பாகம் 4

Vaishnavi Vijayaraghavan | 18 May 2026 | Share

தித்திக்கும் தேன்பாவை 

பாகம் 4 

” ரொம்ப தேங்க்ஸ் சம்பந்தி அப்படியே எங்க சொந்தக்காரங்க கேட்டா, நீங்களும் xxxxxxxxx அதேதான் என்று ( ஜாதி பெயரை சொல்லி )சொல்லிடுங்க போதும். எனக்கும் ஜாதி மதத்தில் எல்லாம் பெரிய முக்கியத்துவம் கிடையாது. இருந்தாலும் ஊர்ல பின்னாடி ஏதாவது தப்பா பேசுவாங்க அதனாலதான்”

“நீங்களும் நானும் இவ்வளவு நாளா அத பத்தி பேசாததினால தெரியல. நாங்களும் நீங்க சொன்ன அதே ஜாதி தான், அதனால உண்மையாவே நீங்க கவலைப்பட தேவையில்லை”

” அப்படியா ரொம்ப சந்தோஷம் சம்பந்தி. எனக்கு இப்ப மனசு ரொம்ப சாந்தமா இருக்கு. சம்பந்தமே இல்லாம உங்கள பொய் சொல்ல வைக்கனும்னு யோசிச்சிட்டு இருந்தேன் “

“சரிங்க சம்பந்தி நாளைக்கு காலையில பார்ட்டி ஹாலில் பார்க்கலாம்”

“சரிங்க சம்பந்தி பை ” 

நந்தினிக்கு வாய்ஸ் மெசேஜ் அனுப்பினார் கௌசல்யா.

“நந்து, ஷியாம், ஷிவானி ரெண்டு பேரையும் நீ வரும்போது நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வந்துரு.  ஊர்ல இருக்குற அவங்களோட பாட்டி இறந்துட்டாங்க  அதனால அவங்க அப்பா அம்மா ரெண்டு பேரும் போயிருக்காங்க. நாங்களும் ஷாப்பிங் எல்லாம் போறோம் அதனால மூணு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் துணையா இருங்க. நைட்டு அர்ஜுன் ரூம்ல ஷியாம் தூங்கிக்கிட்டும், நீயும் ஷிவானியும் உன் ரூம்ல தூங்கிக்கோங்க. நாங்க பர்ச்சேஸ் எல்லாம் முடிச்சுட்டு வர லேட் ஆகும். நீங்க ஜாக்கிரதையா இருங்க” என்று பெரிய மெசேஜ் அனுப்பி இருந்தார் கௌசல்யா.

லஞ்ச் பிரேக்கில் மெசேஜை பார்த்துவிட்டு,

” ஓகே சரி மா நான் அவங்க கிட்ட சொல்லிடறேன்” என்று ரிப்ளை செய்துவிட்டு

ஷியாம் மற்றும் ஷிவானி கிளாஸிற்கு சென்று அவர்களிடம் விஷயத்தை சொன்னாள் நந்தினி.

ஷியாம் மற்றும் ஷிவானி இருவரும் இரட்டையர்கள்.  

பாட்டி இறந்ததைக் கேட்டு இருவரும் வருந்தினார்கள். 

“ஏன் எங்க அம்மா எங்களுக்கு ஒரு மெசேஜ் கூட பண்ணல” என்று வருத்தப்பட்டாள் ஷிவானி.

“டென்ஷன்ல இருந்து இருப்பாங்க ஷிவானி , விடு  அதான் என் அம்மா கிட்ட  சொல்லிட்டு போயிருக்காங்க இல்ல? எங்க அம்மா கால் பண்ணி உங்க ரெண்டு பேருக்கும் சொல்லுவாங்கன்னு ஆன்டிக்கு  தெரியும் “

காலேஜ் முடிந்ததும் நந்தினி அவள் ஸ்கூட்டரை எடுத்துக் கொண்டு கிளம்ப, ஷியாமின் பைக்கில் ஷிவானி அமர்ந்து கொண்டாள். வழக்கம்போல் மூவரும் வீட்டிற்கு வந்தனர்.

நந்தினி வீடு பூட்டி இருந்தது. அவர்கள் சாவி வைத்து விட்டு செல்லும் இடத்திலிருந்து சாவியை எடுத்து கதவை திறந்தாள் நந்தினி.

“சரி நாங்க ரெண்டு பேரும் வீட்டுக்கு போய் டிரஸ் மாத்திட்டு வரட்டுமா?” என்றாள் ஷிவானி. 

