பாலைவனத்தில் பூத்த ரோஜா எபிசோட் -2

BalaSneha Velmurugan | 26 Nov 2025 | Share

அத்தியாயம் 2

அவர்களின் திருமணத்தை பார்த்த சிறிது நேரத்திலேயே அவரது உயிர் இம்மண்ணுலகை விட்டு பிரிய ஆரம்பித்தது. தன் மகளுக்கு நல்லதொரு வாழ்க்கை அமைத்துக் கொடுத்துவிட்ட சந்தோஷத்தில் அவர் சென்று விட்டார் ஆனால் அவர் பெண்ணிற்கும் இதில் சுத்தமாக உடன்பாடு இல்லை.

அடுத்தடுத்து அவருக்கு செய்ய வேண்டிய அனைத்து காரியங்களையும் செய்து முடித்து திருமணம் ஆன இரு ஜோடிகளுக்கும் மணமகன் வீட்டில் முதலிரவிற்கான சடங்குகள் ஆரம்பித்து விட்டனர்.

அவர் தந்தை இறப்பிற்கு பின் இந்த மாதிரி சடங்குகளில் சுத்தமாக விருப்பம் இல்லாமல் தீன தயாளனும் பூர்ணிமாவும் இருக்க .

அவர்களின் தாயார் இந்த மாதிரி நேரத்துல இப்படி நடக்கக்கூடாது தான் இருந்தாலும் சாஸ்திரங்கள் சம்பவங்கள் எல்லாம் இருக்கு இல்லையா !!!

உங்க அப்பா இருந்திருந்தாலும் இதெல்லாம் நடத்தணும்னு தான் நினைச்சிருப்பாரு.

அதனால நீங்க மனசுல எதுவும் வச்சுக்காம உங்களோட வாழ்க்கையே தொடங்க ஆரம்பிங்க கண்டிப்பா உங்க அப்பாவும் இதை நினைச்சு சந்தோஷம் தான் படுவாரு.

————————————————

இங்கு முதலிரவு அறைக்குள் வந்த பூர்ணிமாவிற்கு தீனதயாளன் மீது எந்த ஒரு கணவன் என்கின்ற எண்ணமும் வரவில்லை.

அவள் இப்பொழுதுதான் கல்லூரி மூன்றாம் வருடம் படித்துக் கொண்டிருக்கிறாள்.அவளோடு படித்துக் கொண்டிருக்கும் அபிஷேக் என்ற மாணவனின் மீது அவளுக்கு காதல் இருவரும் கல்லூரி முதல் வருடத்தில் இருந்து காதலில் உள்ளனர் அபிஷேக் பெரிய பணக்காரனின் பையன் அதையும் தாண்டி அந்த காலேஜுக்கு அவன் தான் ஹேண்ட்சம் பாய் அதனால் அவன் மீது விருப்பம் இருந்தது இப்பொழுது காதலாக மாறி இருவரும் காதலிக்க ஆரம்பித்தனர் பூர்ணிமாவும் சொல்லிக் கொள்கின்ற போல் அழகுதான்.

சிறிது நேரத்திற்கு முன்பு பூர்ணிமாவின் ஃபோனில் இருந்து அபிஷேகிற்கு கால் பண்ணி இந்த மாதிரி எனக்கு கல்யாணம் ஆகிவிட்டது எனக்கு இதில் சுத்தமாக விருப்பமில்லை என்னை பொறுத்தவரை இந்த தாலி சென்டிமென்ட்லாம் கிடையாது நீ என்ன சொல்ற நாம இங்கிருந்து எங்கேயாவது ஓடிப் போய் விடலாமா.

அபிஷேக்” அந்த மாதிரி தப்பான முடிவு ஏதோ எடுத்துறாத பூர்ணிமா இன்னும் நமக்கு காலேஜ் முடிகிறதுக்கு ஆறு மாசம் இருக்கு அதுக்குள்ள காலேஜ் முடிச்சுட்டேனா எங்க அப்பா தன்னோட பிசினஸ் ஓட வாரிசா என்ன சொல்லிடுவாரு அதுக்கப்புறம் நான் உன்ன தான் கல்யாணம் பண்ணிக்குவேன் பேபி”.

