அத்தியாயம் -11
அனைத்து மளிகை பொருட்களையும் வாங்கி முடித்த மது திரும்பி தீனாவையும் சித்துவையும் பார்க்கும் பொழுது தீனாவின் கையில் அமர்ந்து கொண்டே குட்டி பையன் தூங்கிவிட்டான்…..
பில் போடும் இடத்திற்கு பக்கத்தில் ட்ராலியை நிப்பாட்டி விட்டு தீனாவை நோக்கி நடந்து வந்த மது, குடுங்க நான் வேணா சித்துவ வச்சிக்கிறேன் நீங்க ஏன் சிரமப்படுறீங்க….
“அப்படிலாம் ஒன்னும் இல்ல மது”,வாங்க நம்ம இன்னும் திங்ஸ் வாங்க வேண்டியது இருக்கு.
இவன தூக்குறதுல எனக்கு என்ன? சிரமம் இருக்க போகுது ?நீங்க என்னென்ன வாங்கணுமோ அதை எல்லாத்தையும் பொறுமையா வாங்குங்க நான் பாத்துக்குறேன்.
சரிங்க சார்!!! நம்ம செகண்ட் செக்ஷன் போகணும்.சில ஐட்டம்ஸ் வீட்டுக்கு வாங்க வேண்டியது இருக்கு..
நீங்க தப்பா எடுத்துக்கலைனா நான் ஒன்னு கேட்கட்டுமா மது ???
சொல்லுங்க சார் நான் ஏன் தப்பா எடுத்துக்க போறேன்
நீங்க ஆசிரமத்துல இருந்து வந்ததுல இருந்து வெளியில போய் உங்களுக்கு நீங்க எந்த பொருளுமே வாங்கல?
உங்களுக்கான பொருளும் இங்க நிறைய இருக்கு நீங்க என்னென்ன வேணுமோ அதை எடுத்துக்கோங்க இல்லை நம்ம வீட்டுக்கு வாங்குற பொருளோட சேர்த்து வாங்கிக்கோங்க..
இல்ல பரவால்ல சார்!! என்கிட்ட எல்லா பொருளுமே இருக்கு இன்று வாய் சொன்னாலும் மனமோ ஐந்தே சீலைகளை மட்டுமே மாற்றி மாற்றி உடுத்திக் கொண்டிருக்கும் மதுவிற்கும் தான் இந்த இடத்திற்கு ஒட்டாதது போல் தோன்றியது இருந்தாலும் அவரிடம் சொல்வதற்கு சங்கடமாக இருந்தது சம்பளம் வாங்கிய பின் நாமே வந்து மறுபடியும் வாங்கிக் கொள்ளலாம் என்று அமைதியாக இருந்தால்.
இங்க பாருங்க மது நான் வேணா ஒரு யோசனை சொல்றேன் உங்களோட சம்பளம் வரும்போது நீங்க இப்போ எடுக்கிற பொருட்களுக்கு பணத்த நீங்க குடுத்துருங்க !அப்ப நீங்க வாங்குற மாதிரி உங்களுக்கு தோணாது..
மதுவிற்கும் அது சரி எனவே பட சரிங்க சார்!!! நான் மேல போயி எனக்கான சில திங்க்ஸ் அம்மாவும் ,கண்ணம்மாவும் சில திங்ஸ் வாங்க சொல்லி இருக்காங்க நான் எடுத்துட்டு வரேன் என்று மேலே காஸ்மெடிக்ஸ் செக்சனுக்கு சென்றவள்.
அவளுக்கு தேவையான அனைத்தையும் வாங்கி பில் போடும் இடத்திற்கு கொண்டு வந்து வைத்துவிட்டு மறுபடியும் தீனாவை வரச் சொல்லி மூன்றாவது தளத்திற்கு சென்றார்கள்.
மூன்றாவது தளத்தில் ஆண்களுக்கு தேவையான அனைத்து உடைகளும் இருக்க சித்துவை மதுவின் கையில் கொடுத்துவிட்டு சென்று தீனா தனக்கு தேவையான சில ஃபார்மல் டிரஸ்களும் வீட்டில் போட வேண்டிய டிரஸ்களும் எடுத்து ட்ரையல் ரூமிற்குள் நுழைந்து விட்டான்.
