பாகம் 7

Vaishnavi Vijayaraghavan | 28 Jul 2026 | Share

பாகம் 7 

கோபாலகிருஷ்ணனும் பிரேமலதாவும் பேசிக் கொண்டிருக்கும் போது அங்கே வந்தான் விக்னேஷ்.

” ரெடியா இருக்கீங்களா போகலாமா? ” என்று அவர்கள் இருவரையும் பார்த்து கேட்டான்.

” என்னடா ஆச்சு அஜைக்கு?” என்றார் பிரேமலதா.

” ஆன்டி, எனக்குமே எந்த டீடைல்ஸும் தெரியல. என் அண்ணன் விக்ரம் தான் கால் பண்ணி சொன்னான்” என்று மிகவும் வருத்தமாக கூறினான் விக்னேஷ்.

“கேட்டதில் இருந்து மனசே கேட்கல.

ரொம்ப கஷ்டமா இருக்கு. அந்த பொண்ணு தர்ஷினி ரொம்ப தங்கமான பொண்ணு. அவ அதுவும் முழுகாம வேற இருக்கா. இந்த நிலைமையில் எப்படி அவ சமாளிப்பாளோ? அதை நினைச்சா ஒரே கவலையா இருக்கு” என்றார் பிரேமலதா.

“வாம்மா கிளம்பலாம். ஃபிளைட்டுக்கு டைம் ஆகுது” 

என்றார் கோபாலகிருஷ்ணன்.

 அடுத்த மூன்று மணி நேரத்தில் பெங்களூரில் இருந்தனர் கோபாலகிருஷ்ணன் பிரேமலதா மற்றும் விக்னேஷ்.

உள்ளே நுழையும் போதே பிரேமலதாவிற்கு தலை சுற்றுவது போல இருந்தது.

அழுகுரல்கள் சத்தம் வாசலிலேயே கேட்டது. 

அந்த குரல் தர்ஷினியின் அம்மா கற்பகவல்லி உடையது.

உள்ளே நுழைந்த பிரேமலதாவை பார்த்ததும் ஓடி வந்து கட்டிப் பிடித்துக் கொண்டு அழுதார் கற்பகவல்லி.

“அண்ணி, உங்க செல்லப் பொண்ணு தர்ஷினியோட நிலைமையை பார்த்தீங்களா? இந்த கடவுளுக்கு கருணையே இல்லையா? எப்படி இருக்கா பாருங்க என் பொண்ணு” என்று தோளில் சாய்ந்துக் கொண்டு தேம்பி தேம்பி அழுதார்.

 பிரேமலதாவால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை. அவரும் கற்பகவள்ளியுடன் சேர்ந்து தேம்பி அழ ஆரம்பித்து விட்டார்.

 கோபாலகிருஷ்ணன் ராஜசேகரின் கையைப் பிடித்து ஆறுதல் கூறினார்.

 தர்ஷினி பிரம்மை பிடித்தது போல விரித்தபடி தன் கணவன் அஜயின் உயிரற்ற உடலை பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.

 அனைவரும் அவள் கையைப் பிடித்து, அழுதும் சமாதானம் சொல்ல முயற்சித்தார்கள். யாரையும் பார்க்கும் மனநிலையில் அவள் இல்லை. அங்கு என்ன நடக்கிறது என்றே அவள் புத்திக்கு எட்டவில்லை. அவளுடைய எண்ணம் முழுவதுமே ‘அஜய் ஏன் இப்படி தன்னை தனியாக தவிக்க விட்டு சென்றான்’ என்றே இருந்தது.

 கற்பகவல்லி தன் மகளை உலுக்கி,

” அம்மாடி தர்ஷி, சோகத்தை மனசுல வச்சு இருக்காதாமா. அழுது கொட்டி தீர்த்து விடு. அது உனக்கும் நல்லது இல்ல உன் வயித்துல வளர குழந்தைக்கு நல்லதில்ல. தயவு செஞ்சு அழுதிடு. மனச பாரமாதிக்காத” என்று சொல்லி அழுதார்.

 தன் அம்மா பேசியது கூட எதுவும் தர்ஷினியின் காதில் விழவில்லை.

