பாகம் 7

Vaishnavi Vijayaraghavan | 04 May 2026 | Share

தொடர்பியல்…. பாகம் -7


கேஸ் -1 ( கிஷோர் – சங்கவி)


அங்கிள் ஆன்டி….. என்றான் கிஷோர்எதிரே அமர்ந்து இருந்தவர்களைப் பார்த்து.


சொல்லுப்பா…. என்றார் அந்த அங்கிள்.


மேல் பர்த் உங்களோடதா?


இல்ல பா மிடில் அன்ட் லோவர்…. என்றார்.


ஓ…. ஓகே…. நீங்க வேணும்னா என்னோட லோவர் பர்த்ல படுத்துக்கோங்க…. என்றான்.


ரொம்ப தேங்க்ஸ் தம்பி….. இவரால மிடில் மேல ஏறி படுக்க முடியாதேன்னு நினைச்சேன்…. என்றார் அந்த ஆன்டி.


பரவாயில்லை ஆன்டி…. என்றான் கிஷோர்.


சிஸ்டர்…. என்றான் கிஷோர்…. ரம்யாவை பார்த்து.


அவன் கூப்பிட்டது எதற்கு என்று தெரிந்து இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல்….


யெஸ்…. என்றாள் ரம்யா.


நீங்க தான் மேல் பர்த்தா ?


ஆமாம்….


நீங்க மிடில்ல படுத்துக்கோங்க…. நான் அப்பர்ல படுத்துக்கிறேன்….. என்றான் கிஷோர்.


ஒரு நிமிடம் யோசித்து விட்டு….. 


ஓகே…. என்றாள் ரம்யா.


பிறகு கிஷோர் மேல் பர்த்தில் படுத்து கொண்டு எதிரில் படுத்திருந்த ரோஸியை பார்த்து கண் அடித்தான்.


சிரித்தாள் ரோஸி….. ஃபிளையிங் கிஸ் கொடுத்து விட்டு…. குட் நைட்டு என்றாள்.


அவளை வெகு நேரமாக பார்த்து கொண்டு இருந்த கிஷோர் பின்னர் தூங்கிவிட்டான்.


பயத்துடன் இருந்ததால் ரம்யாவுக்கு சரியாக தூக்கம் வரவில்லை. ஃபோனை பார்த்தாள்…. இன்னும் ராகினி மெஸேஜை பார்க்கவில்லை…. மிச்…. என்று சொல்லி விட்டு ஃபோனை சைலென்டில் போட்டு விட்டு தூங்கி விட்டாள் .


****************


காலை எழுந்தவுடன் ஃபோனை பார்த்தாள் ராகினி.


சூப்பர் டி…. தேங்க்ஸ்…. நான் டவுன்லோட் பண்ணிட்டேன்…. நீ டெலீட் பண்ணிக்கோ…. என்று ரம்யாவுக்கு ரிப்ளை செய்தாள் ராகினி.


ரம்யாவுக்கு கால் செய்தாள். சைலென்டில் போட்டிருந்ததால் ரம்யா ஃபோனை எடுக்கவில்லை. பிறகு ராகினி குளித்து ரெடியாகி பைக்கை எடுத்துக் கொண்டு ஜங்ஷனில் போய் நின்றாள்.


அப்போது வந்த மாதவன்….


அடிப்பாவி…. உனக்கு ஒரு வேலை ஆகனும்னு கரெக்ட் டைமுக்கு வந்திட்ட….


இல்ல டா…. நேத்தே லேட்டா போனேன் லேபுக்கு…. அதான் இன்னைக்கு சீக்கிரமா 

ரெடியாகி வந்திட்டேன்.


சரி சரி…. நம்பிட்டேன்…. என்று சொல்லி சிரித்தான் மாதவன்.


உண்மையிலேயே தான் டா….


சரி…. ஓகே….அதை விடு…. இந்த வீக் என்ட் எங்கேயாவது போகலாமா?


எங்க?


டூ டேஸ் டிரிப்….


அதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் தான்….


நான் ஹனிமூன் போகலாமா ன்னு கேட்கல….


சும்மா ஒரு அவுடிங்…. ரிலாக்ஸாக இருக்க…. நைட்டு தனித்தனி ரூம்ல ஸ்டே பண்ணலாம்…. உனக்கு பயமா இருந்தா….


