பாகம் 9
தன் ஃபோனிலிருந்து தன் அண்ணன் விஹானுக்கு ரிப்ளை மெசேஜ் செய்தாள் விருத்திகா.
குட் மார்னிங் அண்ணா, இட்ஸ் ஓகே நோ இஷ்யூஸ். நீங்க என்னை எழுப்பி இருக்கலாம். அப்புறம் அண்ணா, தீபக் ஓகே சொல்லிட்டாரு ரோஹித் கூட ஹாஸ்பிடல் போறதுக்கு நீ அவருக்கு கால் பண்ணி சொல்லிடு, அப்படியே அவரோட நம்பரை எனக்கு கொஞ்சம் ஷேர் பண்ணி விடு என்று அனுப்பிவிட்டு தன் அண்ணனின் ரிப்ளைக்காக குளித்துவிட்டு ரெடி ஆகி காத்திருந்தாள்.
ஓகே, உன் நம்பரையும் ரோஹித்துக்கு அனுப்புறேன் என்று சொல்லி ரிப்ளை செய்தவன் அப்படியே ரோஹித் நம்பரையும் அனுப்பி வைத்தான்.
ரோஹித் நம்பரை சேவ் செய்து கொண்டிருந்தாள் விருத்திகா.
அப்போது ரோஹித் இடமிருந்து விருத்திகாவிற்கு கால் வந்தது.
ஹாய் குட்மார்னிங்.
குட் மார்னிங் ரோஹித்.
எத்தனை மணிக்கு வரணும்னு சொன்னா அந்த டைம்ல வந்துடுவேன்.
நான் ரெடியா இருக்கேன். நீங்க வந்தீங்கன்னா போகலாம்.
ஓகே இன்னொரு 10 மினிட்ஸ்ல இருப்பேன்.
சொன்னது போலவே 10 நிமிடத்தில் அங்கே இருந்தான் ரோஹித்.
வெளியேவே நின்றிருந்தான்.
உள்ள வாங்க என்றாள் விருத்திகா.
இல்ல பரவால்ல வாங்க ஹாஸ்பிடல் போகலாம் என்றான்.
ஓகே என்று சொல்லி வீட்டை பூட்டிக்கொண்டு வந்தாள்.
காரில் ஏறினான் ரோஹித்.
உங்ககிட்ட கார் இருக்கா?
போன மாசம் தான் வாங்கினேன்.
சூப்பர், ரொம்ப நல்லா இருக்கு. என்னோட ஃபேவரைட் கலர்.
ரெட் உன்னோட ஃபேவரைட் கலரா?
ஆமா கார்ல என்னோட ஃபேவரைட் கலர் ரெட் தான் , டிரஸஸ்ல ஃபேவரைட் கலர்னா நிறைய இருக்கு.
ஓ, ஓகே.
ஹாஸ்பிடலுக்கு சென்றதும் அங்கே ஸ்கேனிங் செய்ய நிறைய பேர் காத்திருந்தார்கள். அப்போது அந்த வரிசையில் அமர்ந்தாள் விருத்திகா.
வெளியே வந்த நர்ஸ் அனைவரிடமும் டோக்கன் நம்பர் எல்லாரும் வாங்கிட்டீங்களா?
முதல் நம்பர் வச்சிருக்கவங்க நிறைய தண்ணி குடிச்சிட்டு ரெடியா இருங்க. ஒருத்தருக்கு ஸ்கேன் எடுக்க மினிமம் 15 மினிட்ஸ் ஆகும். அதுக்கேத்த மாதிரி அடுத்தடுத்த உள்ளவங்க தண்ணி குடிச்சிட்டு ரெடியா இருங்க. தண்ணி நிறைய குடிச்சிட்டு யூரின் அர்ஜென்சி இருந்தா தான் ஸ்கேன் நல்லா கிளியரா தெரியும். சீக்கிரமா எடுத்துடலாம். இல்லனா தண்ணி குடிச்சிட்டு வெயிட் பண்ணிட்டு இருக்க மாதிரி இருக்கும் என்றார்.
விருத்திகாவிற்கு நான்காவது டோக்கன்.
ஓகே நான் போய் வாட்டர் பாட்டில் வாங்கிட்டு வரேன் என்றான் ரோஹித்.
ஓகே ரோஹித்.
அவளிடம் வாட்டர் பாட்டில் கொடுத்துவிட்டு எதிர்பக்கமாக இருந்த சாரில் அமர்ந்து கொண்டு இருந்தான்.
