பாகம் -25,26

Vaishnavi Vijayaraghavan | 28 Apr 2026 | Share

பாகம் 25 


 வெளியே வந்து விருத்திகாவை அழைத்துக் கொண்டு மாத்திரை மருந்துகளை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு சென்றான் விஹான்.


 டாக்டர் என்ன அண்ணா சொன்னாங்க என்று கேட்பாள் என்று நினைத்தான் விஹான். ஆனால் அவள் எதுவுமே பேசவில்லை. ஃபோனையும் பார்க்கவில்லை, டிவி ஆன் செய்யவில்லை, ஃபேனை கூட ஆன் செய்யாமல் சோஃபாவில் அமர்ந்து சீலிங்கையே பார்த்துக் கொண்டிருந்தாள்.


 தன் தங்கையை இவ்வாறு பார்ப்பதற்கு அவனுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. தீபக்கின் மேல் கோபமும் ஆத்திரமும் பன்மடங்காகியது. அவன் பக்கத்தில் அமர்ந்து மாத்திரைகளை காண்பித்தான்.


 இது காலையில், மத்தியானத்துக்கு மாத்திரை இல்லை. இது வாந்தி வந்தா மட்டும் போடணும், இது சாப்பிட்ட அப்புறமா ராத்திரி போடணும். ஓகேவா மா?


 ஓகே அண்ணா என்று சொல்லிவிட்டு மறுபடியும் சீலிங்கையே பார்த்தாள்.


 விருத்திகாவின் முகத்தை தன் பக்கமாக திருப்பி,


விரு, இப்படி எல்லாம் பண்ணாத. எனக்கு ரொம்ப பயமா இருக்கு. என்னை பாரு என்கிட்ட பேசு, டிவி பாரு, ஃபோன் பாரு. இல்லை இதெல்லாம் எதுவும் வேண்டாமா? வா வெளியே போலாம். பார்க்குக்கு போலாம் அங்க விளையாடும் குழந்தைகளை பாரு. இல்ல கோவிலுக்கு போலாமா சொல்லு. தயவு செஞ்சு எதுவும் பேசாமல் இந்த மாதிரி சீலிங்கையே பார்த்துகிட்டு இருக்காத. ப்ளீஸ் விரு.


 நான் கொஞ்ச நேரம் தூங்க போறேன் அண்ணா.


 சரி போய் தூங்கு, நாளை காலைல அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிட்டு டாக்டர போய் பாக்கணும்.


 ஓகே அண்ணா என்று சொல்லிவிட்டு அவள் ரூமிற்கு சென்று படுத்தக் கொண்டாள்.


 சிறிது நேரம் கழித்து அவளுக்கு டீ போட்டு எடுத்துக்கொண்டு அவளுடைய ரூமிற்கு சென்றான்.


 கதவைத் தட்டினான். தாழ்ப்பால் போட வில்லை. அதனால் மெதுவாக கதவை திறந்து பார்த்தான். தன் தங்கை தூங்கிக் கொண்டிருக்கிறாள் என்பதை பார்த்துவிட்டு டீயை எடுத்துக்கொண்டு வந்து விட்டான். அவள் திரும்பி படுத்து இருந்ததால், அவள் தூங்குகிறாள் என்று நினைத்துக் கொண்டான் விஹான். ஆனால் அவள் அந்தப் பக்கமாக இருக்கும் சுவற்றையே பார்த்துக் கொண்டிருந்தாள். மனதில் ஏதேதோ குழப்பங்கள். தீபக்கிற்கு என்ன ஆகி இருக்கும் என்ற சிந்தனை மட்டுமே அவள் மூளையில் ஓடிக்கொண்டே இருந்தது. பிறகு அப்படியே தூங்கி விட்டாள்.


 விஹான் ரோஹித்திற்கு கால் செய்தான். டாக்டரை பார்த்தது பற்றியும் சைக்கியாட்ரிஸ்ட் டாக்டரை பார்க்க சொன்னார்கள் என்பது பற்றியும் அவனிடம் கூறினான்.


 ஏண்டா என்கிட்ட சொல்லல நான் கார் எடுத்துட்டு வந்து இருப்பேன் இல்ல?


 இல்லடா விருத்திகா தான் வேண்டான்னு சொல்லிட்டா. 


 ஓ ஓகே, நாளைக்கு நான் வரணுமா.?


