பாகம் -17

Vaishnavi Vijayaraghavan | 17 Apr 2026 | Share

பாகம் -17


ரஞ்சனி அர்ஜூனிடம்,


“அர்ஜூன், அம்மா கிட்ட பேசினேன். வர ஃபிரைடே நம்மளை வீட்டுக்கு வரச் சொன்னாங்க”


“அம்மா சொல்லிட்டா போக முடியுமா? வெளியே போக சொன்னது அம்மாவா?”


“என்ன அர்ஜூன் அப்பா அம்மா கிட்டயே கௌரவம் பார்த்துக்கிட்டு”


“இல்ல ரஞ்சனி, நீ என்ன வேணும்னாலும் நினைச்சிக்கோ. என் தம்பி முன்னாடியும் என் பொண்டாட்டி முன்னாடியும் திட்டி அனுப்பினார் என் அப்பா. அவர் கூப்பிடாம நான் அந்த வீட்டுக்கு போக மாட்டேன்”


“ஏய், என்னடா இப்படி சொல்ற”


“ரஞ்சனி ஃபுல் ஸ்டாப். இதை பத்தி பேசாதே. வேற எதாவது பேசு”


“வேற என்ன பேச சொல்ற?” என்று கோபமாக முகத்தை திருப்பி கொண்டாள்.


“என்னவா? இங்க வா” என்று அவளை இழுத்து இறுக கட்டிப்பிடித்து கொண்டான்.


“விடு அர்ஜூன், நான் போய் டின்னர் பண்றேன்”


“ஏற்கனவே ரெடியாக இருக்கும் உன்னை சாப்பிடாம, டின்னரை சாப்பிட சொல்றீயா?”


“ஏய், போடா. நான் உன் மேல எவ்வளவு கோபத்தில் இருந்தாலும் எதாவது பேசி என்னை சிரிக்க வச்சிடற”


“சரிவிடு, ஒரு நிமிஷம் வந்திடறேன்” என்று சொல்லி பாத்ரூமுக்கு சென்றாள்.


பாத்ரூமிலிருந்து சத்தம் கேட்டது,


அலறி அடித்து கொண்டு கதவை தட்டினான் அர்ஜூன்.


“ரஞ்சனி, ரஞ்சி” என்றான்.


ஆனால் பதில் ஏதும் இல்லை. கதவை வேகமாக தட்டினான். பதில் இல்லை. கதவை எட்டி உதைத்தான். பிளாஸ்டிக் கதவு ஆகையால் தாழ்ப்பாள் உடைந்து கதவு திறந்தது. தரையில் சுயநினைவு இல்லாமல் விழுந்து கிடந்தாள் ரஞ்சனி.


பதறியவன் அவளை கையில் தூக்கினான். தரையில் ரத்தப்போக்கு அதிகமாக இருந்தது. வேகமாக தூக்கிக் கொண்டு காரில் ஏற்றி அருகில் இருந்த ஹாஸ்பிடலில் சேர்த்தான். உடனே தன் அம்மாவிற்கு கால் செய்து விஷயத்தை சொல்ல அவள் அடுத்த பத்து நிமிடத்தில் ஹாஸ்பிடலுக்கு வந்தாள்.


அரைமணி நேரம் கழித்து இருபத்தி ஐந்து மதிக்கதக்க ஒரு லேடி டாக்டர் அவர்கள் இருவரையும் அழைத்தார். உள்ளே சென்றனர் நிர்மலா மற்றும் அர்ஜூன்.


“உட்காருங்க, பேஷண்டுக்கு நீங்க ரெண்டு பேரும் என்ன உறவு?”


டேபிளில் அந்த டாக்டரின் பெயர் ‘அகிலா மோகன்’ என்றிருந்தது. 


“மேடம் நான் அவளோட ஹஸ்பண்டு. இவங்க என்னோட அம்மா”


“ஓ, ஓகே. அவங்க அம்மா வரலையா?”


“இல்ல, அவளுக்கு அம்மா இல்லை”


“ஓ, அப்படியா? அவங்களோட எல்.எம். பி டீடெயில்ஸ் தெரிஞ்சுக்க கேட்டேன்”


“என்ன டாக்டர்?” என்றாள் நிர்மலா.


“அவங்களுக்கு மாதம் மாதம் பீரியட்ஸ் எப்படி வரும். எத்தனை நாளைக்கு ரத்தப்போக்கு இருக்கும். எல்லாம் கேட்கணும்”


“தெரியலை மேடம்”


“உங்களுக்கு கல்யாணம் ஆகி எவ்வளவு நாள் ஆகுது?”


“ஒன் வீக்”


“ஓ, அம்மா ஒரு நிமிஷம் வெளியே இருங்க இவர் கிட்ட தனியா பேசணும்” என்று நிர்மலாவை பார்த்து கூறினார் டாக்டர்.


