அத்தியாயம் -7
குழந்தையை
தூக்கிக்கொண்டு மேலே தீனா இருக்கும் இடத்திற்கு சென்ற மதுவை ஒரு நிமிடம் சலனம்
இல்லாமல் பார்த்தான்
என்ன
நினைத்தானோ உங்க கிட்ட நான் கொஞ்சம் பேசணும்.
சொல்லுங்க
சார் என்ன பேசணும்.
ரொம்ப
ஃபார்மலா வேண்டாம். நீங்க
என்ன சார்னு கூப்பிட வேண்டாம் வாங்க போங்கன்னு கூப்பிடுங்க இல்லன்னா என் பேரு தீனதாயாளன் நீங்க தீனான்னு கூட கூப்பிடலாம்.
நான் சொல்றத கேளுங்க மது….
குழந்தையை
பற்றியும்,
பர்வதத்தின் நிலை பற்றியும் ஒரு முறை மதுவிடம்
சொல்ல ஆரம்பித்தான் . சொல்வது
அனைத்தையும் கேட்டுக் கொண்ட மது,
மெல்லிய
புன்னகையுடன் , உடனே என்னால் உங்கள பேர் சொல்லி கூப்பிட முடியாது சார் மாத்திக்கிறேன்.
உறவுகள் கூட நடைமுறையில் நான் வாழ்ந்ததே இல்ல.ஆனால் எனக்குனு ஒரு வேலை அதுல பாருமா, கண்ணம்மா, சித்து கண்ணா னு உறவு கிடைச்சிருக்கு.
அவங்க
எனக்காக கடவுள் குடுத்த வரம் அவங்கள என்னால் எவ்ளோ முடியுமோ அவ்ளோ அவங்களநல்லபார்த்துப்பேன்.கண்டிப்பா நீங்க என்ன நம்பலாம்.
எல்லாரையும் உறவா நினைக்குறா? ஆனா நானும் அந்த குடும்பத்துல ஒரு ஆள்தானே. என்ன மட்டும் உறவா நினைக்கல என்று நினைத்து மனம் ஒரு நிமிடம் வருத்தப்பட்டது.
தன் மனம் போன போக்கை எண்ணி ஒரு நிமிடம் தன்னையே திட்டி கொண்டு, சரிங்க மது உங்கள நம்புற.
அப்புறம்
சார் குட்டிபையனுக்கு டிரஸ் சில திங்ஸ் வாங்கனும்.நாளைக்கு நாங்க போய்டு வரலாமா?
ஓகே
! மது நாளைக்கு டிரைவர் கூப்பிட்டு போய்டுவாங்க. இந்தாங்க என் கார்டு என்ன வேண்டுமோ வாங்கிடுங்க.வாங்க யோசிக்காதிங்க.
சரிங்க சார். நான் தூங்க போறேன்.குட்டி பையன் தூங்கி விழுறான் நாளைக்கு பார்க்கலாம்.குட் நைட் .
ஓகே மது குட் நைட்.
கீழே வந்தவள் பாருவை அவரது அறையில் படுக்க வைத்து கை
கால்களை அமுத்திவிட்டு
கொண்டே , நாளைக்கு உங்கள செக் பண்ற டாக்டர் கிட்ட அப்பாயிண்மெண்ட் கேட்டு பாக்கிறேன் மா .
ஒரு செக் பண்ணிடலாம் .அப்றம் பிசியோ பண்ணா கண்டிப்பா நீங்க மறுபடியு எழுந்து நடக்க ஆரம்பிக்க போறிங்க பாருங்க.
மதும்மா நீ சொல்றது நடக்குமோ தெரியல ஆனா மனசுக்கு ரொம்ப சந்தோஷமா
இருக்குடா.
இங்க பாருங்க பாருமா நிம்மதியா தூங்குங்க .எல்லாமே சரி ஆகிடும் . குட் நைட்.
சரிடா நீ போய் தூங்கு.
அடுத்தநாள் காலை எழுந்த அனைவருக்கும்
ஏனோ மனத்திற்கு
ஒருவித நிம்மதியும்,
புத்துணர்வும் தருவது போல் இருந்தது.
காய்கறி வாங்கி கொண்டு உள்ளே நுழைந்த கண்ணமாவிற்கு தன் கண்களே நம்ப முடியவில்லை.ஒருபக்கம் மகிழ்ச்சி தந்தாலும் உடனே மிகுந்த பயத்தையும் தர உடனே பெரியம்மாவிடம்
சொல்லி அவரை இங்கே அழைத்துவர அவர் அறைக்கு விரைந்து சென்றார்.
