அத்தியாயம் -12
யார் இந்த பெண் ????
மதுவிற்கு இங்கு நிற்கலாமா ?வேண்டாமா?. நாம் இங்கு அதிகப்படியோ என்றெல்லாம் தோன்ற தொடங்க..
சற்று பின்னே நகர்ந்து நிற்க போக இதனை கண்டுகொண்ட தீனா ..ஏன் மது இங்கே நில்லுங்க என்று விட்டு திரும்ப
என்ன சார்? நீங்க அதிகப்படியான வேலை குடுத்து என் ஆள கஷ்டப்படுத்துறிங்கனு எனக்கு குற்றச்சாட்டு வந்து இருக்கு.
உங்க மேல வழக்கு போடலாம் இருக்கேன் …எதா இருந்தாலும் நம்ம கோர்ட்ல பேசிக்கலாம் என்று படபடவென்று பேச.
பார்த்து கொண்டிருந்த மதுவிற்கு பயம் தொற்றி கொண்டது… ஒரு வித பயத்தோடு தீனாவை நோக்கி முன்னேற,,,
ஏய் வாலு உன்னலாம் எப்படி தான் வீட்ல சமாளிக்கிறாங்க.. அவன்தா ஓட்டபானைல கல்லு போட்ட மாறி பேசிட்டு இருக்கான் பார்த்தா,” நீ அதுக்கு மேல”,,
என்று அவளை வம்பிழுக்க இதனை பார்த்த மதுவிற்கு அப்போதுதான் மூச்சு சீராக வந்தது.
அண்ணா அங்க பாருங்க ஒருத்தவங்களுக்கு பயத்துல ஜன்னியே வந்துடும் போல …
ஹான் !சொல்ல மறந்துட்டேன் மது…
,,, இவங்க வேற யாரும் இல்ல …குருவோட வருங்காலம் தான் இவங்க…பேரு வனஜா இப்போ மேடம் லாயர்க்கு படிச்சிட்டு இருக்காங்க
..அதுக்குள்ள என்மேல் கேஸ் போடுறாங்கலாம்.அவன்தா அரமெண்டல் அப்படினா இவங்க அவரையே ஃபீட் பண்ணுவாங்க ரெண்டும் சரியான தொல்லை…என்று தீனா சலித்து கொள்ள.
உண்மையில் இவர்கள் இருவரால் தான் தீனா சற்று உயிர்ப்போடு இருக்கிறான் என்பது அவனுக்கும் தெரியும்.
ஓஓ!!!எப்படி இருக்கிங்க … நா??
வெயிட் வெயிட்!!! நீங்க மதுநிலா சித்து குட்டி பார்த்துக்க வந்தவங்க கரெக்ட்டா!!!
மது எதுவும் சொல்லாமல் ஆமாம் என்று தலையசைத்து சிரிக்க,
பின் சிறிது நேரம் சித்துவை கொஞ்சி விட்டு இருவரிடமும் பேசிவிட்டு விடைபெற்றாள்.சீக்கரமே வீட்டுக்கு வரேன்!!! மது வரேன் !! அண்ணா வரேன் என்று ஓடியேவிட்டாள்.
மதுவிற்கு சில நிமிடம் ஏதோ கிண்டர்கார்டனில் நுழைந்தது போல இருந்தது…
சரியான வாய் இருக்கும் இடத்தை இவ்வளவு உயிர்ப்போடு வைத்துக்கொள்ள எப்படி தான் இவர்களால் முடிகிறது.
மதுவிற்கு ஆச்சரியமாக தான் இருந்தது. ஆனால் ஒன்று சொல்லியாக வேண்டும். குரு அண்ணாவிற்கு ஏத்த ஜோடி தான்.
என்ன மது வனஜாவையே பார்த்தது போதும்! நம்ம வீட்டுக்கு கிளம்பலாமா? இனி ஏதாவது பொருள் வாங்கணுமா.
