பாகம் 6

Vaishnavi Vijayaraghavan | 05 Sep 2026 | Share

பாகம் 6

ரேஷ்மி நிவியுடன் பைக்கில் வீட்டிற்கு சென்று விட்டாள்.

வெகு நேரம் கழித்து விஷ்வா கிளம்பினான். 

வீட்டிற்கு சென்று அந்த ஃபோனில் இருந்த ரேஷ்மியின் ஃபோட்டோவை ஜூம் செய்து பார்த்து கொண்டிருந்தான். 

கதவு தட்டும் சப்தம் கேட்டது.

யாரு?… என்றான்.

ஏய் நான் தான் டா…. கதவை திற என்றார் அம்மா ராஜேஸ்வரி.

அம்மா… நானே வரேன்…வேலையா இருக்கேன்…

சரிடா…. காஃபி டேபிள் ல வைக்கிறேன் எடுத்துக்கோ…

ஹாங்… சரிம்மா….

ரேஷ்மி பேரை வைத்து ஃபேஸ் புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம்…. எல்லாவற்றிலும் தேடிப் பார்த்தான். அவள் ஃபோட்டோவோ இல்லை அவள் சம்பந்தப்பட்ட எந்த ஒரு தகவலோ ஆன்லைனில் அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

விஷ்வா… என்று மறுபடியும் கதவை தட்டினார் ராஜேஸ்வரி.

அம்மா… இதோ வரேன் என்று லேப்டாப்பை மூடி விட்டு வெளியே வந்தான்.

என்னம்மா… இப்போ அந்த காஃபியை நான் குடிக்கனும் அதானே? என்றான் சற்றே கோபமாக.

டேய், உன் ஃபிரெண்ட்ஸ் வந்திருக்காங்கன்னு சொல்ல தான் வந்தேன். உன்னோட காஃபி எப்பவோ ஆறி போச்சு….

ஓ… சாரி மா…. முக்கியமான ஒரு வேலைல இருந்தேன்…. அதான்….

என்னம்மோ போ…. வைஷூ சொன்ன மாதிரி உனக்கு என்னமோ ஆயிடிச்சு…. என்று புலம்பிக் கொண்டே சென்றார்.

தலையை சொரிந்து கொண்டே… அவனுடைய நண்பர்களிடம் வந்தான்.

வாடா… ரூமுக்கு போய் பேசலாம் என்றான் விமல்.

இல்லடா… வேணாம் அம்மா எதோ கோவமா இருக்காங்க…. நம்ம வெளியே போயிடலாம்… என்றான் விஷ்வா.

ஏய் பொய் சொல்றதுக்கும் ஒரு அளவிருக்கு… நீ தான் அவங்க கிட்ட கத்திக்கிட்டு இருந்த… பாவம் அம்மா… என்றான் ஜானி.

சரி… வாங்க டா… போலாம்ன்னு சொல்லி மூவரையும் இழுத்து கொண்டு வெளியே வந்தான்.

ரூமுக்கு அழைத்து சென்றால்…. விஷ்வா ரேஷ்மியின் ஃபோட்டோவை பிரின்ட் அவுட் எடுத்து தன் கட்டிலின் மேலேயே வைத்திருந்தான். அவர்கள் அதை பார்த்து கிண்டல் செய்வார்கள் என்பதால் அவர்களை உள்ளே அழைத்து செல்லவில்லை. (வீட்டிலேயே அனைத்தும் வைத்திருந்தான். பிரின்டர், ஸ்கேனர்….அதுவும் எல்லாமே காஸ்ட்லியான பொருட்கள்.)

           ****************

ஈவினிங் மணி ஆறு.

ராகவ் வேலையை முடித்துவிட்டு…. பேக் செய்து கொண்டிருக்கும் போது….

வைஷாலியின் மெஸேஜ் வந்தது.

காஃபி ஷாப்பில் அன்று மாதிரியே மீட் பண்ணலாமா ராகவ்?

கண்டிப்பாக வைஷாலி…

இருவருக்குமே மற்றவர் தன்னை பேர் சொல்லி அழைப்பது பிடித்திருந்தது.

ஸ்மைல் செய்து கொண்டே…. இருவரும் கிளம்பினார்கள்.

இம்முறை வைஷாலி முதலில் வந்து அமர்ந்து இருந்தாள்.

உள்ளே வந்த ராகவ்…. புன்னகைத்தவாறே வைஷாலி யின் முன்னால் இருந்த சேரில் அமர்ந்தான்.

ஹாய்…. என்று மட்டும் சொன்னான்.

அவளை பார்த்தவுடன் கைக் கொடுப்பான் என்று அவள் எதிர் பார்த்தது நடக்கவில்லை என்ற சிறு வருத்தம் இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் அவளும் 

ஹாய்… என்றாள்.

என்ன சாப்பிடறீங்க? எதாவது ஆர்டர் பண்ணலாம்…. என்றான் ராகவ்

காஃபி மட்டும் போதும்.

அங்கே வந்த வெயிட்டரிடம்…. ஒரு காஃபி ஒரு ரசமலாய் என்றான்.

