அத்தியாயம் -3
அவர்கள் எல்லாரும் சென்று விட்டார்கள். ஆனாலும் இரவு உணவிற்கு கூட பூர்ணிமா கீழே வரவில்லை .
பர்வதமும் தீனதயாளனிடம் ,”என்னப்பா தம்பி? இன்னும் அந்த பொண்ணு கீழே வந்து சாப்பிடாம இருக்கு”. ஒரு வார்த்தைக்கு கீழே வந்து சாப்பிட கூப்பிட்டா என்கிட்ட தான் அந்த பொண்ணு எடுத்து எரிஞ்சு பேசுது “
“உன்கிட்ட அப்படி கிடையாது இல்ல கீழே வந்து சாப்பிட சொல்லு தம்பி. வெறும் வயித்தோட எப்படி படுக்கும்
சரிமா இருங்க .வந்து சாப்பிட சொல்ற !
இங்கு மேலே வந்து பார்த்த தீன தயாளனுக்கு ஒரு நிமிடம் அதிர்ச்சியாகிவிட்டது …..
“மிகவும் மெல்லிய சேலை ஒன்று கட்டிக்கொண்டு ஒப்பனைகளோடு உட்கார்ந்திருந்தால் பூர்ணிமா அதனை பார்த்து தீன தயாளனுக்கு என்ன சொல்வது என்றும் தெரியவில்லை”.
“அவனை பார்த்து கண்களில் வெட்கமும்,மோகமும் நிறைய தலை குனிந்தாள் “
என்ன பூர்ணிமா ? கீழே வந்து சாப்பிடாம இங்க என்ன பண்ணிட்டு இருக்க?
இல்லங்க!” எனக்கு பசிக்கல” நீங்க வேணா சாப்பிட்டு வாங்க அப்புறம் தீனா எனக்கு ஒன்னு வேணும் வாங்கிட்டு வருவீங்களா ?
என்றும் இல்லாத தோணியில் கேட்க தீனாவின் தலை தானாக சரி என்று,
சொல்லு பூர்ணிமா உனக்கு என்ன வேணும்?
“எனக்கு கொஞ்சம் மல்லி பூ வைக்கணும் போல இருக்கு வாங்கிட்டு வர முடியுமா’ ?
அத பிரிட்ஜில் இருக்குல்ல அம்மாட்ட சொல்லிக்கொடுத்து விட சொல்ற.
நான் உங்ககிட்ட தான் வாங்கிட்டு வர சொல்லி கேட்டேன் ஃப்ரிட்ஜ்ல இருக்குன்னு எனக்கு தெரியும் !!!
நீங்க வாங்கிட்டு வந்து தந்தா!!! நான் வச்சிக்கிறேன் இல்லேன்னா எனக்கு ஒன்னும் வேண்டாம்!!!
சரி ஓகே? எதுக்கு இதுக்கு போய் இவ்ளோ கோவப்படுற.
நான் சாப்பிட்டுட்டு உனக்கு வாங்கிட்டு வரேன் .உனக்கு சாப்பாடும் நான் மேல எடுத்துட்டு வந்துடறேன் சரியா?
அவர் நம்மள ரொம்ப முக்கியமா நினைக்கிறார் .நம்ம தான் அவரை புரிஞ்சுக்காம இருந்துட்டோம் !!?என்று வெட்கச் சிரிப்பு சிரித்துக் கொண்டு கீழே குனிந்து விட்டாள்.
கீழே வந்த தயாளன் சாப்பிட்டுவிட்டு.
அம்மா நான் கடை வரைக்கும் போகணும் பூர்ணிக்கு கொஞ்சம் சாப்பாடு மட்டும் எடுத்து வச்சிருங்க நான் மேல கொண்டு போயிடறேன்.
ஏதோ நடக்கிறது என்று மட்டும் தெரியும். பர்வதம் மனதார எல்லாம் நல்லபடியாக நடந்து விட்டால் போதும் என்று அவர் அமைதியாக இருந்து கொண்டார்.