இல்ல சார் ,”கிளம்பலாம் அவ்வளவுதான்”.
பின் இருவரும் சேர்ந்து வீட்டிற்கு வந்து சேர………….
கண்ணம்மாவும் , பர்வதமும் வெளியில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.
வாப்பா தீனா ! ,”என்ன இவ்வளவு சீக்கிரம் வந்துட்டீங்க”!…
மா! உண்மையாவே நான் ரொம்பவே லேட்டா தான் வந்து இருக்கேன். உங்களுக்கே தெரியும் இருந்துமே இப்படி கேட்கிறீங்களே….
இல்லப்பா நீ, ரொம்ப நாளா வெளியில போல இல்லையா! அதனால நீங்க லேட்டா தான் வருவீங்க நினைச்சேன் .
அதுக்கு முன்னாடியே வந்துட்டீங்க அதனால தான் நான் அப்படி கேட்டேன்.
சரிம்மா! நீங்க மது கிட்ட பேசுங்க எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு ரெண்டு கப் டீ மட்டும் கொடுத்து விடுங்க .குரு எங்க மேல தான இருக்கானா?
ஆமாப்பா ! “குரு மேல தான் இருக்கா’”…
நான் நீ போனதுக்கு பிறகு அவனை கீழே கூப்பிட்டேன் .ஆனா ஏதோ இம்பார்ட்டனா பாத்துட்டு இரு வரல சொல்லிட்டான்.
நீ வந்ததும் உன்னை மேல வர சொல்லி சொன்னா.
சரிமா நீங்க பொருள் பார்த்துட்டு எனக்கு ரெண்டு கப் டீ மட்டும் கொடுத்து விடுங்க நான் போய் என்னன்னு பாக்குறேன்.
தீனா தன் அறையை நோக்கி செல்ல மது பொருள்கள் அடங்கிய பையை காரில் இருந்து டிரைவரின் உதவியுடன் ஒவ்வொன்றாக வீட்டிற்குள் எடுத்து வைத்துவிட்டு அனைவருக்கும் டீ போட சென்று விட்டாள்…
இங்கு மேலே அறைக்கு வந்த உடனே குருவே பார்த்து ஏதாவது முக்கியமான க்ளூ ஏதாவது கிடைச்சா உனக்கு…
இல்லடா இப்பதான் நான் ஃபைல் முழுக்க படிச்சு முடிச்சேன் .எனக்கு தெரிஞ்சு நீ நேத்து படித்து முடித்து இருப்பேன்னு நினைக்கிறேன்.
ஆமாம் !என்று சொல்லிவிட்டு ,
“ நீ என்ன நினைக்கிற இப்ப கொஞ்ச நாளாவே ஒவ்வொரு நகைக்கடையில் இருக்கிற முதலாளிகளோட பிள்ளைங்களா காணாம போறாங்க”!
முக்கியமா பசங்க தான் காணாம போறாங்க எதனால என்னன்னு தெரியல…ஆனா அவங்க வீட்ல இருக்க பெத்தவங்க கிட்ட கேட்கும் போது அவங்க அதுக்காக பெருசா எந்த ஒரு ரியாக்ஷனும் காட்டமாட்டுறாங்க!
இப்படித்தான் மூணு மாசத்துக்கு ஒரு டைம் எங்காவது பிரெண்ட்ஸ் கூட வெளியே போயிட்டு பத்து நாளைக்கு அப்புறம் தான் வருவாங்க .இது நார்மல் தான் என் பிள்ளையை திரும்பி வந்துருவாங்க அப்படின்னு தான் சொல்றாங்க ஆனா????
அந்த பத்து நாளைக்கு அப்புறம் கரெக்டா பதினொராவது நாள் அவங்க திரும்பி வராங்க ஆனா பொணமா தான் வராங்க..
இதோட இரண்டு கொலை இப்படிதா நடந்து இருக்கு ..