உங்களுக்கு காஃபி பிடிக்காதா?

பிடிக்கும்… எங்க அம்மா போடற காஃபி தான் ரொம்ப பிடிக்கும். 

நான் இங்கு வந்தால்.. எப்பவுமே ரசமலாய் தான் ஆர்டர் செய்து சாப்பிடுவேன். அன்னைக்கு இதை ஆர்டர் செய்தால் நல்லா இருக்காதே என்று சொல்லல…

ரசமலாய் நல்லா இருக்கும்னு வாங்கி சாப்பிடுவீங்களா? இல்ல காஃபி அவாய்டு பண்றதுக்கு இதுவா?

இல்ல…. ரசமலாய்க்கு பின்னாடி எனக்கு ஒரு ஸ்டோரி இருக்கு…

அப்படியா? என்ன அது? நான் தெரிஞ்சிக்கலாமா?

உங்களுக்கு டைம் இருந்தா….

இப்போ எதுவும் எனக்கு ஒர்க் இல்லை… வீட்டுக்கு தான் போகனும்…

நான் +2 கடைசி எக்சாம் முடித்து விட்டு ஃபிரெண்ட்ஸோட சினிமாவுக்கு போனேன்… அப்போ என்னோட அப்பா நான் திரும்பி வெளியே வரும்போது பார்த்து விட்டார். நான் வீட்டில் சினிமாவுக்கு போகவான்னு கேக்கலை…. என்றான் ராகவ்.

அப்புறம் என்று ஆர்வமாக கேட்டாள்.

என்னங்க…. இவ்வளோ ஆர்வமா கேக்கறீங்க…

சொல்லுங்க…

அப்பா அவரோட பைக்கில் என்னை ஏறச் சொன்னார். வீட்டிற்கு வரும் வழியில் குப்தா பவன் என்ற ஒரு கடையில் நிறுத்தி உள்ளே அழைத்து சென்று இந்த ரசமலாய் வாங்கி கொடுத்தார். முதல் முறையாக இதை சாப்பிட்டேன். சுவை ரொம்ப பிடிச்சிரிந்துச்சு… மற்ற அப்பாக்கள் மாதிரி என்னை திட்டாமல்…. நான் ஏன் சினிமாவுக்கு வீட்டில் சொல்லாம போனேன்…. காசு எப்படி எனக்கு கிடைச்சுது… என்று எதுவுமே கேட்கவே இல்லை இன்றுவரை. நான் பைக்கில் திரும்பி வீட்டிற்கு செல்லும் போது…. அப்பா…. அந்த சினிமா…. என்று சொல்ல வந்ததை…

வேண்டாம் பா எதுவும் சொல்ல வேண்டாம்…. தப்பு என்று உனக்கு தெரிஞ்சிரிச்சு ல அது போதும். இனிமே அதை நீ செய்யாத…. என்றார் என்னுடைய அப்பா.

இன்றுவரை நான் அதன் பின் என் அப்பா அம்மாவுக்கு தெரியாம எதுவும் செஞ்சதில்லை… என்று சொல்லி முடித்தான்.

வாவ்…. கிரேட்… என்றாள் வைஷாலி.

தேங்க்ஸ்… என்றான்.

நான் உங்கள சொல்லல…. உங்க அப்பாவை சொன்னேன்…. என்று சிரித்தாள்.

அவனும் சிரித்தான்…. இருவருக்கும் ஆர்டர் செய்தது வரவே இருவரும் உண்டனர். 

வைஷாலிக்கு ரசமலாய் சாப்பிட ஆசையாக இருந்தது. காஃபி ஆர்டர் செய்து விடவே வேறு வழியின்றி அதை பருகினாள்.

வைஷாலி இந்தாங்க நீங்க கேட்ட பேப்பர்ஸ்…. அதில் அந்த கோபாலகிருஷ்ணன் கம்பெனி கோட்ஸ்களை மற்ற கம்பெனிக்கு விற்க முயற்சி செய்தது போன்ற ஆதாரங்களை திரட்ட சொன்னாள். அதற்கு உரிய ஆவணங்களை கொடுத்தான். அதை பார்த்து விட்டு…. ஓகே வெரி குட்…. பக்கா…. அந்த கோபாலகிருஷ்ணனை நான் கோர்ட்ல பாத்துக்குறேன். நான் கேஸிலிருந்து விலகிட்டேன். என்னோட சீனியர் கிட்ட சொல்லிட்டேன். ஸோ எந்த பிராப்ளமும் இல்லை….என்றாள் வைஷாலி.

தேங்க்ஸ் என்றான்.

இம்முறை வைஷாலி கையை நீட்டினாள்….ஏனோ அவனுடைய கைகளை பிடிக்க அவளின் மனம் ஏங்கியது.

உடனே ராகவ் அவளுடைய ஒரு கையை தன் இரு கைகளாலும் பிடித்து குலுக்கினான். 

பை… ஸீ யூ…. என்றாள்.

பை…. என்றான்.

                    ************

ராமகிருஷ்ணனின் வீட்டில்….

