பாகம்-29,30

Vaishnavi Vijayaraghavan | 28 Apr 2026 | Share

பாகம் 29


 எதுக்குடா ரெபேக்காவை தொல்லை பண்ணணும்னு சொல்ற என்றான் விஹான்.


 அவ தொல்லையா நினைப்பான்னு எனக்கு தோணலடா.


 சரி நான் பேசி பார்க்கிறேன். ஆனா நான் அவளை கம்பல் எல்லாம் பண்ண மாட்டேன்.


 நீ கம்பெல் பண்ண வேண்டாம். அவ உன்ன ரொம்ப சின்சியரா லவ் பண்றா. நீ கேட்டன்னா கண்டிப்பா அவ வருவா.


சரி மச்சி.


 அப்புறம் மச்சி, நீ இந்த மாதிரி டல்லா இருந்தாலே ஏதோ பிரச்சனைன்னு கண்டிப்பா அவளுக்கு தெரிஞ்சிடும். அதனால நார்மலா இரு. அவ என்கிட்ட என்ன சொன்னா தெரியுமா?


 என்ன சொன்னா?


 ஏற்கனவே தீபக் பிரச்சனையால எனக்கு டென்ஷனா இருக்கு, இதுல அண்ணாவுக்கும் ஏதாவதுன்னா என்னால தாங்கிக்க முடியாதுன்னு சொன்னா. உன் முகத்தை பார்த்தே அவ கண்டுபிடிச்சிட்டாடா.


 டாக்டர் அப்படி சொல்லும் போது நான் எப்படிடா நார்மலா இருக்க முடியும்.


 நார்மலா இருந்து தான்டா ஆகணும். அவளுக்கு வேற யாரு இருக்கா சொல்லு.


 சரி மச்சி சாரி டா.


 என்கிட்ட எதுக்குடா சாரி சொல்ற. 


 எனக்கு ஒண்ணுமே புரியல டா.


 கவலைப்படாத, நீ ஆபீஸ் விஷயமா ஊருக்கு போறத போயிட்டு வா. ரெபேக்காவ வந்து இங்க ஸ்டே பண்ண சொல்லு. நான் அடிக்கடி வந்து பார்த்துட்டு போறேன். அவங்களுக்கு ரெண்டு பேருக்கும் என்ன தேவையோ வந்து நான் வாங்கி கொடுத்துட்டு போறேன்.


 ஓகே மச்சி தேங்க்ஸ் டா.


 இன்னைக்கு நைட்டு இங்கே இருக்கியா.


 வேற வழி, அண்ணனும் தங்கச்சியும் தான் என்னை போக கூடாதுன்னு சொல்லிட்டீங்களே.


 விருத்திகாவும் சொன்னாளா?  


 ஆமா, என்கிட்ட தான் நீ மனசு விட்டு பேசுவியாம் அதனால இங்க தங்கி உன் கூட  

 இருந்து உன்னோட பிரச்சனையை என்கிட்ட சரி செய்ய சொல்லி சொன்னா.


 ஓகே மச்சி. சரி நீ போய் உன் ஆபீஸ் வேலைய பாரு நான் நம்ம மூணு பேருக்கும் டின்னர் செய்யறேன்.


 ஓகேடா.


ரோஹித் மறுபடியும் ஹாலில் வந்து அமர்ந்து வேலைகளை தொடர்ந்தான். 


 டீ போட்டு எடுத்து வந்து ரோஹித்திடம் ஒரு கிளாஸ் கொடுத்துவிட்டு, விருத்திகா இன்னும் எழுந்தரிக்காததால் அவளுக்கு போட்ட டீயை கிச்சனிலேயே வைத்து மூடிவிட்டு தனக்கு ஒரு டம்ளர் டீ எடுத்து வந்து ஹாலில் அமர்ந்து குடித்தான் விஹான்.


 ரெபேக்கா கிட்ட பேசுனியா டா.


 இப்ப தானடா கிச்சனுக்கு போய் டீ போட்டு எடுத்துட்டு வந்தேன். அதுக்குள்ள நான் எங்கடா பேசி இருப்பேன்.


