பாகம் 4,5

Vaishnavi Vijayaraghavan | 26 Jun 2026 | Share

பாகம் -4

“ இன்னொரு விஷயம் இவ்வளவு நேரமா எல்லாம் கோபத்தில் இருக்க மாட்டா என்னோட வினோ” என்றான் அருண்.

“நீ தான் சொன்னீயே டா அவளுக்கு கோபம் வந்தா எங்கேயாவது போயிட்டு அப்புறம் கோபம் குறைஞ்சா தான் வருவான்னு”

“ஆமாம் டா, ஆனா வீட்டுக்கு வந்திட்டு இருக்காளே?”

“ஃபிரிட்ஜில எழுதின பிறகு கோபம் அதிகமாகி மறுபடியும் போயிருப்பாளோ?”

“வண்டி இருக்கே டா”

“வண்டி ஸ்டார்ட் ஆகலைன்னா, நடந்தோ இல்ல ஆட்டோவில் தான போயிருப்பா?”

“எனக்கு ஒண்ணுமே புரியல. ஒரே குழப்பமா இருக்கு. ஆனா என் வினோவுக்கு ஏதோ ஆபத்துன்னு மட்டும் என் மனசு சொல்லுது”

“இந்த நேரத்தில் எதுக்கு போலீஸ் ஸ்டேஷனில் போய் கம்ப்ளெயின்ட் எல்லாம் கொடுக்கனும் ன்னு யோசிக்கிறேன்” என்றான் ஹரி.

“சரிடா, எனக்கு ஒரு ஹெல்ப் பண்றீயா?”

“என்னடா சொல்லு?”

“நித்தியை உங்க வீட்டுக்கு கூட்டிக்கிட்டு போய் சங்கீதா கிட்ட சொல்லி பார்த்துக்க சொல்லு. நாளைக்கு வந்து நான் கூட்டிக்கிட்டு போறேன். இன்னைக்கு நான் முடிஞ்ச வரைக்கும் எல்லா இடத்திலும் தேடி பார்க்கிறேன்”

“சரி, வா நம்ம ரெண்டு பேரும் போய் எங்க வீட்ல குழந்தையை விட்டுட்டு. நானும் உன் கூட வரேன் ரெண்டு பேரும் போய் வினோதாவை தேடலாம்”

“வேண்டாம் மச்சி. நாளைக்கு உனக்கு ஆஃபீஸூக்கு போகனும் இல்ல?”

“அதெல்லாம் ஒண்ணும் பிரச்சனை இல்லை. நான் லீவு போட்டு கொள்கிறேன். நீ வா. அதுவும் இல்லாம நித்திலா ஏற்கனவே வினோதா இல்லைன்னு பயத்தில இருப்பா. அதனால அவ தூங்கின பிறகு என் ஒயிஃப் கிட்ட விட்டுட்டு போகலாம்”

“சரிடா” என்று சொல்லி காரில் ஏறி சென்றனர்.

காரில் செல்லும் போதே நித்திலா தூங்கிவிட்டாள். 

குழந்தையை தூக்கிக் கொண்டு வந்தான் அருண். 

சங்கீதாவிடம் சுருக்கமாக விஷயத்தை சொன்னான் ஹரி.

குழந்தையை தூக்கி கொண்டு நின்றிருந்தான் அருண்.

“அருண் வா, மேகா பக்கத்தில் நித்தியை படுக்க வை” என்று சொல்லி ரூமை காட்டினாள் சங்கீதா.

நித்திலாவை படுக்க வைத்தான் அருண். 

மேகாவும் நித்திலாவும் ஒரே பள்ளியில் ஒரே வகுப்பில் தான் படிக்கின்றனர். 

வெளியே வந்த அருணிடம்,

“என்னாச்சு அருண். காலைல கூட நான் ஸ்கூல்ல பார்த்தேனே? வினோ நார்மலா தான இருந்தா?”

“இல்ல சங்கீ, அதுக்கு அப்புறம் தான் எனக்கும் அவளுக்கும் சண்டை” 

“அருண், வினோ கோபப் படுறவ தான் இல்லன்னு சொல்லல? ஆனா அடுத்த பத்து நிமிஷத்துலேயே அதை மறந்திடுவா. சகஜமாக பேச ஆரம்பிச்சிடுவா”

“அதான் சங்கீ, எனக்கும் தெரியும். இவ்வளவு நேரமா ஃபோன் ஸ்விட்சிடு ஆஃப்ல இருக்குன்னா கண்டிப்பா ஏதோ பிரச்சனைன்னு தோணுது”

“சரி சரி, நான் நித்தியை பார்த்துக்கிறேன்.

