பாகம் -7
விருத்திகா, என்னாச்சு?
என்றான் ரோஹித் பதட்டமாக.
வாந்தி எடுத்துக் கொண்டே இருந்தாள் விருத்திகா. ரோஹித்திற்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.
அவள் ஆக்ஷனில் என்னவோ சொன்னாள், ஆனால் அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை.
மூக்கை மூடி கிட்சனை காண்பித்தாள். ஆனால் ரோஹித்தால் சுத்தமாக புரிந்துக் கொள்ள முடியவில்லை.
ஆக்ஷனில் முட்டை என்று காண்பித்தாள், பின்னர் அதை புரிந்து கொண்டவன் வேகமாக சென்று கிச்சனில் இருந்த ஆம்லட்டுகளையும், பிரிட்ஜில் இருந்த முட்டைகளையும் சேர்த்து டஸ்ட்பினில் போட்டு மூடிவிட்டு, கைகளை சோப்பு போட்டு கழுவி விட்டு விருத்திகாவிற்காக சுடு நீர் எடுத்துக் கொண்டு வந்தான்.
வாந்தி எடுத்து முடித்து விட்டு டயர்டாக அமர்ந்து இருந்தாள்.
விருத்திகா இந்தா இதை கொஞ்சம் குடி என்று சொல்லிக் கொண்டே சுடுதண்ணியை கொடுத்தான்.
தேங்க்ஸ் ரோஹித் என்று திணறிக் கொண்டே சொன்னாள்.
சாரி விருத்திகா என்றான் கண்கள் கலங்க.
சே சே, உங்களுக்கு என்ன தெரியும் எனக்கு அந்த ஸ்மெல் ஒத்துக்காதுன்னு. காலேஜ் படிக்கும் போது ரா எக் சாப்பிட்டுக் கொண்டு இருந்தவ நான். ஆம்லெட் இல்லாம லஞ்சே சாப்பிட மாட்டேனே உங்களுக்கே தெரியுமே.
உண்மையை சொல்லவா?
என்ன?
எனக்கு ஆம்லெட் பிடிச்சதே உன்னால தான். ஒரு முறை நீ விஹானுக்கு போட்டுக் கொடுத்த அதை நான் சாப்பிட்டேன் அப்புறம தான் நான் ரெகுலரா சாப்பிட ஆரம்பிச்சேன். எங்க அம்மா செய்வது எனக்கு பிடிக்காது.
அப்படியா? அவ்வளவு நல்லாவா இருந்துச்சு.
சத்தியமா.
ஆன்டிக்கு தெரியுமா?
எது?
அவங்க செஞ்ச ஆம்லெட் பிடிக்கலைன்னு.
அய்யையோ தெரியாது. தெரிஞ்சா அவ்வளவு தான்.
ஒரு நிமிஷம், ஒரு நிமிஷம், ஒரு நாள் எங்க அண்ணன் என் கிட்ட எப்படி ஆம்லெட் போடனும் கேட்டாரே அது உங்களுக்காக தானா?
ஆமாம் என்று சொல்லி சிரித்தான்.
சிரித்தாள் விருத்திகா.
அப்போது வந்தான் விஹான்.
அண்ணா, என்று சொல்லிக் எழுந்து அவனை கட்டிப் பிடித்துக் கொண்டாள் விருத்திகா.
எப்படி இருக்க விரு?
நல்லா இருக்கேன் அண்ணா. நீங்க எப்படி இருக்கீங்க?
நல்லா இருக்கேன். தீபக் வரலையா?
இல்லன்னா அவருக்கு ஏதோ முக்கியமான வேலை இருக்குன்னு பெங்களூர் போய் இருக்காரு. டூ டேஸ் நான் இங்கதான் இருக்க போறேன். அப்புறம் ஒரே ஒரு ஹெல்ப் பண்ணும் அண்ணா.
சொல்லுமா.
நாளைக்கு என்னை கொஞ்சம் ஸ்கேனுக்கு கூட்டிட்டு போறீங்களா?
அமைதியாக இருந்தான் விஹான்.
என்ன ஆச்சு அண்ணா?