கடைசியா இப்போ மூணாவது கொலை கூட நடந்தது 11வது நாள் தான்.
இப்போ இந்த மூணு பைலையும் பார்க்கும்போது ,அவங்க உடம்புல எந்த ஒரு பாகமும் சித்திரவதை பண்ண படல. ஆனா!!? ரெண்டு கையுமே மணிக்கட்டு வரைக்கும் மட்டும் துண்டா வெட்டி இருக்காங்க .
அந்த வெட்டுன கையுமே மோதிர விரலை மட்டும் வெட்டி அதே உடம்போட வச்சு நகை கடைக்கு முன்னாடியே தூக்கி போட்டு இருக்காங்க”.
கண்டிப்பா இந்த எல்லாத்துக்கும் ஏதோ ஒரு சம்பந்தம் இருக்கணும்…
நீ வேற ஏதாவது கண்டுபிடிச்சியா…குரு
ம்ம் ஆமா …. அந்த பசங்க போட்டு இருந்த அத்தனை நகையும் அப்படியே இருக்கு….
ஆனா?அவங்க விரல் மோதிரம் , மணிகட்டுல போட்டு இருந்த பிரெஸ்லட் ரெண்டுமே உருக்கி அந்த திரவத்தை அவங்க வாய்ல ஊத்தி இருக்காங்க இது அவங்க உயிரோடு இருக்கும்போதே நடந்து இருக்கதா தான் அவங்க போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்டுல சொல்லி இருக்கு….
எப்படி நீ கரெக்டா அது மோதிரம் பிரெஸ்லட்னு சொல்ற குரு ….
தீனா…ஒவ்வோரு பசங்களோட பிறந்தநாளுக்கு அவங்க பேரண்ஸ் ராசிகல் மோதிரமும் அவங்க பேரோட முதல் எழுத்தும் பதிச்ச காப்பு பரிசா குடுத்த இருக்காங்க…
அத உறுதி படுத்த, “இப்போதா அவங்க சோசியல் மீடியாவுல போட்டு இருக்க படங்கள் வச்சு உறுதிபண்ணிகிட்டேன்’”.
அதற்குள் வெளியில் இருந்து கதவு தட்டப்படும் சத்தம் கேட்க இருவரும் பைல்களை மூடிவிட்டு கதவை திறக்க, “ கையில் டீடம்ளருடன் மது நின்று கொண்டிருந்தாள்’.
அம்மா பரதேவதையே!!!!!! ரொம்ப நன்றி.
டீ குடிச்சா மட்டும்தா எனக்கு சக்திமான் அளவுக்கு பலம் வரும் என்று கூறி ஒரு மிடறு விழுங்கி முகத்தில் அத்தனை நயனங்களை காட்டி குரு புகழ…
மதுவின் முகம் புன்னகையிலும், கூச்சத்திலும்சிவந்தது…
ஒவ்வொரு முறை மது சிரிக்கும் பொழுதும் தன் மனம் மிகவும் அமைதி அடைவதை நினைத்து இப்பொழுதும் தீனாவிற்கு ஆச்சரியமாக தான் இருந்தது.
மதுவையே! வைத்து கண் வாங்காமல் தீனா பார்த்துக் கொண்டிருக்க , “தீனாவையே வைத்த கண் வாங்காமல் குரு பார்த்துக் கொண்டிருக்க “ எதுவோ புரிவது போல் இருந்தது ….
தன் நண்பனுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைவதை நினைத்து மனமாற சந்தோஷப்பட்டான் அந்த நல்ல உள்ளம் கொண்ட நண்பன்….
(கேஸ் சம்பந்தமான அடுத்த தகவல் இவர்கள் நோக்கி வந்து கொண்டிருந்தது…. நான்காவது கொலையும் நாளை நடக்கப் போவது தெரியாமல் ????????)
காத்திருங்கள்
…
……………… . . ……….பார்க்கலாம்
No comments yet.