 தெரியல டா அவ கிட்ட கேட்கிறேன். அவ ஓகே சொன்னா நான் உனக்கு ஃபோன் பண்றேன். இல்லனா நான் கேப் புக் பண்ணி கூட்டிட்டு போறேன். 


சரி மச்சி லீவு முடிஞ்சிடுச்சு நாளையிலிருந்து ஆபீஸ் போகணும்னு சொன்னியே இப்ப என்ன பண்ணுவ?


தெரியல மச்சி. இவளை தனியா வீட்ல விட்டுட்டு போகவும் ரொம்ப பயமா இருக்கு. சீலிங்கையே பாக்குறா, எதுவுமே பேச மாட்டேங்குறா, ரொம்ப அமைதியா இருக்கா. எதையோ யோசிச்சுக்கிட்டே இருக்கா.


 நாளைக்கு தான் டாக்டரை பார்க்க போறோம் இல்ல கொஞ்சம் கொஞ்சமா சரி பண்ணிடலாம் கவலைப்படாத.


இல்ல மச்சி, நான் விருவை இந்த மாதிரி பார்த்ததே இல்லை. அதான் ரொம்ப கஷ்டமா இருக்கு என்று தொண்டைக் கருமியவாறு பேசினான் விஹான்.


 மச்சி நீதாண்டா ஸ்ட்ராங்கா இருக்கணும். அவளுக்கு துணையா நீ தான் இருக்கணும். நீ இப்படி கலங்கினா யாரு அவளுக்கு ஆறுதல் சொல்லுவா. எத்தனை முறை நான் இதே டயலாக்கை உன்கிட்ட சொல்றது.


 புரியுதுடா, ஆனா அவளை பார்க்கும் போது என்னால முடியலடா. அந்த தீபக்கை என்று பல்லை கடித்து பேசினான்.


 சரி விடு மச்சி, பழசை பத்தி பேசாத. இதுக்கு மேல என்ன நடக்கணுமோ அதை பத்தி மட்டும் நம்ம பேசலாம்.


 சரிடா உன் கிட்ட பேசினா கொஞ்சம் ரிலாக்ஸா இருக்குன்றதுக்காக தான் நான் பண்ணேன்.


 ஓகே மச்சி, பை, டேக் கேர்.


 பை டா. ஃபோனை வைத்துவிட்டு, டின்னர் சமைத்து எடுத்து டேபிளில் ரெடியாக வைத்தான்..


 இம்முறை அவள் தூங்கி இருந்தாலும் பரவாயில்லை என்று அவளை எழுப்ப உள்ளே சென்றான்.


 ஏன்டா இப்படி பண்ண, ஏன்டா இப்படி பண்ண, இதுக்கு மேல உன்கிட்ட பேசமாட்டேன் பாரு என்று சுவற்றைப் பார்த்து பேசிக்கொண்டு இருந்தாள் விருத்திகா.  


விரு, என்று சத்தமாக சொன்னான் விஹான்.


 உடனே தூங்குவது போல கண்களை மூடி கொண்டாள்.


 விரு விரு என்று கூப்பிட்டுக் கொண்டே அவள் அருகில் சென்றான் விஹான்.


 கண்களை திறக்கவில்லை.


 அவளை உலுக்கி எழுப்பினான்.


 கண்களைத் திறந்து,


 சொல்லு அண்ணா என்றாள்.


 இப்போது அவளிடம் எதுவும் அதை பற்றி கேட்க வேண்டாம் என்று நினைத்தவன் வா டின்னர் சாப்பிடலாம் என்று அவளை அழைத்துச் சென்றான்.


 அவளும் அமைதியாக அவனுடன் சென்று டின்னர் சாப்பிட்டாள்.


 பிறகு மாத்திரையை போட்டுக் கொண்டு ரூமிற்கு வந்து படுத்தாள்.


 தன் ரூமிற்கு சென்ற விஹான், கிருத்திகாவை தனியே தூங்க விட வேண்டாம் என்று நினைத்து. தன்னுடைய தலையணை மற்றும் போர்வையை எடுத்துக்கொண்டு விருத்திகாவின் அறைக்கு சென்றான். 


 என்னாச்சு அண்ணா என்றாள்.


 விரு என்னோட ரூம்ல ஏசி ஒர்க் ஆகல, நான் உன் ரூம்ல இங்க கீழே படுத்துகிறேன் என்றான்.


 ஏன் என்ன ஆச்சு அண்ணா.