நாளைக்கு ஒரு ப்ராஜெக்ட் மீட்டிங் இருக்கு, அதை கண்டிப்பா என்னால ஸ்கிப் பண்ண முடியாது அதான் யோசிக்கிறேன். என்ன டைம் உனக்கு அப்பாயின்மென்ட் கொடுத்து இருக்காங்க ?
காலையில 11 மணிக்கு அண்ணா.
மீட்டிங் 10 மணிக்கு ஆரம்பிச்சா ரெண்டு மணிக்கு தான் முடியும். ஹாஸ்பிடலுக்கு கால் பண்ணி ஈவினிங்கா மாத்தி தர சொல்லி கேக்குறியா?
இல்லேன்னா எனக்கு பார்க்கிற டாக்டர் வந்து ஈவினிங் பார்ப்பாங்க அதனால காலையில ஸ்கேன் எடுத்துட்டு அந்த ரிப்போர்ட் வாங்கி கிட்டு அப்படியே போய் அவங்கள பாத்துட்டு வரணும்.
ஓ, என்று இழுத்தான்.
ஒன்னும் பிரச்சனை இல்ல அண்ணா, நானே போய் பார்த்துட்டு வந்துருவேன். தீபக் தான் என்னை தனியா அனுப்ப பயப்படுவார், அதனால் தான் உன்னை கூட்டிட்டு போக சொன்னாரு.
விருத்திகா, நீ தப்பா நினைக்கலனா. உனக்கு எதுவும் பிரச்சனை இல்லை என்றால், நான் உன்னை கூட்டிட்டு போகலாமா. எனக்கு நாளைக்கு ஆஃப் தான் என்றான் ரோஹித்.
அது வந்து,
ஒன்னும் பிரச்சனை இல்ல நீ அவரை கேளு. அவருக்கு ஓகேன்னா நான் கூட்டிட்டு போறேன். இல்லன்னா இன்னொரு ஐடியாவும் இருக்கு.
என்ன?
என்னோட அம்மாவை கூட்டிட்டு வரேன் அவங்க வேணும்னா உன் கூட துணைக்கு வருவாங்க.
இல்ல இல்ல வேண்டாம் அவங்கள எல்லாம் டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்.
வேண்டாம் மச்சி, அம்மா அங்க உன் அண்ணன் குழந்தையை பார்த்து கிட்டு இருக்கறாங்க. அவங்க எப்படி குழந்தையை விட்டுட்டு வருவாங்க?
இல்லடா நான் போய் குழந்தையை பார்த்துக்கொண்டேனா அம்மா வந்து விருத்திகாவை கூட்டிக்கிட்டு போகலாம் இல்ல?
இல்ல இல்ல ரோஹித், வேண்டாம் அம்மாவெல்லாம் டிஸ்டர்ப் பண்ணாதீங்க.
நான் தீபக் கிட்ட கேட்டுட்டு உங்ககிட்ட சொல்றேன். ஆனா அவன் வேண்டாம்னு சொல்லிட்டா நீங்க ஃபீல் பண்ண கூடாது அப்படி இருந்தா நான் கேட்டு சொல்றேன்.
அதெல்லாம் நான் ஃபீல் பண்ண மாட்டேன். நான் ஜஸ்ட் உன் கூட துணைக்கு தான் வரேன்.
ஓகே ஓகே ரோஹித் நான் கேட்டுட்டு சொல்றேன்.
சரி மச்சி நான் கிளம்புறேன் டா என்றான் ரோஹித்.
ஏண்டா எதுக்கு இப்ப போற இங்கேயே இருக்கலாம் இல்ல?
ஓ, நீங்க ரெண்டு பேரும் ஒண்ணா தான் இருக்கீங்களா என்றாள் விருத்திகா.
இல்ல இல்ல, இட்லி டுடேஸ் வந்தேன்னா இங்க ஸ்டே பண்ணுவேன்.
ஏன் ஸ்டே பண்ற ஐடியால வந்துட்டு இப்ப போகணும்னு நினைக்கிறீங்க?