 நீங்க ரெண்டு பேரும் அவளை போய் தேடிப் பாருங்க” என்றாள் சங்கீதா.

“தேங்க்ஸ் சங்கீ”

“என்ன அருண்? இந்த மாதிரி எல்லாம் பேசின அவ்வளவு தான். போ, போய் வினோவை கண்டுப்பிடிக்கிற வழியை பாரு” என்று சொல்லி அனுப்பினாள் சங்கீதா.

ஹரி,சங்கீதா, அருண் மூவரும் காலேஜ் ஃபிரெண்ட்ஸ். ஹரியின் காதலுக்கு தூது போனவனே அருண் தான். மூவரும் நல்ல நண்பர்கள்.

அருண் காரில் ஏறி அமர்ந்தான்.

சங்கீதா தன் கணவனிடம்.

“ஹரி, ஒரு நிமிஷம்”

“சொல்லுடி”

“அருணை தனியா விடாத டா. ரொம்ப டென்ஷனா இருக்கான். நீயே டிரைவ் பண்ணு” என்றாள் சங்கீதா.

“ஓகே டி, தேங்க்ஸ்”

“எதுக்கு டா?”

“அவன் சிட்சுவேஷன் புரிஞ்சிக்கிட்டு அவன் கூடவே இருன்னு சொல்றீயே, அதுக்கு”

“ஏய், அவன் எனக்கும் ஃபிரெண்டு தான். எனக்கும் அவன் மேல அக்கரை இருக்கு”

“சரி சரி, நித்தி எழுந்து கேட்டான்னா, எதாவது சொல்லி சமாளி. அப்புறம் நாளைக்கு மேகா நித்திலா ரெண்டு பேரையும் ஸ்கூலுக்கு அனுப்ப வேண்டாம். எழுப்பாத, எவ்வளவு நேரம் தூங்குறாங்களோ தூங்கட்டும்”

“சரி டா”

“சங்கீ”

“என்ன?”

“நித்தி ஈவினிங் ஸ்நாக்ஸ் சாப்பிட்டதோட தூங்கிட்டா போல. சாப்பிடறாளா கேளு. இல்ல பால் எதாவது கொடுத்து தூங்க வை”

“ஏய், எனக்கு தெரியும் டா. நான் பார்த்துக்கொள்கிறேன். நீ போ. அவன் டென்ஷன் ஆகி கிளம்பிடப்போறான்”

“ஓகே டி, பை”

“பை, டேக் கேர்”

காரில் ஏறும் போது,

“மச்சி, நான் டிரைவ் பண்றேன். நீ இங்கு வா” என்றான் ஹரி.

“சரிடா” என்றான் அருண்.

“மச்சி, நித்தி எதுவும் சாப்பிடல டா”

“கவலைப்படாதே டா. நான் சொல்லிட்டேன்.

சங்கீ பார்த்துக்குவா”

“சரிடா. ஃபர்ஸ்ட் பீச்சுக்கு போ”

“இந்த நேரத்திலா டா?”

“ஆமாம் டா, அவ பீச்சுக்கு அடிக்கடி‌போய் உட்கார்ந்துப்பான்னு சொல்லி இருக்கா”

“சரிடா. ஆனா போலீஸ் எல்லாரையும் இந்த நேரம் அனுப்பிட்டு இருப்பாங்களே?”

“போடா. அங்கே போய் பார்க்கலாம்”

“சரி” என்று சொல்லி பீச்சுக்கு காரை ஓட்டிச் சென்றான் ஹரி.

#############

பேக்கர்ஸ் அன்ட் மூவர்ஸ் வண்டி கிளம்பும் போது,

ஒரு பெட்டியை ஓப்பன் செய்தான் மனோகர்.

“அண்ணா, எதுக்கு பெட்டியை திறக்கறீங்க?” என்றான் அவனுடன் வேலை செய்த வேலன்.