 சரி சரி விருத்திகா எழுந்துக்கறதுக்குள்ள நீ போய் பேசிட்டு வந்துரு.


 ஓகே மச்சி என்று சொல்லி டீ டம்ளரை எடுத்துக்கொண்டு தன் ரூமிற்கு சென்றான் விஹான்.


 விஹானின் நம்பரை பார்த்ததும் சந்தோஷமாக ஃபோனை எடுத்தாள் ரெபேக்கா.


 ஹலோ சொல்லு விஹான் என்று ஆர்வமாக பேசினாள். அவன் அவளுடைய காதலுக்கு சம்மதம் தெரிவிக்க போகிறான் என்று நினைத்து அவ்வாறு பேசினாள்.


 எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணுவியா ரெபேக்கா.


 கண்டிப்பா விஹான். என்னால முடியும்னா கண்டிப்பா அத நான் செய்யறேன்.


 எனக்காக ஒரு வாரம் என் வீட்டுக்கு வந்து ஸ்டே பண்ண முடியுமா?


 என்ன சொல்ற எனக்கு ஒன்னும் புரியல?


 தன் மனதிற்குள் ஒரு வாரம் லிவிங் டு கெதர் ரிலேஷன்ஷிப் போல இருக்கலாம் என்று சொல்லப் போகிறானோ என்று நினைத்து கொண்டாள் ரெபேக்கா.  


 என் தங்கச்சி பிரக்னண்டா இருக்கா, 


 ஆமா தெரியும், அன்னைக்கு பிரியங்கா ரெசெப்ஷன்ல பார்க்கும்போது பேசினேனே.


 உன்கிட்ட நான் நேரா தான் இதெல்லாம் பேசி இருக்கணும், இப்ப டைம் இல்ல அதனால போன்ல பேசுறேன்.


 ஒன்னும் பிரச்சனை இல்ல சொல்லுடா.


 எனக்கு ஆபீஸ் விஷயமா ஒரு வாரம் டெல்லி போக வேண்டி இருக்கு, அதுவரைக்கும் அவ வீட்ல தனியா இருப்பா, உன்னால முடியும்னா வந்து அவ கூட இருக்க முடியுமா?


 அமைதியாக இருந்தாள் ரெபேக்கா.


 நீ சைலன்டா இருக்கேனா, எனக்கு புரியுது ஒன்னும் பிரச்சனை இல்ல நான் வேற ஏதாவது ஏற்பாடு பண்ணிக்கிறேன். யூ கேரி ஆன், பை.


 ஒரு நிமிஷம் விஹான். என்னை பேச விடாம நீயே பேசிட்டு இருக்க.


சாரி, நீ என்ன சொல்ல வந்த?


 அட்லீஸ்ட் இப்பவாது கேட்டியே. நான் வரேன். நீ எப்ப ஒரு வாரம் டைம் கேட்டியோ அப்பவே தெரிஞ்சிருச்சு நீயும் என்னை லவ் பண்றன்னு. அந்த நிமிஷத்துல இருந்தே நான் உன்னை என் புருஷனா தான் நினைக்கிறேன். அவ என் நாத்தனார், அவள பாத்துக்க வேண்டியது என் பொறுப்பு. நீ கவலைப்படாத. நீ டென்ஷன் இல்லாம உன்னோட ஆபீஸ் வேலைய பாரு. நான் அவள பத்திரமா பாத்துக்குறேன்.


 விஹானுக்கு கண்கள் கலங்கியது.


 தேங்க்ஸ் ரெபேக்கா.


 நமக்குள்ள எதுக்கு டா தேங்க்ஸ்.


 ஐ லவ் யூ ரெபேக்கா.


 விஹான் தன் காதலை சொன்ன அடுத்த நொடி ரெபேக்காவின் கண்கள் கலங்கியது.


 எத்தனை வருஷமா காத்துட்டு இருந்தேன் உன்னோட வாயிலிருந்து இந்த வார்த்தை வரதுக்கு. ஐ லவ் யூ டூ விஹான்.


 அப்புறம் உன்கிட்ட இன்னொரு விஷயமும் சொல்லணும்.


என்ன சொல்லு.


 தீபக் எங்க இருக்கான்னு தெரியல.


