பாகம் -16

Vaishnavi Vijayaraghavan | 17 Apr 2026 | Share

பாகம் -16


வேணுகோபால் வரும்வரை தன் ரூம் வாசலிலே காத்திருந்தாள் விஜயா.


உள்ளே வந்தவர் வாசலை மறைத்து கொண்டு அவள் நின்றிருப்பதை பார்த்து அவளை நகர்த்தி விட்டு உள்ளே நடந்து வந்தார். 


“என்னங்க” என்று அவருடைய கையை பிடித்து நிறுத்தினாள்.


“என்னடி உன் பிரச்சினை?”


“பிளீஸ், நீங்க அவினாஷை வேண்டாம் ன்னு சொல்றதுக்கு ஒரு கரெக்டான காரணம் சொல்லுங்க”


“காரணம் தான? கிளோஸ் ரிலேஷன்ல கல்யாணம் பண்ணினா பிறக்கும் குழந்தை ஹெல்த்தியா இருக்காது. போதுமா?”


“என்னங்க? அந்த காலத்து ஆளுங்க மாதிரி பேசறீங்க. இப்போ மெடிக்கல் சைன்ஸ் எவ்ளோ அட்வான்ஸூடா இருக்கு. இதை சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க. அர்ஜுனை பேசி முடிக்கும் போது இதை சொல்லலையே?”


“சரி சொல்றேன், ஆனா இதற்கு பிறகு நீ இந்த கல்யாணத்தை பத்தி பேசக் கூடாது. ஓகே வா”


“நீங்க சொல்லுங்க. அப்புறம் அதை பத்தி பேசலாமா வேண்டாமா ன்னு நான் முடிவு பண்ணிக்கிறேன்”


“சரி, நல்லா கேட்டுக்கோ. அண்ணாவுக்கு ஜாதகத்தில் நம்பிக்கை இருக்குன்னு தெரியும் இல்ல?”


“ஆமாம்”


“ஹர்ஷி நிச்சயம் நின்றதும் அண்ணா அவளோட ஜாதகத்தை எடுத்துக் கொண்டு போய் பார்த்தார். அப்போ, அந்த ஜோசியர் என்ன சொல்லி இருக்காரு தெரியுமா?”


“என்ன சொன்னார்?”


“நம்ம ஹர்ஷிக்கு நெருங்கிய சொந்தத்தில் கல்யாணம் பண்ணினா முதல் தாலி கழுத்தில நிக்காதுன்னு சொன்னாராம்”


“என்னங்க சொல்றீங்க? இதை எல்லாம் நம்பறீங்களா?”


“ஒரு விஷயம் தெரியாத போது அதை செய்யலாம். ஒரு கஷ்டம் நடக்கும் ன்னு தெரிஞ்சு அதை தைரியமா பண்ண முடியுமா? சரி ஹர்ஷியோட விருப்பத்துக்கு ஏற்ப அவினாஷை கல்யாணம் பண்ணி வைக்கிறதாவே வச்சிக்கோ? தினம் தினம் பயந்துக்கிட்டே இருக்கனும். கொஞ்சம் லேட்டா அவன் வீட்டுக்கு வந்தா கூட பயப்படுவோம் இல்ல”


“சரி, இதுக்கு எதாவது பரிகாரம் இருக்கான்னு கேட்கலாம் இல்ல?”


“கேட்டாச்சு, எதுவும் இல்லை. ரத்த சொந்தத்தில் கல்யாணம் பண்ணிக் கொடுத்தா கண்டிப்பா அவளோட முதல் தாலி அவள் கழுத்தில் இருக்காதுன்னு சொல்லிட்டாரு அந்த ஜோசியர்”


“அவரு ஜோசியர் தானங்க. கடவுள் இல்லைல?”


“என்ன சொல்ல வர?”


“அவ பாவமுங்க. நான் சொல்றதை கேளுங்க. கடவுள் மேல பாரத்தை போட்டு விட்டு நம்ம அவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வச்சிடலாம்”


“விஜயா, நீ ஜோசியம் ஜாதகம் இதை எல்லாம் நம்ப மாட்டன்னு எனக்கு தெரியும். ஆனா தெரிஞ்சே என் பொண்ணோட லைஃபை ரிஸ்க்ல வைக்க எனக்கு மனசில்லை.


அப்புறம் ஏற்கனவே உன் பேச்சை கேட்டு ஏற்பாடு பண்ணி நின்னு போன பஃங்ஷன் போதும். அர்ஜூன் மேல கோபம் இருந்தாலும், நல்லவேளை இந்த ஜாதக தோஷத்தில் மாட்டிக்காம அவன் வேற கல்யாணம் பண்ணிக்கிட்டு நல்லா இருக்கானே அதுவே பரவாயில்லை என்று தோணுச்சு. 


