட்டு இரு நான் உனக்காக சூடா டீ போட்டு தரேன் குடிங்க குடிச்சிட்டு அதுக்கப்புறம் பேசிக்கலாம் என்று அங்கே அவர்களின் உரையாடலின் கலந்து கொண்டார் கண்ணம்மா..
சரி குரு மேல தான் கேஸ் பைல்ஸ் இருக்கு நீ கொஞ்சம் பாத்துட்டு இரு நான் அதுக்குள்ளயும் இவங்கள பர்சேஸ்க்கு கூட்டிட்டு போகணும் கூட்டிட்டு போயிட்டு என்னன்னு மட்டும் பாத்துட்டு வந்துடறேன் வந்தது நம்ம மத்த விஷயங்களை பேசலாம் என்ன ஓகேவா…!!
என்று சொன்ன தீனாவை நிமிர்ந்து ஆச்சரியமாக பார்த்தான் இத்தனை நாட்களில் கேஸ் தவிர வேற எந்த வேலைக்காகவும் வெளியே செல்லாதவன் இன்று இவரை கூப்பிட்டுக்கொண்டு பர்சேஸ் செய்யப் போகிறேன் என்று சொன்னது ஆச்சரியமாகத்தான் இருந்தது.
திரும்பி ஒருமுறை கண்ணம்மாவை பார்த்த குருவிற்கு அவரின் கண்ணசைவு ஏதோ சொல்வது போல் இருக்க தீனா சொன்னதை கேட்டுக் கொண்டு அமைதியாக இருந்து விட்டான்..
சரி ஓகே! நீங்க பார்த்து போயிட்டு வாங்க நான் என்னன்னு பாத்துட்டு இருக்கேன் அதுக்கு அப்புறம் நம்ம மத்த விஷயங்களை பேசிக்கலாம்.
சரிங்க மது நீங்க போய் பையன தூக்கிட்டு வாங்க நம்ம என்னென்ன வேணுமோ அதை வாங்கிக்கலாம் நீங்க லிஸ்ட் எழுதிட்டிங்களா இல்ல இனிமேதான் எழுதணும்னா ஒன்னும் பிரச்சனை இல்ல எழுதிக்கோங்க.
இல்ல சார்! நான் எல்லாமே எழுதிட்டேன். இனி நாம கிளம்புனா போதும் உள்ள தான் குட்டி இருக்கா அம்மா தான் வச்சிருக்காங்க நான் போய் கூட்டிட்டு வரேன் நாம கிளம்பலாம்.
மதுமா இருங்க ரெண்டு பேரும் டீ குடிச்சிட்டு போவீங்களா…
சரி கண்ணம்மா இருங்க நான் குட்டி பையன தூக்கிட்டு வரேன்.
உக்காந்து டீ குடி நான் போய் அவனை தூக்கிட்டு வரேன் அவன் வந்தானா உன்னை அப்புறம் டீ குடிக்க விடமாட்டான். அப்புறம் மேல சிந்திட்டா கொஞ்சம் சிரமமா இருக்கும் .
நீ பொறுமையா உட்கார்ந்து டீ குடிடா. நான் போய் அவனை கூட்டிட்டு வரேன் என்று உள்ளே சென்று குழந்தையை தூக்கி வர சென்று விட்டார்….
மது எல்லா திங்ஸ் எழுதிட்டீங்களா ஏதாவது மிஸ் ஆகுதா சப்போஸ் நீ அங்க போய் பார்த்ததும் ஏதாவது வாங்கணும் அப்படினாலும் வாங்கிக்கோங்க யோசிக்க வேண்டாம் எல்லாத்தையும் வாங்கிக்கோங்க..
ஆமாங்க சார் எல்லாமே நான் எடுத்துட்டேன். அது போக ஏதாவது வேணும்னாலும் நான் பார்த்து வாங்கிக்கிறேன் அப்புறம் உங்க கிட்ட ஒன்னு கேட்டு இருந்தேன் நீங்க அதை பத்தி எதுவும் சொல்லவே இல்லையே.
“என்ன மது கேட்டீங்க”…
அம்மாவுக்கும் ஒரு டைம் செக் பண்ணனும் அவருக்கு எந்த மாதிரி எக்சர்சைஸ் பண்ணி எந்த மாதிரி சாப்பாடு கொடுக்கலாம் சொல்லிட்டு பார்க்கிறதுக்காக உங்களுக்கு கேட்க சொல்லி இருந்தேன் இல்லையா?….
