அத்தியாயம் -6
அறைக்குள்
நுழைந்த தீனாவை கண்டதும் ,” ப்பா ப்பா ப்பா”
என கை, கால்களை உதைத்து மெதுவாக தீனாவை நோக்கி
தத்தி தவழ்ந்து வர.
என் சித்து
கண்ணா என் தங்ககட்டி என்று சித்துவை தூக்கி தட்டாமாலையாக ஒரு சுற்று சுற்றி இறக்கி
விட ,
அந்த அறை
முழுவதும் சிரிப்பு சத்தம் கேட்க ஆரம்பித்தது.
கீழே சாப்பிட்டு
கொண்டு இருந்த மூவரின் முகத்தில் புன்னகை தானாக ஒட்டி கொண்டது.
சித்து கண்ணா
நாளதான் தீனா கொஞ்சமாவது உயிர்ப்போடு இருக்கான்.
அவன் முகத்துல
சிரிப்பு பாத்து ரொம்ப நாள் ஆச்சு
! மகாராசி என்மகன உசுரோட கொன்னு நடபிணமா ஆக்கிட்டா .எம்புள்ளய்க்கு எப்போ விடிவுகாலம் வருமோ தெரியலையே!!
பாருமா கவலபடாதீங்க
!! எல்லாம் சரி
ஆகிடும். கடவுள் ஒரு விஷயத்த உங்க கிட்ட இருந்து எடுத்தா கண்டிப்பா
அது உங்களுக்கு கஷ்டத்த தரதா மட்டுமே இருக்கும் அதுனாலதா அவர் எடுத்துட்டார்.கண்டிப்பா திகட்ட திகட்ட சந்தோஷம் கடவுள் குடுப்பார். நாங்க இருக்கோம்.
மறுபடியும்
உங்க தீனா சந்தோஷமா எல்லார்கிட்டயும் பேச தான் போறாரு பாருங்க.
அத தவிர
வேற என்ன சந்தோஷம் எனக்கு வேணும் சொல்லு மது…
சித்துவை
தூக்கிக்கொண்டு கீழே இறங்கி வந்த தீனாவை ஒரு முறை பார்த்துவிட்டு அவள் கவனம்
எல்லாம் குட்டிப் பையனின் அந்த துருதுரு விழிகளையும் அங்கே இங்கே கை கால்களை
அசைந்து கொண்டும் ஆடிக் கொண்டும் இருக்கும் அவனின் மீதே மதுவின் கவனம் இருந்தது.
அந்த கோலிகுண்டு விழிகள் வெளியே தெறித்து
விழுந்துவிடும் அளவிற்கு சித்துவை விழி விரித்து பார்த்துக் கொண்டிருக்கும் மதுவை
பார்த்ததும் தீனாவின் முகத்தில் ஒரு நிமிடம் புன்னகை மலர்ந்து மறைந்தது.
எங்கே தன்னிடம் குழந்தையை கொடுக்காமல் சென்று
விடுவானோ!
என்று பரிதவிப்பாக சித்துவே பார்த்துக் கொண்டிருக்கும் மதுவிடம் நேராக வந்த தீனா.
இந்தாங்க
மது ,”பையனுக்கு
சாப்பாடு ஊட்டி விடுங்க”, சாப்பிட்டதுக்கு அப்புறம் கொஞ்ச
நேரம் விளையாட வச்சிட்டு அப்புறம் குளிக்க வச்சிட்டு தூங்க வச்சிடுங்க தூங்கிடுவான். குளிக்க வைக்கிறது எல்லாம் என்ன பண்ணனும் எப்படி குளிக்க வைக்கணும் எல்லாம்
கண்ணம்மா ,அம்மா கிட்ட கேட்டுக்கோங்க.
சித்துகண்ணா இவங்க கிட்ட போங்க சமத்து தானே
நீங்க. அவன், அவன் தந்தையின் கைகளில் இருந்து வேறொருவர் கைகளுக்கு மாறுவதை விரும்பவே
இல்லை தீனாவின் கழுத்தோடு கட்டிக்கொண்டு போகமாட்டேன் !என்று
அடம் பிடிக்க ஆரம்பித்தான்.