அப்படி என்ன நடந்து இருக்கும்? என்ன நிகழ்ந்து இருக்கும் பார்க்கலாம்?
ஆசிரமத்தில்
அதிகாலையில் எழுந்து கொள்ளும் பழக்கம் மதுவிற்கு எப்பொழுதும் உண்டு .முதலில் எழுந்து அவளே அனைவருக்கும்
தேவையான அனைத்து வேலைகளையும் செய்து முடித்து இருப்பாள். அதற்குப் பிறகு
ஒவ்வொருவராக பிரேயர் முடித்து வேலைகளை
செய்வார்கள். அதே
பழக்கம் இன்று வரை அவளுக்கு தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
ஆஸ்ரமத்தில்
இருந்தாலும்,”
அவளுக்கு பூஜைகள் செய்வதில் தனி பிரியம் உண்டு”. இங்கு பூஜை அறையை கண்டதும் முதலில் அந்த
இடத்தில் உள்ள அனைத்து பொருட்களையும் சுத்தமாக கழுவி துடைத்து மாலை பூ எல்லாம் வைத்து அழகாக அலங்கரித்து
விட்டால்.
பின் வீட்டில் உள்ள அனைத்து இடங்களையும் ஒன்றன்பின்
ஒன்றாக அழகாக சுத்தம் செய்து வைத்தால்.
இவ்வளவு
நாட்கள் சுந்தரத்தின் படத்தில் பிளாஸ்டிக் பூவே அலங்கரித்துக் கொண்டிருந்தது .இன்று புதிதாக மதுவின் கையால் மாலை
கோர்த்து அவருக்கு ஒரு தீபமும் ஏற்றப்பட்டு பூஜை அறையிலும் விளக்கேற்றப்பட்டு வீடு
வேறு மாறி காட்சியளித்தது.
இன்று
வரை யாரும் பூஜை அறையில் விளக்கேற்ற கூடாது என்று தீனா சொல்லியிருக்க யாரும் அதன்
பக்கம் கூட செல்லவில்லை. ஏன்
பார்வதிக்கும் கூட அதன் மீது இருந்த பக்தி அனைத்தும் போய்விட்டது இவ்வளவு பேர்
இருந்து நமக்கு ஏன் கஷ்டம் என்று அவரும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் பூஜை
அறையை மூடிவிட்டார்.
இன்று மது அனைத்தையும் சுத்தம் செய்து
விளக்கேற்றி வைத்ததை பார்த்ததும், ஒரு
புறம் கண்ணம்மாவிற்கு சந்தோஷமாக இருந்தாலும் மறுபுறம் தீன தயாளனின் கோபத்தை
நினைத்து பயம் வந்ததால் பார்வதமிடம் சொல்ல சென்றார்.
அறையைவிட்டு
வெளியே வந்த பார்வதத்திற்கு தன் கண்களை தன்னாலே நம்ப முடியவில்லை . தன்னுடைய வீடு தானா இது ?தான் நன்றாக இருந்தபொழுது எப்படி
வீட்டை பார்த்துக் கொண்டோமோ அதைவிட அழகாகவும் நேர்த்தியாகவும் வீடு ஒருங்கிணைக்கப்பட்டு
பூஜை அறைகளில் தெய்வீக காட்சி அளித்தது. பார்ப்பதற்கு மனதிற்கு மிகவும் அமைதியாக இருந்தது என்று மனதார
சந்தோஷப்பட்டார்.
பர்வதத்தை பார்த்தவுடன் கையிலிருந்த சூடம்
தட்டில் ஏற்றி அவரது முன் கொண்டு வந்து இதுவரை இருந்த எல்லா பிரச்சனைகளும்
துன்பங்களும் சரியாக வேண்டும் உங்களுக்கு என்று மனதார வேண்டிக்கொண்டு கற்பூரத்தை
அவருக்கு காட்டிவிட்டு விபூதியை அவர் நெற்றியில் வைத்து விட்டாள்.
தன்னை அறியாமல் இரண்டு சொட்டு கண்ணீர்
கண்களில் பர்வதத்திற்கு தேங்கி விட்டது. கண்ணம்மாவிற்கும் கற்பூரத்தின் தட்டை
காட்டிவிட்டு பூஜை அறைக்குள் கொண்டு சென்று வைத்துவிட்டு திரும்பி வந்து,
என்ன
கண்ணம்மா நீங்க வந்து வீட்ட பார்த்ததும் பயந்து போனீங்க என்ன பிரச்சனை.
