பாகம் -3
விஜயா பேசுவாள் என்று சற்றும் எதிர்பார்க்காத சிவராமன் ‘என்ன பதில் சொல்வது?’ என்று தெரியாமல் திகைத்தார்.
நிர்மலா ஹலோ சொன்னதும் கொடுங்க அண்ணி நான் பேசறேன் என்று ஜாடை காட்ட அவளும் ஃபோனை கொடுத்து விட்டாள்.
இதை தெரியாத சிவராமன் அவ்வாறு பேசினார்.
“பிளீஸ் அண்ணா நீங்களும் அப்பாவும் வாங்க. நான் பண்ணின தப்புக்கு என் பொண்ணை தண்டிச்சிடாதீங்க”
அதற்கு மேல் அவளிடம் பேச முடியாமல்,
“சரிம்மா இன்னும் பத்து நிமிஷத்துல அங்க இருப்பேன்” என்று கூறி ஃபோனை வைத்தார்.
“ரொம்ப சந்தோஷம் அண்ணா. சீக்கிரமா வாங்க” என்றாள் விஜயா.
“அண்ணி, அண்ணா வரேன்னு சொன்னாரு” என்று ஆனந்தமாக சொன்னார்.
“எனக்கு தெரியும் விஜயா, அதனால தான் அவரு முதல்ல வரலைன்னு சொல்லும் போது கூட நான் அவரிடம் எதுவும் கேட்கவில்லை. உன் குரலை கேட்டா கண்டிப்பா வந்திடுவாருன்னு தெரியும் எனக்கு”
கண்கள் கலங்க தன் அண்ணியை கட்டிக் கொண்டாள் விஜயா.
பிறகு கிட்சனில் இருந்த லக்ஷ்மியிடம் சென்ற விஜயா,
“அக்கா, நீங்க தான் இதற்கு எல்லாம் காரணம்ன்னு எனக்கு நல்லா தெரியும். ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் அக்கா” என்று சொல்லி கட்டிக் கொண்டாள்.
“விஜயா, யாராவது அக்கா கிட்ட தேங்க்ஸ் சொல்லுவாங்களா?, வா நிறைய வேலை இருக்கு” என்று அவளை இழுத்துக் கொண்டு ஹாலுக்கு சென்று அனைத்தும் சரியாக இருக்கின்றதா என்று பார்த்தாள் லக்ஷ்மி.
போலீஸ் ஜீப் வந்து நின்றது. சிவராமன் போலீஸ் உடையிலேயே வந்தார்.
“என்னங்க நீங்க, வீட்டிற்கு போய் டிரெஸ் சேஞ்ச் பண்ணிட்டு வந்திருக்கலாம் இல்ல?”
“அதுக்கு டைம் இல்லடி”
“வாங்க அண்ணா” என்று சொல்லி கட்டி அணைத்து கொண்டாள் விஜயா.
சிவராமனும் இத்தனை வருடங்களாக தன் தங்கையை பார்க்காமல் இருந்து இப்போது பார்த்ததால் கண்கள் கலங்க அவள் தோளை தடவி,
“எப்படிம்மா இருக்க?” என்றார்.
“நல்லா இருக்கேன் அண்ணா”
வேணுகோபால் சிவராமனிடம் வந்து,
“வாங்க, வாங்க” என்றார்.
ராஜகோபால் ஒரு பட்டு வேஷ்டி மற்றும் ரெடிமேட் சட்டையை சிவராமனிடம் கொடுத்து போட்டுக் கொள்ள சொன்னார்.
அதை வாங்கி கட்டிக்கொண்டு ரெடியாகி வந்தார் சிவராமன். அதற்குள் மாமி நிர்மலா ஹர்ஷிதாவிற்கு முதலில் மஞ்சள் தண்ணீர் ஊற்ற, பின்னர் அத்தை யமுனா ஊற்ற, மற்றவர்கள் அனைவரும் ஒருவர் பின் ஒருவராக ஊற்றினார்கள். அந்த ஜல்லடையில் நிர்மலா தன் கழுத்தில் இருந்த தங்க செயினை கழற்றி போட்டாள். அதை பார்த்த யமுனாவும் தன் கழுத்தில் இருக்கும் செயினை கழற்றி போட்டாள். ஹர்ஷிதாவிற்கு மஞ்சள் பூசி குளிக்க வைத்து அலங்காரம் செய்து விட்டனர் நிர்மலாவும் யமுனாவும்.