டிரையல் ரூமில் இருந்து வெளியே வந்த தீனாவை பார்த்த மதுவிற்கு ஒரு நிமிடம் ஒரு குழந்தைக்கு தகப்பனா? இவன்? என்று எண்ணம் வராமல் இல்லை.
அவ்வளவு அழகிய தோற்றம் அந்த போலீஸ்கார உடல்வாகும் கூர்மையான பார்வையும் மீசையும்,அவன் போட்டிருந்த காலர் வைத்த டி-ஷர்ட்டில் அவ்வளவு எடுப்பாக இருந்தது அவனுக்கு…
அவனின் சந்தன கலர் மேனிக்கு ஏற்றது போல் அடர்ந்த காப்பிகலர் இன்னும் அவனை மெருகேற்றி தந்தது… தீனாவையே பார்த்துக் கொண்டிருந்த மதுவை பார்த்த தீனாவிற்கு இதழின் ஓரம் சிறு புன்னகை …….
புன்னகையுடன் அவளை நோக்கி வந்து என்ன மது எனக்கு இந்த டி-ஷர்ட் நல்லா இருக்கா இல்ல நான் நல்லா இருக்கேனா?..
அது வந்து!!!! அது வந்து!! நான் உங்கள பாக்கல நான் சும்மா வேடிக்கை பார்த்துட்டு இருந்தேன் என்று அப்பட்டமாக தான் பொய் தான் சொல்கிறோம் என்று அவனுக்குத் தெரியும் என்றும் தெரிந்தே பொய் கூற!!!
தீனாவினால் சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்து விட்டான். மதுவிற்கு மிகுந்த தர்ம சங்கடமாக ஆகிவிட்டது….
மதுங்க நான் சும்மாதான் உங்கள கிண்டல் பண்ணேன் இதுக்கு எதுக்கு இப்படி முகத்தை வைச்சுக்கிறிங்க….
சார் உங்களுக்கு இந்த டீசர்ட் நிஜமாவே நல்லா இருக்கு நீங்க இதை எடுத்துக்கோங்க…என்று இயல்பிற்கு வந்து பேச ஆரம்பிக்க….அப்படியே
இருவரும் பேசிக்கொண்டே பில்லிங்குக்கு வைத்துவிட்டு மேலே சென்று அடுத்தடுத்து பார்க்க ஆரம்பித்தார்கள்….
மேலே சென்ற பொழுது மதுவிற்கு அவ்வளவு ஆச்சரியம் குழந்தைகளுக்காக இவ்வளவு பொருள்களா என்று? பின் ஒவ்வொன்றையும் சித்துவிற்காக பார்த்து பார்த்து எடுத்து வைத்துக் கொண்டால் பின் அதனையும் பில்லிங்குக்கு வைத்துவிட்டு கீழ் தளத்தை நோக்கி இருவரும் இறங்கி வர அப்பொழுதுதான் சிறிது தூக்கம் கலைந்து எழுந்த சித்து மதுவின் கையில் இருந்து மறுபடியும் தீனாவின் கையில் மாறிவிட்டான்…
கீழ தான் ஃபுட் கோர்ட் இருக்கு வாங்க ஏதாவது சாப்பிட்டு போலாம்
இல்ல சார் எனக்கு இன்னும் பசி இல்ல தீனாவுக்கும் நான் பால் எடுத்துட்டு வந்துட்டேன் அதை மட்டும் அவனுக்கு குடுத்தா போதும்.
அட்லீஸ்ட் டீயாவது குடிச்சிட்டு போலாம். ஸ்னாக்ஸ் ஏதாவது சாப்பிடலாம்.
சரிங்க சார்…
இருவருக்கும் தேவையான ஸ்நாக்ஸ் ஆர்டர் செய்துவிட்டு உட்கார்ந்து கொண்டிருந்த தீனாவிற்கு போன் வர போனை எடுத்து பேசிக்கொண்டு மதுவை பார்த்தவனுக்கு சிலசமயம்,
பேசுவதற்கு எந்த தயக்கமும் இல்லாமல் பேசும் மது, சில சமயம் தன்னை தானே இறுக்கி கொள்கிறார்களோ? பேசுவதற்கு தயங்குகிறார்களோ? என்ற எண்ணம் வராமல் இல்லை?