“இது எனக்கு சொந்தமான பெட்டி வேலு”

“என்ன அண்ணா சொல்றீங்க?”

“இரு ஒரு நிமிஷம்” என்று சொல்லி தன் கர்ச்சீப்பை எடுத்து அதில் சில துளிகள் கிளோரோஃபார்ம் ஊற்றி பெட்டியை திறந்து அதில் இருக்கும் வினோதாவின் மூக்கில் வைத்தான். மயக்கத்தில் இருந்து அவள் இன்னும் ஆறு மணி நேரத்திற்கு எழுந்திருக்க மாட்டாள் என்று அவன் நண்பன் சொன்னதை நினைத்து அட்டை பெட்டியின் இரண்டு சைடிலும் ஒரு ஒரு ஓட்டை போட்டுவிட்டு மேல் பக்கத்தை சீல் செய்தான்.

இதைப் பார்த்த வேலன் அதிர்ச்சி அடைந்தான்.

“யாரு அண்ணா அது. கடத்திட்டீங்களா?”

“ஏய், நான் ஒண்ணும் கிரிமினல் எல்லாம் இல்லை. இங்க பாரு” என்று சொல்லி தன் ஃபோனில் இருந்து சில பல ஃபோட்டோக்களை காண்பித்தான் மனோகர்.

அதில் வினோதாவும் அவனும் நிறைய செல்ஃபி எடுத்துக் கொண்டு இருந்தார்கள்.

“ஒண்ணுமே புரியல. என்னாச்சு அண்ணா?”

“நம்ம சென்னைக்கு போறதுக்கு இன்னும் ஒன்பது மணி நேரமாகும். அது வரைக்கும் போரடிக்காமல் இருக்க என்னோட காதல் கதையை சொல்றேன் கேளு. அப்புறம் நீயே என் வினோதாவை என் கிட்ட சேர்த்து வைக்க நினைப்ப” என்றான்.

“டிரைவர் அண்ணாவுக்கு தெரிஞ்சா என்ன பண்றது?”

“இந்த பிளானை போட்டுக் கொடுத்ததே அவன் தான் டா. என் ஃபிரெண்டு அவன்” 

“ஓ, நான் தான் தெரியாம உங்க பிளான்ல மாட்டிக்கிட்டேனா?”

“ஏய், நான் சொல்றதை கொஞ்சம் கேளு. அப்புறமா பேசு”

 மனோகர் என்ன சொல்லப் போகிறான் என்று அவனையே பார்த்துக் கொண்டிருந்தான் வேலன். 

“நான் ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி தான் ஜெயில்ல இருந்து வெளியே வந்தேன். அப்புறம் என் வினோதாவை தேடாத இடமே இல்லை. அப்புறம் என் ஃபிரெண்டு அதான் டிரைவர் கோபால் தான் வினோதாவை கன்னியாகுமரில பார்த்ததா சொன்னான். இங்க வந்து பத்து நாளாக அவளுக்கு தெரியாமலேயே அவளை ஃபாலோ பண்ணேன். எங்க எல்லாம் போறா வரான்னு. அப்புறம் தான் இன்னைக்கு அவ கிட்ட பேசி கூட்டிவந்திருக்கேன்”

“அண்ணா, எதுக்கு எனக்கு காது குத்தறீங்க? நீங்க கூட்டிக்கிட்டு வரல. கடத்தி கொண்டு வந்திருக்கீங்க”

“ஏய், லூசாடா நீ? ஏன் அப்படி எல்லாம் சொல்ற. அவ இந்த ஊரு உலகத்துக்கு பயந்தா. அதான் நான் இப்படி கூட்டிக்கிட்டு வந்திட்டேன்”

“சரி, நீங்க ஏன் ஜெயிலுக்கு போனீங்க?” என்றான் வேலன்.

“அதை சொல்றதுக்கு முன்னாடி, நானும் என் வினோதாவும் எப்படி லவ் பண்ணினோம்ன்னு சொல்றேன். அதை முதல்ல தெரிஞ்சுக்க” என்றான் மனோகர்.

பாகம் -5

மனோகர் தன் காதல் கதையை வேலனிடம் சொல்ல ஆரம்பித்தான்.

“உனக்கு எப்போதிலிருந்து சொல்ல ஆரம்பிக்கிறது” என்று தன்னிடமே சொல்லிக் கொண்டான் மனோகர்.

