அத்தியாயம் -8
இந்தாங்க மது இவன பிடிங்க எழுந்ததும் பசிக்கும் பால் மட்டும் சூடு பண்ணி குடுங்க.
கண்ணம்மா சொன்னாங்க சார் ஏற்கனவே
பால் குடிக்கிற சூட்டுக்கு எடுத்தவச்சுட்டேன்.
“குடுங்க குட்டி பையன !”
என் தங்கபிள்ள! மயிலுகுட்டி! சித்து கண்ணா தூக்கம் விட்டுரிச்சா? வாங்க பால் குடிப்போம் ! குடிச்சுட்டு நம்ம இன்னிக்கு உங்களுக்கு நிறைய புது டிரஸ் டாய்ஸ் வாங்குவோமா!!!என்று கிச்சுகிச்சு மூட்ட
சித்துவின் கலகல சிரிப்பு
அனைவரையும் தொற்றி கொண்டது..
என்ன கண்ணா வெளில போறிங்களா ?
ஆமாமா!! மது தான் சொன்னாங்க கொஞ்சம் திங்ஸ் வாங்கணும் சித்துக்கு
எல்லாம் சின்னதா இருக்குனு!!! எனக்கும் கொஞ்சம் வேலை இல்ல மதியம் மேல வீட்டுக்கு வந்து சாப்பிட்டு கூப்பிட்டு போறேன் இவங்கள.
சரி்ப்பா!!!!” மதுமா என்ன வேணுமோ யோசிக்காம வாங்கிடு”.
சரிங்கமா!!!!!
சரிமா!! எனக்கு டியூட்டிக்கு டைம் ஆகிடுச்சு நான் கிளம்புற.மது நீங்க குட்டி பையனும்
மதியம் கிளம்பி இருங்க.
என்று மேலே அவனது அறைக்கு சென்றுவிட இங்கு கண்ணம்மா தான் உறைநிலைக்கு சென்றுவிட்டார்.
பின்னே இருக்காதா??” வீடே தலைகீழாக மாறி இருக்க ஒரு வார்த்தை கூட அதைப்பற்றி
பேசாமல் எதுவும் நடவாது போல்
அல்லவா மேலே சென்றுவிட்டார்”
பாருமா !!
நான் போய்ட்டு
குட்டி பையன சாப்ட வைக்கிறேன்.
சரிடா நீ பாத்துக்கோ….
இருவரும் சென்றுவிட———-
இங்கு கண்ணம்மாவோ,
மா !!! மா!!!!! நான் பாக்கிறது கனவா நிஜமா!!! நிஜமாவே நம்ம தீனா
தம்பி ஒன்னுமே சொல்லலையா கண்டும் காணாத மாதிரி போயிட்டாரு என்னமா நடக்குது இங்க
என்னால புரிஞ்சுக்கவே முடியல நம்ம தம்பியா இது?
இங்க பாரு கண்ணம்மா அவன் ஒன்னும் குழந்தை
கிடையாது.
இதுக்கும் போலீசா இருக்கா கண்டிப்பா அவன் கண்ணில் இருந்து எதுவுமே
தப்பிச்சிருக்காது எல்லாத்தையுமே பார்த்திருப்பான் பார்த்து எதுவும் சொல்லலன்னும்
போது கண்டிப்பா அவனுக்கு புரிஞ்சுருக்கும்.
இதெல்லாம் மது தான் பண்ணிடுப்பா அப்படின்னு இந்த
மாற்றத்தை அவன் மனசுமே வேணும்னு நினைச்சிருந்திருக்கு. கரெக்டா அந்த டைம்ல மது
வந்து எல்லாத்தையும் சரி பண்ணி இருக்கா அப்படினும் போது அவன் மனசார இந்த மாற்றத்தை
ஏத்துக்கிட்டா .
நம்ம கிட்ட அதை காமிச்சுக்காம இருக்கும் போதே
நம்ம புரிஞ்சுக்கணும் அவனுக்கு இந்த மாற்றங்கள் பிடிச்சிருக்கு அப்படின்னு.
தீனா
இப்படி மாறி வரது எனக்கு சந்தோஷம்தான் கண்ணம்மா! நடக்கிறது எல்லாம் நடக்கட்டும் எல்லாம் நம்ம
நல்லதுக்கு நினைச்சுக்குவோம்.
