அத்தியாயம் -1
அந்த பெரிய வீட்டின் கேட்டை பார்த்து இரண்டு நிமிடம் மனம் வருந்த பழைய நினைவுகளில் மூழ்கிய மதர் எஸ்தர் ,
“எப்டி இருந்த மனுஷங்க இப்போ அடஞ்சு போய் இருக்காங்க.கர்த்தரே இவங்க கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி மீண்டும் இன்பத்தின் வாசல் திறக்க ஆசிர்வதியுங்கள்”.
என்று மனதார வேண்டி கொண்டு..வீட்டின் முன்புறம் நின்ற காவலாளியிடம் .
இங்க பர்வதம் மேடம் வர சொல்லி கடிதம் போட்டு இருந்தாங்க.
நான் மேரி ஆசிரம நிர்வாகி எங்க ஃபாதர் உடம்பு முடியாம இருக்கார் .என்ன விஷயம் கேட்டு போகலாம் வந்தேன்!
இருங்க மேடம் கேட்டு சொல்ற?
ஃபோனில் அந்த பக்கம் என்ன சொல்ல பட்டதோ .சரிங்கமா!இதோ அனுப்பறேன் என்று முன்பக்க இரும்பு கேட் திறக்க பட்டது.
மா உள்ள போய் பாருங்க …
வீட்டின் உள்ளே சென்ற மதர் எஸ்தருக்கு” மனம் வலிக்க ஆரம்பித்தது.
மாதம் மாதம் ஆசிரமம் வந்து குழந்தையோடு குழந்தையாக விளையாடும் இந்த வீட்டின் முதலாளியா இது என்று மனம் கேள்வி எழுப்ப.
பர்வதம் அம்மா என்ன ஆச்சு உங்களுக்கு? ஏன் இத பத்தி எங்களுக்கு எதுவும் சொல்ல வில்லை ?
ஃபாதர் கூட எங்களுக்கு சொல்லல! நீங்க கடந்த 6 மாதமா ஆசிரமம் வரலனு யோசிக்கும் போது உங்க பேரக்குழந்தை பார்த்துக் கொண்டு நேரம் இல்லாம இருக்கிங்க நினைத்தோம். என்னம்மா ஆச்சு!!!
“ஏன் இப்படி வீல்சேர்ல இருக்கிங்க ?”
“பர்வதம் அம்மாவின் விழிகளில் நீர்திரையிட,அவர்களின் பேச்சு குழறலாகவே வந்தது…”
“நீங்க இருங்கம்மா நா சொல்ற “என்று ,
இந்த வீட்டின் வேலைக்காக சேர்ந்து இன்று அவருக்கு எல்லாமுமாக இருக்கும் கண்ணம்மா சொல்ல ஆரம்பித்தார்.
உங்களுக்கு தெரியுனு நினைக்கிற எங்க தயா தம்பிக்கு போன வருஷ கல்யாணம் ஆச்சு !!! இல்ல அவங்க பிரிச்சு போய்டாங்கனு.
அந்த புண்ணியவதி பண்ணிட்டு போனது தான் எங்கம்மா இப்படி பக்கவாதம் வந்து இப்படி இருக்காங்க.
என்னம்மா ?? உங்க மருமக எங்கம்மா என்ன ஆச்சு எனக்கு புரியல???
மா உங்களுக்கு எல்லா சொல்றேன் அப்பதான் புரியும்…
————————————————————-
கடந்த காலம் பற்றி நாமும் தெரிஞ்சுக்கலாம்.
பர்வதம் அம்மா அந்த வீட்டின் முதலாளி, அவரின் கணவர் சுந்தர் அவரின் ஒரே தவப்புதல்வன் தீன தயாளன் . தயா விற்கு எல்லாமே அவர் அம்மா தான் சுந்தர் வேலை வேலை என்று வேலையில் மட்டுமே முழுகி கொண்டிருக்கும் ஒரு கட்டுக்கோப்பான வீட்டுத் தலைவர் படித்து முடித்த தயாளன் போலீஸ் ஆக வேண்டும் என்ற கனவில் தேர்வு எழுதி காத்திருக்கிறான். கனவு மட்டும் இல்லை அதன் மேலே சொல்ல முடியாத ஒரு தீவிர ஆசை சிறுவயதில் இருந்தே போலீஸாக வேண்டும் என்பது அவனின் லட்சியம் .
ஆனால் அவன் அப்பாவிற்கு என்னமோ அதில் விருப்பமே இல்லை இருந்தாலும் மகனின் ஆசைக்காக ஒன்றும் சொல்லவில்லை ஒரு வேலை இந்த எக்ஸாம்ல நீ ஃபெயில் ஆயிட்ட அப்படின்னா நம்மளோட பிசினஸ் எடுத்து பாக்கணும் தயா என்ற அக்ரீமெண்ட் போட்டு தான் அவன் அந்த எக்ஸாம் படிக்க விட்டார்.. அதற்காக தந்தையின் பிசினஸை பார்க்காமல் எல்லாம் இல்லை படித்து முடித்த நேரம் போக மற்ற நேரங்களில் தந்தைக்கு உதவியாக அவரது தொழிலுக்குச் சென்று பார்த்துக் கொள்வான். தந்தை எடுத்து நடத்திக் கொண்டிருப்பது நகைக்கடை அவர்களுக்கு சென்னையில் மட்டும் 2 கிளைகள் உள்ளன. எவ்வளவு கண்டிப்பாக இருந்தாலும் தயாளன் மீது தனி பாசம் உண்டு சுந்தரத்திற்கு எல்லாம் நல்லபடியாக தான் போய்க்கொண்டிருந்தது அந்த ஒரு சூழ்நிலை அமைவதற்கு முன்!!!!!!