 நம்ம ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்கலாம் உங்க அப்பா இறந்தது மட்டும்தான் எல்லாருக்கும் தெரியும் உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆனது இங்க இருக்க யாருக்குமே தெரியாது நீ தீனதயாளன் கிட்டயும் சொல்லி வச்சிடு யாருக்கு தெரிய வேண்டாம் காலேஜ் முடியட்டும்னு இந்த ஆறு மாசத்துக்கு எனக்காக பொறுமையா வெயிட் பண்ணு நம்ம ரெண்டு பேரும் அதுக்கப்புறம் கல்யாணம் பண்ணிக்கலாம் என்று ஒரு அறிவுரையை எடுத்துக் கூறிவிட்டு போனை கட் செய்து விட்டான் அபிஷேக்.

இன்று முதல் இரவு அறைக்குள் வந்த தீனதயாளனின் முன் மிகவும் பணிவாக நின்று கொண்டிருந்தால் பூர்ணிமா.

 ஏனென்றால் அவனிடம் தனக்கு கல்யாணம் ஆகவில்லை என்று கல்லூரியில் அனைவரிடமும் சொல்ல வேண்டும் நீங்கள் தான் என் கணவர் என்றும் சொல்லக்கூடாது என்று பல திட்டங்களை மனதில் வைத்துக் கொண்டு அமைதியாக எழுந்து நின்றாள்.

பரவால்ல பூர்ணிமா உட்காரு

சரிங்க தீனா..

என்கிட்ட ஏதாவது சொல்லனுமா. பூர்ணிமா …

ஃபர்ஸ்ட் நானே சொல்லிடுற!. இது நம்ம ரெண்டு பேருக்கும் அவசர அவசரமா நடந்த கல்யாணம்தான். எனக்கு இதுக்கு முன்னாடி எந்த ஒரு காதல் எதுவுமே கிடையாது நம்ம வாழ்க்கையே நம்ம தொடங்கலாம் பொறுமையாவே தொடங்கிக்கலாம் உடனே நம்ம ரெண்டு பேரும் கணவன் மனைவியா வாழணும்னு எந்த ஒரு அவசியமும் கிடையாது நீ என்ன சொல்ற ரெண்டு பேரும் புரிஞ்சு அதுக்கப்புறம் நம்ம ரெண்டு பேரும் வாழ்க்கையே தொடங்குவோம் எங்க அம்மா கிட்ட நான் பேசுகிறேன். சரியா.

ரொம்ப தேங்க்ஸ் தீனா நானே இதை எப்படி உங்க கிட்ட சொல்லலாம் அப்படின்னு சொல்லிட்டு வெயிட் பண்ணிட்டு இருந்தேன் அதே மாதிரி எனக்கு இன்னொரு ஒரு கண்டிஷன் இருக்கு இன்னும் ஒரு ஆறு மாசம் தான் இருக்கு காலேஜ் முடிகிறதுக்கு அதுக்குள்ளேயும் எனக்கு இப்படி மேரேஜ் ஆயிடுச்சு அப்படின்னு பிரண்ட்ஸ் கிட்ட சொன்னா எல்லாரும் என்ன ஒரு மாதிரி பேசுவாங்க காலேஜ் முடிஞ்சதுக்கு அப்புறம் எல்லார்கிட்டயும் சொல்லிக்கலாம் அதுவரைக்கும் எனக்கு கல்யாணம் ஆகாத மாதிரியே நம்ம இருப்போம். உங்களுக்கு இதுல ஏதாவது பிராப்ளம் இருக்கா.

ஒரு நிமிடம் தீனதயாளனுக்கு சங்கடமாக தான் இருந்தது இருந்தாலும் படிக்கிற பெண் அவள் மனதில் என்ன இருக்கிறதோ!!! சரி பூர்ணிமா உன் விருப்பம் நான் யார்கிட்டயும் சொல்லிக்கல நீயும் நல்லபடியா காலேஜ் முடிச்சுக்கோ நம்மளும் நம்ம லைஃப் பொறுமையா ஆரம்பிச்சுக்கலாம் இங்கே படுத்துக்கோ பெட்ல .எனக்கு உள்ள ஸ்டடி ரூம் இருக்கு நான் அங்க போய் இருந்துக்கிறேன் குட் நைட்.

ஓகே குட்நைட் தீனா இன்று அவளை அனுப்பிவிட்டு இவளது ஃபோனில் அபிஷேக் உடன் இரவு முழுவதும் மெசேஜ் செய்ய ஆரம்பித்து விட்டால்.

அடுத்த நாள் காலை எழுந்ததும் அவள் வீட்டில் இருப்பது போல் கடகடவென்று கிளம்பி காலேஜுக்கு செல்வதற்காக கீழே இறங்க.