அவ வாழ்க்கை நல்லது நடக்கட்டுமே எவ்வளவுதான் என் பையன் கஷ்டப்படுவான் போதும்
இதுக்கு அப்புறம் ஆச்சும் என் பையன்
சந்தோஷமா இருக்கட்டும்.
நீ இன்னொன்னு பாத்தியா
எப்பவுமே இந்த மாதிரி நம்ம பொருள் எடுக்கறதுக்கோ? எதுக்குனாலும் ஒன்னு அவனா போய் எடுப்பான்.
இல்லையா?
ஆள்கிட்ட சொல்லி விடுங்க எந்த மாதிரி வேணுமோ சொல்லுங்க அவங்க எடுத்துட்டு
வந்துரட்டும் அப்படின்னு தான் சொல்லி இருக்கான் முதல் முறை அவனே போறான் அதுவும்
மதுகூடையும், சித்துகூடையும்.
இவங்க
இப்படி போறது சாதாரணமா இருந்தாலும் என் மனசுக்கு அவங்க ஒரு குடும்பமா தான்
தெரியுறாங்க ஒருவேளை கடவுள் இவங்க ரெண்டு பேருக்கும் ஒரு முடிச்சு போட்டு
இருந்தாரு அப்படின்னா முதல் சந்தோஷப்பட போறது நானா தான்
இருப்பேன்.
சித்துவைத் தூக்கிக்கொண்டு உள்ளே நுழைந்த மதுவை
பார்த்ததும் இருவரும் பேசுவதை நிறுத்திவிட்டு மதுவை பார்த்து புன்னகைத்தனர்.
என்ன மதுமா? சித்துக்கு சாப்பாடு ஊட்டி ஆச்சா.
ஆச்சு பாருமா!” இனி இவன குளிக்க வச்சா சரி அதுவும் இன்னும்
ஒரு அரை மணி நேரம் கழிச்சு குளிக்க வைக்கலாம் கொஞ்ச நேரம் அப்படியே கீழ
தவழ்ந்துட்டு இருக்கட்டும். இல்லை ஏதாவது விளையாட்டு இருக்கட்டும் அப்பதான்
செரிமானம் ஆகும்.
அப்போ சரி நீ என்ன பண்ணு நீ போய் கிளம்பி ரெடி
ஆகிட்டு வா!.
அதுக்கப்புறம் சித்துவ குளிக்க வச்சிடலாம் தீனா வந்ததும் டிரஸ் மாத்திட்டு
அப்படியே நீ அவனை தூக்கிட்டு போயிடலாம்…..
“உனக்கு
பூ வைக்க பிடிக்குமா மதுமா”!
எனக்கு பூ வைக்கிறதுன்னா அவ்வளவு பிடிக்குமா
ஆனா ரொம்ப அதிகமா எனக்கு கிடைக்காது எப்பவாது வைப்பேன். எனக்கு ரொம்ப
பிடிக்கும்.
நம்ம வீட்டுக்கு பின்னாடி முழுக்க ரோஜா பூ ,மல்லி செடி, ஜாதி முல்லை செடின்னு
சொல்லிட்டு எல்லாமே இருக்கு உனக்கு எந்த பூ புடிக்கும் சொல்லு கண்ணம்மாவை பறிச்சுட்டு
வர சொல்றேன்.
நான் உனக்கு கட்டி வைக்கிறேன் போகும்போது நீ வச்சுட்டு போலாம்.
எனக்கு
நெருக்கமா மல்லி பூ வைக்க ரொம்ப புடிக்கும் பாரம்மா எனக்காக கட்டி தரீங்களா.
உனக்கு இல்லாமையாடா !நீ போய் ரெடி
ஆயிட்டு வா உனக்கு எல்லாம் நாங்க ரெடி பண்ணி வைக்கிறோம்.
சித்துவை
பத்தி நீ யோசிக்காத அவன நாங்க பார்த்துக்கிறோம் இப்ப ரெடி ஆகிட்டு சீக்கிரம் வா.
டிரஸ் பர்சேஸ் பண்றது குட்டி பையனுக்கு மட்டும்
கிடையாது.
உங்களுக்கும் சேர்த்து தான் இப்போ உங்களுக்கு இந்த மாதிரி கைகால் பிரச்சனையா
இருக்கின்றபோது நீங்க சேரி கட்டிக்கணுன்ற அவசியம் கிடையாதும்மா!