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் வீட்டில் உள்ள அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட வேண்டும் என்பது ராமகிருஷ்ணனின் ஆர்டர். பின்னர் வைஷாலி அவளுடைய கேஸுகளை அவளின் அப்பாவிடம் டிஸ்கஸ் செய்வாள். அவரிடம் கூறுவது அவளுக்கு தெளிவான ஒரு முடிவுக்கு வர உதவியாக இருக்கும். மேலும் அவருடைய பல ஐடியாக்களை நினைத்து அவளே ஆச்சரிய பட்டிருக்கிறாள். அப்பா மட்டும் லாயரா இருந்தா கண்டிப்பா ஒரு கேஸ்ல கூட தோற்கமாட்டார் என்று….

அன்று ராமகிருஷ்ணனிடம் கோபாலகிருஷ்ணன் கேஸையும்…. ராகவ்…. வைதேகி பற்றி கூறினாள்.

ராகவ் பற்றி அதிகமாக பேசினாள். அவள் பேசும்போது அவளின் மகிழ்ச்சியை கவனிக்க தவறவில்லை ராமகிருஷ்ணன்.

கரெக்டா தான் டிசைடு பண்ணி இருக்க வைஷூ…. ஆனா அவனுடைய உண்மையான தவறுக்கு அவனுக்கு தண்டனை கிடைக்கவில்லையே?. செய்யாத தவறுக்கு அவனுக்கு தண்டனை வாங்கிக் கொடுப்பதை விட அவனுடைய உண்மையான குற்றத்திற்கு தண்டனை வாங்கிக் கொடுமா…. என்றார்.

ராமகிருஷ்ணன் கூறியது சரியே…. ஆனால் எவ்வாறு அவளால் அவனுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்க முடியும் என்று நினைத்தாள்.

என்னம்மா யோசிக்கிற?

இல்லப்பா… அந்த பொண்ணு வைதேகி கோபாலகிருஷ்ணனுக்கு எதிரா கேஸ் கொடுக்க மாட்டா….

நீ அவனை பத்தி சொல்லும்போது ஒண்ணு நல்லா புரியுது…. அவன் ஒரு வுமனைசர் ன்னு…. ஸோ இந்த பொண்ணு இல்லைன்னாலும் வேற எதாவது பொண்ணு கிட்ட அவன் கண்டிப்பா தப்பா நடந்துகிட்டிருப்பான்…. அப்படி யாரையாவது கண்டுபிடிச்சு இவனுக்கு எதிரா சாட்சி சொல்ல வை…. அப்புறம் இவனுக்கு சரியான தண்டனை வாங்கிக் கொடுமா….

ஆனா அப்பா…. அவன் இப்போ கம்பெனி மேல கேஸ் போட்டிருக்கான்…. அதுக்காக தான் நான் ராகவ் கிட்ட சொல்லி இப்படி ஏற்பாடு செய்ய சொன்னேன்.

ஹூம்…. அதுவும் கரெக்ட் தான்… ஆனா அவன் செய்யாத தப்பை சொல்லி நீ தண்டனை வாங்கிக் கொடுத்திருக்கன்னு வெளியே தெரிஞ்சா…. அப்புறம் உன்னோட ரெப்யூடேஷன் போயிடும்.

அப்பா சொல்வதும் சரிதான்…. என்ன செய்வது… என்று யோசித்துக் கொண்டு இருந்தவளை….

வைஷூ…. இப்போ லேட் ஆயிடுச்சு…. நீ போய் தூங்கு…. நாளைக்கு இதை பத்தி யோசிச்சி முடிவு பண்ணு…. என்றார் ராமகிருஷ்ணன்.

சரிப்பா…. குட் நைட்…. என்று சொல்லி விட்டு உள்ளே சென்றாள்.

குட் நைட் வைஷூ…. என்று சொல்லியவர்….

வைஷாலி ராகவை பற்றி பேசும் போது அவளின் கண்களில் சந்தோஷத்தையும்…. ஒவ்வொரு முறையும் ராகவ் பெயரை உரிமையுடன் அவள் சொன்ன விதத்திலும் அவள் காதல் வசப்பட்டு இருக்கிறாள் என்பதை நன்றாக தெரிந்து கொண்டார் ராமகிருஷ்ணன்.

ஃபோனை எடுத்து ஒரு நம்பருக்கு கால் செய்து…. நான் சொல்றவனோட ஃபுல் டீடெயில்ஸ் இன்னும் 24 ஹவர்ஸ்ல எனக்கு தெரிஞ்சாகனும்…..

பெயர் ராகவ்… மொபைல் நம்பர்….. என்றார் ராமகிருஷ்ணன்.

தொடரும்…..

அ.வைஷ்ணவி விஜயராகவன்.

இந்த episode பிடிச்சிருந்தா எழுத்தாளரை உற்சாகப்படுத்துங்க!!
இப்போதே உற்சாகப்படுத்துங்கள்

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

★ ★ ★ ★ ★

No votes so far! Be the first to rate this post.

    No comments yet.