பார்க்கலாம்…. நான் அப்புறம் சொல்றேன்….


பிடி கொடுக்க மாட்டியே….


சரி சரி…. நீ அட்ரெஸ் , ஃபோன் நம்பர் வாங்க மறக்காத டா…. என்றாள்.


சரி டி செல்லம்…. பை…. என்று சொல்லி விட்டு ஒரு ஹக்( கட்டிப்பிடித்தான்) செய்து விட்டு கிளம்பினான் மாதவன்.


அந்த அணைப்பில் தன்னையே ஒரு நிமிடம் மறந்தாள் ராகினி. வாழ்க்கை முழுவதும் அந்த அரவணைப்பில் இருக்கவேண்டும் போல தோன்றியது ராகினிக்கு.


ஓகே டா…. பை…. என்றாள் ராகினி சிரித்துக் கொண்டே.


அந்த சிரிப்பின் அர்த்தத்தை புரிந்து கொண்டு கண்ணடித்தான் மாதவன்.


லேபிற்கு சென்றாள் ராகினி.


ஹாய் ராகினி குட் மார்னிங்…. என்றாள் மம்தா.


குட் மார்னிங் மம்தா…. என்று சொல்லி சிரித்தாள் ராகினி.


மம்தா ராகினியை கட்டிப்பிடித்து காதருகில் சாரி…. என்றாள்.


அதான் நேத்தே எல்லாம் பேசி முடிச்சாச்சே…. எதுக்கு மறுபடியும் முதல்ல இருந்து…. என்றாள் ராகினி.


ஹாய்…. மம்தா…. எனக்கும் ஒரு ஹக் கொடுங்களேன்…. என்று ஏக்கமாக சொன்னான் பிரவீன்.


அச்சச்சோ தலைவலி வந்துவிட்டது…. வா நம்ம வேலையை பார்க்கலாம் என்று சொல்லி ராகினியை அழைத்து சென்றாள் மம்தா.


பதினோரு மணி அளவில் மாதவன் ராகினிக்கு கால் செய்தான்.


ஹலோ ராகினி….


ஒன் மினிட் டா…. என்று சொல்லி லேபை விட்டு வெளியே வந்து….


சொல்லு மாதவா…. என்றாள் ராகினி.


நீ கேட்ட கார் நம்பர் டீடெயில்ஸ் கிடைச்சிடிச்சு….


சொல்லுடா….


ஏலகிரி மலைல தான் அவங்க வீடு….


வாட்….


ஆமாம் டி…. நம்ம இந்த வீக் என்ட் எங்கேயாவது போகலாமா ன்னு கேட்டேனே…. ஏலகிரி போகலாமா?


ஏய்…. லூசா டா நீ….


அவங்க உயிருக்கு ஆபத்து ன்னு சொல்றேன்…. இப்போ டூர் போகலாமா ன்னு கேட்குற…. என்றாள்.


அப்படியா…. சரி…. இன்னைக்கு புதன் கிழமை…. நாளைக்கு இல்லன்னா நாளை மறுநாள் லீவு போட்டு விட்டு போக முடியுமா உனக்கு?….


அமைதியாக இருந்தாள்….


என்னடி பதிலை காணும்?


இப்போ தான் வேலைக்கு சேர்ந்த…. எப்படி லீவு எடுப்ப….


மாதவா…. எனக்கு லீவு வேண்டாம்…. அவங்க ஃபோன் நம்பர் கிடைச்சா மட்டும் போதும்…. ரம்யா எனக்கு அனுப்பிய ஃபோட்டோ மற்றும் வீடியோவை அனுப்பி அவங்களுக்கு புரிய வைப்பேன்…. என்றாள் ராகினி.


நம்பர் கிடைக்கல ராகினி…..


ஏன்…..


கார் கிஷோர் பேர்ல ரெஜிஸ்டர் ஆகி இருக்கு…. அந்த கிஷோர் நம்பர் தான் இருக்கு…..


சே…. இப்போ என்ன பண்றது….


சேட்டர்டே ஈவினிங் நம்ம அங்கே போகலாம்…..நேரா பார்த்து அவங்க கிட்ட பேசலாம். ஓகே வா…. போலீஸ் சொன்னா நம்புவாங்க இல்ல…..