“சரிங்க டாக்டர்” என்று சொல்லி வெளியே சென்றாள் நிர்மலா.


அவள் வெளியே சென்றதும்,


“சார், உங்க பேரு என்ன?”


“அர்ஜூன்”


“அர்ஜூன், உங்க ஒயிஃப் கூட தாம்பத்தியத்தில் ஏதாவது பிரச்சினை இருந்துச்சா?”


“இல்ல மேடம்”


“ரொம்ப பெயின் இருக்குன்னு எதாவது சொன்னாங்களா?”


“இல்ல மேடம், அப்படி எதுவுமே சொல்லையே”


“ஓகே, எனக்கு தெரிஞ்ச வரைக்கும் அவங்களுக்கு எப்பவுமே பிரீயட்ஸ் ஹெவியா இருந்திருக்கும். மேரேஜூக்கு அப்புறம் இதுதான ஃபர்ஸ்ட் பீரியட்ஸ். நீங்க ஒண்ணா இருந்ததால இப்படி ஆகி இருக்கலாம்” 


“ஓ, சாரி மேடம். எனக்கு தெரியாது. இப்படி எல்லாம் ஆகும் ன்னு”


“அர்ஜூன் சாரி சொல்லவேண்டிய அவசியம் இல்லை. நீங்க எதுவும் தப்பு பண்ணலையே? அப்படியே சாரி சொல்லணும் தோணுச்சுன்னா உங்க ஒயிஃப் கிட்ட சொல்லுங்க. அவங்க தான் பாவம் இப்போ பெயின் அனுபவிச்சிக்கிட்டு இருக்காங்க”


கண்கள் கலங்கினான். 


“அர்ஜூன், ஒண்ணும் பயப்படற அளவிற்கு எதுவும் இல்லை. ஆனா நீங்க ஒரு ஹெல்ப் பண்ணனும்”


“என்ன ஹெல்ப் டாக்டர்?”


“எனக்கு இல்லை, உங்க ஒயிஃப்க்கு”


“சொல்லுங்க மேடம்”


“புதுசா கல்யாணம் ஆன உங்க கிட்ட சொல்றதுக்கு கஷ்டமா தான் இருக்கு. ஆனா?”


“பிளீஸ் டாக்டர் என்னனு சொல்லுங்க?”


“அவங்களுக்கு எப்போ பீரியட்ஸ் டைமோ அதுக்கு முன்னாடி ஒன் வீக், அப்புறம் ஒன் வீக், பீரியட்ஸ் கம்பிளீட்டா முடியுற வரைக்கும் நீங்க அவங்களோட தாம்பத்தியத்தில் இருக்க கூடாது. அப்படி இருந்தா அவங்களுக்கு சரி ஆகிடும். குழந்தை பிறந்தா நார்மல் ஆகிடலாம்”


“ஹோ, இவ்வளவு தானா டாக்டர். நான் கூட என்னம்மோ ஏதோன்னு பயந்திட்டேன். அவ என்னோட உயிர் மேடம். அவளுக்கு உடம்பு சரியானா போதும். அதை விட வேறு எதுவும் எனக்கு முக்கியம் இல்லை. தேங்க்ஸ் டாக்டர்” என்று சொல்லி விட்டு எழுந்தான்.


“உங்க அம்மாவை வரச்சொல்லுங்க. நான் அவங்க கிட்ட பக்குவமா விஷயத்தை சொல்லிடறேன். பாவம் பயப்படுவாங்க இல்ல?” என்றார் டாக்டர்.


“ஓகே மேடம். தேங்க்ஸ்”


நிர்மலா உள்ளே சென்றாள்.


“உட்காருங்க மா”


“என்னாச்சு மா, என் மருமகளுக்கு”


“பயப்படற அளவுக்கு ஒண்ணும் இல்ல மா. தாம்பத்தியத்தில் இருந்ததால இப்படி ஆகி இருக்கு”


“அச்சச்சோ, அப்போ தாம்பத்தியத்தில் இருக்கக் கூடாதா?”


“இல்லமா, சில பொண்ணுங்களுக்கு இந்த மாதிரி பிரச்சினை இருக்கு. இதை உங்க கிட்ட சொல்ல வேண்டிய அவசியமில்லை. இருந்தாலும் ஏன் சொல்றேன்னா? அந்த பொண்ணுக்கு அம்மா இல்லை. நீங்க அம்மா ஸ்தானத்தில இருந்து அவ கஷ்டத்தை புரிஞ்சிக்கனும் அதனால”


“எனக்கு ஒண்ணுமே புரியல மா”


“அம்மா, உங்க பையனும் மருமகளும் மாசத்தில ஒரு பத்து நாள் தான் ஒண்ணா இருக்கனும். உங்க மருமகளுக்கு பீரியட்ஸ் டேட் க்கு முன்னாடி ஒரு வாரம் பின்னாடி ஒரு வாரம் அவங்க ஒண்ணா இருந்தா அவங்களுக்கு யூட்ரஸ் ரொம்ப வீக்கா ஆயிடும். ரத்தப்போக்கு அவங்களுக்கு அதிகமா இருக்கு அதுதான் பிரச்சினை”


“அடக்கடவுளே?”