சிறிது நேரத்தில் மற்றவை வாங்கிக் கொண்டு மேலே மாடிக்கு சென்ற தீனதயாளனின் முன்பு நின்று கொண்டிருந்த பூர்ணிமா அவன் கொண்டுவந்த மல்லிகை பூவே வைத்துக்கொண்டு சாப்பிட்டுவிட்டு வந்து பெட்டில்அமர்ந்து கொண்டு தீனதயாளனையும் அழைத்தாள்.
தீனா இங்க வரீங்களா???.
சொல்லு பூர்ணிமா என்ன?
எனக்கு உன்ன ரொம்ப பிடிக்கும் இப்படியே இருக்க முடியாது என்ன இருந்தாலும் நம்ம லைஃபை ஸ்டார்ட் பண்ண தான் போறோம் .
அதையே இன்னைக்கு நம்ம ஸ்டார்ட் பண்ண கூடாது என்று சொல்லிக்கொண்டு தீன தயாளனின் கன்னத்தில் முத்தமிட்டு விட்டாள்.
தீனதயாளனுக்கு பூர்ணிமாவை பிடிக்காமல் எல்லாம் இல்லை சிறு பெண் பேச தெரியாமல் பேசுகின்றாள் என்ற கோபம் மட்டுமே மற்றபடி பூர்ணிமாவை தன் மனைவியாக முழுவதுமாக ஏற்றுக் கொண்டான். அவனுக்கும் இவருக்கு முன்பு காதல் எதுவும் கிடையாது படிப்பு, நண்பர்கள், வீடு என்று மட்டுமே இருந்து விட்டான்
பூர்ணிமா தான் அபிஷேக் என்று காதலன் இருக்கிறான் என்பதை மறைத்து விட்டால்,இதை பற்றி தீனாவிற்கு தெரிந்திருந்தால் முன்பே அவர்களை சேர்த்து வைத்திருப்பான் இவ்வளவு தூரம் எதுவும் நடந்திருக்காது.
இங்கு பூர்ணிமாவின் முத்தத்தை ஏற்றுக் கொண்டு அடுத்தடுத்து கூடலை அழகாக அவன் ஆரம்பித்து வைக்க அவர்களின் இல்லறம் இனிதே ஆரம்பித்தது.
அதற்குப்பின் பூர்ணிமா தீனதயாளனும் சந்தோஷமாக தான் இருந்தார்கள் இருவருக்கும் கணவன் மனைவி என்ற பந்தம் அழகாக சென்று கொண்டிருக்கிறது ஒரு நாள் பூர்ணிமாவிற்கு தனக்கு சரியாக மாதவிடாய் வரவில்லை என்பது யோசனை வர பிரகனண்ட் கிட் வாங்கி வந்து பரிசோதிக்கும் போது இரண்டு கோடுகள் காட்ட மருத்துவமனைக்கு சென்று பார்க்கும் பொழுது அவள் கர்பமாக இருக்கிறாள் என்பது தெரிய வந்தது.
இது பூர்ணிமாவிற்கு அதிர்ச்சி தான் . கர்ப்பமாக கூடாது என்று கருத்தடை மாத்திரை எடுத்தும் கர்பம் ஆகிவிட்டோமே! எங்கு தவறு நடந்தது? என்று யோசிக்கும்போது ஒருமுறை இருவரும் கூடும் பொழுது கருத்தடை மாத்திரை எடுப்பதை பூர்ணிமா மறந்துவிட்டாள் . ஒருமுறை தானே என்று நினைக்க அதன் விளைவாகத்தான் இப்படி ஆகி இருக்கும் என்று இப்பொழுதுதான் யோசிக்கிறாள்.
இதை எப்படி அபிஷேக்கிடம் சொல்லிக் கொள்வது அவள் ஒன்றும் தீன தயாளுடன் வாழ ஆரம்பித்த பின்பும் அபிஷேக் உடன் பேசாமல் இல்லை அபிஷேகம் பேசிக் கொண்டுதான் இருந்தால் நான் உனக்கு உண்மையாக தான் இருக்கிறேன் அவரோட நான் வாழ்வதே கிடையாது நானும் அவரும் வேறு வேறு ஒரு ரூமில் தான் படுத்துக் கொண்டிருக்கிறோம் என்று அவனிடம் பேசிக்கொண்டு இருக்க இப்பொழுது நாம் கர்ப்பமாகி விட்டோமே என்ன செய்வது என்று தெரியாமல் பித்து பிடித்தது போல் அமர்ந்து விட்டால்.