கண்ணைக் கூட சிமிட்டாமல் தன் கணவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

 முகத்தைத் தவிர அனைத்துமே மூடப்பட்டிருந்தது. முகம் மட்டும் சிதைப்பட்டிருந்தால், கண்டிப்பாக அது அஜய் இல்லை என்று தீர்மானமாக கூறியிருப்பாள் தர்ஷினி. அவனுடைய முகத்தில் சிறிதும் அடிபடாததால், அவன் தான் என்று நன்றாகவே தெரிந்தது.

 சடங்குகளும் சம்பிரதாயங்களும் நடத்திக் கொண்டிருந்தனர்.

 நடை பிணம் போல அமர்ந்திருந்தாள் தர்ஷினி.

 அந்த சடங்குகளும் சம்பிரதாயங்களையும் பார்த்து ராஜசேகர் மற்றும் கற்பகவல்லிக்கு கண்களில் கண்ணீருக்கு பதில் ரத்தம் வழிந்தது போல இருந்தது.

 அழுது அழுது அவர்கள் கண்கள் சிவந்தது மட்டுமில்லாமல் வீங்கி போனது.

 விக்னேஷால் தர்ஷினியை அப்படி பார்க்க முடியவில்லை. மிகவும் கஷ்டமாக இருந்தது. தன்னையும் மீறி அவனும் ஒரு ஓரமாக நின்று அழுது விட்டான். இரண்டு முறை சென்று தர்ஷனிடம் பேசப் பார்த்தான்.

 ஆனால் அவள் திரும்பி கூட பார்க்கவில்லை. அவளுடைய கஷ்டத்தை புரிந்து கொண்டு அமைதியாக இருந்து விட்டான்.

 தன் நண்பன் முகுந்தனுக்கு கால் பண்ணி சொல்லலாமா என்று நினைத்தான். ஆனால் அவனுக்கு இப்போது சொல்ல வேண்டாம் என்று கோபாலகிருஷ்ணன் சொன்னதால் பேசாமல் விட்டு விட்டான். எப்படியும் தன்னை கண்டிப்பாக முகுந்தன் திட்டுவான் என்று தெரியும். வேறு வழி இல்லாததால், அவனுக்கு தகவல் சொல்லாமல் இருந்தான் விக்னேஷ்.

 விக்ரம் விக்னேஷுக்கு கால் செய்து அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்தான். வெளிநாட்டில் இருந்து தன் நண்பனின் இழப்புக்கு வர முடியாததால், கடைசி முறையாக அவன் முகத்தை பார்க்க, ஒரு ஃபோட்டோ எடுத்து அவனுக்கு அனுப்ப சொல்லி கேட்டான்.

” அண்ணா நீ என்ன லூசா? நான் எப்படி அண்ணா ஃபோட்டோ எடுப்பேன்” என்று தன் அண்ணனை திட்டினான் விக்னேஷ். 

” டேய் ப்ளீஸ் டா, அஜய் இதுக்கப்புறம் பார்க்க முடியாது டா. அதனால தான் கேட்கிறேன். அவங்க கிட்ட பர்மிஷன் கேட்டுட்டு ஃபோட்டோ எடுத்து அனுப்பு. கடைசியா ஒரு முறை அவனை பார்த்துக்கொள்கிறேன் “

 என்றான் விக்ரம்.

” என்னை ஏன் அண்ணா இப்படி தர்மசங்கடமான நிலைக்கு உள்ளாக்குற “

” ப்ளீஸ் டா எனக்காக இத பண்ணு “

” சரி ட்ரை பண்றேன் இல்லனா என்ன கேட்காதே” என்ற சொல்லி வைத்து விட்டான் விக்னேஷ்.

 ஃபோனை வைத்த பிறகு ‘போட்டோ எடுக்க முடியலன்னா, அட்லீஸ்ட் வீடியோ கால் ஆவது பண்ணு’ என்று மெசேஜ் அனுப்பி இருந்தான் விக்ரம்.

 வீடியோ கால் பண்ணுவதை விட ஃபோட்டோ எடுத்து அனுப்புவது பரவாயில்லை என்று நினைத்த விக்னேஷ் தன் அண்ணன் கூறியதை கோபாலகிருஷ்ணனிடம் கூறினான்.

” என்னப்பா இது”

” அதான் அங்கிள் எனக்கு ஒன்னும் புரியல அதான் உங்ககிட்ட 

கேட்டேன் “

அவர்கள் பேசுவதை பார்த்த ராஜசேகர் கோபாலகிருஷ்ணனிடம் என்ன விவரம் என்று கேட்டார்.