ஞாபகம் இருக்கு மது அம்மாவுக்கு ஆல்ரெடி பாத்துட்டு இருக்க டாக்டர் நாளைக்கு வீட்டுக்கு வர சொல்லி இருக்கேன் அவங்க வந்து என்னென்ன பண்ணனும் சொல்லிடுவாங்க நீங்களும் ஏதாவது கேக்கணும் அப்படின்னா நாளைக்கு கேட்டுக்கோங்க…
சரிங்க சார்…
பிறகு இருவரும் எதுவும் பேசாமல் அவரவர் டீயை குடித்துக் கொண்டிருக்க குருவால் தான் நடப்பதை ஏற்றுக் கொள்ளவும் முடியாமல் என்ன நடக்கிறது என்று தெரியாமல் மண்டையை பிடித்துக் கொள்ள வேண்டிய நிலையில் உட்கார்ந்து இருந்தான்..
என்னவா இருக்கும் கண்ணம்மா ஏதோ சொல்லணும்னு சொன்னாங்களே? ஒருவேளை அதுவா இருக்குமோ? ஒருவேளை இதுவா இருக்குமோ? ஒருவேளை எதுவுமே இல்லாம இருக்குமோ? அய்யய்யோ மண்டை வலிக்குதே முதல கிளம்புனதும் என்னென்றதை கேட்கணும் அப்பதான் எனக்கு கொஞ்சம் நிம்மதியா இருக்கும்.
என்ன அண்ணா ஏதோ தானா பேசிட்டு இருக்கீங்க உங்களுக்கு ஏதாவது வேணுமா?
இல்லம்மா ஒன்னும் வேண்டாம் கேஸ் பத்தி யோசிச்சிட்டு இருக்கேன் வேற ஒன்னும் கிடையாது…
தீனா குருவை ஒரு நம்பாத பார்வை பார்த்துவிட்டு,” மைண்ட் வாய்ஸ் நினைச்சு நீ சத்தமா பேசிட்ட அதனாலதான் அவங்க கேக்குறாங்க கொஞ்சம் நீ அடக்கி வாசிச்சேன்னா நல்லா இருக்கும் “.
அது ஒன்னும் இல்ல சிஸ்டர் என்னோட ஆளுக்கு எனக்கு சமைச்சு கொடுக்க ரொம்ப புடிக்கும் ஆனா என்ன அவளுக்கு சமைக்க தான் தெரியாது.
அடிக்கடி சொப்பு பத்திரம் வாங்கி தா சொப்பு பாத்திரம் வாங்கித்தானு கேக்குற நீங்க பர்சேஸ் போனீங்கன்னா கொஞ்சம் வாங்கிட்டு வரீங்களா ?
அவ அதுல தான் சமைச்சு பழகி எனக்கு சமையல் செஞ்சு தரேன்னு சொல்லி இருக்கா அதுதான் உங்ககிட்ட கேட்கலான்னு கேட்டேன் வாங்கிட்டு வந்துடுறீங்களா என்று 32 பற்களும் தெரியுமாறு சிரித்தான்.
மது அவளின் இத்தனை நாட்களில் ஆண்களுடன் பேசியதை விரல் விட்டு எண்ணிவிடலாம் பேசுவதற்கும் தயக்கம் ஆனால் குரு பேசும் பொழுது அவனின் ஒரு வார்த்தைகளும் மனதிற்கு மகிழ்ச்சியும் தருகிறது ஒரு மாதிரி பாசத்தை ஏற்படுத்துகிறது ..
மது அடக்கமாட்டாமல் சிரித்துகொண்டே சரிங்க அண்ணா கண்டிப்பா வாங்கிட்டு வரேன் உங்களுக்கு இல்லாதா..
தேங்க்ஸ் டா தங்கச்சி மா…
என்ன அண்ணன் கூப்பிடும்போது அப்ப நீ எனக்கு தங்கச்சி தான இனி நம்ம ரெண்டு பேரும் ஒரு செட் …
இவன் கூட சேராத சரியான கஞ்சன் பேசுறதுக்கே யோசிப்பா… அவன் கூட சேர்ந்துட்டேனா நீயும் அப்படித்தான் பேசுவ அண்ணா மாதிரி கலகலன்னு பேசி பழகு சரியா நம்ம ரெண்டு பேரும் கேங்….
இன்னும் ரெண்டு வார்த்தையா பேசினா கண்டிப்பா என்கிட்ட அடி வாங்காம போக மாட்ட குரு நீ….என்று தீனா பல்லை கடிக்க
குரு ஒரே ஓட்டமாக மேலே கேஸ் பைல்ஸ் பார்க்க செல்கிறேன் என ஓடிவிட…
இருவருக்கும் அடுத்து என்ன பேச என் தெரியாமல் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து கொண்டு அமர்ந்துவிட்டனர்….
காத்திருங்கள்…
உங்களின் கருத்துக்கள் தான் என்னை மேலும் மேலும் எழுத ஊக்கப்படுத்தும் உங்களின் கருத்துகளுக்காக ஆவலாக காத்திருக்கிறேன் ☺️❤️
No comments yet.