அதற்குப் பின் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் அவளை தாங்கு தாங்கு என்று தாங்கினாலும் அவள் எதையும் கண்டு கொள்வதாக இல்லை சரியாக அவளது கல்லூரி படிப்பு முடிந்து செமஸ்டர் எக்ஸாம் ஆரம்பிக்கும் நேரத்தில் தான் கர்ப்பமாகி இருந்தாள்.
அதனால் கல்லூரிக்கு போக வேண்டிய அவசியம் இல்லாமல் இருந்தது பரிட்சை மட்டுமே எழுதுவதற்காக சென்று வர வேண்டி இருந்தது. ஆனால் அவள் அதற்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்து கொண்டாள் அபிஷேக் கேட்டதற்கு தனக்கு உடல்நிலை சரியில்லை என்று மட்டுமே கூறி அமைதியாக இருந்து விட்டால்.
தீனாவிற்கு சரி பர்வதமும் சரி எதற்காக இவள் இப்படி அமைதியாக இருக்கிறாள். ஏன் இப்படி செய்கிறாள் என்று ஒன்றும் விளங்கவில்லை இருந்தாலும் சரி கர்ப்பமான பெண் அதனால் அப்படி இருக்கிறது சிறுப்பெண் தானே அவளால் இதை ஏற்றுக் கொள்ள இயலவில்லையே என்று விட்டுவிட்டனர்.
சரியாக ஒன்பது மாதங்களும் முடிந்து விட்டது. அன்று சரியான வலி வந்து விட பூர்ணிமாவை கூட்டிக்கொண்டு மருத்துவமனையில் சேர்த்து விட அங்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.
எல்லாம் முடிந்து மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு கூட்டி வந்து விட்டனர். பிறந்த ஒரு மாதத்தில் தனது தாய் வீட்டிற்கு போய் ஆகவேண்டும் என்று சண்டை பிடித்து தனது தாய் வீட்டிற்கு போயிருந்து கொண்டால் .
இங்கிருந்து தீன தயாளனும் பர்வதமும் சுந்தரமும் போய் பார்த்துக் கொண்டு வந்து பேரனோடு மருமகளை அழைத்துச் செல்ல நினைக்க. ஆனால் யார் வந்தாலும் அவர்களோடு பேசுவதோ அவர்களுக்கு குழந்தையை கொடுப்பதோ!!!என்று இல்லாமல் அவள் பாட்டுக்கு அவள் ரூமில் அடைந்து கொண்டே இருந்தால்.
இதில் மிகவும் மனம் தளர்ந்து போனது தீனா மட்டுமே அவனால் பூர்ணிமாவை புரிந்து கொள்ளவே முடியவில்லை.
இரண்டு நாட்கள் சென்ற நிலையில் கற்பகம் இடம் இருந்து ஒரு போன் கால் வர குழந்தை மட்டும் வீட்டில் விட்டுவிட்டு, ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டு பூர்ணிமா சென்று விட்டால் என்று அழுது கொண்டே கூற எல்லாரும் வீட்டிற்கு சென்று பார்க்கும் பொழுது.
அந்த கடிதத்தில் ,
எனக்கு தீன தயாளனுடன் வாழ்ந்த வாழ்க்கை பிடிக்கவில்லை நான் அபிஷேக் என்றவரை காதலித்தேன். தீன தயாளனிடம் பலமுறை அதைக் கூறியும் விட்டேன். என்னை வற்புறுத்தி கணவன் மனைவியாக வாழ வைத்து இந்த குழந்தையை கொடுத்து விட்டார் எனக்கு இந்த குழந்தையின் மீது எந்த ஒரு விருப்பமில்லை எனக்கு இந்த குழந்தை வேண்டாம். நான் என் காதலனுடன் சந்தோஷமாக இருப்பதற்காக சென்று விடுகிறேன் .