அது இல்ல
மது பாப்பா தீனா தம்பிக்கு இதெல்லாம் பிடிக்காது இது எதுவுமே பண்ண கூடாதுன்னு
சொல்லி இருந்தார்.
இப்ப நீங்க இதெல்லாம் பண்ணி இருக்கீங்க . அவர் வந்து என்ன பிரச்சனை பண்ண போறாரோ ? எனக்கு தெரியல அதனாலதான் அம்மாவை கூப்பிட்டு வந்த
துணைக்கு.
அப்பா இறந்ததுக்கு அப்புறம், அதுக்கப்புறம் நடந்த
பிரச்சனைகளுக்கு இனிமே யாரும் சாமி
கும்பிட கூடாது எதுவும் பண்ணக்கூடாது அப்படின்னு சொல்லிட்டா அதனாலதான் நாங்களுமே
இந்த பக்கம் போகல இன்னொரு விஷயம் என்னாலயும நடந்து போயி ஒரு பூஜையும் பண்ண முடியல .
எனக்கும்
மன வருத்தமா தான் இருந்துச்சு எதுக்கு நமக்கு மட்டும் இவ்வளவு சோதனை அப்படின்னு . அதனால இவ்வளவு நாளுமே இந்த பக்கம்நானுமே
வரவே இல்ல ஆனால் தீனா வந்து பார்த்துட்டு என்ன சொல்ல போறான்னு தெரியல முடிஞ்ச
அளவுக்கு இதெல்லாம் நான் தான் பண்ணினேன்னு சொல்லி சமாளிச்சுக்கிறேன் நீ
கிச்சனுக்குள்ளே இருந்துக்கோ.
“இங்க
பாருங்கம்மா நமக்கு நடக்க வேண்டியது எதுவோ அதுதான் நடக்கும் என்ன பண்றது அந்த
விஷயங்கள் நமக்கு சந்தோஷத்தை தந்துச்சு அப்படின்னா மனதார ஏத்துக்கிற நம்ம கஷ்டம் தரும் போது மனதார ஏத்துக்க முடியலனாலும் அந்த
வலிகளை தாங்கி தான் ஆகணும் .நம்மனால
அந்த விஷயங்களை மாத்த முடியாது இவ்வளவு நாள் நடந்தது நடந்திருச்சு இதுக்கப்புறம்
நம்ம அதிலிருந்து எப்படி வெளியே வரணும் அதை எப்படி சரி பண்ணனும் என்றது மட்டும்
யோசிப்போம் .
எல்லாம் சரி பண்ணிக்கலாம் இன்னும்
காலம் இருக்குமா கவலபடாதீங்க” .
சார்
வந்தார்னா நானே பேசிகிறேன்..
இவர்கள்
பேசிக் கொண்டிருப்பதை கேட்டுக் கொண்டே மாடிப்படி இருந்து சித்துவை தூக்கிக் கொண்டு
தீனா ஒவ்வொரு படியாக இறங்கி வந்து கொண்டிருந்தான். சித்தூ தூங்கி அப்பொழுதுதான் எழுந்து
தீனாவின் கைகளில் உருண்டு கொண்டே வந்தான். அவனைப் பார்த்துக் கொண்டே வந்த
தீனாவிற்கு வீட்டின் மாறுதல் கண்ணிற்கு தெரியவில்லை போல !!!
என்னம்மா
பேசிட்டு இருக்கீங்க என்ன விஷயத்தை பத்தி என்கிட்ட சொல்லலாம் சொல்லி மது சொல்லிட்டு இருக்கா என்று அவன்
கேட்டுக்கொண்டே வர ….
கரகரப்பான கம்பீரமான அவனின் குரல்கேட்டு ஒரு நிமிடம் மதுவிற்கு உடல் எல்லாம் விதிர்
விதித்து தான் போனது.
வீட்டில்
ஏற்பட்ட இந்த மாற்றம் தீனாவின் வாழ்க்கையிலும் ஏற்பட்டால் வீட்டின் மாற்றத்தை
முதலில் தீனா ஏற்றுக் கொள்வானா இல்லை மதுவின் மேல் மேலும் கோபம் கொள்வானா .
……..பார்க்கலாம்
No comments yet.