தன் ஃபோனில் ஆபீஸ் விஷயமாக எதையோ பார்த்துக் கொண்டிருந்தான் ரோஹித்.
ஒரு மணி நேரம் ஆனது, மூன்றாவது டோக்கன் உள்ளே சென்ற பெண் வெளியே வரவில்லை. விருத்திகாவின் முகத்தை பார்ப்பதிலேயே தெரிந்துவிட்டது. அவளுக்கு யூரின் அர்ஜென்சி வந்துவிட்டது என்று. எழுந்து நடக்க ஆரம்பித்தாள். வெளியே வந்த நர்ஸிடம் இன்னும் எவ்வளவு நேரம் ஆகும் என்றான் ரோஹித்.
கவலைப்படாதீங்க சார் அடுத்தது உங்க வைஃப் தான் என்றார் அந்த நர்ஸ்.
இல்லை இல்லை அவங்க என்று சொல்வதற்குள் அவர் உள்ளே சென்று விட்டார்.
நல்ல வேளை கிருத்திகா நடந்து கொண்டிருந்ததால் அந்த நர்ஸ் சொன்னதை கேட்கவில்லை என்று நினைத்துக் கொண்டான்.
கையை பிசைவதும், கொஞ்சம் வேகமாக நடப்பதும் என்று தன்னை கண்ட்ரோல் செய்து கொண்டிருந்தாள் விருத்திகா.
விருத்திகாவை பார்க்க ரோஹித்துக்கு பாவமாக இருந்தது. அவள் அவதிப்படுவதை அவனால் பார்க்க முடியவில்லை. அதனால் கதவையே தட்டி விட்டான்.
சாரி அவங்களால முடியல என்றான் அந்த நர்ஸிடம்.
இவங்களுக்கு முடிஞ்சிடுச்சு சார் அவங்கள வர சொல்லுங்க என்று ஸ்மைல் செய்து கொண்டே சொன்னார் அந்த நர்ஸ்.
விருத்திகாவிற்கு ஸ்கேனிங் செய்யப்பட்டது.
ஆர்வத்தில் குழந்தை எப்படி இருக்கிறது என்று ஸ்கேனிங் செய்த டாக்டரிடம் கேட்டாள் விருத்திகா.
அதெல்லாம் டாக்டர் சொல்லுவாங்க.
இல்ல நீங்க மத்த டீடெயில்ஸ் எல்லாம் சொல்ல வேண்டாம். பேபி நல்லா இருக்கான்னு மட்டும் சொன்னா போதும். ஐ மீன் இந்த மன்த்ஸுக்கு கரெக்டான குரோத் இருக்கான்னு மட்டும் சொல்லுங்க.
நீங்க ரொம்ப ஆர்வமா இருக்கறதுனால சொல்றேன். பேபி நல்லா இருக்கு. கவலைப்படாதே.
தேங்க்யூ டாக்டர் தேங்க்யூ சோ மச்.
என்ற சொல்லிவிட்டு தன் சுடிதார் பேன்டை நின்று கட்டிக் கொண்டிருந்தாள்.
அப்போது அங்கே இருந்த நர்ஸ் விருத்திகாவை பார்த்து,
நீ உண்மையிலே கொடுத்து வச்ச பொண்ணு மா.
ஏம்மா அப்படி சொல்றீங்க?
இல்ல நீ அவஸ்தப்படுவதை உன் புருஷனால பார்க்க முடியல. ரெண்டு முறை எப்போ உள்ள கூப்பிடுவீங்க எப்போ உள்ள கூப்பிடுவீங்கன்னு கேட்டுட்டே இருந்தாரு என்று சொல்லி சிரித்தார்.
யூரின் அர்ஜெண்டாக வந்ததால் அவருக்கு பதில் சொல்ல விருத்திகாவால் முடியவில்லை, நான் வந்து பேசுகிறேன் அம்மா என்று சொல்லிவிட்டு வெளியே வந்து வேகமாக ரெஸ்ட் ரூமுக்கு ஓடினாள்.
வெளியே வந்த உடன் தண்ணீரை கொடுத்தான் ரோஹித்.
அய்யய்யோ மறுபடியும் தண்ணியா எனக்கு வேண்டாம்ப்பா என்று சொல்லி சிரித்தாள் விருத்திகா.
டிபன் சாப்பிடலாமா, எனக்கு ரொம்ப பசிக்குது என்றான் ரோஹித்.
நீங்க சாப்பிடலையா ரோஹித்?