அவினாஷ் ஹர்ஷி கல்யாணத்துக்கு. அண்ணாவும் ஒத்துக்கமாட்டாரு. எனக்கும் விருப்பம் இல்லை. இவ்வளவு ஏன் ஜோசியர் சொன்னதை உங்க அண்ணன் அண்ணி கிட்ட சொல்லிப் பாரு. அவங்க ஒத்துக்கிறாங்களா ன்னு பாரு” என்று சொல்லி விட்டு பெட்டில் படுத்து கொண்டு தூங்க சென்றார் வேணுகோபால்.


ஒன்றும் புரியாமல் கலக்கமாக அமர்ந்திருந்தாள் விஜயா.


*************


அவினாஷ் கேத்தரினுக்கு கால் செய்தான்.


“சொல்லுங்க அவினாஷ்”


“கேத்தரின் எனக்கு ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா?”


“சொல்லுங்க”


“நாளைக்கு எனக்கு நேவி இன்டர்வியூ அன்ட் ஸெலக்ஷன் இருக்கு”


“ஓகே”


“நாளைக்கு மார்னிங் எனக்கு ஹர்ஷிதா கிட்ட பேசணும். அவ எனக்கு ஆல் தி பெஸ்ட் சொல்லணும். பிளீஸ் முடியுமா?”


“கண்டிப்பா, நான் இன்னைக்கு மாதிரியே கான்ஃபரன்ஸ் கால் போடறேன்”


“தேங்க்ஸ், தேங்க் யூ ஸோ மச் கேத்தரின்”


“வெல்கம் பிரோ” என்றாள் கேத்தரின்.


“சாக்ரடீஸ் எப்படி இருக்காரு”


“சூப்பரா இருக்கான்”


“தெரியும், அவரு கிட்ட தான் உன்னோட நம்பர் வாங்கினேன்”


“அப்புறம் எப்படி இருக்காரு ன்னு என் கிட்ட கேட்கறீங்க”


“சும்மா தான் மா கேட்டேன். ஓகே பை, ஒன்ஸ் அகெயின் தேங்க்ஸ்”


“டோன்ட் மென்ஷன். பை பிரோ”


***************


ரஞ்சனி வழக்கம் போல தன் மாமியாருக்கு கால் செய்தாள்.


“என்னம்மா சாப்பிட்டுடீங்களா?” என்றாள் ரஞ்சனி.


“சாப்பிட்டுட்டேன் மா, நீ”


“இட்லி சாப்பிட்டேன் அம்மா”


“சரிம்மா, வர வெள்ளிக்கிழமை நாள் நல்லா இருக்கு. அன்னைக்கு நீயும் அர்ஜூனும் வந்திடுங்க மா. நான் உங்க மாமா கிட்ட சொல்லிட்டேன்”


“அப்பா ஓகே சொல்லிட்டாறா மா?”


“அவரு வேண்டாம்ன்னு சொல்லல மா. இன்ஃபேக்ட் அவரு தான் உனக்கு விருப்பம்னா அர்ஜூனையும் உன்னையும் வர சொல்லிக்கோ. எனக்கு எதுவும் ஆட்சேபனை இல்லை ன்னு சொல்லிட்டாரு”


“ரொம்ப சந்தோஷம் அம்மா. நான் அர்ஜூன் கிட்ட பேசிட்டு நாளைக்கு உங்களுக்கு சொல்றேன் அம்மா”


“சரிம்மா”


“அவினாஷ் எப்படி இருக்காரு?”


“நல்லா இருக்கான் மா”


“அவரோட நம்பர் தாங்க. நான் பேசறேன்”


“சரிம்மா” என்று நம்பர் வாட்ஸ் அப்பில் அனுப்பினாள் நிர்மலா.


“ஓகே அம்மா பை”


“பை மா”


ஃபோனை வைத்து விட்டு. அவினாஷூக்கு கால் செய்தாள் ரஞ்சனி.


“ஹலோ” என்றான் அவினாஷ்.


“ஹலோ நான் ரஞ்சனி பேசறேன். உங்க அண்ணனோட ஒயிஃப்”


“ஹாங், சொல்லுங்க அண்ணி. எப்படி இருக்கீங்க?”


“நான் நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க?”


“அய்யோ அண்ணி. வாங்க போங்க ன்னு எல்லாம் பேசாதீங்க. வாடா போடா ன்னு சொல்லுங்க”


“அச்சச்சோ, வாடா போடா ன்னு சொல்ல வராது நான் வேணும் ன்னா அவினாஷ் வாப்பா போப்பா ன்னு பேசவா?”


