பாகம் 8

Vaishnavi Vijayaraghavan | 04 May 2026 | Share

தொடர்பியல்….. பாகம் -8


கேஸ் – 1 ( சங்கவி- கிஷோர்)


ஹலோ…. மாதவா…. என்றாள் ராகினி.


என்னடி…. உனக்கு எத்தனை முறை கால் பண்றது…..


சாரி டா…. கான்பரன்ஸ் மீட்டிங் வச்சாரு டேவிஸ் சார்.


ஓ…. ஓகே…. 


சரி… என்னாச்சு சொல்லு…. எதுக்கு இத்தனை முறை கால் பண்ண….


என்னோட அம்மாவுக்கு உடம்பு சரியில்லை…. கொஞ்சம் சீரியஸ் ன்னு சொன்னாரு அப்பா…. நான் ஊருக்கு போயிட்டு வந்திடறேன்…. 


என்னாச்சு அத்தைக்கு?


மூச்சு திணறல் அதிகமாயிடிச்சாம் ஹாஸ்பிடலில் சேர்த்து இருக்காங்க…. அதான் ஒரே டென்ஷனா இருக்கு.


நானும் கூட வரவா….


இல்லடி வேண்டாம்….. நம்ம லவ் பத்தி இன்னும் நான் வீட்ல சொல்லல…. இப்போ உன்னை கூட்டிக்கிட்டு போனா பிரச்சனை ஆயிடும்.


ஹூம்…. சரி…. நீ கவலைப்படாதே…. அத்தைக்கு ஒண்ணும் ஆகாது…. நான் பிரே பண்ணிக்கிறேன்.


ஹூம்…. தேங்க்ஸ் டி…. 


கிளம்பிட்டியா?


ஹூம்….


சேலம் தானே?


ஆமாம் டி….


பஸ்ஸா?


ஆமாம்….. டிரெயின் நைட்டு தான் கிளம்பும்…. அதான் இப்பவே பஸ்ல கிளம்பிட்டேன்.


ஓ…. ஓகே….எவ்வளவு நேரம் ஆகும்?


ஆறு மணி நேரம் ஆகும்….. 


சரிடா…. ரீச் ஆயிட்டு கால் பண்ணு…. மிட் நைட்டா இருந்தாலும் பரவாயில்லை…. அத்தைக்கு எப்படி இருக்குன்னு சொல்லு….


ஹூம்…. பை ராகினி…. யூ டேக் கேர்….


சரி மாதவா…. பை….


ஃபோனை வைத்து விட்டு லேபிற்கு வந்து அவள் கேபினில் அமர்ந்து தண்ணீரை குடித்தாள். அவள் முகத்தை பார்த்து ஏதோ பிரச்சனை என்று தெரிந்து கொண்டாள் மம்தா.


என்னாச்சு ராகினி?


ஒண்ணும் இல்ல மம்தா.


வா…. காஃபி குடித்து விட்டு வரலாம் என்று சொல்லி அவளை அழைத்து கொண்டு பக்கத்தில் இருந்த கடைக்கு சென்றாள் மம்தா.


காஃபி ஆர்டர் செய்து விட்டு….


இப்போ சொல்லு…. என்னாச்சு…. என்றாள் மம்தா.


மாதவனின் அம்மாவை பற்றி கூறினாள்.


இதுக்காகவா இவ்வளவு டென்ஷனா இருக்க?…. அவங்களுக்கு சரி ஆகிவிடும்.


இல்ல மம்தா…. நான் அதுக்காக டென்ஷனா இல்லை….. அவங்களுக்கு சரியாகிடும் ன்னு எனக்கு தெரியும்.


தெரியுமா?….. எப்படி?


தோணுது….


சரி அதுக்கு டென்ஷன் இல்லன்னா…. வேறு எதுக்கு?


நான் உன்னையும் என் கிளோஸ் ஃபிரெண்டு ரம்யா மாதிரி தான் நினைக்கிறேன்…. அதனால சொல்றேன்…. என்று தன் கனவையும் உண்மையிலேயே அவள் சங்கவி மற்றும் கிஷோரை பார்த்ததையும் கூறினாள்.


என்ன ராகினி…. நம்பவும் முடியல…. நம்பாம இருக்கவும் முடியல….