ஹூம்…. வேறு எப்படியும் நம்பர் கிடைக்காதா டா….


எனக்கு ஜோசியம் எதுவும் தெரியாது….


இல்லடா…. ஏலகிரி போலீஸ் ஸ்டேஷனில் கேட்டு…..


இது பிராப்ளமா இருந்தா நான் ஆஃபீஷியலா டீல் பண்ணி எப்பவோ ஒரு முடிவுக்கு கொண்டு வந்திருப்பேன்…. ஆனா இது எல்லாம் உன்னோட இன்டியூஷன்…. அது நிஜமாகவே நடக்குமா நடக்காதா ன்னு தெரியல…. நீ போய் அந்த சங்கவி கிட்ட பேசினா கூட அவங்க உன்னை நம்பாம உன் மேலயே நியூசன்ஸ் கேஸ் கொடுக்கலாம்…. அப்படி இருக்க நான் அங்க இருக்க போலீஸ் மூலமா டீடெயில்ஸ் கலெக்ட் பண்ண முடியாது டி….


அட்லீஸ்ட் ஃபோன் நம்பர் மட்டுமாவது கிடைக்குமா….


நான் இவ்வளவு நேரம் பேசினது உனக்கு புரிஞ்சுதா இல்லையா?


சாரி டா…. ஒரே டென்ஷனா இருக்கு…. ரம்யா வேற ஃபோட்டோ அனுப்பி இருக்காளா?….. அதான் அந்த கிஷோர் ரோஸியோட தான் டூர் போயிருக்கான்.


சரி…. கிஷோர் உன் கனவுல பார்த்த அதே முகம் தானா?


ஆமாம் டா…. அவங்க ரெண்டு பேரோட முகமும் எனக்கு அப்படியே நினைவில இருக்கு. ‌


ரோஸி?


இல்ல…. அவ பேர் மட்டும் தான் தெரியும்… இப்போ ஃபோட்டோவில பார்த்தேன்…..


ஏற்கனவே பார்த்த மாதிரி இருக்கா அந்த ரோஸியோட முகம்?


இல்ல மாதவா…. அந்த ஃபோட்டோவை உனக்கு ஷேர் பண்ணவா?


வேண்டாம் டி…. நீ சொல்றதை பார்த்தா சங்கவி பெரிய இடத்து பொண்ணு மாதிரி இருக்கு…. இப்போதைக்கு எதுவும் ஷேர் பண்ண வேண்டாம்…. எதாவது பிராப்ளம் ஆயிட போகுது…. நான் நேரில் வரும்போது பார்த்துக்கிறேன்.


ஹூம்…. ஓகே டா….


சரி…….. நீ இதையே நினைச்சு டென்ஷன் ஆகாத…. என்னைக்கு கிஷோர் ரிட்டேர்ன் வரான்?


ஒன் வீக்ன்னு கனவுல சொன்னாங்க…. ஸோ…. மே பீ…. மன்டே நைட்டு ஆர் டியூஸ்டே மார்னிங்….


ஹூம்…. ஓகே…. நம்ம இந்த சேட்டர்டே நைட்டு போய் சங்கவியை பார்த்து அவங்களுக்கு ஃபோட்டோவை காண்பித்து புரியவைக்கலாம்….. என்றான் மாதவன்.


ஓகே டா…. பை…. தேங்க்ஸ்….


பை… தேங்க்ஸ் எல்லாம் சொல்லாத…. நீ ரிலாக்ஸாக இருடி….


ஹூம்…. பை….டா…..உள்ளே வந்து தன் வேலையில் கவனம் செலுத்தினாள் ராகினி.


ஈஸ் எவ்ரிதிங் ஓகே ராகினி…. என்றாள் மம்தா.


எஸ் மம்தா…. நோ இஷ்யூஸ்…. என்றாள் ராகினி.


ஜார்ஜ் டேவிஸ் சொன்ன வேலையை பார்த்து ரிப்போர்ட் டைப் செய்து கொண்டிருந்தனர் மூன்று பெண்களும்( ராகினி, மம்தா மற்றும் தேவி)


சேகர், அன்பரசன் மற்றும் பிரவீன் சேம்பில்களை மைக்கிரோஸ்கோப்பில் அனெலைஸ் பண்ணிக் கொண்டு இருந்தனர்.


