
பாகம் 6
தர்ஷினி முகுந்தனுக்கு கால் செய்த ஒரு வாரத்திற்கு பிறகு அஜய் முகுந்தனுக்கு கால் செய்தான்.
” ஹாய் ப்ரோ எப்படி இருக்கீங்க? “
” நான் நல்லா இருக்கேன் நீங்க எப்படி இருக்கீங்க? தர்ஷினி எப்படி இருக்கிறா?
சாரி சாரி எப்படி இருக்காங்க? ”
” என்ன ப்ரோ நீங்க, பிரண்ட்ஸ்க்குள்ள வாடி போடி எல்லாம் சகஜம் தான்”
” ஐயோ அப்படியெல்லாம் இல்லைங்க, நான் இதுவரைக்கும் தர்ஷினி வாடி போடி எல்லாம் பேசினது கிடையாது. வா போ எப்படி இருக்கன்னு தான் கேட்பேன். போன்ல உங்க கிட்ட பேசுனதால எப்படி இருக்கிறான்னு சொல்லிட்டேன் “
” உங்க எல்லாரையும் போல நல்ல ஃபிரெண்ட்ஸ் தர்ஷிக்கு கிடைத்திருக்கிறது நினைத்து எனக்கு ஹாப்பி தான். அதனால நீங்க எப்படி கூப்பிட்டாலும் எனக்கு பிரச்சனை இல்லை.”
” ஓகே சொல்லுங்க. என்ன திடீர்னு கால் பண்ணி இருக்கீங்க? “
” தர்ஷினி கன்சீவா இருக்கா.”
“ஓ, வாவ். சூப்பர் கங்கிராஜுலேஷன்ஸ். தர்ஷினி கிட்டயும் விஷ்ஷஸ் சொல்லிடுங்க.
எல்லா விஷயமும் கால் பண்ணி சொல்லுவா இந்த விஷயம் சொல்லவே இல்ல ” என்றான் முகுந்தன்.
” ஹலோ ப்ரோ, ரொம்ப ஆக்டிங் பண்ணாதீங்க. அவ உங்க கிட்ட மட்டும் சொல்லிட்டான்னு எனக்கு தெரியும். அவளே என் கிட்ட சொல்லிட்டா” என்றான் அஜய்.
‘தர்ஷி’ என்று மனதிற்குள் திட்டிக் கொண்டான்.
“சாரி அஜய், அவ தான் நீங்க கால் பண்ணும் போது, எக்ஸைட் ஆகுற மாதிரி பேசு. தெரிஞ்ச மாதிரி காட்டிக்காதே. அவரே எல்லார்கிட்டயும் சொல்லனும்னு ஆசைப்பட்றாரு… இன்னும் நிறைய டயலாக் சொன்னா. அவ பேச்சை நம்பி பேசி நான் இப்ப மாட்டிக்கிட்டேன் ” என்றான் முகுந்தன்.
” இட்ஸ் ஓகே, பொண்ணுங்க கிட்ட ரகசியம் நிக்காதுன்னு எனக்கு தெரியும். அதுவும் ஃப்ரண்ட்ஸ் கிட்ட சுத்தமா நிக்காது” என்று சொல்லி சிரித்தான் அஜய்.
” ஓகே அஜய் கங்கிராஜுலேஷன்ஸ்.
சீக்கிரமா குட்டி தேவதை பொறந்துட்டான்னு கால் பண்ணி சொல்லுங்க “
” ஆமாம் நானே கேட்கணும்னு நினைச்சேன் நீங்க கான்ஃபிடண்டா பொண்ணு தான் பொறக்கும்னு சொன்னீங்களாமே எப்படி? “
” அச்சச்சோ கான்ஃபிடென்ட்டா எல்லாம் சொல்லல, முதல்ல பொண்ணு பொறக்கும்னு தோணுது என்று தான் சொன்னேன் “
“சரி பார்க்கலாம். எனக்கும் தர்ஷி மாதிரி ஒரு பொண்ணு தான் முதல்ல வேணும்னு ஆசை. பொண்ணா இருந்தா ஆதிரான்னு பேர் வைக்கனும்னு என்னோட ஆசை. பையனா இருந்தா ஆதர்ஷ்னு பேர் வைக்கனும்னு தர்ஷி சொன்னா”
“வாவ், ரெண்டு பேருமே சூப்பரா இருக்கு”
“தேங்க்ஸ் ப்ரோ, சரி ப்ரோ, உங்க வேலைய பாருங்க அப்புறமா நான் கால் பண்றேன். “
” ஓகே அஜய், பை. டேக் கேர்.