நான் வீட்டிலேயே டிபன் சாப்பிட்டுட்டு தான் வந்தேன். அண்ணா இட்லி சட்னி செஞ்சு வச்சிருந்தாரு.
ஓ ஓகே,
நீங்க சொல்லி இருக்கலாம் இல்ல வீட்டிலேயே சாப்பிட்டு வந்து இருக்கலாமே.
பரவால்ல அதனால ஒன்னும் பிரச்சனை இல்ல. உன்ன வீட்ல டிராப் பண்ணிட்டு அப்புறமா நான் போய் சாப்பிட்டுக்குறேன்.
ரோஹித், வாங்க சாப்பிடலாம். நான் உங்களுக்கு கம்பெனி தரேன். ஜூஸ் ஏதாவது குடிக்கிறேன் என்றாள்.
ஓகே என்று சொல்லிவிட்டு ஹாஸ்பிடல் கேண்டீனுக்கு சென்றனர்.
கண்டிப்பா இங்க தான் சாப்பிடணும் உங்களுக்கு? என்று கேட்டாள் விருத்திகா.
ஏன் அப்படி கேக்குற?
இல்ல இங்க கூட எனக்கு ஹாஸ்பிடல் ஸ்மெல் மருந்து ஸ்மெல் எல்லாம் வர மாதிரி இருக்கு.
ஓகே போற வழியில ஏதாவது ஹோட்டல்ல போய் சாப்பிட்டு விட்டு அப்பறமா போகலாம்.
ஓகே ரோஹித் என்றாள் விருத்திகா.
ps4 பெரம்பூர் ஸ்ரீனிவாசா ஹோட்டல் வீட்டிற்கு போகும் வழியில் இருந்தது.
அங்கே சென்று ரோஹித் டிபன் ஆர்டர் செய்தான்.
டிபன் டைம் முடிந்து விட்டது, லஞ்ச் மட்டுமே இருக்கிறது என்று சொன்னார்கள்.
நானும் லஞ்சே சாப்பிடுறேன் என்றாள் விருத்திகா.
அதனால் இருவரும் மீல்ஸ் ஆர்டர் செய்து சாப்பிட்டார்கள்.
விருத்திகாவை பத்திரமாக அவளுடைய வீட்டில் இறக்கி விட்டு விட்டு கிளம்பினான் ரோஹித்.
தொடரும்…..
அ. வைஷ்ணவி விஜயராகவன்.

பாகம் 10
வீட்டிற்கு வந்த பிறகு தன் கணவனுக்கு கால் செய்தாள் விருத்திகா.
அவன் ஃபோன் நாட் ரீச்சபிள் என்று வந்தது. வேலையாக இருப்பான் அதனால் ஏரோபிளேன் மோடில் போட்டு வைத்திருக்கிறானோ என்னவோ என்று நினைத்து கொண்டாள்.
வாய்ஸ் மெசேஜ் அனுப்பினாள்.
தீபு, ஸ்கேனிங் போயிட்டு வந்துட்டேன் டா.
பேபி நல்லா இருக்காம். ஸ்கேன் பண்ண டாக்டரை கேட்டேன், ஆனா இன்னும் கைனகாலஜிஸ்ட் டாக்டரை பார்க்கல. அவங்க ஏதோ எமர்ஜென்சின்னு போயிட்டாங்க நாளைக்கு ஈவினிங் மறுபடியும் போகனும், ஸ்கேன் ரிப்போர்ட் எடுத்துட்டு போயி அவங்கள பாக்கணும். நாளைக்கு ஈவினிங் அண்ணனே கூட்டிட்டு போறேன்னு சொன்னான்.
மெசேஜ் டெலிவர் ஆகவில்லை. பிறகு கிச்சனுக்கு சென்று டின்னர் சமைத்து தன் அண்ணனுக்கு எடுத்து வைத்துவிட்டு தானும் சாப்பிட்டுவிட்டு வந்து படுத்தாள்.
விஹானிடம் சாவி இருந்ததால் அவனே டோரை ஓப்பன் செய்து வந்து விடுவேன், நீ சாப்பிட்டுவிட்டு தூங்கு என்று தன் தங்கைக்கு மெசேஜ் செய்திருந்தான்.
பெட்டில் படுத்தவள் வெகு நேரமாக தூக்கம் வராமல் பிரண்டு பிரண்டு படுத்து கொண்டிருந்தாள். கர்ப்பமாக இருக்கவே, ஒரு ஒரு முறையும் எழுந்து அமர்ந்து பின்னர் இந்த பக்கமாக திரும்பி படுத்தாள். அதனாலேயும் அவளுக்கு சீக்கிரமாக தூக்கம் வரவில்லை.