“நான் எதுக்காக உங்க கிட்ட இதை சொல்றேன்னா? தினமும் குடும்பத்தில இருக்கிறவங்களுக்கே இந்த காலத்துல குழந்தை சீக்கிரமா தங்குறதில்ல. இவங்களுக்கு கொஞ்ச நாள் டைம் கொடுங்க. பேரன் பேத்தி பாக்கணும்ன்னு அவங்க கிட்ட உங்க ஆசையை திணிக்காதீங்கன்னு சொல்ல தான் மா. இவ்வளவு நேரம் உங்க கிட்ட எக்ஸ்பிளைன் பண்ணிக்கிட்டு இருக்கேன்”


“நான் அந்த மாதிரியான மாமியார் இல்ல மா, அவ எனக்கு பொண்ணு மாதிரி தான். என் பையன் கிட்ட சொல்லிட்டீங்க இல்ல?”


“சொல்லிட்டேன் மா. உண்மையிலேயே ரஞ்சனி லக்கி தான். நல்ல ஃபேமிலி அவளுக்கு கிடைச்சிருக்கு” என்று சொல்லி சிரித்தார் டாக்டர்.


அவள் மயக்கத்தில் இருந்து எழுந்தவுடன் அவளுடைய LMP details வாங்கிக் கொண்டு சில டெஸ்ட்களை எடுத்து விட்டு மருந்து மாத்திரைகள் கொடுத்து டிஸ்சார்ஜ் செய்தனர்.


“அம்மா, என் கூட வரீங்களா அம்மா?” என்றான் அர்ஜூன்.


“அப்பா கிட்ட கேட்கணுமே டா. சரி இரு நான் பேசி பார்க்கிறேன்” என்று சொல்லி சிவராமனுக்கு கால் செய்தாள் நிர்மலா.


“ஹலோ”


“என்னங்க நான் நிர்மலா பேசறேன்” என்று மொத்த விஷயத்தையும் சொல்லி விட்டு, 


“அர்ஜூன் அவனோட வீட்டுக்கு கூப்பிடறான் போகட்டுமா? மாமாவை கோமதி அக்காவை பார்த்துக்க சொல்றேன்”


ஒரு நிமிடம் யோசித்தவர், 


“சரி, நாளைக்கு ஈவினிங் வந்திடு. வேணும்னா அவங்க ரெண்டு பேரையும் இங்கேயே அழைச்சுகிட்டு வந்திடு” என்றார் சிவராமன்.


கண்கள் கலங்க,


“ சரிங்க” என்றாள்.


அர்ஜூனிடம் விஷயத்தை சொல்ல அவனுக்கும் கண்கள் லேசாக கலங்கியது. 


“சரிம்மா, வாங்க இப்போதைக்கு வீட்டுக்கு போய்ட்டு நாளைக்கு எல்லா திங்ஸூம் எடுத்துக்கிட்டு நம்ம வீட்டுக்கு போகலாம்” என்றான். 


ரஞ்சனி நிர்மலா அவர்களுடன் வருவதால் மிகவும் சந்தோஷ பட்டாள். மறுநாள் அவர்கள் மூவரும் அவள் புகுந்த வீட்டிற்கு செல்லப்போகிறார்கள் என்பதை அறிந்து பேரானந்தம் கொண்டாள்.


**************


மறுநாள் காலை,


அவினாஷூக்கு ஃபோன் செய்து விஷ் செய்தாள் நிர்மலா. அவனிடம் ரஞ்சனிக்கு உடம்பு சரியில்லை என்று சொல்ல வந்தவளை, வேண்டாம் என்று சைகை செய்தாள் ரஞ்சனி.


ஃபோன் வாங்கி ரஞ்சனியும் விஷ் செய்தாள்.


“தேங்க்ஸ் அண்ணி, அம்மா வீட்டுக்கு வந்திட்டீங்களா?”


“இல்லப்பா, அம்மா இங்க வந்திருக்காங்க”


“ஓ, சூப்பர் சூப்பர்” என்றான் அவினாஷ்.


அர்ஜூனும் ஃபோனை வாங்கி விஷ் செய்ய, அனைவருக்கும் தேங்க்ஸ் சொல்லிவிட்டு ஹர்ஷிதாவின் காலிற்காக வெயிட் செய்தான்.