” உனக்கு தான் தெரியும் இல்லடி நான் வீட்ல தனியா இருக்க மாட்டேன்னு. இரு நான் முதல்ல சேஞ்ச் பண்ணிட்டு வரேன் அப்புறம் நீங்க ரெண்டு பேரும் உங்க வீட்டுக்கு போய் டிரஸ் சேஞ்ச் பண்ணுங்க அதுக்கப்புறம் நம்ம எல்லாரும் ஒண்ணா இங்க வரலாம்”

” உன்னை மாதிரி பயந்தாங்கோலி நான் கிடையாது. ஷியாம் இவளுக்கு துணையா நீ இங்கேயே இரு நான் போய் வீட்ல டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வரேன். அதுக்கப்புறம் நீ போய் டிரஸ் சேஞ்ச் பண்ணு ” என்றாள் ஷிவானி. 

” ஓகே, ஓகே டி ” என்றான் ஷியாம் ஷிவானியை பார்த்து.

ஷிவானி தன் வீட்டிற்கு சென்று டிரஸ் சேஞ் செய்து விட்டு கிச்சனில் பாத்திரங்கள் இருப்பதை பார்த்துவிட்டு, ஷியாமிற்கு கால் செய்தாள். 

“ஷியாம்”

” சொல்லுடி”

” வீட்ல வேலை எல்லாம் அப்படியே இருக்குடா நான் முடிச்சுட்டு வந்துடவா? “

“என்ன வேலை?”

” பாத்திரம் கழுவனும் வீடு பெருக்கணும் துணியை மாடியில் இருந்து எடுத்து

மடிக்கணும் “

” சரி இரு நான் வரேன் ஹெல்ப் பண்றதுக்கு “

” வேண்டாம் டா, பாத்திரமும் கொஞ்சம் தான் இருக்கு நானே பண்ணிக்கிறேன். நீ அவளை அங்க தனியா விட்டுட்டு வந்தா அவ பயப்படுவா “

” அவளையும் கூட்டிட்டு வரேன் “

” வேண்டாம் ஷியாம். நான் எதுக்கு கால் பண்ணினேன்னா. உனக்கு ரொம்ப ஸ்வெட்டிங்கா இருக்கு, குளிக்கணும்னா நீ வந்து குளி நான் அவ கூட அங்க இருக்கிறேன் என்று சொல்லலாம்னு தான் நினைச்சேன்”

“அப்படியெல்லாம் இல்ல, நீ வேலைய முடிச்சுட்டு வா. அதுக்கப்புறம் நான் போய் குளிச்சுக்கிறேன்.”

” ஹாஃப் அன் ஹவருக்கு மேல ஆயிடும் ஓகேவா ? “

” நோ இஷ்யூஸ் ஷிவானி”

“சரி ஷியாம் நந்து கிட்ட சொல்லிடு. நான் லேட்டா வரேன்னா அதுக்கும் அவ பயப்படுவா”

” சரிடி நான் பாத்துக்குறேன் ஃபோன வை” என்ற சொல்லி ஃபோனை வைத்து விட்டு தன் ஃபோனில் கிரிக்கெட் மேட்ச் பார்த்துக் கொண்டிருந்தான் ஷியாம்.

ஷிவானி  அவளுடைய அம்மா போட்டு விட்டு சென்ற பாத்திரங்களை கழுவி வைத்து விட்டு, வீட்டை சுத்தம் செய்துவிட்டு, மாடியில் காய்ந்து கொண்டிருந்த துணிகளை எல்லாம் எடுத்து மடித்து அடுக்கி வைத்து விட்டு வீட்டை பூட்டிக்கொண்டு நந்தினியின் வீட்டிற்கு வந்தாள்.

அவளுக்கு இந்த வேலை எல்லாம் முடிய முக்கால் மணி நேரம் ஆனது.

கதவைத் தட்ட ஷிவானி கையை வைத்த போது கதவு திறந்தது. 

“கதவை கூட சாத்தல பாரு” என்று சொல்லிக் கொண்டே உள்ளே வந்தாள்.

அங்கே ஷியாமும் நந்தினியும் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தாள் ஷிவானி.

உள்ளே நுழைந்த ஷிவானி அங்கே இருந்த ஷியாம் நந்தினியை பார்த்ததும் கண்களை விரித்தாள். இருவரும் இதழ் முத்தம் கொடுத்துக் கொண்டிருந்தனர்.

‘அடப்பாவிங்களா எனக்கே தெரியல எப்ப இவங்க ரெண்டு பேரும் லவ் பண்ண ஆரம்பிச்சாங்க. கிஸ் பண்ற அளவுக்கு வந்துட்டாங்க. சரி சரி நம்ம டிஸ்டர்ப் பண்ண கூடாது என்று நினைத்தவள் சத்தம் போடாமல் திரும்ப அவளுடைய வீட்டிற்கு செல்லலாம்’ என்று நினைத்து கதவை ஏற்கனவே இருந்தது போல சாற்றி விட்டு தன்னுடைய வீட்டிற்கு சென்றாள்.

சரி கொஞ்ச நேரம் கழிச்சு  போகலாம் என்று நினைத்துக் கொண்டு  ஃபோனை எடுத்து instagram ரீல்ஸ் பார்த்துக் கொண்டிருந்தாள்.

நந்தினியின் வீட்டில்.