 கோபாலகிருஷ்ணன் விக்னேஷ் கூறியதை சொன்னார்.

” தன் நண்பனை கடைசியா பாக்கணும்னு நினைக்கிறாரு. அதுல என்ன தப்பு இருக்கு. நீ எடுத்துக்கோ பா ஃபோட்டோ” என்ற விக்னேஷை பார்த்து கூறினார் ராஜசேகர்.

“சேகர், என்னப்பா நீ அவன்தான் சொல்றானா நீயும்?”

” அதெல்லாம் பரவாயில்லை பா, வெளிநாட்டுல இருக்கிறவரால வர முடியல. அதுக்காக அவர் பார்க்க கூடாதுன்னு நினைச்சா எப்படி? “

” சாரி அங்கிள், ” என்று சொல்லிவிட்டு சற்று தள்ளி நின்று அஜயை ஃபோட்டோ எடுத்து தன் அண்ணன் விக்ரமுக்கு அனுப்பினான் விக்னேஷ்.

 அனைத்து சடங்குகளும் முடிந்து,

 அஜயை தூக்கி செல்லும் பொழுது தான் சுய நினைவுக்கு வந்த தர்ஷினி,

“அஜய், அஜய்” என்று அழுதாள்.

 அவள் அழுவதை பார்த்த அனைவருக்குமே நெஞ்சம் பாரமானது. அனைவர் கண்களிலும் கண்ணீர் தேங்கி நின்றது.

 இறுதி சடங்கு செய்ய அஜயின் பிணத்தை தூக்கிச் சென்றனர்.

 ராஜசேகர் தான் கொள்ளி போடச் சென்றார். விக்னேஷ் அவர்களுடன் ஈடுகாடிற்கு சென்றான்.

 வீட்டை விட்டு எடுத்து சென்றவுடன் அழுது மயக்கம் போட்டு விழுந்தாள் தர்ஷினி.

 தர்ஷினியை ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் சென்றனர் கற்பகவல்லி மற்றும் பிரேமலதா இருவரும்.

 அதற்கு அங்கு இருந்த சில உறவினர்கள்,

 அந்தப் பெண்ணை வீட்டை விட்டு வெளியே இப்பொழுது கூட்டிச் செல்லக்கூடாது என்றனர்.

 கற்பவல்லிக்கு அழுகையாக வந்தது.

 பிரேமலதா அவர்களைப் பார்த்து நன்றாக திட்டி விட்டார்.

” உங்களுக்கெல்லாம் கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லையா? முழுகாம இருக்கிற பொண்ணு மயங்கி விழுந்து இருக்கா, இப்ப போய் சாஸ்திரம் சம்பிரதாயம் பார்த்துட்டு இருக்கீங்களே. நீங்க எல்லாம் மனுஷங்க தானா? ” என்றார். 

” என்ன கற்பகம், உன் முன்னாடியே இந்த அம்மா இப்படி பேசுது. நாங்க எல்லாம் யாருன்னு இவங்களுக்கு தெரியுமா தெரியாதா?” என்று கற்பகவள்ளியை பார்த்து பேசினார் அந்தப் பெண்மணி.

“ஏம்மா நான் உன்கிட்ட தான பேசுறேன். நீ எதுக்கு இவங்க கிட்ட பேசுற? நாங்க கூட்டிகிட்டு தான் போக போறோம். உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ. வாங்க அண்ணி போகலாம் ” என்று சொல்லி அங்கு இருந்த இரண்டு ஆண்களின் உதவியுடன் தர்ஷினியை காரில் ஏற்றிக்கொண்டு இருவரும் ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் சென்றனர்.

 அவர்கள் சென்ற பிறகும் பின்னால் அந்த பெண்மணி பேசிக்கொண்டும் திட்டிக் கொண்டும் இருந்தார்.

 அங்கு இருந்த வேற சில உறவினர்கள் அந்த பெண்மணியை திட்டினார்கள். அதனால் அதற்கு மேல் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்து விட்டார் அந்த பெண்மணி.

 ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் சென்று டிரிப்ஸ் போட்டனர்.

 இறுதி சடங்குக்கான வேலைகளை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்தவுடன் தர்ஷினியை ஹாஸ்பிடல்ல ஏதாவது செய்தது தெரிந்து கோபாலகிருஷ்ணன் ராஜசேகர் மற்றும் விக்னேஷ் ஹாஸ்பிட்டலுக்கு சென்றனர்.

