பாகம் 3

Vaishnavi Vijayaraghavan | 03 May 2026 | Share



தொடர்பியல்….. பாகம் –3


கேஸ் -1 (சங்கவி – கிஷோர்)

ஃபார்மாலிட்டீஸ் எல்லாம் முடித்து விட்டு ஸ்டேஷனில் போய் சைன் செய்து விட்டு பதினோரு மணிக்கு வீட்டிற்கு வந்து படுத்தான் மாதவன். 


ஹாய் டி…. தூங்கறீயா?…. என்று மெஸேஜ் செய்தான்.

இல்ல…. துணி துவைக்கிறேன்…. என்று தூக்க கலக்கத்தில் வாய்ஸ் மெஸேஜ் செய்தாள் ராகினி.

ஏன்டி கோச்சிக்கிர?.

பின்ன என்னடா…. தூங்கிறவங்களை எழுப்பி தூங்கறீயா ன்னு கேட்டா கோபம் வராதா?… 

கால் பண்ணவா?…  

என்ன விஷயம்…. 

உன் குரலை கேட்க தான்…. 

ஏய் லூசு…. வாய்ஸ் மெஸேஜ் தான அனுப்பறேன்…. அதுல குரல் தான இருக்கு?… 

இல்ல டி…. நான் கால் பண்றேன்…. சரியா?… .

உனக்கு தூக்கம் வரும் வரை இப்போ மொக்கை போடனும்…. அதானே…. 

கரெக்டா கண்டுபுடிச்சிட்டியே…. என்று டைப் செய்து சிரிக்கும் எமோஜிகளை அனுப்பினான்.

அவளே கால் செய்தாள்.

என்னடா? சொல்லு….

எதுக்காக விக்டிம் நேம் கேட்ட டி?….

அது ஒரு பெரிய கதை…. நாளைக்கு சொல்றேன்…. தூக்கம் வருது…. பை….

எனக்கு தூக்கமே வரவில்லை …. நீ சொல்லு….

சரி…. அதுக்கு முன்னாடி நீ சொல்லு…. காலைல நான் ரெடி ஆகாம இருந்தேன்…. உன் கூட பேசின பிறகு தான் நான் குளிச்சிட்டு ரெடியானேன்னு உனக்கு எப்படி தெரியும்.

அதான் சொன்னேனே நான் போலீஸ்காரன்னு….

ஏய் ஓவர் பில்டப் வேணாம்…. சொல்லு…. எப்படி கண்டுபிடிச்ச?

அது ரொம்ப ஸிம்பிள்…. நீ வழக்கமா ரெடி ஆகிருந்தா…. யெல்லோ குர்த்திக்கு மேட்சா யெல்லோ இயரிங்க்ஸ் போட்டு இருப்ப…. ஆனா இன்னைக்கு நீ பிளாக் இயரிங்க்ஸ் போட்டிருந்த…. அப்புறம் செருப்பு கூட போட்டிருந்த…. நீ ஜீன்ஸ் போட்டா உன்னோட ஸ்போர்ட்ஸ் ஷூ தான் போடுவ…. ஸோ…. உனக்கு டைம் இல்ல…. அதனால நான் வரதுக்குள்ள ரெடியாகனும்னு…. நீ இதெல்லாம் மாத்தி போட்டுக்கிட்ட…. கரெக்டா?

சூப்பர் டா…. உண்மையிலேயே நீ மூளைக்காரன் தான்…. என்று சொல்லி சிரித்தாள்.

சரி இப்போ நீ சொல்லு…. 

ஏய் டைம் ஆகுது டா…. இப்போ தான் ரம்யா கிட்ட சொன்னேன்…. மறுபடியும் உன் கிட்டேயும் சொல்ல சொல்ற….

ஏய்…. சொல்லு டி…. என் கிட்ட தான் முக்கியமா சொல்லனும்….. 

சரிடா என்று சொல்லி விட்டு…. தன் கனவையும் அவளுடைய சந்தேகத்தை தீர்க்கவே பெயரை கேட்டேன் எனவும் சொல்லி முடித்தாள் ராகினி.

கனவுல வந்ததால கேட்டியா…. லூசு….

ஏய்…. அது கனவு மாதிரி இல்ல டா…. உண்மையிலேயே என் கண் முன்னாடி நடந்த மாதிரி இருந்துச்சு….