ஆனா
நீங்க அதை கட்டி பழகிட்டீங்க சரிதான் இருந்தாலும் நீங்க நைட்டி மாதிரி
போட்டுக்கிட்டீங்கன்னா இன்னும் உங்களுக்கு ஃப்ரீயா இருக்கும் அதுபோக நம்ம பிசியோ
தெரபி அந்த மாதிரி பண்றோம் அப்படின்னா ! உங்களுக்கு பண்ணிவிடுறதற்கு நீங்க ஃப்ரீயா
ரிலாக்ஸ் பண்றதுக்கு இன்னும் ஈசியா இருக்கும் எனக்காக நீங்க நைட்டி போட்டு தான்
ஆகணும் ஓகேவா?
அது
மட்டும் என்னால முடியாது மது.
நான் இந்த சாரி போட்டே பழகிட்ட எனக்கு இதுவே வசதியா இருக்கு வேண்டாமே.
சரி…..உங்களுக்கு வேண்டாம் எனக்கும் வேண்டாம் என்னிக்கு
எல்லாம் பிசியோதெரப்பி பண்றோமோ அன்னைக்கு மட்டும் நீங்க நைட்டிக்கு போட்டுக்கிட்டா
போதும் அதுக்கப்புறம் நீங்க சேரிய மாத்திக்கலாம் ஓகேவா .
இது எனக்கும் சரினு தோணுது மா என்று கண்ணம்மா
மதுவிற்கு ஆதரவாக பேசினார்.
சரி இவ்வளவு தூரம் சொல்றதால கண்டிப்பா நான்
போட்டுக்குறேன் ஆனா அன்னைக்கு மட்டும் தான்.
ஓகே ஓகே ராஜா மாதா .நீங்க சொன்னா
சரிதான் நீங்க சொல்றதுதான் சாசனம்
நீங்க சொல்றது தான் எல்லாம்.
என்னையே கலாய்க்கிறீயா படவா!!” போய் கிளம்பி
சீக்கிரம் வா !அப்புறம்
என் பையன் வந்தான்னா நீ இன்னும் கிளம்பிளயான்னு சொல்லி வானத்துக்கும் பூமிக்கும்
குதிப்பா.
அச்சச்சோ!?” நான் போய் கிளம்புறேன் அவர்கிட்ட யார் திட்டு
வாங்குறது நம்மளால முறைச்சு பாக்குறது கூட பாக்க முடியலப்பா !அவர் முறைத்து
பார்த்தாலே எனக்கு பயமா இருக்கு நான் இப்பவே போய் பத்து நிமிஷத்துல கிளம்பி
வந்துடுவேன்.”
ஹாஹாஹா!!!! அவ்ளோ பயம் என் பையன் மேல!!!!
கண்ணம்மா எனக்கு ஒரே ஒரு ஹெல்ப் மட்டும்
பண்ணுங்க நான் சாரி மாத்திட்டேன்னா மறுபடியும் அந்த சேரில சித்துவ குளிக்க வச்சா தண்ணி ஆகிடும்.
இன்னைக்கு ஒரு நாள் மட்டும் நீங்க சித்துவ
குளிக்க வைக்கிரீங்களாமா??
நாளையில் இருந்து நான் பாத்துக்குவேன்..
இதுல என்ன இருக்கு மது பாப்பா! இந்த குட்டி
பையன குளிக்க வைக்கிறதுக்கு கசக்கவா செய்யும் நீ போயிட்டு வா …நான்
குளிக்க வைக்கிறேன்.
கிளம்பி தயாராக கீழே வந்த மதுவை பார்த்த
பர்வதத்திற்கு மனதில் இவள் போன்று மருமகள் கிடைத்திருந்தால் எவ்வளவோ நன்றாக
இருந்திருக்குமோ என்று ஏக்கம் வராமல் இல்லை!!!
அமைதியான அழகு முகத்தில் குடி கொள்ள புன்னகையோடு
கீழே நடந்து வந்த மதுவை பார்த்து பெருமூச்சு மட்டும் தான் அவரால் விட முடிந்தது. ….
இங்கு மதுவை பார்த்து ஒரு நிமிடம் ஏக்கப்பட்டது
பர்வதம் மட்டும் கிடையாது? மற்றொரு
நபரும் கதவருகில் நின்று தன் இயல்பையும் மீறி அவளை ரசித்து
தான் பார்த்துக் கொண்டிருந்தான்…….
தீனாவின் இந்த ரசனை பார்வை மது கண்டால்…..
No comments yet.