டேக் கேர் ஆஃப் தர்ஷி அண்ட் பேபி”
என்றான் முகுந்தன்.
“ஷியூர் ப்ரோ, பை” என்ற சொல்லி ஃபோனை வைத்தான் அஜய்.
மூன்று மாதங்களாக அனைவரிடமும் ஃபோனில் பேசிக்கொண்டு இருந்தான் முகுந்தன். அடுத்த இரண்டு மாதத்தில் தனக்கு எக்ஸாம் வரப்போவதாக சொல்லி, அனைவரிடமும் மெசேஜில் மட்டும் பேசினான்.
அது கூட ஒரு நாளைக்கு ஒரு முறை இரவு நான் நன்றாக இருக்கிறேன் வேலைகள் எல்லாம் நன்றாக முடிந்தது என்று தன் அம்மாவிற்கும். ஆல் குட் என்று தன் நண்பன் விக்னேஷ் மற்றும் தர்ஷினிக்கும் அனுப்புவான். ஓகே டேக் கேர் என்று அனைவரும் ரிப்ளை செய்வார்கள்.
எக்ஸாம் நாட்கள் நெருங்க நெருங்க,
தன் முழு கவனத்தையும் படிப்பில் வைத்ததால் மெசேஜ் கூட அனுப்பவில்லை முகுந்தன்.
இரண்டு நாட்களுக்கு ஒரு முறை என்றும், பிறகு வாரத்திற்கு ஒரு முறையானது. அதன் பின் பத்து நாட்களுக்கு ஒரு முறை என்று இரண்டு மாதங்கள் கழிந்தன. தர்ஷினியும் பெரிதாக மெசேஜ் செய்யவில்லை. தான் படிக்க வேண்டும் என்பதற்காக டிஸ்டர்ப் செய்யாமல் அனைவரும் இருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டான் முகுந்தன்.
முகுந்தன் நல்லபடியாக எக்ஸாமை எழுதினான். இன்னும் ஒரே ஒரு எக்ஸாம் மட்டும் இருந்தது. அது அடுத்த வாரம். அதன் பின்னர் ஒரு மாதத்திலேயே ரிசல்ட் வந்துவிடும் என்பதால், சர்டிபிகேட்டையும் வாங்கிக் கொண்டு இந்தியா திரும்ப வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தான்.
உடன்படித்த நண்பர்கள் டூர் பிளான் செய்தனர். தன் அப்பா அம்மாவிற்கு கால் செய்தான் முகுந்தன்.
” ஹலோ அம்மா எப்படி இருக்கீங்க? “
” நல்லா இருக்கேன் பா நீ எப்படி இருக்க? ” என்று பேசும்போதே தொண்டையை சரி செய்து கொண்டு பேசினார் பிரேமலதா.
” நல்லா இருக்கேன் அம்மா. அப்பா எப்படி இருக்காரு? என்னாச்சு ஏன் ஒரு மாதிரி பேசுறீங்க?”
” நல்லா இருக்காரு பா. அப்புறம் முகுந்த்” என்று பேச வந்த தன் மனைவி பிரேமலதாவை ஜாடை செய்து சொல்ல வேண்டாம் என்று சொன்னார் கோபாலகிருஷ்ணன்.
” என்னம்மா? ஏதோ சொல்ல வந்து அப்படியே அமைதி ஆயிட்டீங்க. ஏன் குரல் ஒரு மாதிரி இருக்கு?”
” அது ஒன்னும் இல்லப்பா ரெண்டு மூணு நாளா கோல்டா இருக்கு அதான் தொண்டை கட்டி இருக்கு. எக்ஸாம்லாம் எப்படி எழுதி இருக்கேன் கேட்க வந்தேன். அதெல்லாம் இப்ப எதுக்கு பேசுறேன்னு உங்க அப்பா திட்டுகிறார் “
” உண்மைய சொன்னா சூப்பரா எழுதி இருக்கேன் அம்மா கவலைப்படாதீங்க. இன்னும் ஒரே ஒரு எக்ஸாம் தான் இருக்கு அது அடுத்த வாரம். அந்த எக்ஸாமுக்கும் நான் ஃபுல்லா பிரிப்பர் ஆயிட்டேன். கண்டிப்பா நல்ல மார்க் எடுத்து பெஸ்ட்டா தான் வருவேன்”
“சரிப்பா, சந்தோஷம்”
” அம்மா ஒரு முக்கியமான விஷயம் பேச தான் கால் பண்ணேன். “
” சொல்லுப்பா, “
” இங்க பிரெண்ட்ஸ் எல்லாம் சேர்ந்து யூரோப் டூர் பிளான் பண்றாங்க. அடுத்த வாரம் எக்ஸாம் முடிஞ்ச உடனே மறுநாள் கிளம்பனும். 20 நாள் டூர். போயிட்டு வரத்துக்கும் ரிசல்ட் வரத்துக்கும் சரியா இருக்கும். நானும் போயிட்டு வரட்டுமான்னு உங்களையும் அப்பாவையும் கேட்கலாம்னு தான் கால் பண்ணேன்”
” தாராளமா போயிட்டு வாப்பா. இரு அப்பா கிட்ட கொடுக்கிறேன்.”