ஏற்கனவே உனக்கு எதாவது கனவு வந்து… அது நடந்திருக்கா?

இல்ல டா….

அப்புறம் எதுக்கு பயந்த…. எதாவது திரில்லர் மூவி பார்த்திருப்ப… இல்ல லேப்ல கேஸஸ் எப்படி வரும் ன்னு யோசிச்சிக்கிட்டே தூங்கி இருப்ப…. அதான் உனக்கு அப்படி கனவு வந்திருக்கு.

ஹூம்…. 

சரி போய் தூங்கு…. நாளைக்கு நான் வரவா உன்னை பிக்கப் பண்ண?

எதுக்கு பாதியில் இறக்கி விட்டு விட்டு போகறதுக்கா?

ஒரு நாள் பண்ணா…. அதையே சொல்லுவியா?

என்னது ஒரு நாளா?…. உன் மனசை தொட்டு சொல்லு?

சரி…. ஒரு ரெண்டு மூணு முறை….

ஏய்….

சரி ஒரு நாலு அஞ்சு….

ஹூம்….

அடியேய்…. நான் கணக்கு வச்சிக்கில டி.

இந்த ஆறு மாசத்துல மட்டும் எட்டு முறை….

அவ்வளவா?‌…. சரி அதைவிடு…. ஒருநாளைக்கு ஒரு வேளையாவது உன்னை பார்க்கலைன்னா எனக்கு வேலையும் ஓடாது நைட்ல தூக்கமும் வராது.

ரம்யா அவளோட பைக்கை எனக்கு தரா…. அவ ஒன் மன்த் டிரெயினிங்கிற்காக டெல்லிக்கு போறா…. ஸோ…. அதுவரை அவ பைக்கை நான் யூஸ் பண்ணிக்குவேன்…. இந்த ஒன் மன்த் நான் யாரையும் நம்பி இல்ல…. என்றாள்.

சரிம்மா…. எத்தனை மணிக்கு போவ லேபுக்கு?….

நைன் தர்டி…. 

சரி…. அங்கே ஜங்ஷன்ல மீட் பண்ணலாமா?

நீ கரெக்ட் டைமுக்கு வருவீயா?

பிராமிஸ்….

ஓகே…. நைன் பிஃப்டீன் வரைக்கும் வெயிட் பண்ணுவேன். நீ வரலைன்னா…. கால் பண்ணாலும் எடுக்க மாட்டேன். நாளைக்கு ஃபுல் டே…. உன் கிட்ட பேச மாட்டேன். சரியா?…. என்றாள் ராகினி.

ஓகே டி…. டீல்….. பை…. குட் நைட்டு…. நாளைக்கு மார்னிங் மீட் பண்ணலாம். 

பை டா…. குட் நைட்டு….

ராகினி ஒரு நிமிஷம்….

ஹாங்…. என்னடா….

பைக் ஓட்ட தெரியுமா டி?….லைசென்ஸ் வச்சிருக்கியா ?…..

ஏய்…. என் ஊர்ல புல்லட்டே ஓட்டி இருக்கேன்….

லைசென்ஸ்?

இருக்கு….

எங்க ஊர்லையா? லைசென்ஸ் ஊர்ல வச்சிட்டு இங்க வண்டி ஓட்ட முடியாது டி செல்லம்….

அய்யே…. ஜோக்கா…. சிரிப்பு வரலை…. பை…. என்று சொல்லி விட்டு ஃபோனை வைத்து விட்டு சிரித்தாள் ராகினி.

ஃபோனை வைத்து விட்டு சிரித்துக் கொண்டே தூங்க சென்றான் மாதவன்.

காலை எழுந்து கிளம்பினார்கள் ராகினி மற்றும் ரம்யா.

டார்க் ரோஸ் குர்தி மற்றும் பிளாக் ஜீன்ஸில் ராகினி தயாராகி நின்றாள். இப்போது நிறையவே டைம் இருந்ததால் மேட்சிங் கம்மல் மற்றும் ஷூ போட்டு கொண்டு ரெடியாகினாள். மாதவன் சொன்னது நியாபகம் வர சிரித்துக் கொண்டே கிளம்பினாள்.

என்னடி இன்னைக்கு ஒரே ஜாலி மூடுல இருக்கிற போல…. மாதவனோட ஃபர்ஸ்ட் நைட்டு கனவா?

ஏய்…. உன்னை…. என்று சொல்லி விட்டு ரம்யாவின் தோளில் அடித்தாள் ராகினி.

