பாகம் 3
விஷ்வா தன் நண்பர்களுடன் ஆஸ்பிட்டலுக்கு சென்றான்.
ஓ பி பில்டிங்கில் சென்று இன்ஜெக்ஷன் போட்டுக் கொண்டு கேன்டீனிற்கு சென்றனர்.
விமல் விஷ்வாவடம்….
மச்சான்… இங்க எப்படி டா அவள கண்டுபிடிக்கிறது?
அங்கு வேலை செய்பவரிடம் விஷ்வா சென்று… அண்ணா… இங்க காலேஜ் பில்டிங் எந்தப் பக்கம்?
அந்தப் பக்கம் தம்பி…. ஆனா படிக்கிற பசங்க, சொல்லிக் கொடுக்குற வாத்தியாருங்க, அப்புறம் டாக்டருங்க…. இவங்கள தவிர யாரும் அங்க போக முடியாது… என்றார் அவர்.
அப்போ யாரையாவது பாக்கனும்னா?
அவங்க பேரு, டிபார்ட்மெண்ட் எல்லாம் சொன்னா… அழைச்சிக்கிட்டு வருவாங்க…
ஹா ஹா ஹா என்று சிரித்தான் ஜானி…. பேரே தெரியாது இதுல டிபார்ட்மெண்ட் வேற சொல்லனுமாம்.
ஏய் மூடு டா என்றான் விஷ்வா…
தம்பி, லஞ்ச் டைம்ல நிறைய பேர் வந்து சாப்பிட்டுவிட்டு போவாங்க… அப்போ வேணும்ன்னா… வெயிட் பண்ணி பாருங்க ப்பா…
தேங்க்ஸ் அண்ணா… என்று சொல்லி ஒரு இரண்டாயிரம் ரூபாய் நோட்டை அவர் பாக்கெட்டில் வைத்தான்.
அவர் வாய் நிறைய புன்னகையுடன்…. தேங்க்ஸ் தம்பி… எப்போ வேணும்னாலும் என்னை வந்து பாருங்க என்று சொல்லி அவருடைய ஃபோன் நம்பரை மற்றும் பெயரை சொன்னார். அவருடைய பெயர் மணி.
மச்சி நம்ம காலேஜுக்கு போக வேண்டாமா? என்றான் கணேஷ்.
ஷ்ஷ்… என்றான் விஷ்வா.
மற்ற மூவரும் அங்கிருந்த பெண்களை பார்த்து ஜொல்லு விட்டுக் கொண்டு இருந்தனர்.
ஆனால் விஷ்வா அவளின்(ரேஷ்மி) நினைப்பிலேயே இருந்தான்.
மச்சி… அவள் விட இங்க இருக்கிற பொண்ணுங்கல பாரு டா… அவள மறந்திடுவ… என்றான் விமல்.
ஆனால் இவர்கள் பேசியதை எதையுமே காதில் வாங்காமல்…. அவள் அவன் கையை பிடித்து ஸ்டாப்… ஸ்டாப்… என்று கத்தியதையே நினைத்து கொண்டிருந்தான்.
லஞ்ச் டைம் வந்தது. அழகு தேவதைகள் ஊர்வலம் வருவது போல் பலர் வந்து போயினர். ஆனால் ரேஷ்மி வரவில்லை.
லஞ்ச் டைம் முடிந்தது.
தம்பி இதுக்கு மேல யாரும் வரமாட்டாங்க என்று சொன்னார் மணி.
மச்சி…. நாளைக்கு பஸ் ஸ்டாண்டில் பாதுக்கலாம் என்றான் ஜானி.
சரி என்று சொல்லி கிளம்பினான் விஷ்வா.
மறுநாள் பஸ் ஸ்டாண்டில் வெகு நேரம் நின்றார்கள் ஆனால் அவள் வரவில்லை. அன்று அவள் தன் அண்ணன் ராகவுடன் காலேஜ் சென்றுவிட்டாள். பிறகு அவர்கள் நால்வரும் அவர்களுடைய காலேஜுக்கு சென்றனர்.
அடுத்த இரண்டு நாட்களுமே…. அவர்கள் பஸ் ஸ்டாண்டில் வெயிட் செய்து பார்த்துவிட்டு காலேஜூக்கு போனார்கள்.
விஷ்வா… அவனுடைய நண்பர்களிடத்தில் கோபப் பட்டான். நீங்க எல்லாம் என்னோட பிரண்ட்ஸா டா? அந்த பொண்ணு பேரு கூட உங்களால கண்டுபிடிக்க முடியல…. சே…. என்று திட்டிவிட்டு சென்றுவிட்டான்.
