பாலைவனத்தில் பூத்த ரோஜா எபிசோட் -5

BalaSneha Velmurugan | 03 Dec 2025 | Share

கண்ணம்மாவும்
மதுவும் சமையல் செய்ய பர்வதம் வில்ச்சேரில் அமர்ந்து கொண்டு அவர்களுக்கு சிறு சிறு
உதவிகள்
,
காய்கறிகள் வெட்டிக் கொடுப்பது
,சப்பாத்தி தேய்த்து
கொடுப்பது என்று அவரால் முடிந்த சிறு சிறு உதவிகளை வலுக்கட்டயமாக அவர்கள் இடம்
கேட்டு வாங்கி செய்து கொடுக்க மூன்று பெண்களும் அனைத்து கதைகளும் பேசிக்கொண்டே
சமையல் செய்து முடித்து விட்டனர்
.

இத்தனை
நாட்களில் கண்ணம்மாவும் பர்வதமும் தங்களுக்குள்ளே பேசிக்கொள்ள அதில் பெரும்பாலான
விஷயங்கள் பழைய கதைகளாகவே இருந்தது இன்னொரு பெண்ணின் வருகை அவர்கள் இருவரையும்
மேலும் புத்துணர்ச்சியாக்க
, வெகு நாட்களுக்குப் பிறகு சமையல் கட்டில் இருந்து சிரிப்பு சத்தம்
கேட்டது
.

 வெளியில் தோட்ட வேலைக்கும் வீட்டு பராமரிக்கும்
இருக்கும் நம்பகமான வேலைக்காரர்களுக்கு தன் முதலாளியின் இந்த சிரிப்பு மனதிற்கு
மிகவும் சந்தோஷமாக இருந்தது
.

ரோந்து
பணி முடிந்து மிகவும் களைப்பாக வந்த தீனாவிற்கு ஹாலில் புதிதாக கேட்ட சிரிப்பு
சத்தம் ஒரு நிமிடம் நாம் நம் வீட்டிற்கு தான் வந்தோமா
?இல்லை வீடு மாறி வந்துட்டோமா?
என்று யோசனை வர மறுபடியும் எட்டிப் பார்க்க தன் தாய் தான் புன்முறுவலுட
ன்சிரித்துக் கொண்டு பேசிக் கொண்டிருந்தார்
.

உள்ளே
கண்ணம்மாவின் சத்தமும் வேறொரு பெண்ணின் கீச் குரலும் அவனை உள்ளே அடி எடுத்து
வைத்து பார்க்க வைத்தது
.


மறந்துட்டோமே இன்னைக்கு தானே கேர்டேக்கர்காக ஒரு பொண்ணு சேர்ந்து இருக்காங்கன்னு
சொல்லி இருந்தாங்க அந்த பொண்ணு தானே இது பேரு கூட ஏதோ மதுநிலா
. ம்ம்ம்.

அம்மா இப்படி
சந்தோஷமாக இருந்து எவ்வளவு நாளாச்சு இது அவங்க முகத்துல எப்பவுமே நிலைச்சி
இருக்கணும் கடவுளே என்று அவசரமாக ஒரு வேண்டுதலை வைத்துக் கொண்டே ஹாலில் வந்து
நின்று
,

அம்மா!!! பையன் வந்திருக்கிறது
கூட தெரியாம அப்படி என்ன மும்பரமான மீட்டிங்
.

தீனா
சாதாரணமாக தான் கேட்டான்
.

 ஆனால் மது நிலாவிற்கு அவன் மிரட்டுவது போல்
தெரிந்ததால் சடார் என்று கண்ணம்மாவின் பின் போய் ஒளிந்து கொண்டாள்
.

ஏன் தீனா
வந்ததும் வராதுமா அந்த பொண்ண பயமுறுத்துற சும்மா பேசிட்டு தான் இருந்தோம் வேற
ஒன்னும் கிடையாது நீ போய் சீக்கிரம் குளிச்சிட்டு வா எல்லாரும் உட்கார்ந்து
சாப்பிடலாம்
.