என்னை வற்புறுத்தி என்னுடன் குடும்பம் நடத்திய தீன தயாளனின் மீது எனக்கு எந்த ஒரு விருப்பமும் இல்லை என்னை யாரும் தேட வேண்டாம் நான் என் வாழ்க்கையை தேடி போகிறேன் . அவரை கணவனாக நான் என்றுமே நினைத்ததில்லை மனதார அவரிடம் இருந்து நான் மனவிலக்கு வாங்கிக் கொள்கிறேன்.என்று அந்த கடிதத்தில் இருந்ததை படித்துப் பார்த்த தீனதயாளனுக்கு ஒரு நிமிடம் உலகமே தலைசுற்ற கீழே விழுந்து விட்டான். இங்கு ஒரு பக்கம் ,பர்வதம் மயங்கி விழுந்துவிட்டார்.
இன்னொரு பக்கம் குழந்தை வீழ் வீழ் என்று அழ ஆரம்பித்துவிட்டது.
இன்னொரு பக்கம் பாவி மகளே! இப்படி பண்ணிட்டு போயிட்டியே முன்னாடியே சொல்லி இருந்தா எல்லாமே சரி பண்ணி இருக்கலாமே !இப்ப இந்த பிஞ்ச வச்சிட்டு நாங்க என்ன பண்றது இந்த பச்ச பிள்ளை என்ன பண்ணுச்சு உன்ன???
சுந்தரம் தான் அனைவரையும் தேற்றி குழந்தையே தாங்களே பார்த்துக் கொள்வதாக கூப்பிட்டுக்கொண்டு வந்துவிட்டார். இங்கு வீட்டிற்கு வந்து அனைவரையும் தூங்க வைத்துவிட்டு அவர் மேலே மாடியில் நின்று கொண்டு யோசித்துக் கொண்டிருந்தார் .
என்னென்ன வார்த்தைகள் எழுதி இருக்கா.என் பையன பத்தி எனக்கு தெரியும் என்னமோ? இந்த பிள்ளையை வற்புறுத்தி கல்யாணம் பண்ண மாதிரியும் வற்புறுத்தி குடும்ப நடத்துன மாதிரியும். அன்னைக்கு அவன் மட்டும் கேக்கல அப்படின்னா இந்நேரம் என் பையனுக்கு கல்யாணமே நடந்திருக்காது எல்லாம் என் தப்பு தான் என் பையன் வாழ்க்கையை நானே கெடுத்துட்டேனே என்று மனம் புழுங்க வந்து படுத்தவர் காலையில் எழுந்திருக்கவே இல்லை.
எப்பொழுதும் 6:00 மணிக்கெல்லாம் எழுந்து விடுபவர் இன்று ஏன் எழவில்லை? என்று பர்வதம் வந்து பார்க்க மூச்சு பேச்சு இல்லாமல் படுத்துக் கொண்டிருந்தார். ஒரு நிமிடம் அவருக்கு மூச்சே நின்று விட்டது .என்ன என்ன ஆச்சு என்னன்னு தெரியலையே தீனா இங்க வாடா அப்பா எந்திரிக்க மாட்ராரு என்னன்னு தெரியல வந்து பாருடா!!!
ஐயோ! அம்மா அப்பாக்கு என்ன ஆச்சுன்னு தெரியல உடம்பே ஜில்லுனு இருக்கு வாங்க ஹாஸ்பிடல் கூட்டிட்டு போய் பார்க்கலாம்.
மருத்துவமனைக்கு சென்று பார்க்கும் பொழுது அவர் எப்பொழுதோ இறந்து விட்டார் என்ற செய்தி தான் இருவருக்கும் வந்தது. கணவன் இறந்த செய்தியை கேட்டு அந்த இடத்திலேயே மயங்கி விழுந்த பர்வதம் கைகள், காலும் வராமல் படுத்து விட்டார்….