அவன் சென்றவுடன்….
ஏய் என்னடா ஆச்சு இவனுக்கு…. அந்த பொண்ண நம்ம யாரும் ஒழுங்கா கூட பாக்கல… அவளே எதிர்ல வந்தா கூட நமக்கு தெரியாது…. நம்ம கிட்ட இவன் இப்படி கோச்சிக்கிறான். என்றான் கணேஷ்.
ஆமாம் டா…. நான் தான் இரண்டாயிரம் ருபாய் நோட்டை கொடுத்தேன்… எனக்கே அவ ஃபேஸ் நியாபகம் இல்லை என்றான் விமல். நம்மலால என்ன பண்ண முடியும்…
சரி வாங்க டா… அவன் கிட்ட போய் பேசலாம். இவன் இவ்வளோ சீரியஸ்ஸா அந்த பொண்ண தேடுவான்னு நினைக்கல என்றான் ஜானி.
மூவரும் சென்று…. மச்சி சொல்றோம் ன்னு கோச்சிக்காதா டா…. எங்களுக்கு அந்த பொண்ணோட முகம் கூட ஞாபகம் இல்லை…. நாங்க எங்க… எப்படி தேட முடியும் என்றான் விமல்.
ஒரு நிமிஷம் மௌனமாக இருந்து விட்டு பின்….
ஸாரி மச்சீஸ்…. என்று சொல்லி கிளம்பிவிட்டான்.
டேய் டேய் என்று மூவரும் கூப்பிட்டு கொண்டே இருக்க… அவன் காதில் வாங்காமல் காரை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டான்.
வைஷாலி விஷ்வாவிற்கு கால் செய்தாள்.
டேய்…. எங்கடா இருக்க?
என்ன வேணும் உனக்கு?
இல்லடா… என் கார் பஞ்சர் ஆயிடிச்சு. அதான் நீ இந்த பக்கம் இருந்தா அப்படியே உன் கூட வீட்டுக்கு போலாம் ன்னு பார்த்தேன்.
இல்ல… நான் வர லேட் ஆகும். அப்பாவுக்கு கால் பண்ணி வேற கார் அனுப்ப சொல்லு….
டேய்…. கால் பண்ணிட்டேன். அப்பா எடுக்கல. மீட்டிங் ல இருக்காரு போல… அம்மா கோவிலுக்கு போயிருக்கிறதா சொன்னாங்க…
மிச்…. கால் டாக்ஸி புடிச்சி போயேன்…. என்றான்.
எப்பவுமே அப்படி பேசாதவன் இவ்வாறு பேசுகிறான் என்றால் நிச்சயமாக ஏதோ பிரச்சனை என்று புரிந்து கொண்டாள் வைஷாலி.
ஓகே டா….ஸாரி என்றாள்.
அக்கா ஸாரி சொன்னவுடன் அவனுக்கு என்னவோ போல் ஆனது.
அக்கா…. ஸாரி என்றான் விஷ்வா.
விஷ்வா…. ஒண்ணும் பிரச்சனை இல்லை. நான் பாத்துக்கிறேன். நீ ஏதோ டென்ஷன் ல இருக்குன்னு தெரியுது. பாத்துக்கோ என்று சொல்லி ஃபோனை வைத்தாள் வைஷாலி.
அக்காவிடம் அவ்வாறு பேசியதை எண்ணி…. அவனே நோந்துக்கொண்டான்.
மெக்கானிக்கு கால் செய்து காரை எடுத்துக் போக சொல்லிவிட்டு.
அவளுடைய ஃபோனை எடுத்து கால் டாக்ஸி புக் செய்தாள்.
அவளுக்கு அந்த இருட்டில் நிற்க சற்று பயமாக தான் இருந்தது.
இருபது அடி தூரத்தில் பஸ் ஸ்டாண்ட் இருந்தது. அங்கே போய் நின்று கொண்டாள்.
வண்டி வந்ததும் அதில் ஏறி வீட்டிற்கு சென்றாள்.
மூன்று முறை கால் செய்தான் விஷ்வா.
அக்கா… எங்க இருக்க?
வண்டி புக் பண்ணிட்டு வெயிட் பண்றேன்…
ஓகே லைவ் லோகேஷன் ஷேர் பண்ணு….
