பாலைவனத்தில் பூத்த ரோஜா எபிசோட் -4

BalaSneha Velmurugan | 01 Dec 2025 | Share

அத்தியாயம் -4

இங்கு
ஆசிரமத்திற்கு வந்த எஸ்தர்
,” உடனே பாதருக்கு கால் பண்ணி நடந்த அனைத்து விஷயங்களையும் பற்றி தெளிவாக
கூறினார். அதற்குப் பிறகு பாதர் ஒரு யோசனை
கூற….

 அதை 
செயல்படுத்த விரைந்து உள்ளே
சென்று ஒருவரை தேடிக்கொண்டிருந்தார்.

அவர் தேடி
கொண்டு இருந்த பெண் அங்கு ஒருசிறு குழந்தையுடன் பேசிக்கொண்டு்ம் அவளுக்கு உணவு
அளித்துக் கொண்டிருந்தால்
,”நம் கதையின் நாயகி மதுநிலா

நேற்றோடு
அவளது கல்லூரி படிப்பு முடிந்து விட்டது
.ஒவ்வொரு ஆசிரமத்திலும் எழுதப்படாத விதி அவர்கள் தன்
படிப்பு முடியும் வரை இருந்து கொள்ளலாம்
.அதற்குப் பிறகு
வெளியே சென்றுதனக்கான வேலை தேடிக்கொண்டு சுயமாக வெளியே தங்கி  விட வேண்டும்
”.

 அதற்குப் பிறகு ஆசிரமத்திற்கு அவர்கள்
நன்கொடையாக பணமோ
,பொருளோ கொடுப்பது அவர்களின் விருப்பம் .

ஆனால் படித்து முடித்த பின் ஒரு வேலைக்கு
சென்று விட வேண்டும் அப்பொழுதுதான் இதற்கு
பிறகு வரும் சிறு குழந்தைகளுக்கு
இடம் கிடைக்கும்
.

குழந்தையிடம்
பேசிக் கொண்டிருந்தாலும் மனதில் இதையெல்லாம்  ஓட விட்டுக்கொண்டு

அமர்ந்திருந்தால்
, தனக்கு இன்னும் சரியான வேலை கிட்டவில்லை.இவர்களுக்கு தன் இருப்பு தேவை இல்லாத சிரமத்தை தரும் என்று வருந்தி கொண்டிருந்தால்.

சின்ன இன்ட்ரோ—–

மது
நிலா ஐந்தரை அடி தங்க சிற்பம்
. உண்மையிலேயே தங்க சிற்பம் தான் மனததாலும் சரி, உடலாலும்
சரி
. மாநிறம் கலந்த தங்க நிறம் எப்பொழுதும் சிரிக்கும்
உதடுகள்
,அமைதி நிறைந்த கண்கள், சற்று ஒடிசலான
தேகம்
.

 அவளின் அந்த அமைதி நிறைந்த முகத்தில் தோன்றும்
சிரிப்பை காணும் எவராலும் மீண்டும் அவளைப் பார்த்து சிரிக்காமல் இருக்க முடியாது
.”அந்த அளவிற்கு புன்னகை
நிறைந்த மனதை கொள்ளை கொள்ளும் குழந்தை முகம்
”.

மதுமா!!! “இங்க கொஞ்சம் வாயேன் “?

சொல்லுங்க
மதர்
! என்ன விஷயம்? “

உனக்கான
ஒரு நிரந்தர வேலையே பாதர் பார்த்திருக்காரு
! ஆனா!!!! உன்னால கேர்டேக்கர் வேலையை செய்ய முடியுமா?

 எந்த வேலையுமே குறைவான வேலை கிடையாது. நான்
படிச்சிருக்கேன் என்றதுக்காக கேர்டேக்கர் வேலை பார்க்க மாட்டேன் கிடையாது மதர்
.”நல்ல பாதுகாப்பான இடமும், தங்குறதுக்கான வசதியும் ,நல்ல சம்பளமும் கிடைக்கிற இடத்துல வேலை பார்க்கிறதுல எனக்கு சந்தோஷம்தான் !!

இன்னொருத்தவங்கள
பாத்துக்கவும்
, என்னோட பராமரிப்புல அவங்க நல்லபடியா இருக்காங்கனும் போது நான் அந்த
வேலையை மனதார ஏத்துக்கிறேன் மதர்
.