நீலாங்கரை ஏஞ்சல் சூசைடு ஸேம்பில்ஸ் எல்லாம் ஜார்ஜ் டேவிஸ் லேபிற்கு அப்போது தான் வந்தது. ஒரு கான்ஸ்டபிள் மற்றும் போஸ்ட் மார்டம் அட்டென்டர் எடுத்து வந்து கொடுத்து விட்டு ஃபார்மில் சைன் வாங்கி கொண்டு சென்றனர்.


லஞ்சிற்கு பிறகு ஜார்ஜ் டேவிஸ் அனைவரையும் அவருடைய கான்ஃபரன்ஸ் ரூமிற்கு அழைத்தார். அனைவரும் டேபிளில் அமரச் சொன்னார்.


ஹாய் கய்ஸ்…. நமக்கு இப்போது ஒரு பிளெட் ஸேம்பில், ஃபிங்கர் பிரின்ட்ஸ் ஸேம்பில்…. ஹேர் எல்லாம் கிடைச்சிருக்கு…. இதெல்லாம் எப்படி டிஎன்ஏ டெஸ்ட்….மேட்சிங் டெஸ்ட்…. எல்லாம் எடுக்கறதுன்னு நான் உங்களுக்கு இப்போ சொல்லித் தரேன்…. அதுக்கு முன்னாடி எல்லோரும் அவங்க அவங்க ஃபோனை சைலெண்டுல போட்டிடுங்க பிளீஸ்….. என்றார் டேவிஸ்.


ஓகே சார்…. என்று சொல்லி விட்டு அனைவரும் ஃபோனை சைலெண்டில் வைத்து விட்டு அவர் சொல்லிக் கொடுப்பதை உன்னிப்பாகக் கவனித்தனர்.


அனைவரும் அவரவர் சந்தேககங்களை கேட்டனர். அனைத்துமே நோட்டில் எழுதிக் கொண்டாள் ராகினி. வெரிகுட் ராகினி…. நோட்ஸ் எடுக்கிறது நல்ல பழக்கம்…. என்று பாராட்டினார் டேவிஸ்.


தேங்க் யூ ஸோ மச் சார்…. நான் படிக்கும் போதிலிருந்தே நோட்ஸ் எடுக்கிறது வழக்கம்.


குட்…. இந்த மாதிரி நோட்ஸ் எடுத்துக்கிட்டா உங்களுக்கு எதாவது டவுட் வந்தா இதை பார்த்தா உங்கள் சந்தேகங்களை தீர்த்து கொள்ளலாம்…. என்றார் டேவிஸ் அனைவரையும் பார்த்து.


ஓகே சார்…. என்று சொல்லி அனைவரும் முக்கியமான தகவல்களை நோட்ஸ் எடுத்துக் கொண்டனர்.


அந்த ஸேம்பில்களை அனைவருக்கும் பிரித்து கொடுத்து வேலையை செய்ய சொன்னார்…. டைம் கொடுத்து அதற்குள் முடிக்க சொல்லி விட்டு வேறு ஒரு கேஸ் ஃபைலின் ரிப்போர்ட்டை எடுத்து கொண்டு ஐ.ஜி ஆஃபீஸூக்கு கிளம்பினார் டேவிஸ்.


அனைவரும் அவரவர் வேலைகளில் மும்முரமாக செய்து கொண்டு இருந்தனர்.

ராகினி ஃபோனை சைலென்டில் இருந்து எடுக்க மறந்து விட்டாள்.


மூன்று மணி அளவில் எதேச்சையாக ஃபோனை எடுத்து பார்த்தாள். மாதவன் நம்பரில் இருந்து பத்து மிஸ்டுகால் இருந்தது.


சே…. இத்தனை முறை கால் பண்ணிருக்கானே…. என்னாச்சு ன்னு தெரியலையே…. என்று யோசித்து கொண்டே ஃபோனை எடுத்து கொண்டு வெளியே போய் கால் செய்தாள்.


*************


தொடரும்…..

அ. வைஷ்ணவி விஜயராகவன்.





இந்த episode பிடிச்சிருந்தா எழுத்தாளரை உற்சாகப்படுத்துங்க!!
இப்போதே உற்சாகப்படுத்துங்கள்

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

No votes so far! Be the first to rate this post.

    No comments yet.