“சரி, நீயே சொல்லு. நான் காலேஜ் சேர்ந்ததில் இருந்தா? இல்ல என் வினோவை முதன் முதலாக பார்த்ததில் இருந்தா?”

“ஏதோ ஒண்ணு, சொல்லுங்க அண்ணே” என்றான் வேலன்.

“சரி சொல்றேன் கேளு”

“நான் முதல் பத்து நாள் ஏன்டா இந்த காலேஜ்ல சேர்ந்தேன்னு நினைச்சு ரொம்ப ரொம்ப கஷ்டப்பட்டேன்” 

“நான் ஒரு ஏழைப் பையன். எனக்கு அஞ்சு நாளைக்கு அஞ்சு டிரெஸ் அவ்வளவுதான். அதையே மாத்தி மாத்தி போட்டிக் கொண்டு போவேன். ஒரு நாள் என் கூட படிக்கிற பையன் என்னை கிண்டல் செய்தான்”

“ அஞ்சு நாளைக்கு அஞ்சு டிரஸ் வச்சிருக்கீங்களா? அப்படின்னா நீங்க ஏழை கிடையாது லோவர் மிடில் கிளாஸ்” 

“ சரி சரி சொல்றத கேளுடா. அவ என்கிட்ட” என்று அப்போது நடந்ததை சொல்லத் தொடங்கினான் மனோகர்.

“என்னடா மறுபடியும் இந்த கிரே கலர் கட்டம் போட்ட சட்டையா? வேற இல்லையா உன் கிட்ட? காலேஜ் சேர்ந்த இந்த பத்து நாள்ல மூணாவது முறையா இந்த சட்டையை போடுற?” என்று கிண்டல் செய்தான்.

அமைதியாக தலை குனிந்தான் மனோகர்.

“டேய், துவைச்சியா இல்ல அப்படியே போட்டுக் கொண்டு வந்திட்டியா. பர்ஃபியூம் அடிச்சிக்கிட்டு”

“ஏய் பர்ஃபியூம்ன்னா அவனுக்கு என்னன்னே தெரியாது டா”

என்று ஆளுக்காள் ஒன்று சொல்லி கிண்டல் செய்ய அங்கிருந்து வேகமாக வெளியே சென்றான் மனோகர்.

“இவனுங்களுக்கெல்லாம் கோபம் மட்டும் மூக்குக்கு மேல வந்திடும்” என்றான் இன்னொருவன்.

“அப்போது வேகமாக வெளியே வரும்போது வினோதாவை இடிச்சிட்டேன். அவனுங்க மேல இருந்த கோபத்தில ஒரு சாரி கூட சொல்லாம ஓடிட்டேன்”

“அவ இடியட்ன்னு திட்டினது மட்டும் என் காதில விழுந்துச்சு. திரும்பி அவ முகத்தை கூட பார்க்காமல் ஓடிச் சென்று மரத்தடியில் இருக்கும் பெஞ்ச் மேல அமர்ந்தேன்.

அது லஞ்ச் டைம் அதனால எல்லாரும் அங்கேயும் இங்கேயும் போய் கொண்டு இருந்தாங்க. கேன்டீன்ல கூட்டம் ரொம்ப வழிஞ்சுது. அன்று எனக்கு பசி அதிகமாக இருந்தாலும் அவர்கள் கிண்டல் செய்ததால் கோபம் பசியை மறக்கச் செய்தது.

அப்போது, “எக்ஸ்கியூஸ் மீ” என்று குரல் கேட்டு திரும்பி பார்த்தேன், என் வினோதா நின்று கொண்டு இருந்தாள்.

லைட் யெல்லோ நிறத்தில் ஷார்ட் குர்தியும் லைட் புளூ ஜீன்ஸூம் போட்டுக் கொண்டு அழகு தேவதை போல நின்று கொண்டு இருந்தாள். 

அப்போது தான் இடிக்கும் போது அந்த குர்தியை பார்த்த ஞாபகம் வந்தது. ‘அங்கே திட்டியது பத்தாது ன்னு இங்கு வந்து வேற திட்டப் போறாளான்னு’ நினைச்சேன்.

“என் பேரு வினோதா” என்றாள்.