 தெரியலமா. 


 சரி அண்ணா படுத்துக்கோங்க என்று சொன்னாள் விருத்திகா.


 கீழே பெட்ஷீட் போட்டு படுத்துக் கொண்டான் விஹான்.


 விருத்திகா தூங்குவது போல பெட்ஷீட் போர்த்திக் கொண்டாள். விஹான் சிறிது நேரம் கழித்து தூங்கி விட்டான்.


தன் அண்ணன் தூங்கிவிட்டான் என்று பார்த்த பிறகு வெளியே சென்று தன் அண்ணனுடைய அறையில் ஏசி ஆன் செய்து பார்த்தாள் விருத்திகா.


 தன் தங்கையை பற்றி தெரிந்தவன், கனெக்ஷன் ஒயரை கட் செய்து விட்டிருந்தான். அதனால் ஏசி ஆன் ஆகவில்லை. தன் அண்ணன் தன்னிடம் பொய் சொன்னானா என்று பார்ப்பதற்காகவே அவள் செக் செய்தாள். தீபக்கை நம்பினாள் ஆனால் அவன் ஏமாற்றி விட்டான். அவளிடம் பொய் கூறினான். 


அடுத்தது அவள் நம்புவது தன் அண்ணன் விஹானை தான். எங்கே அவனும் அவளிடம் பொய் கூறினானோ என்று நினைத்தவளுக்கு உண்மையிலேயே ஏசி ஒர்க் ஆகாதது நிம்மதி அளித்தது. தன் அண்ணன் தன்னிடம் உண்மையாகத்தான் இருக்கிறான் என்று நினைத்து சந்தோஷப்பட்டாள். பிறகு நிம்மதியாக வந்து படுத்து உறங்கினாள் விருத்திகா.

தொடரும்….

அ. வைஷ்ணவி விஜயராகவன்.  


பாகம் 26 


 காலை எழுந்த விஹான் கட்டிலில் தன் தங்கை விருத்திகா தூங்கிக் கொண்டிருப்பதை பார்த்து விட்டு சத்தம் போடாமல் மெதுவாக எழுந்து தன் தலையணை போர்வையை எடுத்துக்கொண்டு வெளியே வந்தான்.


 ரெஃபரஷ் ஆகிவிட்டு கிட்சனுக்கு சென்று டீ போட்டு வைத்துவிட்டு, பிரேக்ஃபாஸ்ட் ரெடி செய்தான். மெதுவாக அவளுடைய ரூமிற்கு சென்று தூங்குகிறாளா என்று பார்த்துவிட்டு ஹாலுக்கு வந்து ஃபோனை எடுத்து தன் ஆஃபீசுக்கு கால் செய்தான் விஹான்.


 அவனுக்கு உடம்பு சரியில்லை என்று சொல்லி இன்னும் இரண்டு நாள் லீவு கேட்கலாம் என்று நினைத்தான் அப்போது சரியாக விருத்திகா எழுந்து வெளியே வந்தாள். அதனால் வேறு வழி இன்றி,


 என்னோட சிஸ்டருக்கு இன்னும் உடம்பு சரி ஆகல சார் இன்னைக்கு டாக்டர் அப்பாயின்மென்ட் இருக்கு அதனால இன்னைக்கும் என்னால ஆபீஸ் வர முடியாது என்று கூறினான்.


 என்னது உன் சிஸ்டருக்கு உடம்பு சரியில்லையா? ஆனா நீ வேற ஏதோ லேண்ட் டிஸ்ப்யூட் அது சரி பண்ணனும்னு சொல்லிதான லீவ் வாங்கிட்டு போன?


 அதான் சார் இன்னும் சரியாகலைன்னு சொல்றேன்ல.


 ஒழுங்கா கிளியரா சொல்லு லாண்டு டிஸ்பியூட் சரியாகலையா இல்ல உன் சிஸ்டருக்கு உடம்பு சரியில்லையா?


 அதான் ஏற்கனவே சொன்னேனே சார்.


 விஹான் என்ன ஆச்சு உங்களுக்கு கிளியரா பேசுங்க.


 நான் மெயில்ல கிளியரா போடுறேன் சார். நீங்க லீவு மட்டும் செங்க்ஷன் பண்ணுங்க.


ஓகே, இன்னைக்கு ஓகே நாளைக்கு கண்டிப்பா ஆபீஸ் வந்துருவீங்க இல்ல?


