அத்தியாயம் -13
தீனாவின் போன், சத்தம் எழுப்ப -எடுத்து பார்க்க தன்னோடு இந்த கேசில் உதவிக்கு இருக்கும் டீனாவின் பெயர் வர…..
சொல்லுங்க டீனா என்ன விசயம்…
அவள் கூறியதை கேட்ட தீனாவிற்கு இந்த கேசின் தீவிரம் தனக்கு பெரிய சவாலாக இருக்கும் என தோன்றியது…..
மதுவிடம் திரும்பிய தீனா , நாங்க வெளில கிளம்புறோம்…நாளைக்குத்தான் வருவோம்.அம்மாக்கிட்ட சொல்லிடுங்க …
ஏன் எதற்கு என்று தோன்றினாலும் அவனின் பதட்டமான முகம் எதுவும் கேட்க விடவில்லை ….
என்னாச்சு டா …தீனா
வா போகும்போது சொல்றேன் என்று புறப்பட…
குரு !!!அடுத்த கொலையும் நடந்து இருக்குடா …
என்ன சொல்ற ?…எப்போ…இப்போதான் டீனா கால் பண்ணி சொன்னாங்க …இப்போ நம்ம அங்கதான் போறோம்…
கண்டிப்பா இது எல்லாம் சங்கிலிமாறி தொடர்கதையாக இருக்கு…எந்த ஒரு க்ளுவும் இல்லாம பண்றதுக்கு வாய்ப்பே இல்ல….
ஒருவேளை சைக்கோ கொலைகாரனா இருப்பானோ..தீனா
குரு ,”எனக்கு நிறைய விசயங்கள் முன்னுக்குபின் முரணா இருக்கு…
இதுல ஒருவிடயம் மாறல எல்லா பசங்களும் நகைக்கடை வச்சுருக்கவங்க பசங்க தான்…இப்போ இறந்த பையன் அன்புவனம் நகைக்கடையோட வாரிசு தான்.
மொத நம்ம போயி அந்த இடத்துல என்ன நடக்குது என்றது இன்வெஸ்டிகேட் பண்ணுவோம் டீனா எல்லாமே கலெக்ட் பண்ணி வச்சிருப்பா .நம்ம போயிட்டு மத்த விஷயங்களோட இதுவும் ஒத்துப் போகுதான்னு பார்த்தா நம்ம தேடுற எல்லாக் கேள்விக்கும் இதுக்கும் சம்பந்தம் இருக்கு…
நேரில் சென்று பார்த்த இருவருக்கும் இதற்கும் முதல் நடந்த மூன்று கொலைக்கும் எந்த ஒரு வேறுபாடும் இல்லை, அதைப் போலவே அப்படியே நடந்திருக்கிறது .
மற்ற எல்லா பாகங்களும் அப்படியே இருக்க, வாயில் மட்டும் தங்க உலோகம் முழுதும் மூடி இருக்க மணிக்கட்டு வரை வெட்டப்பட்ட கை, இரண்டு மோதிர விரலும் இல்லாத விரல் பார்க்கவே கொடூரமாக இருந்தது….
இன்னோரு விடயம் அவன் போட்டு இருந்த ஆடையில் ஒரு பகுதி ஆணியில் பாட்டி இழுத்து கிழிந்தது போல் இருக்க,
கண்டிப்பாக கொலைகாரனிடம் இருந்து தப்பிக்க அவன் முயற்சி செய்து இருக்கிறான் என்பது புரிந்தது…
மற்ற தடயங்களை சேகரித்து விட்டு, போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் அனுப்ப சொல்லி ஸ்டேசன் நோக்கி மூவரும் கிளம்பிவிட்டனர்.
போகும் வழியில் மூவரும் வெவ்வேறு சிந்தனையில் கேஸ் பற்றி யோசித்துகொண்டு வர,
ஸ்டைசன் வந்துட்டோம் சார் என்று டிரைவரின் குரலில் தான் இயல்பிற்கு வந்தனர்.