ஹூம்….. 


சரி…. அதுக்கு ஏன் நீ இப்போ டென்ஷனா இருக்க?


மாதவன் என்னை ஏலகிரி கூட்டிக்கிட்டு போறேன்னு சொன்னான்…. ஆனா அவனால இப்போதைக்கு வர முடியாது.


நீ தான சொன்ன…. அவங்க அம்மாவுக்கு எதுவும் ஆகாது ன்னு…. அப்போ மாதவன் வந்திடுவாரு இல்ல?


இல்ல…. மாதவன் மன்டே தான் வருவான்….


என்ன ராகினி சொல்ற?


ஆமாம்…. அதுவரையிலும் அவன் அவனோட அம்மா கூட ஹாஸ்பிடலில் எல்லா டெஸ்ட்டும் எடுத்து கொண்டு இருப்பான். அவனோட அம்மா ஞாயிற்றுக்கிழமை வரை சீரியஸாக தான் இருப்பாங்க….


என்ன ராகினி…. என்னென்னவோ சொல்ற…. 


எனக்கே தெரியல மம்தா…. எனக்கு ஏன் இப்படி எல்லாம் தோணுதுன்னு….


சரி…. நான் வரேன் உன் கூட சேட்டர்டே…. ஏலகிரிக்கு…. என்றாள் மம்தா.


விரக்தியாக சிரித்தாள் ராகினி.


என்னாச்சு ராகினி…. எதுக்காக இப்படி சிரிக்கிற?


உன்னாலேயும் என் கூட வரமுடியாது.


ஏன்….


நீ வரவேண்டாம்….. நீ என் கூட வரணும்னு முடிவு பண்ணினா…. உனக்கும் எதாவது தடங்கள் வரும்.


எங்க அப்பா ஆல்ரெடி உடம்பு சரியில்லாம தான் இருக்காரு…. எங்க அம்மா அவரை பார்த்துப்பாங்க…. என்றாள் மம்தா.


இல்ல மம்தா…. நீ வர முடியாது…. நீ வரணும் நினைக்காத…. என்னால மட்டும் தான் போக முடியும்…. எனக்கே பல தடங்கல்கள் வரும்…. என்றாள் ராகினி.


ஓகே ராகினி…. டேக் கேர்….


ஓகே மம்தா…. சரி வா டைம் ஆகுது லேபிற்கு போகலாம்…. என்றாள் ராகினி.


வேலையை முடித்து விட்டு வீட்டுக்கு சென்று குளித்தாள் ராகினி.


பிறகு தன் ரூமிற்கு வந்து படுத்து ஃபோனை எடுத்து மாதவனுக்கு கால் செய்தாள்.


எங்க டா இருக்க….


உளுந்தூர்பேட்டையில் இருக்கேன் டி…. டிபன் சாப்பிட நிறுத்தி இருக்காங்க….


எதாவது சாப்பிட்டியா மாதவா….


இல்ல ராகினி…. ரொம்ப கவலையா இருக்கு…. பயமா இருக்கு டி….


நான் தான் சொல்றேன் இல்ல…. என்னை நம்பு…. அத்தைக்கு ஒண்ணும் ஆகாது….. ஞாயிற்றுக்கிழமை ஈவினிங் வரை கொஞ்சம் கஷ்டப்படுவாங்க…. அப்புறம் சரி ஆகிடும்….


என்னடி சொல்ற…. 


ஆமாம் டா…. எனக்கு தோணுது…. நான் சொல்றேன் இல்ல…. நீ கவலைப்படாதே….


பெருமூச்சு விட்டான் மாதவன். சரி…. நீ ஜாக்கிரதையா இரு…. பை…. என்று சொல்லி ஃபோனை வைத்து விட்டு…. இவளை ஒரு சைக்கியாட்டிரிஸ்ட் கிட்ட கூட்டிக்கிட்டு போகணும்…. என்று நினைத்து கொண்டான் மாதவன்.


**************


மம்தா வீட்டில்…..


அம்மா….


சொல்லு அம்மு….


அப்பாவுக்கு மாத்திரை கொடுத்திட்டீங்களா?


ஹாங்…. இப்போ தான் டின்னர் கொடுத்திட்டு மாத்திரை கொடுத்திட்டு வந்தேன்….