பின்னர் தட்டில் பட்டு பாவாடை சட்டை மற்றும் வெற்றிலை, பாக்கு, பழம், பூ போன்ற தாம்பூலம் வைத்து சிவராமனும் மற்றும் நிர்மலாவும் ஹர்ஷிதாவிற்கு கொடுத்தனர். காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்று வாங்கி கொண்டாள். பின்னர் சிவராமன் குடிசை கட்ட அதில் ஒரு மனை போட்டு ஹர்ஷிதாவை அமர வைத்து அனைவரும் நலங்கு வைத்தனர்.
ஜல்லடையில் போட்ட தனது புதிய ஐந்து பவுன் செயினை ஹர்ஷிதாவின் கழுத்தில் போட்டு விட்டாள் நிர்மலா.
உடனே யமுனாவும் தனது 3 பவுன் செயினை ஹர்ஷிதாவின் கழுத்தில் போட்டுவிட்டாள். லக்ஷ்மிக்கு யமுனா ஏன் இவ்வாறு செய்கிறாள் என்று நன்றாகவே புரிந்தது. சிரித்து கொண்டே நலங்கு வைத்து விட்டு வந்தவர்களுக்கு தாம்பூலம் வைத்து கொடுத்தாள்.
அவினாஷ், அர்ஜூன் மற்றும் வேலன் மூவரும் ஒரு பக்கமாக உட்கார்ந்து இருந்தார்கள். அவர்களுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் கூல்டிரிங்க்ஸை அரைமணி நேரமாக குடித்து கொண்டு இருந்தனர்.
அர்ஜூன் தன் காலேஜில் படிக்கும் ரஞ்சனியை காதலிக்கிறான். ஆகையால் அத்தை மகளை பார்க்கும் ஆவல் அவனுக்கு அவ்வளவாக இல்லை. மேலும் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் பெண் என்பதால் அவனை விட மிகக் சிறியவள் என்ற எண்ணம் மட்டுமே அவனுக்கு இருந்தது.
ஆனால் அதே வயது வித்தியாசத்தில் இருக்கும் வேலன் ஹர்ஷிதாவை தன் மனைவியாகவே பார்க்கிறான். அதற்கு முக்கிய காரணம் அவனுடைய அம்மா யமுனா தான். பலமுறை லக்ஷ்மி மற்றும் விஜயா கூறியும் அவள் அவ்வாறு பேசுவதை நிறுத்தவில்லை.
“என் வீட்டுக்கு வரப்போற பொண்ணு. என் மருமக. என் பையனுக்கு ஏத்த பொண்ணு” என்று பலமுறை கூறுவாள்.
இப்போது அவினாஷ்,
வந்ததில் இருந்து ஹர்ஷிதாவின் முகத்தை அவன் பார்க்கவே இல்லை. ஆவலாக இருந்தான் அவள் முகத்தை பார்க்க.
குடிசைக்குள் அமர வைத்து நலங்கு வைத்தனர். ஆகையால் இவன் அமர்ந்து இருந்த திசையில் இருந்து அவளுடைய கைகள் மற்றும் கால்களே தெரிந்தது.
ஒரு வழியாக அந்த குடிசை சைடில் இருந்த ஓட்டை வழியாக அவளைப் பார்த்ததும் ஒரு நொடி ‘சே’ என்று நினைத்தான்.
முகம் முழுக்க மஞ்சள் பூசி, பெரிய பொட்டு வைத்து, தலையில் நடு வகிடு எடுத்து சுட்டி வைத்து பெரிய பின்னல் போட்டு பூ சுற்றி, தாவணி கட்டி இருந்ததை பார்த்ததும்.