ராமையா மூணுபேருக்கும் ஸ்ட்ராங்கா டீ சொல்லிடுங்க …விறுவிறு என்று உள்ளே சென்றுவிட்டான்…
டீனாவும், குருவும் தீனாவை பின்பற்றி உள்ளே செல்ல,,,,
இருவர் முன்பும் ஒருகேஸ் பைலை வைத்தான்…என்ன? என்று நோக்க…
பிரித்து பாருங்கள் என்று சைகை செய்ய…
பிரித்துபார்க்க முதல் பக்கத்தில் அழகான பெண் ஒருத்தி சிரித்து கொண்டு இருந்தால், கீழே சாமுத்திரிகா.வயது:21. சமுத்திரிகா நகை கடை ஓனரின் மகன் மற்றும் மற்ற இறந்த மூன்று பையன்களின் பெயரும் இவளின் கைப்பட அவர்களால் தான் கற்பழிக்கப்பட்டு சித்திரவதை அனுபவித்ததாகவும் , மேலும் அவர்கள் இடம் இருந்து தப்பி வந்து புகார் அளிப்பதாகவும் , தண்டனை வாங்கி தரவேண்டும் என்றும் எழுதி இருந்தது……
அதற்கு பின் பக்கத்தில் கடந்த ஒரு வருடமாக காணவில்லை…எங்கு தேடியும் கிடைக்கவில்லை என்று அவளின் காதலனின் புகார்கடிதம்..
மற்றொரு பைலில் சாமுத்திரிகா நகைக்கடையில் வேலைப்பார்த்த பெண் காதலன் உடன் நகைகளை திருடிஎடுத்து சென்றுவிட்டாள் என்று இருக்க…
இரண்டு பைலும் ஒன்றாக வைத்து , திருடியதை எங்கே கண்டுபிடித்து விடுவார்களோ என்று முன்பே பொய்யான புகார் கொடுத்து தப்பித்துவிட்டாள் என்றுநகைக்கடை ஓனரால் புகார் கொடுத்து கேஸ் பைல்ஸ் மூடப்பட்டு இருந்தது….
தீனா என்னாஐ நம்ப முடியலடா … அந்த பொண்ணு சொன்ன ஐந்து பசங்கள்ல நாளு பசங்க கரெக்டா இறந்து இருக்காங்க இன்னும் தருண் மட்டும்தான் இருக்கான் …உனக்கு எப்படி இந்த ஃபைல் எடுக்கனும் தோணுச்சு…
இந்த பொண்ணு எங்க வீட்டுக்கு ஒருமுறை வந்து இருக்கா குரு!!!
என்ன சொல்ற எப்போ???
உனக்கு தெரியும் எங்களுக்கு நகைக்கடை இருக்குனு அதுக்கு நம்ம நிறைய விளம்பரங்கள் தரணும்…அப்போதா நம்ம வியாபாரம் நகைகளோட கலெக்சன் காட்ட முடியும்…
எப்படி விளம்பரம் முக்கியமோ அதே மாதிரி நகை அணிந்து விளம்பரத்துக்கு பேசுற பொண்ணும் முக்கியம்.. விளம்பரம் எடுக்கனும் நினைக்கும்போது தான் எங்க அப்பாவுக்கு சாதாரணமா நார்மல் பெண்கள் வச்சு விளம்பர படுத்தலாம் முடிவு செய்தார்.
என்கிட்டயும் சொன்னார் நானும் பெருசா கண்டுக்கல!!! அவர் விருப்பம்னு விட்டுட்டேன்…
எங்க கடைக்கு நகை வடிவமைப்பாளர்கு உதவி செய்ய ஆள் எடுத்துட்டு இருந்தோம் .. அப்போ நிறைய பைல்ஸ் என்கிட்ட வந்து இருந்துச்சு வேலைக்கு சேர அதுல இருந்தா பைல்ஸ்லாம் எங்க அப்பா பார்த்துட்டு இருந்தப்போ அதுல இருந்து ஒரு பைலில் சாமுத்திரிகாவோட ஃபைல் இருந்துச்சு இந்த பொண்ணு எவ்வளவு அழகா இருக்கு பேருக்கேத்த மாறி !