 கண்டிப்பா சார் நாளைக்கு ஆபீஸ்ல இருப்பேன்.


 ஓகே நான் லீவை அப்ரூவ் பண்றேன்.


 தேங்க்யூ சோ மச் சார் என்று சொல்லி ஃபோனை வைத்தான் விஹான்.


 என்னாச்சு அண்ணா உங்க பாஸ் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா?


 அப்படி சொல்ல முடியாது, ஆனா அவ்வளவு சீக்கிரம் யாரும் அவரை ஏமாத்த முடியாது.


 ஆமா அண்ணா, யாரும் யாரையும் ஏமாற்ற கூடாது. 


 சரி நீ போய் பிரஷ் பண்ணிட்டு குளிச்சிட்டு வா டிபன் சாப்பிட்டுட்டு நம்ம ஹாஸ்பிடல் போகலாம். 


 அப்பாயின்மென்ட் வாங்கிட்டியா அண்ணா?


 இல்ல கொஞ்ச நேரம் முன்னாடி கால் பண்ணேன் யாருமே ஃபோனை எடுக்கல. நம்ம ரெடி ஆயிட்டு அப்பாயிண்ட்மெண்ட் பிக்ஸ் பண்ணிட்டு அதுக்கு அப்புறமா போகலாம்.


ஓகே அண்ணா.


 சாப்பிடும்போது அவளிடம் கேட்டான் விஹான்.


விரு,


 சொல்லு அண்ணா.


 ரோஹித்தை வர சொல்லவா?


எதுக்கு?


 இல்ல ஹாஸ்பிடல் போவதற்கு.


 ஏன் அண்ணா உன்கிட்ட காசு இல்லையா?


 இருக்குமா ஏன் அப்படி கேக்குற?


 இல்ல கேப் புக் பண்ணாம ஒரு ஒரு முறையும் ரோஹித் கூட கார்ல போலாமான்னு கேக்குறியே அதனால கேட்டேன்.


 அப்படியெல்லாம் இல்லம்மா, ரோஹித் என்னோட பெஸ்ட் ஃபிரண்டுன்னு உனக்கே தெரியும். டென்ஷனா இருக்க டைம்ல அவன் கூட இருந்தா எனக்கு சப்போர்ட்டா இருக்கும் அதனால தான் கேட்டேன். மத்தபடி வேற எதுவும் இல்ல. உனக்கு அவன் வர்றது பிடிக்கலைன்னா நான் கூப்பிடல.


 பிடிக்கலைன்னு எல்லாம் ஒன்னும் இல்ல அண்ணா. நம்ம வீட்டு பிரச்சனையை எதுக்கு அவரு தலையில போடணும்னு யோசித்தேன் தவிர வேற எதுவும் இல்ல.


 நீ இப்படி அவனை பிரிச்சு பார்க்குற என்று தெரிஞ்சாதான் மா அவன் கஷ்டப்படுவான்.


 சரி அண்ணா வர சொல்லுங்க. அவருக்கு வேற எதுவும் இம்பார்டன்ட் ஆன வேலை இல்லைனா.


 அவன் மோஸ்ட்லி ஒர்க் ஃப்ரம் ஹோம் தான் மா பண்ணுவான். வீக்லி 2 டேஸ் இல்ல மேக்சிமம் 3 டேஸ் தான் ஆபீஸ் போவான்.


 ஓகே, அப்போ வொர்க் ஃப்ரம் ஹோம் என்றாலும் வேலை பண்ணனும் இல்ல? நம்ம கூட ஹாஸ்பிடல் வந்தா எப்படி வேலை பண்ணுவாரு?


 அவனுக்கு மத்தியானம் ரெண்டு மணியிலிருந்து ராத்திரி 10:00 மணி வரையிலும் தான் மா வேலை இருக்கும். அதனாலதான் நான் எங்க போறதா இருந்தாலும் அவனை கூட்டி கிட்டு சுத்துவேன். 


 ஓ இப்ப புரியுது. 


 அப்படின்னா அவன் கிட்ட சொல்லவா?


 சரி அண்ணா வர சொல்லுங்க.


 ஓகே விரு, தேங்க் யூ.


 உடனே ஃபோனை எடுத்து தன் நண்பன் ரோஹித்தை வரச் சொன்னான் விஹான்.


 ஹாஸ்பிடலுக்கு சென்றனர் மூவரும். 