சுந்தரமும் அவரது நண்பர் வாசுவும் சேர்ந்துதான் நகைக்கடைகள் பார்ட்னராக நடத்திக் கொண்டிருந்தார்கள். வாசுவிற்கு இரண்டு மகள்கள் மூத்தவள் பெயர் பூர்ணிமா இரண்டாவது பெண்ணின் பெயர் வனஜா மனைவி கற்பகம். கற்பகம் பேராசைக்காரியாக இருப்பார் தனக்கு என்று இருந்தால் தான் எப்படியாவது அதை அடைந்து விட வேண்டும் என்று எண்ணத்தில் இருப்பவள் .
மூத்த மகள் எடுப்பார் கைப்பிள்ளை தாயின் போதனையால் பிடிவாதம், எடுத்தெறிந்து பேசுவது என தாயின் வழியில் நடந்து கொண்டிருக்கிறாள்.
இரண்டாவது மகள் அப்படியே அப்பாவின் குணம் மிகுந்த தைரியசாலி சரி எது தவறு என்று சரியாக பார்த்து செய்பவள் எந்த ஒரு இடத்திலும் முன்கோபம் காட்டாமல் பொறுமையுடன் இருப்பவள்.ஒருமுறை வாசுவின் ஊரில் திருமணம் என்று குடும்பமாக சென்று வீடு திரும்பும் போது இரவு நள்ளிரவு ஆகிவிட்டது திரும்பி வரும் வேளையில் எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட அவரது இரண்டு மகளுக்கும் மனைவிக்கும் சிறு சிராய்ப்புடன் தப்பித்து விட்டார்கள் .
வாசுவிற்கு பலத்த அடி எனவே ஐசு வில் வைத்திருக்க கடைசியாக என் நண்பன் சுந்தரத்தையும் அவனது மகன் தயாளனையும் பார்க்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டதற்கு ,
அவசர அவசரமாக சுந்தரமும் தீன தயாளனும் மருத்துவமனைக்கு விரைந்து வந்தனர் வந்து பார்க்கும்பொழுது அவர் கடைசியாக உங்களிடம் பேச வேண்டும் என்று விரும்புகிறார் சீக்கிரம் பேசிவிட்டு வாருங்கள் அவரது உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதுஎப்பொழுது வேண்டுமானாலும் அவர் நம்மை விட்டு பிரியலாம் என்று மருத்துவர்கள் கையை விரித்த நிலையில் உள்ளே சென்ற சுந்தரமும் தீனதயாளனும் மனதை கல்லாக்கி கொண்டு அவருக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்த அப்பொழுது தனது மூத்த மகள் பூர்ணிமாவே உள்ளே அழைத்து வர சொல்லி தனது மனைவிக்கு சைகை செய்ய அவரும் உள்ளே பூர்ணிமாவை அழைத்து வந்தார்.
சுந்தரம் எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல !!!ரொம்ப நாளாவே இந்த ஆசை எனக்கு இருந்தது! “உன் பையன் தீனதயாளனுக்கு என் பொண்ணு பூர்ணிமாவ கட்டிக் கொடுக்கணும்” அதுவும் எல்லார் சம்மதத்தோட கேட்டு பிரம்மாண்டமா செய்யணும்னு நினைச்சேன் .ஆனா இந்த நிலைமையில் இப்படி நான் கேட்கிறேன்னு எனக்கே கஷ்டமா இருக்கு. ஆனா எனக்கு வேற வழி தெரியல உன் பையன் தீன தயாளன் என் பொண்ணுக்கு கட்டி குடுப்பியா சுந்தரோ.
தயாவிற்கு அந்தஅளவுக்கு இதில் பெரிதாக எந்த ஒரு விருப்பமும் இல்லை தந்தை என்ன சொல்வாரோ என்று அவர் முகத்தை பார்க்க?
நண்பனின் மேல் அதிக அன்பினால் என் பையன் நான் என்ன சொன்னாலும் செய்வான். இப்பவே தாலி கட்ட சொன்னாலும் கட்டுவா என்ன தயாளா சொல்ற ??
உங்க விருப்பம்பா ??என்று சொல்ல
அந்த நிலைமையிலும் மகனை நினைத்து பெருமைப்பட்டுக்கொண்டார் சுந்தர்.
உடனே வனஜாவிடம் மஞ்சள் கயிறு வாங்கி வர சொல்லி ,சுந்தர் கையில் அதனை கொடுக்க.
தயாளனிடம் சென்ற சுந்தர் அப்பா மேல நம்பிக்கை இருக்குல தாலிய கட்டுப்பா என்க.
ஒரு நிமிடம் யோசித்து விட்டு தாலி கட்டி விட்டான்.
பூர்ணிமாவினால் கோபம் அடக்க முடியாமல் கையை இறுக்கி அழுத்தி தன்னை சரி செய்து கொண்டாள்.
ஆனால் முன்பே அங்கு நின்று இருந்த பூர்ணிமாவிடம் “உனக்கு இதில் விருப்பமா “?என்று முதலில் அவளிடமே கேட்டிருந்தால் பின் நடக்கவிருக்கும் விபரீதங்கள் நடக்காமல் இருந்திருக்குமோ என்னவோ…
நாளைக்கு யூடில ஃபுல்லா flashback சொல்லி முடித்து விடுவேன்..
காத்திருங்கள் 🤍🤍🤍
No comments yet.