( Flash back over)
அதற்குப் பின் அந்த வீட்டில் சந்தோஷம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாமல் ஆளுக்கு ஒரு மூலையில் முடங்கி விட்டார்கள் .
அடிக்கடி அந்த குழந்தையின் அழுகுரல் மட்டுமே கேட்கும் அதுவும் கண்ணம்மாவினால் பசியாறிவிட்டு அமைதியாக இருந்து கொள்ளும் இருந்தாலும் கண்ணம்மாவிற்கும் வயதாகி விட்டதால் எல்லா வேலைகளும் எடுத்து செய்ய முடியவில்லை
அதனால் தான் கேர்டேக்கர் ஆள் வேணும் என்று உங்கள் ஆஸ்ரமத்தில் சொல்லி உங்களை இங்கு வர சொல்லி இருந்தோம்.
ஓ மை ஜீசஸ் ! எதற்கு இவ்வளோ!!கஷ்டம் இவங்க குடும்பத்துக்கு எப்படி இருந்தவங்க எப்படி இருக்காங்க.
நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க! கண்டிப்பா ஒரு நல்ல பொண்ணு நான் இங்க அனுப்பிச்சு விடுறேன் அந்த குட்டி பையன் சரி உங்களையும் நல்லபடியா பாத்துக்குவா ,என்று பேசிக் கொண்டிருக்கும்போது மேலிருந்து தடதடக் என்று பூட்ஸ் சத்தம் கேட்க கீழே இறங்கி வந்து கொண்டிருந்தான்.
தீனதயாளன் இப்பொழுது மிகவும் மாறி போயிருந்தான் மறந்தும் கூட சிரிப்பதை நிறுத்தி விட்டான். முடிந்த அளவுக்கு தன்னை எவ்வளவு இறுக்கிக் கொள்ள முடியுமோ அந்த அளவுக்கு தன்னைத்தானே கட்டுப்படுத்திக் கொண்டான். தன் உணர்ச்சிகளின் வடிகாலாக கோபத்தை எடுத்துக் கொண்டான்.
இந்த ஒரு வருடத்தில் தீனதயாளன் டெபுட்டி கமிஷனர் ஆப் போலீஸ்ஆகிவிட்டான். அவனது பரிட்சையில் அவன் வெற்றி பெற்று போலீஸ் கமிஷனர் ஆகவும் , தனது தந்தையின் தொழிலையும் எடுத்து சிறப்பாக நடத்திக் கொண்டே இருக்கிறான்.
கீழே இறங்கி வந்தவன் .வணக்கம் சிஸ்டர்!! எப்படி இருக்கீங்க ?நல்லா இருக்கீங்களா ? குழந்தையும் அம்மாவையும் பார்த்துக்கிற மாதிரி ஆள் அனுப்பி விடுங்க .
இங்க அவங்களுக்கு எல்லா சுதந்திரமும் இருக்கும் எந்த இடத்திலும் நாங்க குறை வைக்க மாட்டோம் .ஆனால் அவர்கள் எதாவது ஒரு விஷயத்துல தப்பு செஞ்சாலும் என்னால தாங்கிக்க முடியாது நான் அப்பவே வீட்டை விட்டு அனுப்பிச்சு விடுவேன்.
கண்டிப்பா தீன தயாளன் நாளைக்கே அவங்க வந்துருவாங்க உங்களுக்கு கண்டிப்பா அவங்கள பிடிக்கும்..
எனக்கு பிடிக்கணும் அவசியமில்லை அவங்க எங்க அம்மாவையும் குழந்தையும் பார்த்துட்டாலே போதும்.
சரி அப்போ நான் வரேன் பர்வதம் அம்மா நாளைக்கு அவங்களை கூட்டிட்டு வர்றேன்.
தீனாவின் வாழ்க்கையில் மாற்றம் வருமா !!!!!!
காத்திருங்கள் 🤍 🤍 🤍 🤍
(உங்கள் கருத்துகள் என்னை மேலும் மேலும் எழுத ஊக்கப்படுத்தும்)
No comments yet.