சரி சரி வா டைம் ஆகுது கிளம்பலாம் என்று சொல்லி வண்டியில் கிளம்பினார்கள்.

ரம்யாவை ரயில்வே ஸ்டேஷனின் வெளியே டிராப் செய்துவிட்டு கிளம்பினாள் ராகினி.

பை ரம்யா…. டேக் கேர்…. டெய்லி நைட்டு கால் பண்ணு….

ஓகே ராகினி…. நீயும் ஜாக்கிரதையா இரு…. பை…. என்றாள் ரம்யா.

ரம்யா உள்ளே சென்றதும் பைக்கை ஸ்டார்ட் செய்து கிளம்பினாள் ராகினி.
அப்போது 

சங்கவி….. என்று ஒரு ஆணின் குரல் கேட்டது.

வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு குரல் கேட்ட திசையில் சென்றாள் ராகினி.

அங்கே பேக்குகள் அடுக்க பட்டிருந்தது. அதன் பக்கத்தில் இருந்த பில்லரின் பின் பக்கமாக இருவர் மறைவாக நின்று பேசிக் கொண்டு இருந்தனர்.

கிஷோர் விடுங்க…. யாராவது பார்க்க போறாங்க….

நான் வர வரைக்கும் தாங்கும் படி ஒண்ணு ஸ்டிராங்கா கொடு சங்கவி….

அதான் வீட்டிலேயே கொடுத்திட்டேனே…. 

இப்போ ஒண்ணு கொடு….

நோ நோ…. பப்லிக் பிலேஸ்…. நான் மாட்டேன்….

சங்கவி…. நான் கொடுக்கிறேன் என்று சொல்லி அழுத்தமாக அவளுடைய உதட்டில் முத்தம் கொடுத்தான் கிஷோர்.

ராகினி சங்கவியை தேடிக் கொண்டு சென்றாள்.

கிஷோர்…. நீங்க இல்லாம இந்த ஒரு வாரம் நான் எப்படி இருப்பேன்…. நீங்க வரும் வரை இந்த ஊரே எனக்கு நரகம் போல இருக்கும்…. என்றாள் சங்கவி.

இதை கேட்டாள் ராகினி. அவளுடைய கண்கள் விரிந்தது. மறைவாக நின்று கிஷோர் மற்றும் சங்கவியை பார்த்தாள்.

சீக்கிரமா வந்திடறேன் டி…. டெய்லி நைட்டு வீடியோ கால் பண்றேன்…. அப்புறம் காலைல உனக்கு கால் பண்ணி குட் மார்னிங் சொல்லிட்டு தான் பெட்டை விட்டு எழுந்திருப்பேன். ஓகே வா….

சரிங்க…. ரீச் ஆயிட்டு கால் பண்ணுங்க….

சரிம்மா…. நீ ஜாக்கிரதையா இரு…. பை…. என்று சொல்லி விட்டு டிரெயினில் ஏறினான் கிஷோர்.

ராகினியை அந்த பிளாட்பாரத்தில் பார்த்தாள் ரம்யா.

என்னடி…. டைம் ஆகுதுன்னு சொல்லி வெளியேவே டிராப் பண்ணிட்டு போன…. இப்போ பிளாட்ஃபார்ம் கண்டுபிடிச்சு ஸெண்டு ஆஃப் பண்ண வந்திருக்க…. என்றாள் ரம்யா ராகினியை பார்த்து.

ஏய்…. நான் உன்னை பார்க்க வரல டி….

பின்ன?…. யாரை பார்க்க வந்த?

பார்க்க வரலை…. தேடி வந்தேன்….

அதான் யாரை தேடி வந்த?

சங்கவியை….

என்ன?….

அதற்குள் ரயில் சிக்னல் ஒலித்தது. 

சரி சரி டிரெயின் கிளம்புது…. பை…. நீ பார்த்து போ….

ஓகே டி…. பை…. என்றாள் ராகினி.

டிரெயின் கிளம்பியதும்…. கணவனின் பிரிவால் கண்கள் கலங்க திரும்ப நடந்தாள் சங்கவி.

ஹலோ…. எக்ஸ்கியூஸ் மீ….. என்றாள் ராகினி.

யெஸ்…. என்று கண்களை துடைத்துக் கொண்டு திரும்பி கேட்டாள் சங்கவி.