கண்ணம்மாவின்
பின் ஒளிந்து கொண்டிருந்த மதுவை ஒரு நிமிடம் தலை சாய்த்து பார்த்து விட்டு
மாடியில்ஏறி மேலே சென்று விட்டான்
.

 ஏம்மா இன்னைக்கு தம்பி சீக்கிரமே வந்துட்டாருல.

ஆமா
கண்ணம்மா காலைல போகும் போதே சொல்லிட்டு தான் போனா இன்னைக்கு சீக்கிரம் வந்துருவேன்
அம்மா அப்படின்னு
.

பாருமா
மேல குட்டி பையன் தூங்குறானே எழுந்திருப்பானா? அவனால ஒன்னும் தொந்தரவு ஆகாதே
.

எந்திரிச்சு
இருக்க மாட்டாமா
. அப்புறம் அவன் எந்திரிச்சிருந்தாலும் தீனா கூட இருந்தானா அவன் நம்ம
யாரையுமே கண்டுக்க மாட்டான் அந்த அளவுக்கு அவ சரியான அப்பா கோண்டு
.

அப்புறம்
மது
,”குட்டி
பையன் பேரு சித்தார்த்தன்
.”

எனக்கு
எப்படா சித்து குட்டிய  தூக்குவோனு
இருக்குமா
.

உடனே கண்ணம்மா
அட ஏ மதுபான கேட்குற
,கரெக்ட்டா சாப்பிடற டைம்ல எந்திரிச்சு வருவாரு பாரேன் வந்துட்டு மம்மு
வேணும்
!!!மம்மு வேணும்னு அவனும் நம்ம தட்ட தான் கேட்பான்
அவனுக்குன்னு தனியா நம்ம போட்டு கொடுத்தாலும் அதெல்லாம் சாப்பிடமாட்டான். நம்ம
சாப்பிடுறதா கேட்பான்
.

பரவால்ல
பாட்டிமா அவனுக்கு ஃபர்ஸ்ட் நம்ம ஊட்டி விட்டுட்டே சாப்பிடலாம்
.

கண்ணம்மா
தான் ஒரு வழி ஆயிருவாங்க அவனுக்கு ஊட்டி விடக்குள்ளயும் ஏன்னா அவன் ஒரு வாய்
வாங்குறதுக்குள்ளையும் இந்த பில்டிங்கை அஞ்சு டைம் சுத்தி வர வச்சுருவான்
கண்ணம்மாவால முடியவே முடியாது அப்புறம் தீனா கையில ஒரு டைம் . என் கையில ஒரு
டைம்  அந்த ஒரு பவுல் சாப்பிட வைக்குள்ள நாங்க
ஒரு வழி ஆயிடுவோம்
.

வெளி ஆளுக
யார்கிட்டயும் பெருசா சித்தார்த் ஒட்டினதும் இல்ல நாங்களும் பெரிசா வெளி ஆளுங்க
கிட்ட யார்கிட்டயும் கொடுத்ததில்லை
.ஆனா உன்ன பார்த்தா கண்டிப்பா அவனுக்கு பிடிக்கும்  . எனக்கு அந்த நம்பிக்கை
இருக்கு
.

ஆமாம் மது
பாப்பா உன்கிட்ட  சித்து குட்டி நல்லாவே
ஒட்டிக்குவான்
.

 அவர்கள் பேசிக்கொண்டே அனைத்து பதார்த்தங்களையும்
டைனிங் டேபிள் மேல் எடுத்து வைத்துக் கொண்டிருக்க விஷ்வா மேலிருந்து படிகளில் இறங்கி
வாந்துக் கொண்டிருந்தான் அவனைத் திரும்பிப் பார்த்த மதுவிற்கு ஒரு நிமிடம் இவன்
ஒரு குழந்தைக்கு தகப்பன் என்று எண்ணம் வரவே இல்லை போலீசாக இருப்பதால் என்னமோ
கச்சிதமான உடலமைப்புடன் இளைஞன் போல் இருந்தான்
.

ஆனால்
முகத்தில் மட்டும் ஒரு கடினம் இன்னும் தான் வந்ததிலிருந்து ஒரு வார்த்தை கூட
தன்னிடம் பேசவே இல்லை என்று சின்ன வருத்தம் மதுவிற்கு
.