அவனே கேத்தரினுக்கு கால் செய்தான்.


“எக்ஸ்டிரீம்லி சாரி பிரோ, நைட்டு ரொம்ப நேரமா சாக்ரடீஸ் கிட்ட பேசிக்கிட்டு இருந்தேனா? அதனால தூங்கிட்டேன். லைன்லயே இருங்க. கனெக்ட் பண்றேன்” என்று சொல்லி கால் செய்தாள்.


ஒருமுறை முழுவதுமாக ஃபோன் அடித்து கட் ஆனது. யாருமே ஃபோனை எடுக்கவில்லை.


“பிரோ, யாருமே எடுக்கலை” என்றாள் கேத்தரின்.


“கேத்தரின் மறுபடியும் டிரை பண்ணு மா” என்றான் கெஞ்சலாக.


“சரி” என்று மறுபடியும் கால் செய்தாள்.


அவளுடைய அப்பா ஃபோனை எடுத்தார்.


“அங்கிள், நான் கேத்தரின். ஹர்ஷி கிட்ட கொடுக்கறீங்களா?”


“ஒரு நிமிஷம் மா” என்று சொல்லி விட்டு,


 மறுபடியும் ஃபோனை எடுத்து 


“அவ குளிக்கிறா மா. கொஞ்ச நேரம் கழிச்சு பேசுமா” என்றார் வேணுகோபால்.


“சரிங்க அங்கிள், பை” என்று ஃபோனை வைத்து விட்டு அவினாஷிடம் விஷயத்தை கூறினாள் கேத்தரின்.


“ஓகே கேத்தரின். தேங்க்ஸ், பை” என்றான் அவினாஷ் சற்றே சோகமாக.


ஹர்ஷிதாவிடம் பேசவில்லையே என்று வருத்தத்துடன்.


“பிரோ, ஆல் தி பெஸ்ட்” என்றாள் கேத்தரின்.


“தேங்க்ஸ் மா, பை”


‘அவன் பேசியதிலிருந்தே அவன் எவ்வளவு ஹர்ஷிதாவை மிஸ் செய்கிறான்’ என்பதை நன்றாக உணர்ந்தாள் கேத்தரின். 


அடுத்த நொடி ‘நம்மையும் இதே மாதிரி மிஸ் பண்ணுவானா சாக்ரடீஸ்’ என்று யோசித்தாள்.


ஃபோனை சைலென்டில் போட்டு லாக்கரில் வைத்து விட்டு தன் ஃபைல்களை எடுத்து கொண்டு கிளம்பினான் அவினாஷ்.


படிக்கட்டில் இறங்கி சென்றான்.


கேத்தரினுக்கு கால் செய்தாள் ஹர்ஷிதா.


“சொல்லுடி கால் பண்ணியா?”


“ஏய், எவ்வளவு நேரமா உன் கிட்ட பேச வெயிட் பண்ணினாரு தெரியுமா அவினாஷ்”


“ஏன், என்னாச்சு. எதாவது முக்கியமான விஷயமா?”


“ஓ, சாரி டி. உனக்கு தெரியாது இல்ல. நேத்து ராத்திரி ஃபோன் பண்ணி சொன்னாரு அவினாஷ். இன்னைக்கு அவருக்கு நேவி இன்டர்வியூ அன்ட் ஸெலக்ஷன். உன் கிட்ட பேசணும்ன்னு சொன்னாரு. பேச முடியலைன்னு ரொம்ப வருத்தப்பட்டாரு”


“சரி சரி, இப்போ கால் பண்ணு டி” என்று கண்கள் கலங்க கூறினாள் ஹர்ஷிதா.


இரண்டு முறை முழுவதுமாக ஃபோன் அடித்து கட் ஆனது. 


“இல்லடி, எடுக்கல. கிளம்பிட்டாரு போல?”


“கடைசி முறை எனக்காக ஒரே ஒரு முறை டிரை பண்ணு டி பிளீஸ்” என்றாள் ஹர்ஷிதா. கடவுளை வேண்டி கொண்டாள்.


“ஹலோ” என்றான் அவினாஷ்.


“மாமா, ஆல் தி பெஸ்ட் மாமா” என்று சத்தமாக சொல்லிவிட்டாள் ஹர்ஷிதா.


அனைவரும் ஹர்ஷிதாவை பார்க்க அவள் ஃபோனை வைத்து விட்டு தன் ரூமிற்கு சென்றாள்.


இந்த episode பிடிச்சிருந்தா எழுத்தாளரை உற்சாகப்படுத்துங்க!!
இப்போதே உற்சாகப்படுத்துங்கள்

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

No votes so far! Be the first to rate this post.

    No comments yet.