 டாக்டர் வெளியே வந்து வெயிட்டிங் ஹாலில் அமர்ந்திருக்கும் தர்ஷினியின் அப்பா அம்மாவிடம் பேசினார்.

” உங்க பொண்ணு ஹஸ்பண்டுக்கு என்ன ஆச்சு? “

” அவர் ஆக்சிடென்ட்ல 

இறந்துட்டாரு “

“ஓ, சாரி சார். அவங்க ஒரு முறை மயக்கம் தெளிஞ்சு எழுந்து ரொம்ப எமோஷனலா அஜய் அஜயினு கத்துக்கிட்டே இருந்தாங்க.

அஜய் யாருன்னு கேட்டதுக்கு ஹஸ்பண்டுன்னு சொன்னாங்க. எங்களுக்கு அதுக்கு மேல எந்த விஷயமும் தெரியாததுனால எங்களால அவங்களை கண்ட்ரோல் பண்ண முடியல. 

இப்ப டிரிப்ஸோட சேர்ந்து கொஞ்சம் ஸெடேஷனும் கொடுத்திருக்கோம். அதுவும் ரொம்ப கொடுக்க முடியாது. அவங்க பிரக்னண்டா வேற இருக்காங்க. இப்போதைக்கு ஃபோர் ஃபைவ் ஹவர்ஸ் நல்லா தூங்குவாங்க. 

அதுக்கப்புறம் நீங்க தான் அவங்களுக்கு எப்படியாவது கன்சோல் பண்ணனும். எனக்கு தெரிஞ்சு அவங்க 2 டேஸ் எதுவும் சரியா சாப்பிடலன்னு நினைக்கிறேன். அப்படித்தானே?”

” ரெண்டு நாள் இல்ல டாக்டர் நேத்து மத்தியானத்தில் இருந்து சாப்பிடல”

 என்றார் கற்பகவல்லி.

” ஓகே இப்போதைக்கு ட்ரிப்ஸ் போறதுனால ஒன்னும் பிரச்சனை இல்ல. ஆனா கண்டிப்பா ஃபுட் சாப்பிட்டா தான் அவங்க பேபிக்கும் அவங்களுக்கும் நல்லது” என்றார் டாக்டர்.  

” ஓகே டாக்டர்” என்றனர் இருவரும்.

 விக்னேஷ் கோபாலகிருஷ்ணன் மற்றும் பிரேமலதா மூவரும் கற்பகவல்லி மற்றும் ராஜசேகரை சமாதானம் செய்ததோடு வற்புறுத்தி டீ பிஸ்கட் வாங்கி வந்து சாப்பிடக் கொடுத்தனர்.

 முதலில் மறுத்தாலும் தங்களுக்கு தெம்பு இருந்தால்தான் தங்கள் மகளை பார்த்துக் கொள்ள முடியும் என்று அவர்கள் சொன்னதை புரிந்து கொண்டு, இருவரும் சாப்பிட்டனர்.

 தங்கள் மகள் எழுந்தால் அவளை எப்படி சமாளிப்போம் என்று நினைத்து பயந்து கொண்டு இருந்தனர்.

 இரண்டு நாட்களுக்கு அவர்களுடன் இருக்க முடிவு செய்தனர் கோபாலகிருஷ்ணன் மற்றும் பிரேமலதா.

 கோபாலகிருஷ்ணன் விக்னேஷை கேட்டுக் கொண்டதால் அவனும் வொர்க் ஃபரம் ஹோம் வாங்கிக்கொண்டு அங்கேயே இருக்க நினைத்தான்.

 இவர்களைத் தவிர கற்பகவள்ளியின் அண்ணன், அண்ணி மற்றும் ராஜசேகரின் அத்தை இவர்கள்தான் ராஜசேகரன் வீட்டில் இருந்தார்கள். மற்றவர்கள் அனைவரும் சடங்குகள் முடிந்ததும் சென்று விட்டனர்.

இந்த episode பிடிச்சிருந்தா எழுத்தாளரை உற்சாகப்படுத்துங்க!!
இப்போதே உற்சாகப்படுத்துங்கள்

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

No votes so far! Be the first to rate this post.

    No comments yet.