மதுவும்
ஒரு நிமிடம் என்ன செய்வது என்று தெரியாமல் யோசித்து விட்டு பின், தீனாவின் பின்புறமாக
சென்று கண்கள் இரண்டையும் கைகளை கொண்டு போற்றிக் கொண்டு. எங்க
சித்து கண்ணாவ காணம் யாராவது சித்து கண்ணாவை பார்த்தீர்களா எங்க இருக்காங்க என்று
கண்களை மூடிக்கொண்டு கையை எடுத்து பே!! என்று சொன்னதும்
குப்புக்கென்று சிரிக்க ஆரம்பித்து விட்டான் .
இதுவே
இரண்டு மூன்று முறை மறுபடியும் மது செய்து காண்பித்துக் கொண்டே இருக்க அதனை
பார்த்து தீனாவின் கைகளில் இருந்து கொண்டு மதுவுடன் விளையாட ஆரம்பித்து விட்டான்.
குட்டி பையனுடன் விளையாடும் மும்பரத்தில்
தீனாவின் தோள்களில் முன்னும் பின்னும் நகர்த்திக் கொண்டு குட்டி பையனை தட்டிக்
கொண்டும் அவர்கள் விளையாடிக் கொண்டிருப்பதை மறந்து விட்டாள் .ஆனால் தீனாவிற்கு தான் இது
ஒரு புதுவிதமான அவஸ்தையாக இருந்தது.
சித்துக்கண்ணா அவங்க கிட்ட போங்க போய் அழகா மம்மம்
சாப்பிட்டு வருவீங்களாமா .அதுக்கப்புறம் அப்பாவும் நீங்களும் வெளியில போறோமா ஓகேவா.
சரி என்று தலையாட்டி விட்டு ஒரு நிமிடம் மதுவை
பார்த்து பின் சடார் என்று அவள் கைகளில் தாவி விட்டான்
சித்துவை
தூக்கிக்கொண்டு கிச்சனுக்குள் சென்று
அவனுக்கு ஆல்ரெடி தயார் செய்து வைத்திருந்த பருப்பு சாதத்தை பிசைந்து கொண்டே. எது எது அவனுக்கு
புரிகிறதோ புரியவில்லையோ என்றெல்லாம் யோசிக்காமல் அவனுடன் பேசிக்கொண்டே அந்த
சாதத்தை பிணைந்து சிறிது சிறிதாக அவனுக்கு ஊட்டிக்கொண்டே அவனை அழைத்துக்கொண்டு
வெளியில் தோட்டத்திற்கு சென்று விட்டால் மது.
இவளின் ஒவ்வொரு செய்கைகளையும் பார்த்துக்
கொண்டிருந்த மூவருக்கும் மனம் மகிழ்ந்து போனது.
தீனாவிற்கும் சித்து இவ்வாறு அவள் இடுப்பில்
உட்கார்ந்து கொண்டு உணவு சாப்பிடுவதும் அவள் பேசும் கதைகளுக்கு அழகாக சிரிப்பதை
பார்த்து மனதில் சொல்ல முடியாத ஒரு வேதனை ஏற்படுத்தியது.
இந்நேரம் அவனது அம்மா இருந்திருந்தாலும் இவ்வாறு
தானே அவனை பார்த்துக் கொண்டிருப்பார்கள் குழந்தைக்கு தாயின் பாசம் கிடைக்காமல்
இவ்வாறு தனியாக நாம் அவனை வளர்க்கிறோமே அவனுக்கு நாம் தாய் பாசம் தராமல் அவனை
கஷ்டப்படுத்துகிறோமோ என்று எண்ணம் வந்து மனதில் தைய்க்க விறுவிறு என்று மேலே
நடந்து அவன் ரூமுக்கு சென்று விட்டான்.
பர்வததிற்கு தன் மகனின் நிலை புரியாமல் இல்லை
இருந்தாலும் என்ன செய்வது ? அவரது மனதிலும் மதுவை பார்த்ததும் வேறு ஒரு ஆசை துளி விடத் தொடங்கியது !ஆனால் இன்று தான் வந்திருக்கிறாள்
உடனே நாம் ஏதோ கற்பனை செய்து அந்தப்
பெண்ணின் மனதை தேவையில்லாமல் குழப்பக் கூடாது.