சரி என்று ஷேர் செய்தாள்.
ஏன் ரொம்ப நேரம் அந்த சிக்னல்ல நிக்குது என்றான்.
டிராஃபிக் ஜாம் டா என்றாள் வைஷாலி.
ஓகே ஓகே…
வீட்டிக்கு போயிட்ட இல்ல….
அதான் நீயே லைவ் லோகேஷன் ல பாத்துட்ட இல்ல… அப்புறம் என்ன? என்று சிரித்துக் கொண்டே கேட்டாள். இதுக்கு நீயே வந்து என்னை பிக்கப் பண்ணிருக்கலாம்… என்று சிரித்துக் கொண்டே சொன்னாள்.
சரி வைக்கிறேன் என்றான் விஷ்வா.
அவன் பீச்சில் அமர்ந்து கொண்டு ரேஷ்மியை நினைத்து கொண்டே தன் கையிலிருந்த விஸ்கியை குடித்தான்.
ஏய்…. நீ எங்க டி இருக்க…. என்னை ஏன் இப்படி டார்ச்சர் பண்ற…. என்று கத்தி…. கையில் இருந்த பாட்டிலை தரையில் போட்டான். பீச் மணல் என்பதால் உடையவில்லை. கூட்டம் அதிகம் இல்லாததாலும் கடல் அலைகள் சப்தத்தினாலும் அவன் கத்தியது யாருக்கும் கேட்கவில்லை.
கிளம்ப சொல்லி ஒரு கான்ஸ்டபிள் வந்தார்… அங்கிருந்தவர்கள் கிளம்பினார்கள்…. விஷ்வா விடம் வந்து கிளம்ப சொன்னார்.
கிளம்பனுமா? முடியாது…. என்ன பண்ணுவீங்க…. என்றான்.
டேய்…. தண்ணி அடிச்சிருக்க…. ஒழுங்கா போயிடு…. அப்புறம் உள்ள தூக்கி உக்கார வச்சிடுவேன்.
என்னை உள்ள வைப்பியா? அவ்ளோ தைரியம் இருக்கா உனக்கு? என்னை யாருன்னு நினைச்ச?
தம்பி…. மரியாதையா பேசு…. கிளம்புற வழியை பாரு….
முடியாது…. உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ என்று மண் தரையில் உட்கார்ந்து கொண்டான்.
அவர் விசில் அடித்து இன்னொரு கான்ஸ்டபிளை வரவழைத்து அவனை இழுத்துக் கொண்டு போலீஸ் ஜுப்பில் ஏற்றினார்கள்.
ஏய்… நான் யாருன்னு தெரியாம இப்படி பண்றீங்க…
சார் இவனை பார்த்தா பெரிய இடத்து பையன் மாதிரி இருக்கான்… என்றார் இன்னொரு கான்ஸ்டபிள்.
இருக்கட்டுமே… அதுக்காக அவன் என்ன பேசினாலும் நாம சும்மா இருக்க முடியுமா என்று சொல்லி போலீஸ் ஸ்டேஷன் அழைத்து சென்று அங்கிருக்கும் பெஞ்ச் சில் உட்கார வைத்தனர். குடி மயக்கத்தில் இருந்தான் விஷ்வா.
தொடரும்….
அ. வைஷ்ணவி வைஷ்ணவி
பாகம் 4
இரண்டு மணிநேரத்திற்கு பிறகு விஷ்வா மயக்கத்தில் இருந்து கொஞ்சம் தெளிந்தான்.
சார்…சார்…. என்றான்.
என்னப்பா தெளிஞ்சிரிச்சா?….
ஸாரி சார்…. என்றான்.
அப்போ நீ என்ன பேசின ன்னு உனக்கு ஞாபகம் இருக்கு இல்ல?
ஆமாம் சார்… தெரியாம பேசிட்டேன்…
சரி உங்கப்பா நம்பர் கொடு அவர் கிட்ட பேசறேன்.
அய்யோ வேணாம் சார்…
அப்போ கேஸ் ஃபைல் பண்ணிடவா?
அய்யையோ… வேணாம் சார்…
தன் பாக்கெட்டில் கை விட்டு பார்த்தான் ரூபாய் நோட்டுகளை காணவில்லை. அனைத்தையும் செலவழித்து விட்டேனா? இல்ல கீழ் எங்கயாவது விழுந்திடிச்சா? இல்ல இந்த போலீஸ்காரங்க நான் மயக்கத்தில இருக்கும் போது எடுத்துக்கிட்டாங்களா? என்று யோசித்தான்.