நான் இங்க ஸ்டே பண்ற ஐடியால எல்லாம் இன்னைக்கு வரல, அதுவும் இல்லாம நான் என்னோட வீட்டிலேயே லேப்டாப்பை மறந்து வெச்சிட்டு வந்துட்டேன். ஒரு முக்கியமான வேலை இருக்கு அதை இன்னைக்கு நைட்டுக்குள்ள முடிச்சு செண்டு பண்ணா தான் எனக்கு நாளைக்கு ஆஃபே கிடைக்கும் என்றான் ரோஹித்.
ஓகே ஓகே.
விருத்திகா தன்னுடைய ரூமிற்கு சென்றதும்,
விஹான் ரோஹித்திடம்,
என்ன மச்சி ஸ்டே பண்றேன்னு தானடா சொன்ன? இப்ப என்ன ஆச்சு?
இல்லடா, அது நல்லா இருக்காது. தீபக்குக்கு ஏற்கனவே என்னை பிடிக்காது. இப்ப நான் இன்னைக்கு ஸ்டே பண்ணது தெரிஞ்சதுனா. உன்னை பார்க்குறதுக்கு கூட உன் தங்கச்சி அனுப்ப மாட்டாரு தீபக்.
நீ சொல்றதும் ஒரு வகையில கரெக்ட் தான்,
எனக்கும் அவனை பத்தி தெரியும். நாளைக்கு உன் கூட எல்லாம் என் தங்கச்சி ஹாஸ்பிடலுக்கு அனுப்ப மாட்டான் அவன். ஒன்னு அப்பாயிண்ட்மெண்ட் கேன்சல் பண்ண சொல்லுவான், இல்லன்னா டேட் மாத்திட்டு என்ன கூட்டிட்டு போக சொல்லுவான் அப்படியும் இல்லனா பெங்களூரில் இருந்து வந்து அவனே கூட்டிட்டு போறேன்னு சொல்லுவான்.
சிரித்தான் ரோஹித்.
சரி மச்சி எனக்கு நாளைக்கு கால் பண்ணி சொல்லு. விருத்திகாவை ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போறதா இருந்தா நாளைக்கு காலைல வரேன், இல்லன்னா தீபக் வந்து அவளை கூட்டிட்டு போனதும் சொல்லு அதுக்கப்புறம் வரேன் என்றான் ரோஹித் .
தொடரும்…..
அ. வைஷ்ணவி விஜயராகவன்.

பாகம் 8
தன் ரூமுக்கு சென்ற விருத்திகா தீபக் க்கு மெசேஜ் செய்தாள்.
ஹாய் டா செல்லம், டின்னர் சாப்டியா?
ஃப்ரீயா இருந்தா கால் பண்றியா?ஒரு இம்பார்டன்ட் விஷயம் பேசணும் என்று மெசேஜ் டைப் செய்து அனுப்பினாள்.
கால் மணி நேரத்திற்கு பிறகு ப்ளூடிக் வந்தது.
விரு, டென் மினிட்ஸ்ல நானே கால் பண்றேன்.
ஓகேடா என்ற டைப் செய்துவிட்டு அவன் காலுக்காக காத்திருந்தாள் விருத்திகா.
அவன் கால் செய்யவே இல்லை, ஃபோனை பார்த்துக் கொண்டிருந்தவள் அப்படியே தூங்கி விட்டாள். இரண்டு மணி அளவில் ரெஸ்ட் ரூம் செல்ல எழுந்தவள் அதுவரை அவன் கால் செய்யாதது நினைத்து மிகவும் வருந்தினாள்.
உங்க அப்பா வரட்டும் இருக்கு அவருக்கு. முக்கியமான விஷயம்னு சொல்றேன் அப்ப கூட கால் பண்ணல பாரு என்று தன் வயரை தடவிக் கொண்டு தன் குழந்தையிடம் பேசுவதை போல பேசினாள்.
மெசேஜ் செய்தாள்.
தீபு, நான் செம கோவத்துல இருக்கேன். கால் பண்றேன்னு சொல்லிட்டு நீ பண்ணவே இல்ல. நீ
வீட்டுக்கு வந்து எத்தனை முறை சாரி சொன்னாலும் நானும் என் புள்ளையும் ஏத்துக்க மாட்டோம். கண்டிப்பா பெரிய பனிஷ்மென்டா கொடுப்போம் என்று டைப் செய்தாள்.