அம்மா இப்படி உட்காருங்களேன்…. என்று அவளுடைய பக்கத்தில் அமர வைத்தாள்.


என்னம்மா?


அம்மா…. நான் சொன்னேன் இல்ல…. லேபில் என் கூட வேலை செய்யுற பொண்ணு ராகினி பத்தி….


ஆமாம்….


அவளுக்கு இந்த வாரம் ஒரு முக்கியமான வேலையா ஏலகிரி போகணுமாம்…. அவளோட உட்பீ…. அதான் மாதவன் போலீஸ் நேத்து ராத்திரி சொன்னேனே…. அவரோட அம்மாவுக்கு உடம்பு சரியில்லைன்னு போயிருக்காரு….. நான் அவ கூட போயிட்டு வரட்டுமா?


போயிட்டு வாம்மா…. 


அப்பாவை பார்த்துப்பீங்க இல்ல….


ஒண்ணும் பிரச்சனை இல்லை…. நான் பார்த்துக்கொள்கிறேன்….. எதாவதுன்னா பக்கத்து வீட்டு ஜோஷ்வா இருக்கான் அவனை உதவிக்கு கூப்பிட்டுக்கிறேன்…..


ஓகே மா…. அவ தனியாவே போயிக்கிறேன்னு தான் சொன்னா…. எனக்கு தான் கஷ்டமா இருந்தது…. அதான் உங்க கிட்ட ஒரு வார்த்தை கேட்டுக்கிட்டு அவ கிட்ட சொல்லலாம் ன்னு நினைச்சேன்.


சரிம்மா…. போயிட்டு வா…..என்றார் மம்தாவின் அம்மா.


தேங்க்ஸ் மா…. என்று சொல்லி அவருடைய தோளில் சாய்ந்து கொண்டாள் மம்தா.

வெள்ளிக்கிழமை சொல்லிக்கலாம் ராகினி கிட்ட…. இப்பவே சொன்னா…. பிரச்சனை வரும் வேண்டாம்னு…. அவளே எதாவது கற்பனை செய்துப்பா…. என்று நினைத்து கொண்டாள் மம்தா.


*************


நேராக ஆஸ்பத்திரிக்கு சென்றான் மாதவன்.


என்னாச்சு அப்பா…. அம்மா இப்போ எப்படி இருக்காங்க?…. என்றான் மாதவன் கண்கள் கலங்கியவாறே.


ரெண்டு மூணு நாளைக்கு ஐசியூ வில் தான் வச்சிருப்பாங்கலாம்…. இப்போதைக்கு எதுவும் உறுதியா சொல்ல முடியாது ன்னு சொன்னாரு டாக்டர்…. ரொம்ப பயமா இருக்கு மாதவா…. உன்னோட கல்யாணத்தை கூட பார்காம உங்க அம்மா போயிடுவாளா?…. என்று சொல்லி அழுதுகொண்டே அவனுடைய தோளில் சாய்ந்தார்.


அப்பா…. பிளீஸ் பா…. இப்படி எல்லாம் பேசாதீங்க…. அம்மாவுக்கு ஒண்ணும் ஆகாது…. என் கல்யாணம் மட்டும் இல்ல…. பேரன் பேத்தி கல்யாணம் கூட பார்ப்பாங்க…. என்றான் மாதவன் அழுதவாறே.


அப்போது ஒரு நர்ஸ் வந்து மாத்திரை சீட்டைக் கொடுத்து…. உடனே வாங்கி வர சொன்னாள்.


மாதவன் வாங்கி வந்து கொடுத்தான். அந்த நர்ஸிடம்….


சிஸ்டர்…. இப்போ எங்க அம்மா எப்படி இருக்காங்க?…. என்றான்.


எங்களுக்கு தெரியாது சார்…. டாக்டர் வந்து சொல்லுவாங்க…. என்று சொல்லி விட்டு மருந்தை வாங்கிக் கொண்டு ஐசியூவிற்கு சென்று விட்டார்.


எதாவது சாப்பிட்டீங்களா அப்பா…..


இல்லப்பா…. உங்க அம்மா இந்த நிலைமையில் இருக்கும் போது எப்படி பா சாப்பிட தோணும்…..