யார பார்த்துக்கணும் எங்க இருக்காங்க
?”

உனக்கு
நல்லாவே தெரியும் மது, இங்க பர்வதம் அம்மானு மாதம் மாதம் நமக்கு ஆசிரமத்திற்காக
நிதியுதவி செய்வாங்க உன்கிட்டயும் நல்லபடியா பேசுவாங்க இல்லையா அவங்க வீட்டுக்கு
தான் போற
.

அவங்களுக்கு
என்ன ஆச்சும்மா
?நல்லா தானே இருந்தாங்க ?”கடைசியா பார்க்கும்போது
தன்னோட பையனுக்கு கல்யாணம் ஆயிடுச்சு அதுக்காக எல்லாருக்குமே புது துணி எல்லாமே வாங்கி
குடுத்து நல்லா பண்ணாங்க இல்லையா
.”,மதர்.

மதர் எஸ்தர்,” பர்வதம் வீட்டில் நடந்த
அனைத்தையும் மதுநிலாவிடம் சொல்ல சொல்ல
,” தாய் இல்லாமல் அந்த
பிஞ்சு குழந்தை படும் அவஸ்தையை நினைத்து மனம் வெதும்பினால்
“,”பர்வதம் அம்மாவின் நிலையை தன்னால் முடிந்த அளவுக்கு சரி செய்ய வேண்டும் என
மனதார வேண்டிக் கொண்டாள்
”.

மனைவியின் துரோகத்தை தாங்கி, பிஞ்சு குழந்தையுடன்
தந்தையே இழந்து தாயும் இந்த நிலையில் இருக்க அந்த ஆண் எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பான்
”, என முகம் தெரியாத தீனதயாளனின் மீது இரக்கம் கொண்டால் மது நிலா…. .

நீ
நாளைக்கே அங்க வேலைக்கு போகணும் மது உனக்கான பொருள்கள் எல்லாத்தையும் எடுத்து
வச்சுக்கோ
!!!
நாளைக்கு நான் உன்ன அங்க கூட்டிட்டு போய் விட்டுட்டு வந்துடறேன்
!

சரிங்க
மதர்
! என்னோட
திங்ஸ் எல்லாமே ஆல்ரெடி பேக் பண்ணி தான் வச்சிருக்கேன்
.இப்போ
உடுத்து மாத்துக்கு மட்டும்தான் வெளியில் ஒரு செட் வச்சிருக்கேன் மத்தபடி நம்ம
நாளைக்கு அப்படியே கிளம்பிக்கலாம் எல்லார்கிட்டயும் சொல்லிட்டு கிளம்புனா மட்டும்
போதும்
.

அடுத்த
நாள் ஆசிரமத்தில் உள்ள அனைவருக்கும் பிரியா விடை பெற்று
,” பர்வதம்  வீட்டை நோக்கி தனது புது வாழ்க்கையின்
அத்தியாயத்தை தொடங்க சென்று கொண்டிருந்தால் மதுநிலா
”.

செல்லும்
வழியில் கூட்ட நெரிசலாக இருக்க
,” பார்க்கும்பொழுது மினிஸ்டர் இந்த பக்கம் வரும் நேரம் என்பதால் வரும்
அனைத்து வாகனங்களையும் வேறு வழியில் மாற்றிக் கொண்டிருந்தனர்
.

 அதனை தலைமை தாங்கி பார்த்துக் கொண்டிருப்பது தீன
தயாளனின் கடமையாக இருந்தது
.

 தீனதயாளன் மதர் எஸ்தர் வண்டியை பார்த்துவிட்டு ,விரைவாக அவர்கள் முன்
வந்து
!!!!

மதர்?”இந்த பக்கம் இன்னைக்கு
ரொம்ப கூட்டமா இருக்கும்
.

 முடிஞ்ச அளவுக்கு நீங்க ஏதாவது அவசரமான வேலைனா மட்டும்
வெளியே போங்க இல்லைன்னா கொஞ்ச நேரம் கழிச்சு வெளிய போய்க்கலாம்
.