ஐந்து நிமிடத்திற்கு எல்லாம் கால் வந்தது.
செல்லம், நீ முழிச்சி இருக்கியா? சாரிடி, நான் வேலையை முடிச்சிட்டு வர்றதுக்கு ஒரு மணி நேரத்துக்கு மேல ஆயிடுச்சு கண்டிப்பா நீ தூங்கி இருப்பேன்னு, அதனால தான் உன்னை டிஸ்டர்ப் பண்ண வேண்டாம் என்று நான் கால் பண்ணல.
அவன் சொன்ன காரணம் சரியாக இருக்கவே,
சரி சரி, நானும் நம்ம புள்ளையும் உன்னை மன்னிச்சிட்டோம். அது நீ சொன்னதுக்காக தான். வேற ஏதாவது காரணம் சொல்லி இருந்தா நான் ஒத்துக்கொண்டே இருக்க மாட்டேன். ஏன்னா நான் இப்பதான் பாத்ரூம் போறதுக்கு எழுந்தேன். நீ கால் பண்ணுவன்னு ஹாஃப் அன் ஹவருக்கு மேல வெயிட் பண்ணி அப்படியே தூங்கிட்டேன்.
சாரிடி,
சரி சரி அத விடு.
சரி நீ சொல்லு என்ன முக்கியமான விஷயம்.
அதுதான் உன்கிட்ட இப்படி சொல்றதுன்னு யோசிக்கிறேன் டா.
சொல்லுடி,
நாளைக்கு அண்ணாக்கு ஒரு முக்கியமான வேலை இருக்காம், கண்டிப்பா அவரால அந்த பிராஜெக்ட் ஒர்க்கை ஸ்கிப் பண்ண முடியாதாம்.
ஸோ,
ஸோ?
ஒன்னு நான் அப்பாயின்மென்ட்ட கேன்சல் பண்ணனும் இல்ல நான் தனியா போகணும்.
இல்ல இல்ல ரெண்டுமே பண்ணாத.
இன்னொரு ஒரு ஆப்ஷன் இருக்கு. ஆனா நீ அதுக்கு கண்டிப்பா ஒத்துக்க மாட்டேன்னு எனக்கே தெரியும்.
என்னன்னு சொல்லு.
இல்ல வேண்டாம் விடு டா.
இப்ப சொல்ல போறியா இல்லையா?
சரி சொல்றேன், அண்ணாவோட ஃப்ரெண்ட் ரோஹித் இருக்காரு இல்ல.
ஆமாம்.
அவர் கூட நான் போகட்டுமா?
ஒரு நிமிடம் அமைதியாக இருந்தான்.
அதான் நான் சொன்னேன் இல்ல உனக்கு பிடிக்காதுன்னு. விடு, நான் தனியாகவே போறேன்.
இல்ல இல்ல வேண்டாம்.
அப்போ என்னை என்னதான் பண்ணச் சொல்ற?
சரி போயிட்டு வா.
ஓகே டா, கவலைப்படாத நான் பத்திரமா போயிட்டு வரேன். உன் சார்பா தான் உன் குழந்தை என் கூடவே இருக்காங்களே என்று சொல்லிச் சிரித்தாள்.
இல்லடி, நீ ரோஹித்தை கூட்டிக்கிட்டு போ.
வாட்? கம் அகெயின்.
உண்மையிலேயே தான் சொல்றேன் டி, ரோஹித் உனக்கு துணையா வருவதில் எனக்கு எந்த விதமான கஷ்டமோ கோபமோ வருத்தமோ இல்ல.
நான் என்னையே கிள்ளி பார்த்துக்கவா?
எதுக்கு?
இல்ல, இது கனவா நனவா ன்னு தெரியல?
ஏண்டி அப்படி சொல்ற?
பின்ன என்ன ரோஹித்தோட பெயரைக் கேட்டாலே உனக்கு பிடிக்காது. அப்படி இருக்கும் போது எப்படி அவர் கூட என்னை போக சொல்ற?
ஒன்னு சொல்லவா?