 அதான் அன்னைக்கு தீபக் கம்பெனியில் வேலை செய்யறாரு தேவியோட ஹஸ்பண்ட் என்று சொல்லி பேசிட்டு இருந்தா விருத்திகா.     


 அது மட்டும் இல்ல, இன்னைக்கு டாக்டர் சொன்னாங்க என்று சைக்கியாட்ரிஸ்ட் டாக்டர் சொன்னதை அவளிடம் சொல்லி கண்கள் கலங்கினான் விஹான்.


 கவலைப்படாத டா, விருக்கு ஒன்னும் ஆகாது. நான் அவளை பத்திரமா பாத்துக்கறேன்.


 ஓகே ரெபேக்கா தேங்க் யூ சோ மச். உங்க வீட்ல என்ன சொல்லிட்டு வருவ?


 நான் உன்னை இத்தனை வருஷமா லவ் பண்றது எங்க வீட்ல எல்லாருக்கும் தெரியும். உன் வீட்டுக்கு போக போறேன்னு சொல்லிட்டு தான் வருவேன்.


 ஒன்னும் சொல்ல மாட்டாங்களா?


 கல்யாணத்துக்கு முன்னாடி போக கூடாதுன்னு ஏதாவது ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன் சொல்லுவாங்க.


 அப்புறம் எப்படி வருவ?


 அதெல்லாம் நீ கவலைப்படாதே, நீ ஊர்ல இல்ல விருத்திகாவ பாத்துக்கறதுக்காக தான் போறேன்னு சொல்லிட்டு வருவேன்.


 ஓகே சொல்லுவாங்களா?


தெரியல, ஆனா நான் ஓகே சொல்ல வைத்துவிடுவேன். யூ டோன்ட் ஒரி என்று சொல்லி சிரித்தாள் ரெபேக்கா. 


 விஹானும் சிரித்தான்.

தொடரும்….

அ. வைஷ்ணவி விஜயராகவன்.


 


பாகம் -30


மச்சி, என்று ரோஹித் கத்தும் சத்தம் கேட்டது.


ரெபேக்கா, நான் அப்புறமா பேசுறேன். பை என்று சொல்லி ஃபோனை வைத்து விட்டு ரூமில் இருந்து ஹாலுக்கு வேகமாக ஓடி வந்தான் விஹான்.


விருத்திகா தன் கையில் ரத்தம் சொட்ட மயக்க நிலையில் சோஃபாவில் அமர்ந்து கொண்டிருந்தாள். அதைப் பார்த்து ஒரு நொடி விஹானுக்கு தலை சுற்றியது. ரோஹித் அங்கே இருந்த ஒரு டவலை அவள் மணிக்கட்டில் சற்றி ரத்தம் வருவதை தடுத்துக் கொண்டிருந்தான்.


என்னாச்சு டா, என்றான் விஹான் ரோஹித்தைப் பார்த்து.


வா முதலில் ஹாஸ்பிட்டலுக்கு போகலாம் என்று ரோஹித் சொல்ல.


மயங்கிய நிலையில் இருந்த தன் தங்கையை தூக்கிக் கொண்டான் விஹான்.


ரோஹித் வேகமாகச் சென்று காரை எடுத்தான். காரில் செல்லும் போதும் மயக்கமாகவே இருந்தாள் விருத்திகா.


என்னாச்சு டா, இப்போதாவது சொல்லு என்றான் விஹான்.


மச்சி, நான் வேலை செய்து கொண்டு இருக்கும் போது விருத்திகா வெளியே வந்தா. அவள் கையை பின்னாடி வச்சிருந்தா.


எழுந்திட்டியா விருத்திகா. விஹான் உனக்காக டீ போட்டு வச்சிருக்கான். சூடு பண்ணி தரவான்னு கேட்டேன்.


அண்ணா எங்கன்னு கேட்டா. ரூம்ல தான் இருக்கான், ரெபேக்கா கிட்ட பேசிக்கிட்டு இருக்கான் இப்போ வந்திடுவான்னு சொன்னேன்.


அப்புறம் அந்த வலியிலும் ஸ்மைல் செஞ்சா.


என்னடா சொல்ற வலியிலுமா?