ஏன் இந்த பொண்ண வச்சு நம்ம நகைக்கான விளம்பரம் எடுக்கக்கூடாது அப்படின்னு எங்க அப்பாவுக்கு தோணிச்சு
உடனே எதைப்பற்றியும் யோசிக்காமல் போன் செய்து நாளைக்கு நீ வந்து இந்த வேலையில ஜாயின் பண்ணிக்கலாம். நாளைக்கு உனக்கு இன்டர்வியூ இருக்கு அப்படின்னு சொல்லி கூப்பிட்டார் …
அந்த பெண்ணும் எந்த ஒரு மறுப்பும் சொல்லாம நாளைக்கு வந்து அட்டெண்ட் பண்றதா சொல்லிஇருக்கா…
அடுத்த நாளும் அந்த பொண்ணு வேலைக்கு வந்து இருக்கா , அப்போ அந்த பொண்ணு கிட்ட இந்த மாதிரி நம்ம ஒரு விளம்பரம் எடுக்கணும் கண்டிப்பா நீ அதுல நடிச்ச ஆகணும் உனக்கு நல்ல சம்பளமும் தரேன் உனக்கு நல்ல முக வடிவம் மாடலுக்கு தேவையான எல்லா லட்சணமும் இருக்குமா!!
உனக்கு விருப்பம் இருந்தா பண்றியா ,கண்டிப்பா இது உனக்கு ஒரு பெனிஃபிட்டாயிருக்கும் அப்படின்னு எங்க அப்பா பேசியிருக்கிறார் ..
அந்த பொண்ணுக்கு இதுல அந்த அளவுக்கு சந்தோஷம் சொன்னவுடனே சரி அப்படின்னு சொல்லி சம்மந் சொல்லிடுச்சு.
ஏன்னா??? அந்த பொண்ணுக்குமே மாடலிங் பண்ணனும்னு ஆசை இருந்து இருக்கு ஆனா அந்தப்பெண் குடும்ப சூழ்நிலைனால மாடலிங் பண்ண முடியல ..நகை விளம்பரம்னு சொல்லும்போது எந்த ஒரு மறுப்பும் சொல்லாமல் சந்தோஷமா தான் நடிக்க ஒத்துக்கிட்டு அடுத்து நடிச்சு கொடுத்துச்சு.
உண்மைய சொல்லனும்னா அந்த விளம்பரமுமே ரொம்பவே நல்லபடியா வந்தது…ரொம்ப வரவேற்பு இருந்துச்சு மக்கள் மத்தியில்…
எங்க அப்பாவுக்கு ரொம்ப சந்தோஷம் நல்ல கூட்டமும் வந்துச்சு அதையும் தாண்டி சாமுத்திரிகாவோட அந்த அமைதியான அழகு நகைகள் கூட ஜொலிக்கிற அந்த நளினம் மத்த எல்லா நகைக்கடை உரிமையாளருக்கும் அவங்க நகை கடைல நடிக்க வேணும்னு கேட்க ஆரம்பிச்சாங்க…
அப்பாவும் மறுப்பு சொல்லல சுயநலமாக அந்த பொண்ணோட திறமைய முடக்கி வைக்க விருப்பம் இல்ல அவருக்கு, சாமுத்திரிகா கிட்ட சொல்லும்போது சந்தோஷமா நடிக்க ஒத்துகிட்டாங்க …ஆனா அதுக்கப்புறம் அவங்க வேலைக்கு வரல சொல்லிட்டாங்கனும், சாமுத்திரிகா நகைக்கடையில வேலை கிடைத்துவிட்டதாவும் அங்க சம்பளம் அதிகமா கிடைக்கிறதாகவும் அந்த பொண்ணு சொல்லிட்டு வேலையிலிருந்து விலகிடிச்சு .அப்பாவுமே கஷ்டப்படுற பொண்ணு தானே எங்க வேலை செஞ்சா என்ன நல்லபடியா இருக்கட்டும்னு விட்டுட்டாரு ஆனா அதுக்கப்புறம் அந்த பொண்ண அப்பா தருண் கூட வெளியில ஒரு டைம் பார்த்து இருக்காரு?
அதேபோல
இதுல அந்தப் பொண்ணு நகையே திருடிட்டு ஓடுனதா கம்ப்ளைன்ட் கொடுத்ததே தருண் தான்???
என்ன?????? என்று ஒரு சேர டீனாவும் குருவும் உரக்க…????
காத்திருங்கள்
பார்க்கலாம்..
No comments yet.