“சே, அத்தை பொண்ணு எப்படி எல்லாம் இருக்கும்ன்னு கற்பனை பண்ணி வச்சிருந்தேன். இவ என்ன இப்படி இருக்கிறாளே? ஹூம், நமக்கு இது செட் ஆகாது” என்று நினைத்து கொண்டான்.
டிபன் சாப்பிட்டு விட்டு எல்லாரும் கிளம்ப தயாரானார்கள். அப்போது வாங்க நாம எல்லாம் ஒரு ஃபோட்டோ எடுத்துக்கலாம் என்று விஜயா அழைக்க,
சிவராமன், நிர்மலா, அர்ஜூன், அவினாஷ் வர ஹர்ஷிதாவின் பக்கத்தில் விஜயா, வேணுகோபால் ராஜகோபால் மற்றும் லக்ஷ்மி நின்றனர். ஹர்ஷிதாவின் பக்கத்தில் அவினாஷ் நின்றான். அப்போது தான் ஹர்ஷிதா அவினாஷை முதல் முறையாக பார்த்தாள்.
விஜயா ஹர்ஷிதாவிடம்,
இதுதான் உங்க மாமா, மாமி, இவங்க ரெண்டு பேரும் அவங்களோட பசங்க அர்ஜூன், அவினாஷ்.
“ஹலோ மாமா, ஹலோ மாமி, ஹாய் அர்ஜூன் அண்ணா, ஹாய் அவினாஷ் அண்ணா” என்றாள் ஹர்ஷிதா.
‘அப்பாடி, நல்ல வேளை அண்ணா ன்னு சொல்லிட்டா’ என்று மனதிற்குள் சந்தோஷப் பட்டான் அவினாஷ்.
அவனை விட அதிகமாக சந்தோஷப் பட்டான் வேலன். மனதிற்குள் ஒரு குத்து பாடலுக்கு நடனம் ஆடிவிட்டு வந்தான்.
லக்ஷ்மி ஹர்ஷிதாவிடம்,
“அம்மாடி ஹர்ஷி, அவங்க ரெண்டு பேரும் உன்னோட மாமா பசங்க. அண்ணான்னு கூப்பிடக் கூடாது. வேலனை கூப்பிடற மாதிரி தான் அவங்களையும் கூப்பிடனும். வேலன் மாமான்னு கூப்பிடுவ இல்ல அந்த மாதிரி அர்ஜூன் மாமா அவினாஷ் மாமா ன்னு கூப்பிடு. சரியா?”
“சரிங்க பெரியம்மா” என்றாள் ஹர்ஷிதா.
“சே, இவங்க வேற” என்று நினைத்து கொண்டான் அவினாஷ்.
‘இந்த லக்ஷ்மி மாமி இருக்காங்களே’ என்று பல்லை கடித்து கொண்டான் வேலன்.
ஃபோட்டோ எடுக்கும் போது அவினாஷ் ஹர்ஷிதாவின் பக்கத்தில் இருந்து நகர்ந்து தன் அம்மாவின் பக்கத்தில் சென்று நின்று கொண்டான். நிர்மலா அவினாஷ் மற்றும் ஹர்ஷிதாவின் நடுவில் நின்று கொண்டு இருவர் தோளிலும் கைப்போட்டு ஃபோட்டோ எடுத்து கொண்டாள். அவினாஷ் நகர்ந்து சென்றதை கவனிக்க தவறவில்லை ஹர்ஷிதா. சற்றே முகம் மாறத் தொடங்கியது ஹர்ஷிதாவிற்கு.
பை சொன்னாள் நிர்மலா. ஹர்ஷிதா தன் கழுத்தில் இருந்த நிர்மலாவின் செயினை கழட்ட கைகளை எடுத்து செல்லும் போது
“ வேண்டாம் டி செல்லம். நீயே போட்டுக்கோ” என்றாள்.
“வேண்டாம் மாமி” என்றாள் ஹர்ஷிதா.
“எதுக்கு அண்ணி” என்றாள் விஜயா.