ஆமான்டா, அவ கை நரம்பை கட் பண்ணிக்கிட்டு இருக்கா.


வாட்?


டாக்டர் சொன்னது போல சூசைடு அட்டெம்ப்ட் பண்ணி இருக்கா.


ஓ மை காட் என்று தலையில் கை வைத்துக் கொண்டான் விஹான்.


மச்சி, அதுக்கப்புறம் அவளுக்கு மனசு கேட்கல, வயிற்றில் வளருற குழந்தையை அழிக்க மனசு வராம வெளியே வந்து என் கிட்ட கையை காட்டி,


சாரி, பிளீஸ் காப்பாத்துங்க ரோஹித். என் குழந்தைக்கு எதுவும் ஆகக் கூடாதுன்னு கேட்டா. அப்போது தான் நான் கத்தி உன்னை கூப்பிட்டேன், அதுக்குள்ள மயங்கி சோஃபாவில் விழுந்திட்டா என்றான் ரோஹித்.


மச்சி, இப்போ என்னடா பண்றது. எதை இவ பண்ணக் கூடாதுன்னு நினைச்சு பயந்தேனோ அதையே பண்ணிட்டா. இவளை எப்படி டா தனியா விடறது என்று கண்கள் கலங்கியவாறு தன் தங்கையின் தலை முடியை கோதினான். 


ரோஹித்துக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை அமைதியாக இருந்தான்.


ஹாஸ்பிட்டலுக்கு சென்றனர். 


டாக்டர்கள் டிரீட்மெண்ட் கொடுத்தார்கள். வெளியே அமர்ந்து கொண்டு இருந்தனர் விஹான் மற்றும் ரோஹித்.


அப்போது ரெபேக்கா விஹானுக்கு கால் செய்தாள். விஹானுக்கு அப்போது ஃபோனை எடுத்து பேசும் மன நிலையில் இல்லாததால் அவன் எடுக்கவில்லை. ரோஹித்துக்கு கால் செய்தாள் ரெபேக்கா. அவன் விஷயத்தைக் கூறினான். ஹாஸ்பிட்டல் விவரத்தை கேட்டு அந்த ராத்திரியிலும் தன் அப்பாவுடன் அங்கே வந்தாள் ரெபேக்கா.


 உள்ளே வந்த ரெபேக்கா அவர்கள் இருவரும் அமர்ந்து இருப்பதைப் பார்த்து விட்டு அவர்கள் அருகில் வந்தாள்.


 என்னாச்சுடா? எப்படி இருக்கா விரு? என்றாள் ரோஹித்தை பார்த்து.


 டாக்டர் ட்ரீட்மென்ட் கொடுத்து கிட்டு இருக்காங்க, இந்த நேரத்துல நீ தனியாவா வந்த என்றான் ரோஹித்.


 இல்லடா அப்பாவோட தான் வந்தேன். அப்பா பைக்கை பார்க் பண்ணிட்டு வருவாரு.


சரி டி.


விஹான் என்று சொல்லி அவன் பக்கத்தில் அமர்ந்து அவனுடைய கைகளை பிடித்தாள் ரெபேக்கா.


கண்கள் கலங்க ஹாஸ்பிட்டல் என்றும் பாராமல் அவள் தோளில் சாய்ந்து கொண்டு அழுதான் விஹான். ரெபேக்காவிற்கும் கண்கள் கலங்கியது.


அப்போது ரெபேக்காவின் அப்பா உள்ளே வந்தார்.


அவர் வருவதை பார்த்த ரோஹித் அவர்களை மறைத்துக் கொண்டு நிற்பது போல நின்று,


மச்சி, ரெபேக்காவோட அப்பா வராரு என்று மெதுவாக சொல்லிவிட்டு,


வாங்க அங்கிள், நான் ரோஹித் என்றான்.


இறுகிய முகத்துடன் இருந்த அவர் தலையை மட்டும் அசைத்தார்.


பின்னர் ரெபேக்காக மற்றும் விஹான் இருவரும் எழுந்து நின்றனர்.


 தங்கச்சி எப்படி இருக்கா என்றார் ரெபேக்காவின் அப்பா விஹானை பார்த்து.