 பர்வதம் வாமா எப்படி இருக்க நல்லா இருக்கியா ? உங்களோட வாழ்க்கை ஆரம்பிச்சுட்டீங்களா.? என்று எதார்த்தமாக கேட்க?

சீ !!!என்ன பெரியவங்க நீங்க இப்படித்தான் ஒரு பொம்பள பிள்ளை கிட்ட கேட்பீங்களா? ஒரு பேசிக் சென்ஸ் கூட இல்லாம இப்படி தான் எல்லாம் இருக்கீங்களா நான் காலேஜ் போக வழி விடுங்க நான் அப்புறம் வந்து பேசுறேன் என்று சென்றுவிட்டாள்..

அவள் பேசி சென்றதை கேட்டுக் கொண்டே படியில் இருந்து இறங்கிய தீனதயாளன் விடுங்கம்மா!?! சின்ன பொண்ணு தானே டக்குனு கல்யாணம் எல்லாம் ஆனதும் அந்த புள்ள டிப்ரஷன் இருக்கும் போல போகப் போக எல்லாமே சரியாயிடும்.

சரிதயா நான் ஒன்னு நினைச்சுக்கல இந்த காலத்து பொண்ணுங்க எல்லாருக்கு அவங்களோட எதிர்பார்ப்புகள் வேற மாதிரி இருக்க நம்ம என்ன பண்ண முடியும்.(இருந்தாலும் மனதிற்குள் அவருக்கு ஏதோ சரியாக படவில்லை)

 இப்படியே சில நாட்கள் சென்றுவிட அன்று தீன தயாளனின் நண்பர்கள் அவனது வீட்டிற்கு வந்து பேசிக்கொண்டிருக்க அதில் அவனது ஒரு நண்பன் விக்ரமிற்கு மட்டுமே அவர்களுக்கு திருமணமானது தெரியும்.

 மற்ற யாருக்கும் தெரியாது தயாளனின் நண்பர்கள் அனைவரும் ஆண் பெண் என்று சரிசமமாக பழகுபவர்கள். அவர்களளில் கல்கி என்பவளுக்கு தீனாவின் மீது பல நாட்களாக காதல் .

ஆனால் சிறிது நாட்கள் பிறகு சொல்லிக் கொள்ளுவோம் என்று அவள் அமைதியாக இருந்து விட்டால் ,சரியாக அவர்கள் எல்லாம் பேசிக் கொண்டிருக்கும் பொழுது தயாளன் உட்கார்ந்திருக்கும் பக்கத்து இருக்கையில் கக்கி உட்கார்ந்து தயாளுடன் கலகலப்பாக பேசிக் கொண்டிருக்க. அப்போதுதான் உள்ளேன் நுழைந்த பூர்ணிமாவிற்கு அது என்னவென்று சொல்ல முடியாத அளவிற்கு கோபம் பொறாமை எட்டிப் பார்த்தது …

என்னவென்றாலும் தன் கணவன் என்ற உரிமையை அவள் மனதில் பதிந்து விட்டதோ என்னமோ அதை பார்த்த பிறகு கல்கியை ஒரு முறை முறைத்து விட்டு மேலே மாடிக்கு சென்று விட்டால் கீழே வரவே இல்லை.

யார் தயா அந்த பொண்ணு??? மேல போறாங்க

எங்க அப்பாவோட ஃப்ரெண்ட் பார்ட்னரோட பொண்ணு இங்க தான் இருக்கா அவங்க எல்லாரும் ஊருக்கு போய் இருக்காங்க அதனால ரெண்டு நாள் இங்க தங்கிட்டு போகலாம்னு இருக்கா !!!

மேலே இருந்து இவர்கள் பேசுவது கேட்டுக் கொண்டிருந்த பூர்ணிமாவிற்கு புசுபுசுவென்று கோவம் வந்துவிட்டது. அதை எப்படி நான் உன்னோட மனைவி தான…

 அப்ப எல்லார்கிட்டயும் அவ என்னோட வைஃப்னு சொல்ல வேண்டியது தானே அது என்ன பிரண்டுன்னு சொல்றான். தான் இங்கு கல்லூரியில் அனைவரிடமும் தனக்கு கல்யாணம் ஆகவில்லை என்று மறைத்துவிட்டு.

 இப்பொழுது தனது நண்பர்களிடம் அவன் சொல்லவில்லை என்று நினைத்து கோபப்பட்டுக் கொண்டிருந்தால் பூர்ணிமா.

    No comments yet.