” ஹலோ முகுந்த் எப்படிப்பா
இருக்க? “
” நல்லா இருக்கேன் பா நீங்க எப்படி இருக்கீங்க? இவ்வளவு நாளா தெரியல. எக்ஸாம் முடிஞ்ச அப்புறமும் இங்கேயே சும்மா இருக்குறதுக்கு கஷ்டமா இருக்கு. எப்படா இந்தியாவுக்கு வரப்போறோம்னு இருக்கு. எல்லாரையும் பாக்கணும் போல இருக்கு. விக்கி அடிக்கடி வரானா?
எக்ஸாம் ஆரம்பிச்சதுல இருந்து அவன் கூடக் கூட பேசவே இல்ல.”
” விக்னேஷ் தாம்பா எல்லாமே எங்களுக்கு பாத்துக்குறான். வாரம் வாரம் வந்து எங்களுக்கு தேவையானதெல்லாம் வாங்கி கொடுத்துட்டு. நீ இல்லாத குறை தெரியக்கூடாதுன்னு வாரா வாரம் சண்டே ஃபுல்லா எங்க கூட இருந்துட்டு போறான்”
தன் நண்பனை நினைத்து பெருமிதம் கொண்டான் முகுந்தன்.
” சரிப்பா”
” ஏதோ முக்கியமான விஷயம்னு அம்மா சொன்னா “
” ஆமாம் பா, அதை மறந்துட்டேன்.
பிரண்ட்ஸ் எல்லாம் டூர் போறாங்க.
யூரோப் டூர். நானும் போயிட்டு வரவா என்று கேட்க தான் உங்களுக்கு கால் பண்ணேன். அம்மாகிட்டயாவது அடிக்கடி பேசி இருக்கேன். உங்ககிட்ட ரொம்ப பேசினது இல்லையா? அதனாலதான் உங்க குரலை கேட்டதும் வீட்டு ஞாபகம் வந்துடுச்சு.
உங்க எல்லாரையும் உடனே பாக்கணும் என்ற எண்ணம் வந்துடுச்சு அதனாலதான் அதை பேசிக்கிட்டு இதை மறந்துட்டேன். “
” என்னப்பா சின்ன குழந்தை மாதிரி என்கிட்ட பர்மிஷன் எல்லாம் கேட்டுக்கிட்டு. நீ போயிட்டு வா “
” ஓகே பா”
” பணம் ஏதாவது அனுப்பவா? “
” அதெல்லாம் வேண்டாம் பா இருக்கு என்கிட்ட “
” சரி இருந்தாலும் நான் அனுப்புறேன் நீ கை செலவுக்கு வச்சுக்கோ. “
” ஓகே அப்பா தேங்க்ஸ். பை. நான் விக்கிக்கும் தர்ஷிக்கும் ஃபோன் பண்ணி இந்த டூர் விஷயத்தை சொல்றேன்”
“முகுந்த்”
” சொல்லுங்கப்பா “
” தர்ஷினி பெங்களூரு போய் இருக்கா “
” ஆமா இல்ல இது தல பிரசவம் அம்மா வீட்டுக்கு போய் இருப்பாங்க. அது ஞாபகமே இல்லை எனக்கு. சரி அதனால என்ன ஃபோன் பேசக்கூடாதா? “
” இல்லப்பா அங்க ஏதோ ஒரு டெத்ன்னு சொன்னாங்க. நீ இப்போ எதுவும் கால் பண்ணி பேச வேண்டாம்”
“ஓ, தர்ஷியோட ரிலேடிவ்வா?”
” ஆமாம் பா கிளோஸ் ரிலேட்டிவ்னு சேகர் சொன்னான்”
” அப்போ தர்ஷி சரியாவதற்கு அட்லீஸ்ட் ஒரு வாரம் பத்து நாள் ஆகும் “
” ஆமாம்பா அதுக்கு மேலயும் கூட ஆகும் “
” ஓ அவ்வளவு கிளோஸ் ரிலேட்டிவ்வா? சரி சரி அப்ப நான் டூர் போயிட்டு வந்துட்டு அப்புறமா அவ கிட்ட பேசுறேன் “
” இல்லப்பா வேண்டாம் நீ வீட்டுக்கு வந்துட்டு நேரா போய் பார்த்து பேசி. ஃபோன்ல பேச வேண்டாம்.”