என்ன தேடற தம்பி?
இந்த ஃபோனையா? என்று அவன் ஃபோனை எடுத்து கொடுத்தார்கள்.
ஃபிங்கர் பிரிண்ட் வச்சிருப்பன்னு நினைச்சு உன்னோட விரலெல்லாம் வச்சு பாத்தோம் எதுவும் வரல…
அடப்பாவிங்களா என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டே… ஃபோனை வாங்கி நம்பர் பாஸ்வேர்டு போட்டு ஓப்பன் செய்து… அவனின் கம்பனியில் வேலை செய்யும் ராஜசேகருக்கு கால் செய்தான்.
நான் விஷ்வா பேசறேன்…
சொல்லு தம்பி….
நான் பிராட்வே போலீஸ் ஸ்டேஷன் ல இருக்கேன். நீங்க கொஞ்சம் வரீங்களா?
அவனிடம் இருந்து ஃபோனை வாங்கிய கான்ஸ்டபிள்…
சார், நான் கேஸ் எதுவும் ஃபைல் பண்ணல…. நீங்க நேரா வந்து பேசிட்டு கூட்டிக்கிட்டு போங்க…. என்றார்.
சரி சார்… நான் வரேன். என்று சொல்லி ஃபோனை வைத்துவிட்டார்.
ராஜசேகர் தன் மகன் ராகவிடம்…
ராகவ், என் முதலாளி மகன் விஷ்வா போலீஸ் ஸ்டேஷன் ல இருக்கான். நான் போயிட்டு வரேன்…
அப்பா… இருங்க நான் கூட்டிகிட்டு போறேன்.
வேணாம் பா… நீ இப்போ தான வந்த…
நீங்க மட்டும்…. அதெல்லாம் ஒன்னும் இல்லை வாங்க அப்பா என்று கூறி அவனுடைய பைக்கில் கூட்டிச் சென்றான்.
போலீஸ் ஸ்டேஷனில்…
அப்பா… நான் வெளியே நிக்கறேன்.
நீங்க போய் பேசிட்டு வாங்க…
சரி என்று உள்ளே சென்றவர்…. பேசிவிட்டு (கொடுக்க வேண்டியதை கொடுத்து விட்டு)
சார் கூட்டிக்கிட்டு போலாமா?
பேரண்ட்ஸ் வந்தா தான் அனுப்புவோம். அவங்க வரமுடியல ன்னு நீங்க கேட்டுக்கிட்டதால…. இப்போ அனுப்புறோம்…
சார்…தேங்க் யூ…. என்றார் ராஜசேகர்.
விஷ்வா கான்ஸ்டபிளிடம்… ரியலி சாரி என்றான் இன்னொருமுறை…
மறுபடியும் இப்படி பண்ணாத ப்பா… என்றார் கான்ஸ்டபிள்.
விஷ்வாவை வெளியே கூட்டி வந்தார் ராஜசேகர்.
அங்கிள் தேங்க்ஸ்…. சாரி இந்த டைம் ல உங்கள டிஸ்டர்ப் பண்ணதுக்கு…
தம்பி… அப்பாவுக்கு தெரிஞ்சா….
அய்யோ வேணாம் அங்கிள் சொல்லிடாதீங்க… பிளீஸ்…. முக்கியமா அக்கா கிட்ட சொல்லாதீங்க….
தப்பா நினைச்சுக்காதீங்க தம்பி…. இதுவே ஃபர்ஸ்ட் அன்ட் லாஸ்டா இருந்தா ஓகே….
கண்டிப்பா அங்கிள்… என்னை பத்தி தெரியாதா உங்களுக்கு?
வாங்க ஆட்டோல போய் பீச் பார்க்கிங் ல இருக்குற என்னோட காரை எடுத்துக்கிட்டு போலாம். நானே உங்கள வீட்ல டிராப் பண்ணிடறேன்.
இல்லப்பா… வேணாம் என் பையன் வெயிட் பண்றான்….
ஓ… அப்படியா… எங்க?
அதோ…
ஹாய்… என்று கையை ஆட்டினான் விஷ்வா.
பார்த்தும் பார்க்காதது போல ஃபோனில் பேசிக் கொண்டிருந்தான் ராகவ்.
சரி… அவர் ஃபோன்ல பிஸியா இருக்கார் போல… அவர் கிட்டயும் தேங்க்ஸ் சொன்னேன்னு சொல்லிடுங்க அங்கிள்.