“நம்ம ஹர்ஷிக்கு செய்யாம வேற யாருக்கு செய்ய போறோம்” என்று சொல்லி அவள் கன்னத்தில் கிள்ளி முத்தமிட்டாள்.
‘நல்லவேளை முன்னாடியே நமக்கு செயினை கழற்றி கொடுத்திட்டா. இல்ல நம்மளும் வேண்டாம் பரவாயில்ல. நீயே போட்டுக்கோ ன்னு சொல்லி இருக்கனும். செயின் இல்லாம வீட்டுக்கு போனா அந்த மனுஷன் என்னை கொன்று போட்டிருப்பான்’ என்று நினைத்து கொண்டாள் யமுனா.
அனைவரும் கிளம்பியபிறகு, ஹர்ஷிதா தனது ரூமிற்கு செல்ல எழுந்தாள்.
“அம்மாடி ஹர்ஷி, ஒன்பது நாளைக்கு இங்க தான் கண்ணு தூங்கனும்” என்றாள் லக்ஷ்மி.
“என்ன பெரியம்மா சொல்றீங்க? இங்க எப்படி தூங்கறது. பெட் கூட இல்லையே?”
“செல்லம் உனக்கு ரோலிங் பெட், குவில்ட் எல்லாம் தரேன். நானும் உன் கூட இங்கேயே படுத்ததுக்கிறேன்”
“ஏன் பெரியம்மா?”
“இதெல்லாம் சாஸ்திரம் சம்பிரதாயம் டா கண்ணு”
“நீங்க சின்ன வயசுல இருந்தே போதும் இப்படி தான் பண்ணினாங்களா?”
சிரித்து கொண்டே
“ஆமாம் மா, இதை விட இன்னும் அதிகமா ரூல்ஸ் அன்ட் ரெகுலேஷன்ஸ் இருந்துச்சு”
‘ சிறு வயதிலேயே தன்னுடைய அப்பா அம்மா இறந்து விட்டதால் பாட்டி தான் அவரை வளர்த்தார். பாட்டிய அதிக சாஸ்திரம் சம்பிரதாயம் எல்லாம் மேற்கொள்ளுவார். லட்சுமி 16 வயது இருக்கும் பொழுது அவரும் இறந்து விட்டார். அப்போதுதான் ஒரு பெண்கள் விடுதியில் தூரத்து உறவினர்களால் சேர்க்கப்பட்டு வளர்ந்து வேலைக்கு செல்லும்போது ராஜகோபாலை பார்த்து காதலித்து திருமணம் செய்து கொண்டார்’
ஹர்ஷிதாவிடம் இடம் பேசும் போது இவை அனைத்தும் ஒரு நொடி ஞாபகத்திற்கு வந்து சென்றது லக்ஷ்மிக்கு.
“அச்சச்சோ, என்னது அது?”
“அதெல்லாம் சொல்ல இப்போ எனக்கு டைம் இல்ல. ரொம்ப டயர்டா வேற இருக்கு. மாத்திரை போட்டுட்டேன். வா தூங்கலாம். நாளைக்கு சொல்றேன்” என்று சொல்லி அவளுடைய அருகில் படுத்து பத்து நிமிடத்தில் தூங்கி விட்டாள் லக்ஷ்மி.
‘ஏன் அவினாஷ் அவ்வாறு செய்தான் என்று தனக்கு தானே கேட்டுக் கொண்டாள். அவன் வேண்டும் என்றே என் பக்கத்தில் இருந்து நகர்ந்து சென்று விட்டான். அது மட்டும் எனக்கு நல்லாவே தெரிஞ்சுது’ என்று தன்னிடமே சொல்லி கொண்டாள்.
“என்னம்மா கண்ணு தெரிஞ்சுது?” என்று லக்ஷ்மி தூக்கத்திலேயே கேட்க,
“ஒண்ணும் இல்ல பெரியம்மா” என்று சொல்லி தன் போர்வையை எடுத்து முகத்தையும் சேர்த்து மூடிக்கொண்டு தூங்கினாள்.
