அத்தியாயம் -10
மதுமா,” இந்தா இந்த வாலு பையனபிடி,” இவனுக்கு சாப்பாடு ஊட்டனும்னா! நான் குட்டிகரணம் மட்டுந்தான் அடிக்கல?என்று அவர்களின் மெளனத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்து கண்ணம்மா புலம்ப….
என்னபுரிந்ததோ ! “களுக் என்று சிரித்து கொண்டே மதுவிடம் தாவினான்…
இப்ப எல்லாம் சித்துகுட்டிக்கு நாங்க எல்லாம் கண்ணுக்கு தெரிய மாட்டோம் ….
வாலு பையனுக்கு மது வந்ததுக்கு அப்புறம் எங்க யாரையுமே கண்ணுக்கு தெரிய மாட்டுது இருக்கட்டும் …என்று கண்ணம்மா சிரித்து கொண்டே,
சும்மா சொல்றேன்டா மது நீ எதுவும் தப்பா எடுத்துக்காத டா
ஐயோ கண்ணம்மா! நான் என்ன நினைச்சுக்க போறேன் உங்க பேரன் நீங்க பேசுறீங்க சிந்து குட்டி என்கிட்ட இவ்வளவு தூரம் அட்டாச் ஆனது எனக்கு சந்தோஷமா இருக்கு.
சரி மது நம்ம கிளம்பலாமா? எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு போயிட்டு என்னன்ன திங்ஸ் வேணுமோ டக்குனு வாங்கிட்டு நம்ம வந்திடலாம்..
சரிங்க சார் போகலாம்.
நம்ம இன்னைக்கு ஷாப்பிங் போறோம். இன்னைக்கு என்ன என்ன வேணுமோ நீங்க வாங்கலாம் அப்பா உங்களுக்கு எல்லாமே வாங்கி தாரேன் என்று பேசிக்கொண்டே மூவரும் காரில் ஏறி புறப்பட்டனர்.
இதனை பார்த்த கண்ணம்மாவிற்கு மனதுக்குள் தீனாதம்பி ,”இந்த மாதிரி ஒரு குடும்பமா வாழ்ந்த எவ்வளவு நல்லா இருக்கும்,” கடவுளே வாழ்க்கையில என்னென்ன கஷ்டங்கள் பாக்கணும் அத்தனையும் இந்த வயசுல பார்த்துட்டாரு”.
இதுக்கு மேலயும் இந்த பிள்ளையை சோதிக்காதீங்க! கடவுளே!!! இந்த மது புள்ளையும் அவ்வளவு நல்ல புள்ளையா இருக்கு இவங்க ரெண்டு பேரும் சேர்ந்து இருந்தாங்க!!! அப்படின்னா சந்தோஷமா இருப்பாங்க .
ரெண்டு பேருக்கும் ஒரு முடிச்சு போடுங்க என்று மனதார வேண்டிக்கொண்டு பர்வதம் அம்மாவை காண சென்று விட்டார்.
இங்கு, ஷாப்பிங் மால் இருக்கும் இடம் முன் காரை நிறுத்திவிட்டு இறங்கிய தீன தயாளன் திரும்பி மதுவை பார்க்க மது சுற்றியுள்ள ஷாப்பிங்மாலையும் அங்கு சுற்றி நின்ற கார்களையும் மற்ற அனைத்து பொருட்களையும் ஒவ்வொன்றாக வியந்த கண்களோடு பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவள் பார்த்தத தீனாவிற்கு, ஆச்சரியமாக இருந்தது. என்ன இவங்க ஒவ்வொரு விஷயத்தையும் இப்படி பார்த்துட்டு இருக்காங்க இதுக்கு முன்னாடி இதெல்லாம் பார்த்ததில்லையா???
ஏங்க மது!!! “என்ன ஆச்சு ஏதாவது பிரச்சனையா ஏன் இப்படி பாக்குறீங்க.
அது ஒன்னும் இல்லைங்க சார்… இதுவரைக்கும் நான் இந்த மாதிரி இடத்துக்கெல்லாம் போனதில்ல!!! ஒரு மாதிரி தயக்கமா இருக்கு…
அதற்குப் பிறகுதான் தீனாவிற்கு இவள் ஆசிரமத்தில் வளர்ந்தது பற்றி ஞாபகம் வந்தது….
ஒன்றுமில்லை மது, “எல்லாம் நாம பழகிக்கொள்வதில் தான் இருக்குங்க.
நல்லா கேட்டுக்கோங்க மது….