மறுநாள் காலை எழுந்து வந்து ஹாலில் அமர்ந்தாள். விஹான் அவளுக்காக சுட சுட காஃபி எடுத்து வந்து கொடுத்தான்.
குட் மார்னிங் விரு என்றான்.
குட் மார்னிங் அண்ணா.
நேத்து டாக்டர பார்க்கலையாமே? ரோஹித் சொன்னான்.
ஆமாம் அண்ணா, ஏதோ எமர்ஜென்சின்னு டாக்டர் போயிட்டாங்க. இன்னைக்கு ஈவினிங் வராங்க. நீயே கூட்டிட்டு போவ இல்ல அண்ணா?
ஹாங், கண்டிப்பா. கேபு புக் பண்ணிக் கொள்ளலாம்.
பரவால்ல அண்ணா, பைக்ல கூட போகலாம்.
இல்ல இல்ல வேண்டாமா. கால் டாக்ஸி புக் பண்றேன்.
வேண்டாண்டா கால் டாக்ஸி எல்லாம் புக் பண்ணாத என்ற ரோஹித்தின் குரல் கேட்டு திரும்பி பார்த்தனர் விஹான் மற்றும் விருத்திகா.
ஏன்டா, பைக்லே போக சொல்றியா?
இல்லடா என் காரை விட்டுட்டு நான் உன்னோட பைக்கை எடுத்துட்டு ஆபீஸ் போறேன். நீ விருத்திகாவை ஹாஸ்பிடலுக்கு கார்ல கூட்டிகிட்டு போ.
இல்லடா மச்சி லைசன்ஸ் எடுக்கும்போது கார் ஓட்டினதோட சரி, அதுக்கப்புறம் ஓட்டுனதில்ல. ரிஸ்க் எடுக்க கூடாது.
அப்படியா, சரிடா அப்படின்னா வேண்டாம், ரிஸ்க் எடுக்காத. சாரி விருத்திகா, இன்னைக்கு நான் ஆபீஸுக்கு கண்டிப்பா போயே ஆகணும். நேத்து எப்படி உங்க அண்ணனுக்கு இம்பார்டன்ட் வொர்க் இருந்துச்சோ அந்த மாதிரி இன்றைக்கு எனக்கு இம்பார்ட்டண்ட் ஒர்க் இருக்கு, இல்லன்னா நானே கூட கூட்டிட்டு போவேன்.
அய்யையோ, அதெல்லாம் பரவாயில்லை ரோஹித். நீங்க உங்க வேலைய பாருங்க. இந்த தீபக்க சொல்லணும். அவன் இருந்திருந்தா அவனே கூட்டிட்டு போய் இருப்பான். இப்ப தேவையில்லாம உங்களையும் அண்ணாவையும் டிஸ்டர்ப் பண்ண வேண்டி இருக்கு.
விரு, இதில் என்ன டிஸ்டர்பன்ஸ். தங்கச்சிக்கு செய்யறது எந்த அண்ணனாவது டிஸ்டர்பன்ஸா நினைப்பானா?
அண்ணா சீரியஸா எடுத்துக்காதீங்க. வேலை நேரத்தில் இந்த வேலையும் உங்களுக்கு சேர்த்து தரேன் என்றதனால் தான் சொன்னேன்.
சரி மச்சி நான் கிளம்பவா என்றான் ரோஹித்.
ஓகேடா தேங்க்யூ பை
எதுக்கு தேங்க்ஸ்.
இல்ல எங்களுக்காக இவ்வளவு தூரம் காரை எடுத்துட்டு வந்து இருக்கியே.
உங்களுக்காக இல்ல விருத்திகாவுக்காக.
அதுவும் அவ பிரக்னண்டா இருக்காளே. இந்த நேரத்துல அவ பைக்ல டிராவல் பண்ண வேண்டாம் அப்படின்னு நினைச்சு எடுத்துட்டு வந்தேன். ஆனா நீ தான் ஓட்ட தெரியாதுன்னு சொல்லிட்டியே என்று சொல்லி சிரித்தான் ரோஹித்.
டேய் இருடா, இன்னும் கொஞ்ச நாள்ல கார் வாங்கி ஓட்டுக்கிட்டு வரேன் பாருடா.
எப்போ? விருத்திகாவோட குழந்தை கல்யாணத்துலயா? என்று கிண்டல் செய்தான் ரோஹித்.