அப்படி
எல்லாம் ஒன்னும் இல்லபா
!” உங்க வீட்டுக்கு கேர்டேக்கர் கேட்டு இருந்தீங்க இல்லையா? அதுக்கான பொண்ணு எங்க அஷ்ரமத்துல இருந்து நாங்க கூட்டிட்டு
வந்திருக்கோம்.

அந்த
பொண்ண தான் உங்க வீட்டுல விட்டுட்டு வருவதற்காக நான் வந்து இருக்கேன்
!

இவங்கதான்
அவங்க. இவங்க பேர் மதுநிலா
. இப்பதான் படிச்சு முடிச்சாங்க உங்க வீட்டோட சூழ்நிலைகள் எல்லாமே சொல்லி
இருக்கேன் கண்டிப்பா உங்க அம்மாவையும் உங்க குழந்தையும் நல்லபடியா பாத்துக்குவாங்க
!!

தீனதயாளனை
மெதுவாக எட்டிப் பார்த்த மதுநிலாவின் கண்களில்
,”ஒரு நொடி அதிர்ச்சி வந்து போனது அவன்
பார்க்கும் முன்பே அதனை மறைத்துக் கொண்டாள்
.”

 ஆனால் காக்கி சட்டை போட்டவனின் கண்ணில் இருந்து
எதுவும் தப்புமா என்ன
? அவளின் அதிர்ச்சி முகத்தை ஒரு நிமிடம் ஆராய்ந்த தீனதயாளன் அதற்கு மேல் எதுவும் பேசாமல்”,

 சரிங்க மதர் வீட்டில் விட்டுருங்க அம்மா கிட்ட
எல்லாமே சொல்லிடுங்க நான் வீட்ல போய் பார்த்துகிறேன் ரொம்ப நன்றி
! நீங்க பண்ண உதவிக்கு.

இதுல
எனக்கு எந்த ஒரு கஷ்டமும் இல்லை
,” பர்வதம் அம்மாவுக்கு எங்களால முடிந்து ஒரு சின்ன உதவியாக
நினைக்கிறோம்
“!!!”கர்த்தர் இவ்ளோ நாளா நீங்க செஞ்ச உதவிக்கு
மறு உதவி செய்யறதுக்கான வாய்ப்பு கொடுத்து இருக்காரு அதை நாங்க மனதார
ஏத்துக்கிறோம்
!!!.

சரிங்க
மதர் ரொம்ப சந்தோஷம் பார்த்து போங்க அம்மா கிட்ட நான் எல்லாம் சொல்கிறேன்
.

இங்கு  வீட்டிற்குள் நுழைந்ததும் மதுநிலாவின் முகத்தைப்
பார்த்த கண்ணாமாவிற்கு அப்பொழுதுதான் மூச்சு சீராக வந்தது
.

 வருகின்ற பெண் எப்படி இருப்பாள் ?எந்த மாதிரி நடந்து
கொள்வாள்
? அனுசரணையாக இருப்பாளா? இல்லையா? என்ற ஆயிரம் கேள்விக்கு அவளின் ஒற்றை சாந்தம் நிறைந்த புன்னகைமுகம் , எளிமையான காட்டன் புடவையில் வந்த அவளின் நிதான எட்டுகளும் பல தலைமுறைகளை பார்த்த
அந்த வயதானவரின் எண்ணத்தை பூர்த்தி செய்து விட்டது
.

 பர்வதம்  அம்மாவிற்கு மதுநிலாவை பார்த்ததும் அத்தனை
சந்தோஷம்
.”தான்
ஒவ்வொரு முறை ஆசிரமத்திற்கு வரும் பொழுதும் தன் பின்னாலே சுற்றிக் கொண்டிருந்த
பெண்ணா இது
!” இவ்வளவு தூரம் வளர்ந்து
நின்று கொண்டிருக்கிறாள்
”! அவள் தான் தங்களைப் பார்த்துக்
கொள்ள வந்திருக்கிறாள் என்று தெரிந்ததும் அவருக்கு மனம் அமைதி அடைய ஆரம்பித்தது
.
!

எஸ்தர் ,மதுமிதாவிடம் எதுவும்
கூறவில்லை
.