காரில் செல்லும் போது,
“ஏங்க, நீங்க வரமாட்டீங்களோன்னு நினைச்சேன்” என்றாள் நிர்மலா.
“வீட்டிற்கு வந்து வேணுகோபால் கூப்பிட்டதும் போகனும்ன்னு தான் தோணுச்சு. ஆனா விஜயாவை பார்க்க மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. அதனால்தான் வேண்டாம் ன்னு நினைச்சேன். ஆனா விஜயா பேசியதும், என்னால மறுக்க முடியல” என்றார் சிவராமன்.
அர்ஜூன் மற்றும் அவினாஷ் இருவரும் அமைதியாக வந்தனர்.
“என்னடா ரெண்டு பேரும் கம்முன்னு வரீங்க?” என்றாள் நிர்மலா.
“அம்மா, அத்தை அப்படியே இருக்காங்க” என்றான் அர்ஜூன்.
“ஆமாம், உனக்கு அத்தையை நல்லா ஞாபகம் இருக்கா டா? அவ அப்படியே இருக்கா காதோரம் இரண்டு வெள்ளை முடி தான் வந்திருக்கு” என்றாள் நிர்மலா.
“நல்லாவே ஞாபகம் இருக்கு மா” என்று சொல்லி சிரித்து கொண்டே வந்தனர்.
“உனக்கு அத்தையை ஞாபகம் இருக்கா டா?” என்றான் அர்ஜுன் அவினாஷை பார்த்து.
“அவ்வளவா இல்ல, ஆனா?”
“ஆனா என்ன டா?”
“அத்தை இந்த வயசுலயும் ரொம்ப அழகா இருக்காங்க. ஆனா”
“ஆனா என்ன?”
“அவங்க பொண்ணு ஏன் இப்படி இருக்கா?”
“ஏய் என்னடா சொல்ற”
“ஆமாம், முதல்ல அந்த பொண்ணை பார்த்து பயந்தே போயிட்டேன். மாரியாத்தா மாதிரி இருக்கா. ப்பா, அப்புறம் அவளுக்கு எதுக்கு நீங்க உங்களோட செயினை கொடுத்தீங்க? அது அப்பா உங்களுக்கு வாங்கிக் கொடுத்த கிஃப்ட் தான?” என்றான் அவினாஷ்.
“ஏய், ரொம்ப ஓவரா பேசாத. மஞ்சள் பூசி பெரிய பொட்டு வச்சா அப்படி தான் இருப்பாங்க. அவ ரொம்ப வெள்ளையா இருக்கா அதனால மஞ்சள் பூசியதும் அது நல்லா தெரியுது. அந்த கிஃப்டை நான் ஹர்ஷிதாவுக்கு கொடுத்தது என்னைவிட உங்க அப்பா தான் அதிகமா சந்தோஷப் படுவாரு. வேணும்னா கேட்டுப் பாரு” என்றாள் நிர்மலா.
அவன் திரும்பி சிவராமனை பார்க்க,
அவர் சிரித்து கொண்டே ‘ஆமாம்’ என்று தலை ஆட்டினார்.
அதிர்ச்சியாக பார்த்தான் அவினாஷ்.
“உனக்கு ஏன் டா இவ்வளவு கோபம்? சின்ன பொண்ணு டா அவ” என்றான் அர்ஜூன்.
“சின்ன பொண்ணு தான். ஆனா பார்க்க கிழவி மாதிரி இருக்கா” என்றான் அவினாஷ்.
“அவினாஷ், யாரையும் இந்த மாதிரி தோற்றத்தை வச்சு தப்பா கூடாது ன்னு எத்தனை முறை சொல்லியிருக்கேன்” என்றார் சிவராமன்.
“சாரி பா”
“நீ யாரையும் அந்த மாதிரி மஞ்சள் பூசி பார்த்தது இல்லல அதான் உனக்கு அப்படி தோணிருக்கு”
“இனிமே அப்படி பேச மாட்டேன்” என்று சொன்னாலும் ஏனோ அவனுக்கு ஹர்ஷிதாவை பிடிக்கவில்லை.
No comments yet.