“ எடுத்தவுடன் எல்லாருக்கும் எல்லாம் தெரிவதில்லை ,எல்லா விஷயங்களுக்கும் அடிநுனி என்று ஒன்று உள்ளது அதுபோலத்தான் இந்த விஷயத்திற்கும்,கண்டிப்பா தயக்கம் இல்லாமமுதல் படி எடுத்து வையுங்கள்”, நாளை என்னால் வர முடியவில்லை என்றாலும் நீங்கள் வந்து தேவையான பொருள்களை வாங்கி வர வேண்டும் அந்த அளவுக்கு நீங்கள் பயமில்லாமல் பழகிக்கணும்””.மற்ற விஷயங்களை நீங்கள் பயமில்லாமல் எதிர்கொள்ள வேண்டும்”.
எனக்கு புரியுது சார்,’’ இருந்தாலும் இந்த மாதிரி கூட்டம் , இந்த மாதிரி இடத்துக்கு நான் ஒட்டாத போல ஒரு பீல் இருக்கு…
“ இதுல என்ன ஒட்டா தன்மை மது”??
உங்களுக்கு ஒரு விசயம் மட்டும்தான் மனசுல இருக்கனும், “நமக்கான பொருள் நம்ம வாங்க வந்திருக்கோம், அதுக்கான இடம் இது அவ்வளவுதான்!! மத்தபடி இந்த இடத்திற்கு நாம் தகுதியானவரா ?தகுதி இல்லாதவரா? என்று நீங்கள் சுய ஆராய்ச்சி எல்லாம் பண்ண வேண்டாம்.”
“ எந்த இடத்திலேயும் நம்ம தரம் தாழ்ந்து போகவே மாட்டோம்? நமக்கான தைரியம் நம்ம கிட்ட தான் இருக்கு! எதுனாலும் அத பேஸ் பண்ற அளவுக்கு பக்குவமா இருங்க!!”
“அதே மாதிரி யாரு நம்மள கடிச்சு தின்ன போறதும் கிடையாது .நமக்கான இடத்துல நம்ம பேசுற விதமும் நம்ம நடந்துகிற துல இருந்து தான் நமக்கான மரியாதை இருக்கு”.
“அது தவிர்த்து நம்மளுடைய வெளித்தோற்றம் எந்த இடத்திலையும் முக்கியமானது கிடையாது? இன்னொரு விஷயம் நீங்க அளவுக்கு அதிகமாக எதையும் யோசிக்காதீங்க! இனிமே எல்லாத்தையும் பழகிக்கோங்க! தைரியமாகவும் எதிர்கொள்ளுங்க!!! சரிங்களா???வாங்க இப்ப நம்ம உள்ள போகலாம்………..
இந்த ஊரிலேயே இதான் பெரிய சூப்பர் மார்க்கெட் இங்க குழந்தைகளுக்கு தேவையானதிலிருந்து பெரியவர்களுக்கு தேவையான வரை அனைத்து பொருள்களும் அடங்கிருக்கும். இதுபோக தியேட்டர் பார்க் பார்லர் ஐஸ்கிரீம் ஷாப் என அனைத்துமே அங்கிருக்கும் சிறு பல் குச்சியில் இருந்து பெரிய அளவில் பொருள் வரை அனைத்துமே அங்கு அடங்கி இருக்கும் நமக்கு தேவையான அனைத்து பொருட்களையும் இங்கேயே நாம் வாங்கிக் கொள்ளலாம்.
முதல் தளத்தில் வீட்டுக்கு தேவையான காய்கறிகளும் மளிகை சாமான்களும், இரண்டாம் தளத்தில் நமக்கு தேவையான காஸ்மெடிக்சிலிருந்து செப்பல் வரை அனைத்தும், மூன்றாம் தளத்தில் ஆண்களுக்கான ஆடையும் ,நான்காம் தளத்தில் பெண்களுக்கான உடையும், ஐந்தாம் தளத்தில் குழந்தைகளுக்கான ஆடைகளும்,ஆறாம் தளத்தில் தியேட்டரும் என பெரிதாக அந்த மால் இருந்தது.
ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து கட்டிய மாதிரி இருக்கு ஆச்சரியமாக இருந்தது மதுவுக்கு, எப்படி இவ்வளவு விஷயமும் ஒரு இடத்துல அடக்கி வைக்க முடியும் .
எப்படிதா இவ்வளவு காசு இருக்கு எப்படி சம்பாதிக்கிறாங்க என்று ஒரு பக்கம் மனதில் தோன்றியது…..