அப்பா…. நம்ம நல்லா இருந்தா தான் அம்மாவை பார்த்து கொள்ள முடியும்….. வாங்க என்று வற்புறுத்தி கேண்டீனிற்கு அழைத்து சென்றான்.


இட்லி இருக்கிறதா?….. என்றான் மாதவன் கேண்டீனில் பணிபுரியும் சர்வரை பார்த்து.


இல்ல சார்…. காலி ஆயிடிச்சு…. பரோட்டா மட்டும் தான் இருக்கு…. என்றார் அவர்.


சரி ஒண்ணு கொடுங்க…. என்று சொல்லி ஆர்டர் செய்து வாங்கி வந்து அவனுடைய அப்பாவிற்கு கொடுத்தான்.


நீ சாப்பிடலையா பா?


இல்ல பா…. பஸ்ல வரும்போது டிபனுக்கு நிறுத்தினாங்க…. அப்போ டீ குடிச்சேன்…. அதான் பசிக்கல…. நான் பசிச்சா பிஸ்கட் சாப்பிடறேன்…. என்று சொல்லி பிஸ்கெட் பாக்கெட்டை காண்பித்தான் மாதவன்.


ஓ…. சரிப்பா…. என்றார் மாதவனின் அப்பா.


அப்போது ராகினி கால் செய்தாள்.


யாருப்பா…. இந்த நேரத்தில…. என்றார்.


அப்பா…. என்னோட ஃபிரெண்டு…. கிளம்பும்போது சொல்லிட்டு வந்தேன் அம்மாவுக்கு உடம்பு சரியில்லை பார்க்க போறேன்னு…. அதான் எப்படி இருக்காங்க ன்னு கேட்க கால் பண்ணி இருப்பா…..


சரிப்பா…. ஏன் கட் பண்ணிட்ட…. எடுத்து பேசு…..


கட் பண்ணல பா….. மெஸேஜ் அனுப்பிருக்கேன்…. நானே பத்து நிமிஷத்துல கால் பண்றேன்னு…. நீங்க வாங்க உங்களை அட்டெண்டர் பெட்ல படுக்க வச்சிட்டு வந்து நான் பேசிக்கிறேன்….


நான் போயிக்கிறேன் பா….பக்கத்தில் தான் இருக்கு…. நீ பேசு.. பேசிட்டு வா.. என்று சொல்லி விட்டு எழுந்து சென்றார்.


ஓகே பா…. நீங்க டென்ஷன் இல்லாம தூங்குங்க…. அம்மாவுக்கு சரி ஆகிடும்…….


சரிப்பா …. என்று சொல்லி விட்டு அட்டெண்டர் ரூமிற்கு சென்று பெட்டில் படுத்து கொண்டார்.


ராகினிக்கு கால் செய்தான்.


என்னடி நீ இன்னும் தூங்கலீயா?


இல்லடா…. தூக்கம் வரவில்லை….. அத்தை எப்படி இருக்காங்க…. 


3 டேஸ் அப்ஸர்வேஷனிற்கு பிறகு தான் சொல்லுவாங்களாம்….


ஓ…. ஓகே…. மாமா எப்படி இருக்காரு?


டென்ஷனா தான் இருக்காரு…..


ஹூம்…. நீ தைரியம் சொன்னீயா?


ஹூம்…. சொன்னேன் டி….


சரிடா…. நீயும் ரெஸ்ட் எடு…. நாளைக்கு காலைல கால் பண்றேன்…. பை…. என்றாள் ராகினி.


ஓகே….பை…. ராகினி…. என்று சொல்லி விட்டு ஃபோனை வைத்தான் மாதவன்.


மாதவன் இருக்கும் இந்த நேரத்தில நாம தனியா ஏலகிரி போக நினைக்கும் விஷயத்தை சொல்லக்கூடாது என்று நினைத்து கொண்டாள் ராகினி.


*************



தொடரும்….

அ. வைஷ்ணவி விஜயராகவன்.


  


































இந்த episode பிடிச்சிருந்தா எழுத்தாளரை உற்சாகப்படுத்துங்க!!
இப்போதே உற்சாகப்படுத்துங்கள்

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

No votes so far! Be the first to rate this post.

    No comments yet.