சரிப்பா… நீ பாத்து பத்திரமா போ….
ஓகே அங்கிள்… பை….
ராமகிருஷ்ணன் சாருக்கு இப்படி ஒரு பையன்… என்று நினைத்து கொண்டார்.
ராகவ்… ஃபோன்ல யாரு?
நம்ம ரேஷ்மி தான் பா… எப்போ வருவீங்க? என்னாச்சு ன்னு கேட்டா….
ஓ… சரிப்பா வா போலாம்…
பைக்கில் செல்லும் போது…
இவன் எப்பவுமே இப்படித்தானா அப்பா….
யாரு விஷ்வா வா?
ஆமாம்…
இதுவரைக்கும் இல்ல… இப்போ தான் முதல் முறையா இப்படி நடந்துச்சு…. பணக்கார பையன் ல அதான்…. அவனோட ஒரே நல்ல குணம் என்னன்னா…. பெரியவங்க கிட்ட மரியாதையா பேசுவான். மத்தபடி எந்த ஒரு நல்ல விஷயமும் அவன் கிட்ட இருக்குற மாதிரி எனக்கு தெரியல …. என்றார் ராஜசேகர்.
பாவம் அவனை கட்டிக்க போற பொண்ணு… என்றான் ராகவ்.
(பாவம் அவனுக்கு தெரியாது அது அவன் தங்கை ரேஷ்மி தான் என்று)
அதற்கு மேல் எதுவும் பேசாமல் வீடு வந்து சேர்ந்தனர்.
ரேஷ்மி அப்பாவிற்காகவும் அண்ணனிற்காகவும் சாப்பிடாமல் வெயிட் பண்ணி கொண்டிருந்தாள்.
டைனிங் டேபிளில் அமர்ந்து மூவரும் சாப்பிட கனகவள்ளி பரிமாறிக் கொண்டிருந்தார்.
ஏம்மா… நீ சாப்பிடல என்றான் ராகவ்.
அதெல்லாம் மொதல்லையே ஆயிடுச்சு…என்றாள் ரேஷ்மி.
ஏய்… என்று அவளின் தோளில் லேசாக தட்டிவிட்டு… கண்ணா ஷுகர் மாத்திரை போட்டுகிட்டு சாப்பிட்டுட்டேன் பா….
ஓ… சரிம்மா…
ராஜசேகரிடம் கனகவள்ளி
ஏங்க… என்னாச்சு… ஏன் டல்லா இருக்கீங்க…
இல்ல ராமகிருஷ்ணன் சாரோட பையன குடிச்சிட்டு கலாட்டா பண்ணான் போலீஸ் ஸ்டேஷன் வச்சிருந்தாங்க… அவர் எவ்ளோ நல்லவர் தெரியுமா… அவருக்கு இப்படி ஒரு பையன்…. அதை அவர் கிட்ட சொல்ல வேண்டாம் ன்னு சொன்னான். ஆனா சொல்லாம இருக்க எனக்கு மனசு கேக்கல… அவர் கிட்ட எல்லா விஷயங்களையும் சொல்லிடுவேன்… அதான் ஒரே யோசனையா இருக்கு.
அப்பா…. இதுக்கு நீங்க ஏன் டென்ஷனா இருக்கீங்க… உங்களுக்கு சொன்னா நல்லதுன்னு தோணுச்சு ன்னா சொல்லுங்க… இல்லைன்னா விடுங்க…. அவன் பணக்கார திமிர் ல ஆடுவான்… அவன் பேச்சை நீங்க கேட்டு நடக்கனுமா? என்றான் ராகவ்.
அண்ணா…. நான் சொல்ல மறந்திட்டேன்… அன்னைக்கு நான் பஸ்ல போனேனே அன்னைக்கு ஒருத்தன் பிரெண்ட்ஸ் கிட்ட பெட்டு கட்டி வெளி பக்க ஜன்னல் கம்பியை பிடிச்சிக்கிட்டே பஸ் ஃபிரண்ட் டோர் வரைக்கும் போறதுக்கு டிரைவர் அப்புறம் கன்டெக்டருக்கு ஐநூறு ரூபாய் நோட்டு கட்டை கொடுத்தான்…. அப்புறம் பஸ்ஸில் இருந்த எல்லாருக்குமே இரண்டாயிரம் ருபாய் நோட்டு ஒன்றை கொடுத்தான். நீ பணக்கார பையன் ன்னு சொன்னதும் அவன் ஞாபகம் வந்துச்சு…
ஏய்… நீ ரூபாய் நோட்டை வாங்கினியா டீ? என்றார் அம்மா.