மச்சி என்று அவனை துரத்திக் கொண்டு போனான் விஹான்.
விருத்திகா பை, டேக் கேர் என்ற கத்திக் கொண்டே வேகமாக ஓடிச் சென்று காரில் ஏறி கிளம்பினான் ரோஹித்.
துரத்தி சென்ற விஹான், அவன் கிளம்புவதைப் பார்த்து சிரித்துக்கொண்டே வீட்டிற்குள் வந்தான்.
விருத்திகா அவர்கள் இருவரையும் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தாள்.
மதியம் இருவரும் வீட்டிலேயே லன்ச் சாப்பிட்டுவிட்டு ஹாஸ்பிடலுக்கு கிளம்பினார்கள். காலையிலிருந்து கிளம்புவதற்குள் பத்து முறைக்கு மேல் தீபக்கிற்கு கால் செய்தாள் விருத்திகா. எல்லா முறையில்மே நாட் ரீச்சபிள் என்று வந்தது. அவளுக்கு லேசாக பயம் வந்தது.
தன் அண்ணனிடம் சொல்லலாமா என்று யோசித்தாள். சரி இன்று ஒரு நாள் காத்திருந்து விட்டு, நாளை சொல்லிக் கொள்ளலாம் என்று நினைத்தாள்.
கால் டாக்ஸி புக் செய்து ஹாஸ்பிடல் சென்று டாக்டரை பார்த்து விட்டு வீட்டிற்கு வந்தனர் விஹான் மற்றும் விருத்திகா .
ஃபோனை எடுத்து டாக்டர் சொல்லியதை தீபத்திற்கு சொல்லலாம் என்று கால் செய்தால் விருத்திகா. அப்போதும் அவன் எடுக்கவில்லை.
காலை வரை காத்திருக்க அவளுக்கு பொறுமை இல்லை.
தன் அண்ணனின் ரூம் கதவை தட்டினாள்.
அண்ணா,
என்னமா பசிக்குதா டின்னர் ஆர்டர் பண்ணட்டுமா?
இல்லனா அதெல்லாம் ஒன்னும் இல்ல. இன்னைக்கு காலையில இருந்து ட்ரை பண்ணிட்டு இருக்கேன் தீபக்கிற்கு நாட் ரீச்சபிள்னு வருது அண்ணா. எனக்கு என்னவோ பயமா இருக்கு அண்ணா.
ஏன் ஆபீஸ் விஷயமா தானே போயிருக்கான் இதுல பயப்பட என்ன இருக்கு?
இல்ல அண்ணா, அவன் போறதுக்கு முன்னாடி ஏதோ டென்ஷனா இருந்தான். என்னன்னு எனக்கு தெரியல. நான் கேட்டதுக்கு, பெங்களூர் போயிட்டு வந்து சொல்றேன்னு சொன்னான்.
இங்க இருந்து போகும்போது ரெண்டு நாள்ல வந்துடுவேன்னு சொன்னவன். முந்தா நேத்து நான் பேசும் போது இன்னும் ரெண்டு நாள் என்று சொன்னான்.
சரி நீ டென்ஷன் ஆகாத. நாளைக்கு நான் தீபக்கோடா ஆபீஸ்க்கு போய் விசாரிச்சிட்டு வரேன்.
ஓகே அண்ணா. குட் நைட்.
என்ன டின்னர் சாப்பிடாம அதுக்குள்ள குட் நைட்.
இல்லன்னா எனக்கு பசிக்கல எனக்கு டின்னர் வேண்டாம்.
விரு, இந்த மாதிரி பண்ணாத. உனக்காக இல்லனாலும் உன் வயித்துல இருக்க குழந்தைக்காகவாது நீ சாப்பிட்டு தான் ஆகணும்.
ஆனா எனக்கு பசிக்கலை அண்ணா.
வாந்தியே எடுத்தாலும் பரவால்ல. மாத்திரை போடறதுக்காகவாது சாப்பிடணும். அதனால தயவு செஞ்சு கொஞ்சமாவது சாப்பிடு.
பிடிக்கவில்லை என்றாலும் வேறு வழி இன்றி தன் அண்ணனுக்காகவும் தன் வயிற்றில் இருக்கும் குழந்தைக்காகவும் டின்னர் சாப்பிட்டு விட்டு மாத்திரை போட்டுக் கொண்டு படுத்து தூங்கினாள் விருத்திகா.
தொடரும்…..
அ. வைஷ்ணவி விஜயராகவன்.
No comments yet.