 என்ன மாதிரியான எண்ணம் இது என்று தன்னைத்தானே
மனதில் திட்டிக் கொண்டாள்
.

என்ன
பாத்து ரசுச்சிட்டீங்க அப்படின்னா கொஞ்சம் நகர்ந்து நிக்க முடியுமா நான்
சாப்பிடணும்
”, மிக அருகில் கேட்ட தீனாவின் குரலில் தன்னிலை
உணர்ந்த மது சடார் என்று அங்கிருந்து நகர்ந்து சமையல் கட்டிற்குள் சென்று விட்டாள்
.

சேசே!!! மது ஏன் இப்படி இருக்க
இப்படியா வந்த முதல் நாளே அவங்க கிட்ட இப்படி பல்பு வாங்குவ
!!

 பர்வதம் அம்மாவும், கண்ணம்மாவும் பார்த்து
இருந்தா நம்மள  என்ன நினைச்சிருப்பாங்க
நல்ல வேலை அவங்க ரெண்டு பேரும் சரியாக கவனிக்கல
.

 இவரை நான் அந்த அளவுக்கா பாத்துட்டே இருந்தேன்
ஒருவேளை அவர் நம்மள தப்பான பொண்ணா நினைச்சு இருப்பாரோ மது மனதில் அசை போட்டுக்
கொண்டிருக்க
.

இங்கு
பர்வதம் அம்மா மதுமா
!அங்கு என்ன பண்ணிட்டு இருக்க ?இங்க வா? வந்து சாப்பிடலாம் எல்லாரும் சாப்பிடும் போது நீயும் சாப்பிடு அப்புறம்
போய் குட்டி பையனை பார்த்துக்கொள்ளலாம்
.

சாப்பிட்டுக்
கொண்டிருந்த தீனா
இங்க  ஒண்ணும் நம்மகூட உறவு
பண்றதுக்கு வரல உங்கள பாத்துக்குறதுக்காக இங்க கேர் டேக்கர் வேலைக்கு வச்சிருக்கோம்
”, உங்க எல்லாரையும் கவனிச்சிட்டு அவங்க அப்புறம் சாப்பிட்டா போதும் உடனே
அவங்க சாப்பிடணும்ன்றது அவசியம் கிடையாது நீங்க மொத சாப்பிடுங்க என்று முகத்தில்
அடித்தார் போல் சொல்லி விட்டான்
.

சமையல்
கட்டில் இருந்து வெளியே வந்த மதுவிற்கு அவன் பேசிய பேச்சு கேட்டு விலுகென்று கண்ணீலா
நீர் தேங்கி விட்டது
.

 உண்மைதானே! என்ன இருந்தாலும் நாம இங்க வேலைக்கு வந்திருக்கோம்.என்ன
இருந்தாலும் நம்ம வந்து உரிமை எடுத்துக்க கூடாது
.முடிஞ்ச
அளவுக்கு இனி நம்ம வேலையை மட்டும் நம்ம பாக்கணும் என நினைத்து
,”சாரி சார் அம்மாவுக்கு தெரியாது அம்மாவ திட்டாதீங்க என் மேல தான் தப்பு
நான் இனிமேல் சரி பண்ணிக்கிறேன் பாருமா நீங்க முதல்  சாப்பிடுங்க நான் அதுக்கு அப்புறம்
சாப்பிட்டுக்குறேன்
”.

ஏ தீனா!இப்படி பேசுற அந்த பொண்ணு
என்ன பண்ணுச்சு இன்னைக்கு தானே மொத மொத வேலைக்கு வந்து இருக்கு சாப்பிடுறதுனால
என்ன இருக்கு எல்லாரும் இங்க ஒரே மாதிரி தான் நாம் நினைப்போம்
. சரியா வேலைக்கு வந்து சேர்ந்தாங்க அப்படின்னா நம்ம அவங்களை அப்படித்தான்
ட்ரீட் பண்ணனும்னு கிடையாது நீ இப்படி எல்லாம் பேச மாட்டியே என்ன ஆச்சு உனக்கு
?