ஒருத்தன் என் கைல திணிச்சிட்டு போனான்….
அப்புறம்… என்று ஆர்வமாக கேட்டாள் கனகவள்ளி.
அந்த ஜன்னலை புடிச்சி கிட்டு அவன் வரும்போது ஸ்லிப் ஆயிட்டான்…. நல்லவேளை நான் அவன புடிச்சேன் இல்லன்னா… பஸ் வீல்ல மாட்டி செத்திருப்பான்…
அய்யோ… அப்புறம்… என்றாள் அம்மா.
பஸ் நின்றதும்… நான் கீழே இறங்கி அவனை நல்லா திட்டி தீர்த்து விட்டேன். உனக்கு அறிவில்லையா ன்னு?…அவன் கொடுத்த காசை அவன் கையிலே வச்சிட்டு வந்திட்டேன்…
ஏய், நீ ஏன் தேவையில்லாமல் முன்ன பின்ன தெரியாதவன் கிட்ட பேசின? என்றான் ராகவ்.
பேசினாளா? திட்டி இருக்கா…. அவன் வேற பணக்கார பையன் ன்னு சொல்றா… எனக்கு பயமா இருக்கு டா ராகவ்… இவள எதாவது பண்ணப் போறான் ன்னு…என்றாள் கனகவள்ளி.
அம்மா… சும்மா இருமா… அதெல்லாம் ஒன்னும் ஆகாது. நீ தேவையில்லாம பயந்து அவளையும் பயமுறுத்தாதே… என்றான் ராகவ்.
சரி சாப்பிட்டு விட்டு சீக்கிரம் போய் படு…. என்று சொல்லி ராகவ் சாப்பிட்ட தட்டை எடுத்து கொண்டு எழுந்து சென்றான்.
ராஜசேகரும் சாப்பிட்டு விட்டு சென்றுவிட்டார்….
அம்மா சொன்ன பிறகு அவளுக்கு பயம் தொற்றிக் கொண்டது. நான் ஓவரா தான் பேசிட்டேனோ…. ஏதாவது பிரச்சனை பண்ணுவானா? அவன் நல்லதுக்கு தானே நம்ம சொன்னோம்…. மருந்து எல்லாம் போட்டு விட்டோமே… என்று பலவாறு யோசித்துக் கொண்டு இருந்தவளை உளுக்கிய கனகவள்ளி…
என்னடி?…
ஒண்ணுமில்ல மா… அவன் என்னை எதாவது செஞ்சிடுவானா? என்றாள் பாவமாக முகத்தை வைத்து கொண்டு.
ஏய்… இதெல்லாம் பேசறதுக்கு முன்னாடி யோசிக்கனும்….
அம்மா…. முடிஞ்சத பத்தி பேசாத….
சரி… போய் படு… இன்னும் ஒரு பத்து பதினஞ்சு நாளைக்கு அண்ணனோட காலேஜூக்கு போ…பஸ்ல போகாத…. உன்னால எனக்கு தான் கஷ்டம்….
ஏம்மா…
நான் இப்போ பஸ்ல போகனுமே….
அம்மா… என்று அழுத்தி கூறினாள்.
கட்டிலில் படுத்த பிறகும் வெகு நேரம் தூக்கம் வரவில்லை ரேஷ்மிக்கு.
ஒரு பத்து நாள் அண்ணன் கூட போயிட்டு… அப்புறம் என் பிறந்தநாளுக்கு அப்பாவும் அண்ணாவும் வாங்கி தரும் பைக்கை எடுத்துக்கிட்டு போகனும்… அதுவும் பஸ் ரூட்ல போகக் கூடாது. ஒரு அஞ்சு இல்ல பத்து நிமிஷம் தான என்னை பார்த்தான்….ஒரு மாசத்துக்கு அப்புறம் நானே அவன் முன்னாடி போய் நின்னாலும் அவனுக்கு தெரியாது என்று நினைத்து கொண்டாள்.
பாவம் அவளுக்கு தெரியவில்லை அவளின் முகம் அவன் கண்களில் அல்ல அவன் இதயத்தில் அச்சிடப் பட்டிருக்கிறதென்று.
தொடரும்….
அ. வைஷ்ணவி விஜயராகவன்
No comments yet.