உண்மைய சொன்னா நான் கொஞ்சம் பொசசிவ்.
அதனாலதான் நான் அப்படி நடந்துகிட்டேன்.
இப்ப பொசஸ்சிவ்னஸ் இல்லையா என்ன?
இருக்கு அதை விட அதிகமா உன் மேல காதலும் அக்கறையும் இருக்கு. அதனால தான் தனியா அனுப்ப பயமா இருக்கு. அதுவும் இல்லாம ரோஹித் நல்லவன் தான். பத்திரமா உன்ன கூட்டிட்டு போயிட்டு வருவான்னு எனக்கு தெரியும்.
நான் தப்பு பண்ணிட்டேன் டா,
என்னடி சொல்ற?
ஆமாண்டா இதெல்லாம் சொன்னா ரோஹித்தும் சரி எங்க அண்ணனும் சரி நம்பவே மாட்டாங்க. ஃபோன்ல ரெக்கார்டிங் போட்டு இருக்கனும் என்று சொல்லி சிரித்தாள்.
சரிடி எனக்கு வேலை இருக்கு நான் வைக்கிறேன்.
சீக்கிரமா வா தீபக். உன்னை பார்க்காம என்னால இருக்கவே முடியல டா.
டுடேஸ்ல வந்திடறேன்.
ஆல்ரெடி ஒரு நாள் முடிஞ்சிருச்சு. நீ நாளை மறுநாள் வந்துடுவேன்னு நினைச்சேன் இன்னும் 2 டேஸ்னு சொல்ற?
ஆமா விரு, வேலை இன்னும் முடியல டி. ஆனா சீக்கிரம் முடிச்சிட்டு வந்திருவேன் கவலைப்படாதே.
சரிடா, உன்ன பாக்கணும் போல இருக்கு வீடியோ கால் பண்ணவா.
நாளைக்கு நானே கால் பண்றேன் டி. இப்ப இங்க ஒரே இருட்டா இருக்கு, நீ கால் பண்ணாலும் என் ஃபேஸ் உனக்கு கிளியரா தெரியாது.
சரிடா, அட்லீஸ்ட் நாளைக்கு காலைல ஒரு செல்ஃபியாவது எடுத்து அனுப்பு டா.
ஓகே விரு, பை டேக் கேர், டேக் கேர் ஆஃப் அவர் பேபி என்றாள் தீபக்.
ஓகே டா, பை, குட் நைட் என்று சொல்லி ஃபோனை வைத்தவள். சிறிது நேரம் தன் ஃபோனில் அவர்கள் இருவரும் எடுத்துக் கொண்ட செல்ஃபிக்களையும், அப்போது அவர்கள் பேசிக்கொண்டது, சிரித்தது, கட்டி பிடித்தது,முத்தம் கொடுத்தது போன்ற அனைத்தையும் நினைத்துப் பார்த்து சிரித்துக் கொண்டாள். பிறகு அப்படியே தூங்கி விட்டாள்.
காலை எழுந்து தன் அண்ணனுடைய ரூமிற்கு சென்று பார்த்த போது, அவன் அங்கே இல்லை.
அப்போது மணியை பார்த்தாள்.
மணி 7:45.
ஃபோனை எடுத்து தன் அண்ணனுக்கு கால் செய்யலாம் என்று நினைத்தாள்.
அப்போது அவனிடமிருந்து மெசேஜ் வந்திருப்பதை பார்த்தாள்.
குட் மார்னிங் விரு, எனக்கு ஆபீஸ்ல டைம் ஆயிடுச்சு மா அதனால கிளம்பிட்டேன். உன்கிட்ட சொல்லலாம்னு வந்தேன் நீ நல்லா தூங்கிட்டு இருந்த அதான் டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னு வந்துட்டேன். ஹாட் பாக்ஸ்ல இட்லியும் உடைச்ச கடலை சட்னியும் செஞ்சு வெச்சிருக்கேன். சாப்பிடு என்று தன் தங்கைக்கு மெசேஜ் அனுப்பி இருந்தான் விஹான்.
தொடரும்…..
அ. வைஷ்ணவி விஜயராகவன்.
No comments yet.