என் பெயர் ராகினி.

ஓகே…..

நீங்க சங்கவி தானே….

ஆமாம்…. உங்களுக்கு எப்படி தெரியும்.

நான் சொல்றதை நம்புவது உங்களுக்கு கஷ்டம் தான். ஆனா சொல்றேன்.

என்ன சொல்ல வரீங்க…. சுத்திவலைக்காம ஸ்டிரெயிட்டா விஷயத்துக்கு வாங்க.

உங்க ஹஸ்பண்ட் கிஷோர்…. பிசினஸ் விஷயமா இப்போ வெளியூர் போகல….

வாட்….

ஆமாம் மேம்….. அவருக்கு…. அவருக்கு….

அவருக்கு?

ரோஸின்னு லவ்வர் இருக்காங்க…. அவங்க கூட தான் போயிருக்காரு.

ஷட்டப்…. ஹூ ஆர் யூ…. ஹௌ டேர் யூ டாக் அபௌட் மை ஹஸ்பண்ட் லைக் திஸ்…..(shut up, who are you, how dare you talk about my husband like this)

மேடம்…. பிளீஸ்…. புரிஞ்சிக்கோங்க….. நான் உண்மையிலேயே தான் சொல்றேன்…..

ஷட்டப்…. இடியட்…. என்று திட்டி விட்டு கிளம்பினாள்.

மேடம்…. உண்மையை தெரிஞ்சு…. நீங்க தப்பான முடிவுக்கு போவீங்க…. அதை தடுக்க தான் நான் உங்க கிட்ட இப்போ பேசிக்கிட்டு இருக்கேன்.

ஸ்டாப் இட் ராகினி… இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசினீங்க… போலீஸ் கிட்ட கம்ப்ளெயின்ட் பண்ணிடுவேன்….. என்றாள் சங்கவி.

ரம்யாவின் கால் வந்தது….

இதுதான் சமயம் என்று சங்கவி வேகமாக நடந்து சென்றாள்.


ஃபோனை எடுத்து பேசிக்கொண்டே சங்கவியை பின் தொடர்ந்தாள் ராகினி.

ஹலோ ரம்யா…. நான் அப்புறமா பேசுறேன் டி…..

ஒன் மினிட் ராகினி…..

என்ன?…..

நீ சொன்ன கிஷோர் அன்டு ரோஸி…. என்னோட ஆப்போஸிட்ல தான் உட்கார்ந்து இருக்காங்க…. நான் டாய்லெட்டுக்கு வந்து உனக்கு கால் பண்றேன்…. நீ சங்கவியை தேடி வந்த ன்னு சொல்லும் போது கூட நான் நம்பல…. ஆனா இவங்க ரெண்டு பேரும் சங்கவின்னு பேசிக்கிட்டாங்க…. அப்புறம் அவன் ரோஸி ன்னு கூப்பிட்டான்…. இவ கிஷோர் ன்னு சொன்னா…. அப்புறம் தான் நீ சொன்ன நேம்ஸ் எல்லாம் வருதே ன்னு யோசிச்சேன்….. அதான் உனக்கு உடனே கால் பண்ணேன்.

ரம்யா…. சூப்பர் டி…. தேங்க்ஸ்…. தேங்க் யூ ஸோ மச்….. நான் சங்கவி கிட்ட புரிய வைக்க ஒரு நல்ல சேன்ஸ் கிடைச்சிருக்கு…. நீ அவங்களுக்கு தெரியாம ஒரு ஃபோட்டோ எடுத்து எனக்கு அனுப்பு…..

ஏய்…. எனக்கு பயமா இருக்கு டி…..

பிளீஸ் ரம்யா…. நம்மலால ஒரு லைஃப் காப்பாத்த முடியும்ன்னா அதுக்காக ரிஸ்க் எடுக்கலாம் டி….

ஓகே டி…. உனக்காக நான் டிரை பண்றேன்….

தேங்க்ஸ் டி….. என்று சொல்லி விட்டு சங்கவியை தேடிச் சென்றாள் ராகினி.



தொடரும்…..
அ. வைஷ்ணவி விஜயராகவன்.






 





இந்த episode பிடிச்சிருந்தா எழுத்தாளரை உற்சாகப்படுத்துங்க!!
இப்போதே உற்சாகப்படுத்துங்கள்

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

No votes so far! Be the first to rate this post.

    No comments yet.