 டாக்டர் முதலில் விருத்திகாவிடம் தனியாக பேசினார்.


 உங்க பேரு என்னம்மா என்று ஆரம்பித்து பேசிக் டீடைல்ஸ் அனைத்தையும் குறித்துக் கொண்ட டாக்டர் இந்த கேள்விகளை கேட்க ஆரம்பித்தார்.


 என்ன ஆச்சு மா சொல்லுங்க.


மேடம், என்னோட தீபக் என்று ஆரம்பித்து அனைத்தையும் கூறினாள்.


இடை மறிக்காமல் அனைத்தையும் கேட்டார் டாக்டர்.


விருத்திகா பேசி முடித்தவுடன்,


 நீங்க என்னமா நினைக்கிறீங்க?


 புரியல டாக்டர்.


 உங்க ஹஸ்பண்ட் திரும்பி வருவார் என்று நினைக்கிறீங்களா?


 கண்டிப்பா வருவாரு.


 சரி கண்டிப்பா வருவாரு. அதுவரைக்கும் நீங்க இப்படியே இருக்க போறீங்களா?


 நீங்க என்ன மீன் பண்றீங்கன்னு புரியல டாக்டர்.


 உங்க வயித்துல குழந்தை இருக்கு, அது குழந்தை ஆரோக்கியமா இருக்கணும் இல்ல?


 ஆமா டாக்டர் கண்டிப்பா. என் புருஷன் வந்த உடனே அவன் கையில குழந்தையை கொடுக்க வேண்டும்.


 அப்ப நீங்க ஹெல்தியா சாப்பிட்டாதான குழந்தை ஹெல்தியா இருக்கும்.


 நான் எல்லாமே தான் டாக்டர் சாப்பிடுறேன். 


 எல்லாமே சாப்பிடுறதுனால மட்டும் நியூட்ரியன்ட்ஸ் கிடைச்சிடாது. நீங்க மனசாலையும் அது குழந்தைக்கும் உங்களுக்கும் சேரனும் நினைக்கணும்.


டாக்டர், என்னால தீபக்கை நினைக்காம இருக்க முடியல.


 அவர மறந்திடனும்னு நான் சொல்லலையே.


 என்னால வேற எதிலுமே கான்சன்ட்ரேட் பண்ண முடியல, 


 நீங்க ஒர்க் பண்றீங்களா?


 இல்ல மேடம்,


 அப்படின்னா முதல்ல ஏதாவது ஒரு ஜாப்ல சேருங்க.


 அது எப்படி நான் பிரக்னண்டா இருக்கேனே யாரு எனக்கு வேலை கொடுப்பாங்க?


 டெம்ப்ரவரி ஜாப் எவ்வளவோ இருக்கு, பார்ட் டைம் ஜாப்ஸ் இருக்கு, அது எதுவுமே இல்லையா ஆன்லைன் ஜாப்ஸ் கூட இருக்கு, 


 ஆனா அதெல்லாம் எனக்கு செட் ஆகுமா?


நீங்க என்ன படிச்சு இருக்கீங்க?


 பிஎஸ்சி மேத்ஸ்.


 சூப்பர் அப்படின்னா நீங்க மேத்ஸ் டியூஷன் எடுக்கலாமே? அதுக்கு யாரும் உங்களை அப்பாயிண்ட் பண்ணனும்னு தேவையில்லையே.


 ஓகே டாக்டர் நான் யோசிச்சு பாக்குறேன்.


 நெக்ஸ்ட் கவுன்சிலிங் நீங்க வரும்போது, ஏதாவது ஒரு வேலையில் சேர்ந்துட்டேன்னு சொல்லிட்டு தான் வரணும்.


ஓகே டாக்டர்.


 சரி உங்க கூட யார் வந்திருக்காங்க?


 அண்ணனும் அவரோட ஃப்ரெண்டும்.


 ஓகே உங்க அண்ணன மட்டும் உள்ள வர சொல்லுங்க.


 ஓகே டாக்டர் தேங்க்யூ, என்று சொல்லிவிட்டு வெளியே சென்றாள் விருத்திகா.



தொடரும்….

அ. வைஷ்ணவி விஜயராகவன்.  



இந்த episode பிடிச்சிருந்தா எழுத்தாளரை உற்சாகப்படுத்துங்க!!
இப்போதே உற்சாகப்படுத்துங்கள்

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

No votes so far! Be the first to rate this post.

    No comments yet.