“அதுக்கு இன்னும் ஒன் மன்த் ஆகுமே”
“பரவாயில்ல பா”
” அப்பா, சேகர் அங்களுக்கோ இல்ல ஆன்டிக்கோ ஒன்னும் இல்லல? “
” இல்லப்பா, அவங்க ரெண்டு பேரும் நல்லா தான் இருக்காங்க”
” சரி நான் தர்ஷினிக்கு மெசேஜ் பண்றேன். அவ ரிப்ளை பண்ணினா அதுக்கு அப்புறமா பேசிக்கிறேன் ”
எப்படியும் தர்ஷினி ரிப்ளை செய்ய மாட்டாள் என்று தெரிந்ததால்,
“சரிப்பா ” என்றார் கோபாலகிருஷ்ணன்.
ஃபோனை வைத்த பிறகு தன் கணவன் கோபாலகிருஷ்ணனிடம் பேசினார் பிரேமலதா.
” ஏங்க பையன் கிட்ட உண்மைய சொல்ல வேண்டாம்னு சொல்லிட்டீங்க? “
” அவனும் தர்ஷனியும் நல்ல குளோஸ் ஃப்ரெண்ட்ஸ். கொஞ்ச நாள் தான் பழக்கம் என்றாலும் ரெகுலரா பேசி பழகி நல்ல க்ளோஸ் பிரண்ட்ஸா இருக்காங்கன்னு தெரியும். அப்படி இருக்கும்போது அவனால கண்டிப்பா இந்த விஷயம் தெரிஞ்சு அங்க ஒரு நொடி கூட இருக்க முடியாது. அவன் இப்ப கிளம்பி வந்தான்னா அது அவனோட கரியரையே பாதிக்கும். அவன் அடுத்த மாசம் நேரா வந்ததும் உண்மை தெரிஞ்சுக்கட்டும் “
” ஆனா நம்ம மேல கோபப்படுவானேங்க, உண்மையை சொல்லவில்லை என்று”
” அது அப்புறமா பாத்துக்கலாம் “
” விக்கி கால் பண்ணானா? எத்தனை மணிக்கு நம்ம கிளம்பனும்? “
” பிளைட் டிக்கெட் போட்டுட்டேன்னு சொன்னான். கால் டாக்ஸி எடுத்துக்கிட்டு வந்து நம்மளையும் பிக்கப் பண்ணிக்கிறேன்னு சொல்லி இருக்கான்”
” ஆனாலும் இந்த தர்ஷினிக்கு இவ்ளோ சின்ன வயசுல இப்படி ஒரு கஷ்டம் வந்திருக்கக் கூடாதுங்க “
” நம்ம கையில என்னமா இருக்கு?,
அவளும் அவளோட குழந்தையும் நல்லா இருக்கணும்னு நம்ம மனசார வேண்டிக்கலாம். இப்போதைக்கு அவ்வளவுதான நம்மளால பண்ண முடியும்.
இறந்து போன அவ புருஷன் அஜயின் உயிரை திருப்பிக் கொடுன்னு கடவுள் கிட்ட வேண்டினாலும் நடக்குமா என்ன?
அஜய் கொடுத்து வச்சது அவ்வளவுதான்.
தர்ஷினி ரொம்ப நல்ல பொண்ணு அவ கூட இன்னும் கொஞ்ச நாள் வாழ அவன் கொடுத்து வைக்கல”
என்றார் கோபாலகிருஷ்ணன்.
” ஆக்சிடென்ட் பண்ண அந்த லாரி டிரைவர் அரெஸ்ட் பண்ணாங்களா? “
” அரெஸ்ட் பண்ணி இருக்காங்கன்னு கேள்விப்பட்டேன். அதுக்கு அப்புறம் என்ன ஆச்சுன்னு தெரியல “
” எனக்கு நேரா போய் அந்த பொண்ணு முகத்தை பார்க்கனும்னு நினைத்தாலே உடம்பெல்லாம் நடுங்குது ” என்றார் பிரேமலதா.
” சேகருக்கும் அவன் மனைவி கற்பகவல்லிக்கும் நம்ம ஆறுதல் சொல்லியே ஆகணும். அவங்க கொஞ்சம் ஆறுதல் அடைஞ்சாதான் அவங்க பொண்ண தேத்த முடியும்.
மனசை கல்லாக்கிட்டு போகலாம் வா ” என்றார் கோபாலகிருஷ்ணன்.
No comments yet.