 ட்ரீட்மென்ட் கொடுத்துட்டு இருக்காங்க சார் என்றான் விஹான்.


 கவலைப்படாதீங்க மாப்ள, பாப்பாவுக்கு ஒன்னும் ஆகாது என்றார்.


 இதை சற்றும் எதிர்பார்க்காத மூவரும் அதிர்ச்சியாக அவரைப் பார்த்தனர்.


 என் பொண்ணு எந்த முடிவை எடுக்கறதா இருந்தாலும் கரெக்ட்டா தான் எடுப்பான்னு எனக்கு தெரியும், அஞ்சு வருஷமா உங்களை லவ் பண்றான்னு எனக்கு தெரியும். அவ லவ் பண்றான்னு தெரிஞ்ச உடனே உங்கள பத்தி விசாரிச்சேன். நீங்க உங்க தங்கச்சி எப்படி பார்த்துக்கிறீங்க, அவ கல்யாணம் பண்ணிட்டு போன அப்புறம் எவ்ளோ கஷ்டப்பட்டீங்க நீங்களும் ரோஹித்தும் எவ்வளவு க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ் எல்லாமே எனக்கு தெரியும்.


 என் பொண்ணு வீட்டில் இருந்து கிளம்பும்போது என்ன சொன்னா தெரியுமா?


 ரோஹித்தும் விஹானும் அவரையே பார்த்துக் கொண்டிருந்தனர்.


 விஹானோட தங்கச்சிக்கு உடம்பு சரியில்ல அதனால போகணும்னு சொல்லல, என் நாத்தனாருக்கு உடம்பு சரி இல்ல அதனால இப்பவே போய் பார்க்கணும்னு சொன்னா. அப்பவே தெரிஞ்சுக்கிட்டேன், அவ உங்களை தவிர வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டான்னு. எனக்கு இந்த ஜாதி மதத்து மேல எல்லாம் பெரிய ஈடுபாடு கிடையாது. அதனால உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வைக்கிறதுல எனக்கு ஒரு அப்ஜக்ஷனும் இல்லை என்றார்.


 தேங்க்ஸ் அப்பா என்று சொல்லி அவரை கட்டிப்பிடித்துக் கொண்டாள் ரெபேக்கா.


 அவர் சொன்னது அனைத்தும் விஹானுக்கு ஏற்றதாக இருந்தாலும் அவனால் முழுமையாக சந்தோஷப்பட முடியவில்லை. தன் தங்கை நல்லபடியாக வந்த பிறகு அவனுக்கு சந்தோஷம் என்று அவன் முகத்திலேயே தெரிந்தது. அதை புரிந்து கொண்ட அனைவரும் டாக்டர் பேசுவதற்காக காத்துக் கொண்டிருந்தனர்.


 அரை மணி நேரத்திற்கு பிறகு, டாக்டர் விஹானை அழைத்தார்.


 ரோஹித் அவனுடன் சென்றான்.


 உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை, ஆனா நிறைய பிளட் லாஸ் ஆயிருக்கு. பிரக்னெண்டா வேற இருக்காங்க. சோ டூ டேஸ் ஹாஸ்பிடல்ல இருந்து அவங்க கொஞ்சம் ஸ்டேபிளான அப்பறமா டிஸ்சார்ஜ் பண்ணலாம்.


 ஓகே டாக்டர் தேங்க்யூ சோ மச் என்று சொல்லிவிட்டு வெளியே வந்தனர்.


 ரெபேக்காவிடம் விஷயத்தை சொன்னான் ரோஹித்.


 அவர்களும் சந்தோஷப்பட்டனர். 


 விஹான், ரெபேக்காவின் அப்பா கையைப் பிடித்து.


ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் அங்கிள். அப்பா ஸ்தானத்துல என் கூட வந்து நின்னு இருக்கீங்க என்றான்.


தொடரும்…..

அ. வைஷ்ணவி விஜயராகவன்.


இந்த episode பிடிச்சிருந்தா எழுத்தாளரை உற்சாகப்படுத்துங்க!!
இப்போதே உற்சாகப்படுத்துங்கள்

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

No votes so far! Be the first to rate this post.

    No comments yet.