இன்னொன்னு  என்ன பாத்துக்க வந்துருக்காங்கன்னா எனக்கு
புடிச்ச மாதிரி தான் அவங்க இருக்கணும் அவங்க என் கூட உட்கார்ந்து சாப்பிட்டாதான் எனக்கு
மன நிம்மதி
.

 அதனால மது என்கூடயே உட்கார்ந்து சாப்பிடட்டும்
என் பக்கத்துல உட்கார்ந்து சாப்பிட்டால் எனக்கு 
எடுத்து தரவும் முடியும் இல்லையா
.

ஓகே மா
உங்க விருப்பம் நான் எதுவும் சொல்லல
.

நீ இங்க
வா மதுமா உட்காரு சாப்பிடலாம் எல்லாரும்
.

மதுவின்
நீர்திரையிட்ட கண்களை பார்த்து தீனாவின் மனம் ஏதோ செய்ய அதனை என்னவென்று மேலும்
யோசிக்காமல் உதறி தள்ளிவிட்டு தனது தட்டில் உள்ள உணவை சாப்பிட ஆரம்பித்தான்
.

 மாடியில் இருந்து சித்துவின் அழுகுரல் கேட்க
சாப்பிட்டுக் கொண்டிருந்த தட்டிலிருந்து வேகமாக எழுந்த மதுவை பார்த்து
,” நீங்க உட்கார்ந்து
சாப்பிடுங்க நான் சாப்பிட்டேன் நான் போய் கொஞ்ச நேரம் என் பையன் கூட விளையாடனும்
அதுக்கப்புறம் நான் கொண்டு வந்து தரேன் அவனுக்கு சாப்பாடு ஊட்டுங்க
”.

பரவால்ல
சார் நான் சாப்பிட்டேன் நான் மேல போய் 
குட்டிபையன பாத்துக்குறேன்
.

நான்
சொல்றேன் இல்ல ஒக்காந்து சாப்பிடுங்க என் பையன் கூட நான் கொஞ்ச நேரம்
, நேரம் செலவிடனும் நானே
கூட்டிட்டு வந்து தரேன் அதுவரைக்கும் மேல யாரும் வர வேண்டாம் அவனுக்கு என்ன
சாப்பாடு சாப்பிடணும் அப்படின்றது கண்ணம்மா கிட்ட கேட்டுக்கோங்க அதுபடி அவனுக்கு நாளை
 இருந்து நீங்களே சமைக்க ஆரம்பிச்சுடுங்க
சமைப்பீங்க தானே
.

ஓரளவுக்கு
நல்லாவே சமைப்பேன் சார்
.

சரி ஓகே
என்ன என்னனு கேட்டுட்டு என்னன்னா எப்படி சமைக்கணும்னு  அதுபடி சமைச்சு கொடுங்க முடிஞ்ச அளவுக்கு
எல்லாமே ஹெல்தியா தான் இருக்கணும் அவனுக்கு
.

ஓகே
சார் அத்தனை வார்த்தைகள் அவன் பேசும் பொழுதும் ஒரு நொடி கூட அவன் முகம் பார்த்து
மது பேசவே இல்லை கீழே குனிந்து கொண்டே அவனிடம் பேசி முடித்துவிட்டு சாப்பிட
உட்கார்ந்து விட்டாள்
.

தீனாவிற்கும்
ஒரு மாதிரியாகிவிட்டது வந்து முதல் நாளே சாப்பிட வந்த பெண்ணிடம் இப்படி நாம் எறிந்து
விழுந்து இருக்க கூடாதோ என்று நினைத்துக் கொண்டே மேலே மாறி ஏறி குட்டி பையன்
அறைக்கு சென்று விட்டான்
.

தீனாவின்
கடுஞ்சொல் மனதை மிகவும் பாதிக்க அவனின் பழைய புன்னகை முகம் எப்படி இருக்கும் என்று
யோசித்துக் கொண்டே சாப்பிட ஆரம்பித்தால் மது
….

(
தீனாவிற்கு மதுவை பற்றிய எந்த ஒரு ஞாபகமும் இல்லை ஆனால் மதுவிற்கு ஏற்கனவே தீனாவை
தெரிவது போல தான் தெரிகிறது
)
🤍🤍🤍

 

 

    No comments yet.