உன் கெட்டிகாரத்தனத்திற்கு, உன் பொறுமைக்கும் ,நீ இங்கு நன்றாக இருப்பாய் !!!என்று எனக்கு
முழுவதும் நம்பிக்கை உள்ளது
, மது .பத்திரமாக
இரு
! எதுவாக இருந்தாலும் எங்களுக்கு அழை நான் சென்று
வருகிறேன்
.ப்ளஸ்ட் யூ மது

சரிங்க
மதர்
.”கண்டிப்பா
எனக்கு லீவ் கிடைச்சா நானும் கண்டிப்பா அங்க வந்து எல்லா குழந்தைகளையும்
உங்களையும் பார்த்துக்கிறேன் ஃபாதர் கிட்டயும் நான் சொன்னதை சொல்லிடுங்க
.”

எஸ்தர்
அனைவரிடமும் விடை பெற்று சென்று விட்டார்
.

மதுமா !என்ன அடையாளம் தெரியுதா ?

உங்களை
அடையாளம் தெரியாம எப்படி பாரு
?”


எப்பவுமே நீங்க என்னோட செல்ல பாரு
!” தான் .

இன்னும்
கொஞ்ச நாள்ல நீங்க எந்திரிச்சு நடக்கல அப்படின்னா இந்த மதுவை நீங்க என்னன்னு
கேட்கலாம்
?..

மதுவின்
இந்த சுட்டித்தனமான பேச்சு ஒரு சிலரிடம் மட்டுமே வெளிப்படும்
.அதில் பர்வதம்
முக்கியமானவர் அவர் வரும்போது எல்லாம் மதுவிடம் காட்டும் கனிவு அவளை அவரிடம்
உருக்கச் செய்தது அவரும் தாயாகவே பாவிக்க ஆரம்பித்தார் அதனால் பர்வததிடம் மட்டும்
எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் மதுவால் பேச முடிந்தது
.

தன்னிடம்
பேசினாலும் மதுவின் கண்கள் அலைபாய்வதை கண்டவற்கு சிரிப்பு வராமல் இல்லை
!?அவளே சொல்லட்டும் என்று
அவரும் பொறுமையாக காத்திருக்க
!

பாருமா!
குட்டி பையன் எங்க நான் வந்துல இருந்து பார்க்கவே இல்லையே ?”அவனா நல்ல தூக்கத்தில் இருப்பான் இப்பதான் சாப்பிட்டா இன்னும் ரெண்டு மணி
நேரத்துக்கு எந்திரிக்க மாட்டான்

 மேல தான் உன்னோட ரூம் இருக்கு நீ அங்க போய்
ரெப்ரஷ் ஆயிட்டு கீழே வா
.

 சரி கண்ணம்மா!? நைட்டுக்கான சமையல் செஞ்சிடு தீனா இன்னைக்கு
சீக்கிரமே வந்துடுவேன் சொல்லி இருக்கான் அதனால எல்லாருமே சேர்ந்து சாப்பிடலாம்
.

பொறுங்க
பாட்டி
!
நானும் ரெஃப்ரெஷ் ஆயிட்டு வரேன் நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து சமைக்கலாம்
.

உனக்கு
எதுக்குமா சிரமோ
?” நீயே இன்னைக்கு தான் வந்திருக்க நல்லா
ரெஸ்ட் எடு
!”

எனக்கு
ஒரு சிரமமும் இல்லை
? நான் உங்களுக்கு சின்ன சின்ன உதவி பண்றேன் நம்ம பேசிக்கிட்டு வேலை
செஞ்சோம்னா சீக்கிரமா சமைச்சு முடிச்சிடலாம் அப்புறம் நம்ம எல்லாருமே சேர்ந்து
கொஞ்ச நேரம் பேசலாம்
!

அவள்
மேலே சென்று விட கீழே கண்ணம்மாவும் பர்வதமும் அவளின் இந்த குணத்தை பார்த்து மனதார நிம்மதி
மூச்சு விட்டனர்
.

இனி
எல்லாம் சரியாகிவிடும் என்று நம்பிக்கை வந்தது அவர்களுக்கு
”…

 

          (உங்கள் கருத்துகள் என்னை
மேலும் மேலும் எழுத ஊக்கப்படுத்தும்
).

 

 

 

 

 

    No comments yet.