ஒரு வேலை அவர்கள் வளர்ந்த சூழ்நிலை அப்படி அவர்களை செய்து விட்டதோ சற்று நேரத்திற்கு முன்புதான் நன்றாக பேசிக் கொண்டிருந்தார் .உடனே பேசுவதை குறைத்து விட்டார்..
என்று மதுவையும் அவள் சித்துவிற்கு பால்புட்டியில் பால் புகட்டுவதையும் பார்த்துக்கொண்டு பேசிக்கொண்டு இருந்த தீனாவிற்கு மதுவின் மெலிந்த தேகம் கண்ணில் பட்டது.
சரியாக சாப்பிட மாட்டாங்க போல இருக்கு கண்ணம்மா கிட்ட சொல்லி அவங்களுக்கு புடிச்சதா சமைத்து தர சொல்லி சொல்லணும்….
இப்போ திரும்பி பார்த்தவனுக்கு சித்துவின் மெலிந்த தேகமும் மனதை தைத்தது தான் இருந்தும் தன் மகனை சரியாக கவனித்துக் கொள்ளவில்லையோ? என்றும் குற்ற உணர்ச்சி மனதை அழுத்தியது.
“ ஒருவேளை தாயின் பாசமும் தாயின் பாலும் கிடைக்காததனால் தான் தன் மகன் இன்று ஊட்டச்சத்து இல்லாமல் இருக்கிறானோ என்று நினைத்துக் கொண்டே “
எங்க மது? “இப்ப சித்துவுக்கு என்னென்ன சாப்பாடு சத்தா கொடுக்கணுமோ அதை பத்தி உங்களுக்கு கண்ணமா சொல்லி இருப்பாங்க வேற ஏதாவது தெரிஞ்சுக்கணும் அப்படின்னா நம்ம வேணா குழந்தைகளுக்குன்னு பார்க்கிற டாக்டர் கிட்ட போய் கன்சல் பண்ணலாமா?, சித்துக்கு எந்த மாதிரி கொடுக்கலாம் எந்த மாதிரி எடுத்துக்கலாம் சொல்லிட்டு”
சார், “ நான் வளர்ந்த ஆசிரமத்துல கைக்குழந்தையிலிருந்து குழந்தைகளை கொண்டு வந்து கொடுத்துட்டு போவாங்க அதனால 15 நாளைக்கு ஒரு முறை மாதத்தில் ஒரு முறை எங்க ஹாஸ்பிடலுக்கு நாங்க டாக்டர் வர சொல்லி அந்த குழந்தைகளுக்கு என்னென்ன வேண்டுமோ அதை எல்லாமே நாங்க பார்த்துக்கொள்வோம்”.
அவங்க எங்களுக்கு எப்படி பண்ணனும்ன்றதையும் சொல்லிக் கொடுத்திடுவாங்க அதனால நீங்க அத பத்தி கவலைப்பட வேண்டாம் .
எனக்கு ஓரளவுக்கு நல்லாவே தெரியும் குழந்தைகளுக்கு எந்த மாதிரி ஃபுட் கொடுக்கணும் எப்படின்னு! அப்படி ஏதாவது எனக்கு சந்தேகமா இருந்துச்சுன்னா நான் எங்க மதர் கிட்ட கேட்டு அவங்க கிட்ட பேசுறேன் என்கிட்ட அந்த டாக்டர் நம்பருமே இருக்கு. ….
மனதில் இருந்து ஏதோ ஒரு பாரம் குறைந்தது போல் இருக்க….
மதுவிடம் ஏதோ சொல்ல வேண்டும் என்ற தீனாவை யாரோ அழைப்பது போல் இருக்க திரும்பி பார்த்த தீனாவின் முகம் ஒரு நிமிடம் இறுகிப்போய்விட்டது.
ஏன் இவர் இப்படி ஆனார் என்ன ஆச்சு யார் அப்படி பார்த்துட்டு இப்படி முகத்தை மாத்துறார் என்று திரும்பிப் பார்த்த மது, ஒரு பெண் நடந்து வருவதை பார்த்ததும் பேசுவதற்கு எதுவும் தோன்றாமல் அமைதியாக இருந்து கொண்டாள்.
யார் இந்தப் பெண்??????
காத்திருங்கள்
No comments yet.