திரும்பி அக்கம் பக்கம் பார்த்தேன்.

“என் கிட்டயா பேசறீங்க?”

“ஆமாம்”

“என் பெயர் மனோகர்”

“ஹாய் மனோகர்”

“ஹாய், உங்க பேரு என்ன சொன்னீங்க?”

“வினோதா, வினோ ன்னே கூப்பிடுங்க. என் கிளோஸ் ஃபிரெண்ட்ஸ் எல்லாரும் அப்படி தான் என்னை கூப்பிடுவாங்க”

‘கனவா, நனவா? என்னிடம் ஒரு பொண்ணு வந்து பேசிறதே பெரிய விஷயம் இதுல பெஸ்ட் ஃபிரெண்டு லிஸ்ட்ல என்னை சேர்க்கிறாளா?’ ன்னு நினைச்சு ஒரு நிமிஷம் அமைதியாக நின்றேன்.

“ஹலோ மனோகர், மனோகர்…” என்றாள் வினோதா.

“ஹாங்”

“என்னாச்சு? ஃபிரெண்ட்ஸ்?” என்று சொல்லி கையை நீட்டினாள் வினோதா.

என் கையை நீட்டி அவள் கையை பிடித்து உளுக்கினேன். முதல் ஸ்பரிசம். என் வாழ்க்கையில் இழந்த அத்தனையும் கிடைத்தது போல உணர்ந்தேன்.

ஸ்மைல் செய்து கொண்டே,

“சாப்பிட்டியா மனோ?” என்றாள்.

ஒருமையில் பேசுகிறாள். உரிமையுடன் பெயரை சுருக்கி அழைக்கிறாள். என் மனதில் ஒரு புதுவித சுகத்தை உண்டு பண்ணியது.

“இல்ல வினோ” என்றேன்.

சட்டென்று திரும்பி பார்த்தாள்.

“பரவாயில்லையே சொன்னதும் பேச ஆரம்பிச்சிட்டியே. நிறைய பேர் உடனே பேச மாட்டாங்க” 

“நீ தான என்னை பெஸ்ட் ஃபிரெண்ட்ஸ் லிஸ்ட்ல சேர்த்திட்ட. அப்புறம் ஏன் யோசிக்கனும் தயங்கனும்? அதான்” என்றேன்.

“வெரி குட், சரி வா. நான் கொண்டு வந்த லஞ்சை ஷேர் பண்ணி சாப்பிடலாம்”

“வேண்டாம் வினோ”

“உட்காரு” என்று சொல்லி என்னை அந்த பெஞ்சில் அமர வைத்து

தன் கையில் வைத்திருந்த லஞ்ச் பாக்ஸை ஓப்பன் செய்தாள் வினோதா.

“இந்தா, எடுத்துக்கோ”

“வேண்டாம் வினோ”

“எடுத்துக்கோ ன்னு சொல்றேன் இல்ல?” என்று சொல்லி ஒரு ஸ்பூன் குழம்பு சாதத்தை என்னிடம் நீட்டினாள். நான் உள்ளங்கையை நீட்ட அதில் வைத்தாள்.

“சாப்பிட்டேன். அம்மாவின் கையால் வாங்கி சாப்பிட்டது போல உணர்ந்தேன்”

“தேங்க்ஸ்” என்றேன்.

“ஃபிரெண்ட்ஸூக்குள்ள யாராவது தேங்க்ஸ் சொல்லுவாங்களா?” என்று சொல்லி சிரித்தாள் வினோதா.

“சரி சரி, இந்தா” என்று சொல்லி டிபன் பாக்ஸ் மூடியில் பாதி சாப்பாட்டை வைத்து விட்டு மீதம் உள்ளதை அவள் சாப்பிட்டாள். பசியுடன் இருந்த நான் அந்த மூடியில் இருந்த சாப்பாடு முழுவதையும் சாப்பிட்டேன்.

“சரி, நான் கிளாஸூக்கு போறேன்”

“ஏன் அதுக்குள்ள? கிளாஸ் பீரியட் ஆரம்பிக்க இன்னும் நிறையவே டைம் இருக்கே? அது வரைக்கும் பேசலாமே?”

“என்ன பேசனும்?”

“உன்னை பத்தி நீ சொல்லு. என்னை பத்தி நான் சொல்றேன்”

“எதுக்கு?”