இதுபோக ஒரு சைடு முழுவதும் கார் பார்க்கிங் வந்திருக்கும் ,டூவீலர்க்கும் தனியாகவும் ஒரு பக்கம். இதுபோக குழந்தைகளுக்கான பார்க் ஒரு சைடு, ஒரு சைடு பெரியோர்களுக்கான பார்க், இருந்தது ….
இது போக ஒவ்வொரு விஷயத்தையும் முதல் தளத்தில் உள்ள டிவியில் ஒளிபரப்பும்போது அதை பார்த்துக்கொண்டு ஒரு இரண்டு நிமிடம்மது அப்படியே நின்று விட்டாள்.
தீனாவும் பார்க்கட்டும் என்று அமைதியாக சித்தவை தூக்கிக்கொண்டு பக்கத்தில் நின்று கொண்டிருந்தான்…
அப்பப்பா ஒருநாள் பத்தாது போல பாக்குறதுக்கு …..
சாரிங்க சார்! உங்களை நானே காக்க வச்சுட்டேன். இந்த விஷயங்கள் எல்லாம் நான் இப்பதான் முதல் முறை பாக்குறேன் , எல்லாம் பார்த்ததும் எனக்கு ரொம்ப ஆச்சரியமாவும் வியப்பாவும் இருந்துச்சு.
அதனால தான் என்னென்ன இருக்குன்னு பார்த்தேன் .
நம்ம போய் நம்ம என்னென்ன பொருள்கள் வாங்கலாம் என்பதை பார்க்கலாம் நான் வீட்டுக்கு தேவையான பொருட்கள் கண்ணம்மா கிட்ட கேட்டு எழுதிட்ட ஒரு சில பொருள்கள் நானும் பார்த்திருக்கேன் நான் போய் அந்த பொருள்களை எடுக்கிறேன் நீங்களும் சித்து கண்ணாவும் வேணா மேல போய் டிரஸ் பாக்கறீங்களா பாருங்க.
இல்ல மது நீங்க என்னென்ன வேணுமோ அது எல்லாமே பொறுமையா அந்த ட்ராலி எடுத்துட்டு போய் எடுங்க நான் உங்களுக்காக வெயிட் பண்றேன்…
மது நீங்க என்னென்ன வேணுமோ அது எல்லாமே பொறுமையா அந்த ட்ராலி எடுத்துட்டு போட்டுட்டு இருங்க. நான் உங்களுக்காக இங்க வெயிட் பண்றேன் இன்னொன்னு சித்துக்கு நான் இதுவரைக்கும் டிரஸ் எடுத்ததே இல்லை.
பெருசா எனக்குமே டிரஸ் எடுக்க தெரியாது நீங்க என்னன்னா எடுக்கணுமோ அதெல்லாம் எடுத்துட்டு இந்த ட்ராலிய இங்க வச்சுட்டு வந்துருங்க .
நம்ம மேலபோய்டு அதுக்கு அடுத்து நமக்கு என்னென்ன பொருள்கள் வேணும் நம்ம வாங்கிட்டு வந்துடலாம்….
சரிங்க சார்!!!நீங்களும் குட்டி பையனும் வெயிட் பண்ணுங்க நான் ஒரு பத்து நிமிஷத்துல எல்லா பொருளும் எடுத்துடுவேன்.
ஒன்னும் பிரச்சனை இல்ல மது பொறுமையாவே எடுங்க வீட்டுக்கு என்னென்ன வேணுமோ அந்த பொருள்களை கரெக்டா எடுத்துடுங்க இதுக்கு பிறகு என்னால உங்கள கூட்டிட்டு வர முடியுமான்னு தெரியல முடிஞ்ச அளவுக்கு தேவையான பொருட்கள் எல்லாமே பார்த்து எடுத்திருங்க .
“சரிங்க சார் நீங்க வெயிட் பண்ணுங்க நான் வந்துடறேன்..”
குட்டி பையனும் புதிதாக நிறைய பேர் பார்த்ததும் சேட்டை எதுவும் செய்யாமல் அமைதியாக அப்பாவின் கையில் உட்கார்ந்து கொண்டு போகவருபவர்கள் பார்த்துக் கொண்டு அமைதியாக உட்கார்ந்து விட்டான்.
தீனாவும் மது சென்ற திசையை பார்த்துவிட்டு உட்காரும் இடத்தில் சென்று அமர்ந்து கொண்டான்….. அமைதியாக……
காத்திருங்கள்……
No comments yet.