நடப்பது
நடக்கட்டும் இதற்கு மேல் நடப்பது எல்லாம் கடவுளின் கையில் ஒப்படைத்து விட
வேண்டியது தான் .
தான்
நினைப்பது நடந்தால் இன்னும் மனதிற்கு நிம்மதியை தரும் அது நடக்க வேண்டும் என்று
மனதார வேண்டுதலும் வைத்துக் கொண்டார் .கண்ணம்மாவிற்கு அவரின் மனம் புரிந்துதோ என்னவோ நீங்க நினைக்கிறது
கண்டிப்பா நடக்குமா கவலைப்படாதீங்க ஆனால் எடுத்தோ கௌதோம்னு எதையும் நம்ம செய்ய
முடியாது பொறுமையா நடக்கிறது என்னன்னு பார்ப்போம்.
சரி
வாங்க நம்மளும் வெளியில போய் கொஞ்ச நேரம்
சாப்பிடுவதை வேடிக்கை பார்ப்போம் அவங்களுக்கு நம்மளும் ஹெல்ப் பண்ண மாதிரி
இருக்கும்.
வெளியே
வந்து பார்க்கும் பொழுது சித்துவிற்கு வேடிக்கை காட்டிக் கொண்டே அவனுக்கு கொண்டு
வந்த சாப்பாடு அனைத்தையும் ஊட்டி முடித்து அவன் வாய் துடைத்து முந்தானையால்
முகத்தை ஒருதுடை துடைத்து விட்டால்.
அட சித்து கண்ணா எல்லா சாப்பாடு
சாப்பிட்டீங்களா ஒரு நாலு வாய் சாப்பிட
வைக்க முடியாம நாங்க எவ்ளோ பாடு பட்டோம் இன்னிக்கி என்னன்னா எல்லா சாப்பாடையும்
சாப்பிட்டு இருக்கீங்க. அப்ப இந்த கெழவி ஊட்டி விட்டது உனக்கு புடிக்கல அப்படித்தானே.
என்ன
புரிந்ததோ அவனுக்கு தெரியவில்லை களுக்கென்று சிரிக்க ஆரம்பித்து விட்டான்.
அடேய்
படவா சிரிச்சே மயக்கிடுவடா நீ.
சித்து
தான் சாப்பிட்டான் இல்லையா வாங்க உள்ள போலாம் அவன தூங்க வச்சுட்டு நானும் தூங்கலாம்.
ஆமாமா
நானே உள்ள வரலாம்னு இருந்தேன் ஆல்ரெடி அவனுக்கு தூக்கம் வர ஆரம்பிச்சிடுச்சு
எப்படி நான் மேலே போய் தூங்க வச்சுட்டு வந்துடட்டுமா இல்ல என்ன பண்ணட்டும்.
நீ அவன
தீனா கிட்ட மட்டும் கொடுத்துடுமா அவ எப்பவுமே அவங்க அப்பா மேல தான் படுத்து
தூங்குவான் தீனா கூட தூங்கிக்கிட்டும்.
சரிமா
நான் போய் அவர்கிட்ட கொடுத்துட்டு வந்துடறேன் நீங்க ரெண்டு பேரும் உள்ளே எனக்காக
வெயிட் பண்ணுங்க.
சரி
போடம்மா என்று எதர்ச்சியாக மேலே பார்த்த பர்வதம்
மனதில் ஒரு நிமிடம் தான் நினைத்தது நடப்பதற்கான வாய்ப்பு சிறுதுளி
இருக்கிறது,
என்று தோன்ற ஆரம்பித்தது மேலே இருந்து மதுவின் ஒவ்வொரு அசைவுகளையும் இவ்வளவு நேரம்
மாடியில் நின்று தீனா பார்த்துக் கொண்டிருந்திருக்கிறான்.
சரிதான்
என் மகனின் வாழ்க்கையில் இனிமேல் சந்தோஷம் வந்தால் போதும் கடவுளே என்று உள்ளே சென்று
விட்டார்.
No comments yet.