ஐந்து நிமிட இதழ் முத்தத்திற்கு பிறகு,

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர்.

“எப்படி இருந்துச்சுன்னு நம்ம ஃபர்ஸ்ட் கிஸ் ” என்று நந்தினியிடம் கேட்டான் ஷியாம்.

“சீ போடா, எனக்கு வெக்கமா இருக்கு. ” என்று சொல்லிவிட்டு தன் ரூமிற்கு சென்றாள் நந்தினி.

பிறகு கண்ணாடியை பார்த்து தன் முகத்தை சரி செய்து கொண்டு வந்து ஹாலில் அவன் பக்கத்தில் அமர்ந்தாள்.

” உள்ள போய் என்ன பண்ணிட்டு 

வந்த? “

” இல்ல கண்ணாடில போய் பாத்துட்டு வந்தேன் “

” என்ன பார்த்துட்டு வந்த? “

“முத்தம் கொடுத்த இல்ல? உதட்டில் ஏதாவது காயம் இருக்கான்னு? அப்புறம் அதை பார்த்துட்டு ஷிவானி கண்டுபிடிச்சிட்டான்னா?”

” சரி எப்போ நம்ம லவ்வை பத்தி ஷிவானி கிட்ட சொல்லலாம்? “

” நம்ம லவ் பண்ண ஆரம்பித்து ஒரு மாசம் தான ஆகுது? “

“அதான் கிஸ் வரைக்கும் வந்துட்டோம், இல்ல?”

“இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு சொல்லலாம் “

“அவகிட்ட நம்ம சொல்லலைன்னு தெரிஞ்சா, அவ ரொம்ப கஷ்டப்படுவா நந்து” என்றான் ஷியாம்.

” கஷ்டப்பட மாட்டா, கோபப்படுவா ” என்றாள் நந்தினி.

” அதான் தெரியுது இல்ல, அப்புறம் என்ன? எப்ப சொல்லலாம் சொல்லு” என்றான் ஷியாம்.

” எங்க அண்ணனோட கல்யாணம் முடியட்டும் டா அதுக்கு அப்புறமா சொல்லலாம்”

” அதுக்கு இன்னும் ரெண்டு மாசம் இருக்கே? அப்படியே இருந்தாலும் அதுக்கும்  இதுக்கும் என்ன சம்பந்தம்? “

“இல்ல, ஷிவானிக்கு என்னை ஒரு ஃபிரண்டா ரொம்ப பிடிக்கும். அண்ணி ஸ்தானத்துல என்னை வச்சு பார்த்தாளான்னு தெரியல? இப்ப நம்ம ரெண்டு பேரும் திடீர்னு லவ் பண்றோம்னு சொன்னா அவளோட ரியாக்ஷன் எப்படி இருக்கும்னு தெரியல. அவளுக்கு பிடிக்கலன்னா ரொம்ப கஷ்டமாயிடும். 

அதுவும் இல்லாம விஷயம் உங்க அப்பா அம்மா எங்க அப்பா அம்மாவுக்கு தெரிஞ்சதுன்னா அதனால என் அண்ணன் கல்யாணத்துக்கு ஏதாவது பிரச்சனை வருமோன்னு யோசிக்கிறேன். அதனால அண்ணனோட கல்யாணத்துக்கு அப்புறமா  மெதுவா அவகிட்ட ஒருநாள் சொல்லுவேன்” என்றாள் நந்தினி.

” சரி சரி, நீ ஆச்சு உன் நாத்தனார் 

ஆச்சு “

” ஆனா ஒன்னு ஷியாம், ஷிவானிக்கு கல்யாணம் ஆன பிறகு தான் நம்ம 

கல்யாணம். அதுவும் மூணு பேரும் செட்டில் ஆன பிறகு அதுக்கு எத்தனை வருஷம் ஆனாலும் சரி “

” ஏன் நந்து? “

” நீயும் அவளும் டிவின்ஸ், ஆம்பளையா இருக்க உனக்கு கல்யாணம் ஆயிட்டு பொண்ணுக்கு கல்யாணம் ஆகலைன்னா ஊர்ல எல்லாரும் தப்பா பேசுவாங்க. அதனால அவளுக்கு நம்ம நல்ல பையனா பார்த்து கல்யாணம் பண்ணலாம் அதுக்கு அப்புறமா நம்ம கல்யாணம் பண்ணிக்கலாம் “

நந்தினி  தன் தங்கையின் மேல் எவ்வளவு பாசம் வைத்திருக்கிறாள் என்று நினைத்து மிகவும் பெருமிதம் கொண்டான்.

தொடரும்….

அ. வைஷ்ணவி விஜயராகவன். 

இந்த episode பிடிச்சிருந்தா எழுத்தாளரை உற்சாகப்படுத்துங்க!!
இப்போதே உற்சாகப்படுத்துங்கள்

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

No votes so far! Be the first to rate this post.

    No comments yet.