“ஃபிரெண்ட்ஸூக்குள்ள எல்லா விஷயமும் தெரிஞ்ச்சிக்கனும் இல்ல?”

“அதெல்லாம் பெட் ல இல்லையே?”

“பெட் டா? என்ன பெட்?”

“ட்ரூத் ஆர் டேர் தெரியுமா உனக்கு?”

“அப்படீன்னா?”

“ஃபிரெண்ட்ஸ் கேட்குற கேள்விக்கு உண்மையை சொல்லனும். இல்லன்னா அவங்க என்ன சொல்றாங்களோ அதை செய்யனும்”

“அதுக்கு?”

“அதான். உன் கிட்ட பேசி, உன் கூட‌ லஞ்ச் ஷேர் பண்ணி சாப்பிட சொன்னாங்க. அதை செஞ்சிட்டேன். பை மனோ”

“வினோ”

“என்ன மனோ?”

“மத்தவங்க எல்லாம் என் நிலைமையை புரிஞ்சிக்காம கிண்டல் பண்ணி சாவடிக்கிறாங்க ன்னு கவலைல இருந்தேன். இப்போ நீ வந்த இந்த பத்து நிமிஷம் தான், நான் சந்தோஷமா இருந்தேன். அதையும் ஒரு கேலி கிண்டல் ன்னு எனக்கு சொல்லி செருப்பால அடிச்சிட்ட?”

“நீ அப்படி திங்க் பண்ணினா நான் அதுக்கு பொறுப்பல்ல. பை” என்று சொல்லி சென்றாள்.

“வினோ, வினோ, வினோதா” என்று நான் கூப்பிட்டுக் கொண்டு இருக்கும் போதே அவள் அங்கிருந்து நடந்து கிளாஸ் ரூமிற்கு சென்றாள்.

“ஏய், டேர் முடிச்சிட்டேன். எடுங்க காசை?”

 என்று சிரித்து கொண்டே தன் தோழிகளிடம் சொன்னாள் வினோதா.

அனைவரும் ஆளுக்கு ஒரு நூறு ரூபாய் நோட்டுகளை நீட்டினார்கள்.

சிரித்துக் கொண்டே அதை வாங்கி தன் பர்ஸில் வைத்தாள் வினோதா.

“என்னடி சொன்னான். நீ கொடுத்த உடனே சாப்பாட்டை வாங்கி சாப்பிட்டுட்டானா? அவனை ரொம்ப ஈகோ பிடிச்சவன் ன்னு நினைச்சு தான் பெட் கட்டினேன்” என்றாள் ஷீலா.

“எவ்வளவு வீம்பு ஈகோ பிடிச்சவங்களா இருந்தாலும். என் முன்னாடி ஒண்ணும் இல்லை” என்று சொல்லி சிரித்தாள் வினோதா.

“லவ் பண்றேன் ன்னு சொன்னீயா டி?”

“சீ சீ, ஃபிரெண்டு ன்னு தான் சொன்னேன். அதுக்கே விழுந்திட்டான்” என்று சொல்லி சிரித்தாள் வினோதா.

அப்போது உள்ளே வந்த மனோகர் வினோதா முன்னால் வந்து நின்று,

“ஏன் இப்படி பண்ணின வினோ?” என்றேன்.

“இட்ஸ் ஜஸ்ட் எ கேம். டோண்ட் டேக் இட் சீரியஸ்லி மனோ. யூ ஆர் ஆல்வேஸ் மை ஃபிரெண்டு. நான் கேமுக்காக மட்டும் உன்னை ஃபிரெண்டு ன்னு சொல்லல? இன்னும் ஃபோர் இயர்ஸ் ஒண்ணா படிக்கப் போறோம். அப்போ ஃபிரெண்ட்ஸ் தான? நீ வினோ ன்னே கூப்பிடு. நானும் மனோ ன்னே கூப்பிடறேன். ஓகே?” என்றாள் வினோதா சிரித்துக் கொண்டே.

இந்த episode பிடிச்சிருந்தா எழுத்தாளரை உற்சாகப்படுத்துங்க!!
இப்போதே உற்சாகப்படுத்துங்கள்

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

No votes so far! Be the first to rate this post.

    No comments yet.