“ஓகே ஓகே, உங்க இஷ்டம். அப்புறம் அம்மா சொன்னாங்க நீங்க டெய்லி அம்மா கிட்ட பேசறீங்கன்னு”


“ஆமாம் ப்பா. இப்போ தான் உன் நம்பர் வாங்கினேன். இதுதான் என் நம்பர் ஸேவ் பண்ணிக்கோ பா”


“ஓகே அண்ணி, கண்டிப்பா. ஹாங் அண்ணி இன்னும் நான் அம்மா கிட்ட கூட சொல்லல நாளைக்கு எனக்கு நேவி இன்டர்வியூ அன்ட் ஸெலக்ஷன்”


“ஓ, சூப்பர். ஆல் தி பெஸ்ட் ப்பா”


“தேங்க்ஸ் அண்ணி. அண்ணா கிட்ட சொல்லிடுங்க. நான் அப்புறம் அண்ணா கிட்ட பேசறேன்னு சொல்லுங்க”


“சரிப்பா, டேக் கேர். பை”


“சரிங்க அண்ணி. பை” என்று சொல்லி ஃபோனை வைத்து விட்டு தன் அம்மாவிற்கு கால் செய்தான் அவினாஷ்.


“ஹலோ அம்மா”


“சொல்லுப்பா, எப்படி இருக்க?”


“நல்லா இருக்கேன் மா. நீங்க?”


“நல்லா இருக்கேன் டா கண்ணா”


“அம்மா, நாளைக்கு மார்னிங் எனக்கு நேவி இன்டர்வியூ அன்ட் ஸெலக்ஷன்”


“சந்தோஷம் டா கண்ணா. நல்லா பெர்பாஃர்ம் பண்ணு. நான் உனக்காக கோவிலுக்கு போய் அர்ச்சனை பண்ணிக்கிட்டு வரேன்”


“சரிம்மா, தேங்க்ஸ் மா. 

அம்மா, அப்புறம்…”


“சொல்லு டா”


“ஹர்ஷிதாவோட அப்பா, பெரியப்பாவுக்கு நாங்க லவ் பண்றது தெரிஞ்சிடிச்சு. அதனால அவ ஃபோனை கூட வாங்கி வச்சிட்டாங்க”


“என்னப்பா சொல்ற”


“ஆமாம் அம்மா”


“இந்த காலத்தில கூட இப்படி இருக்கிறாங்களா?”


“தெரியலை மா. அவங்க என்ன நினைக்கிறாங்கன்னு? ஆனா பெரியவங்க உங்க எல்லாரோட சம்மதத்தோடவும் ஆசிர்வாதத் தோடவும் தான் எங்களுக்கு கல்யாணம்ன்னு நாங்க உறுதியாக இருக்கிறோம்”


“ரொம்ப சந்தோஷம் டா. சீக்கிரமா அவங்களும் ஒத்துக்குவாங்க. நீ கவலைப்படாதே. நாளைக்கு ஹர்ஷி கூட பேச முடியலையேன்னு உனக்கு கஷ்டமா இருக்கா?”


“அதெல்லாம் இல்லை மா. பேசறதுக்கு நான் ஏற்பாடு பண்ணிட்டேன்” என்று கேத்தரினிடம் ஹெல்ப் கேட்டதை சொன்னான்.


“அடப்பாவி. பெரிய ஆளு டா நீ” என்று சிரித்துக் கொண்டே சொன்னாள்.


“அப்புறம் ரஞ்சனி என்கிட்ட உன்னோட நம்பர் வாங்கி இருக்கா. கால் பண்ணுவா”


“அதெல்லாம் அண்ணி செம ஃபாஸ்ட். என்கிட்ட பேசிட்டாங்க. நானும் அவங்க நம்பரை ஸ்டோர் பண்ணிட்டேன்”


“ஓ, சரி டா. நாளைக்கு காலைல கால் பண்றேன்”


“அம்மா, அப்பா வீட்ல இருக்காறா?”


“இன்னும் வீட்டுக்கு வரலை பா”


“ஓ, ஓகே. தாத்தா எப்படி இருக்காரு?”


“டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்திட்டாரு. ஆனா இன்னும் நார்மலா ஆகலை”


“பேச முடியுமா அம்மா அவரால?”


“இருப்பா நான் அவர் ரூமிற்கு போய் பார்த்து கேட்கிறேன்”


“சரிம்மா, நான் லைன்லையே இருக்கேன்”


பாண்டியராஜனிடம் ஃபோனை கொடுத்தாள் நிர்மலா.


“தாத்தா எப்படி இருக்கீங்க?” என்று கேட்டுவிட்டு அவரிடமும் தன் இன்டர்வியூ பற்றி கூறினான் அவினாஷ்.


அவரும் வாழ்த்து மற்றும் ஆசிர்வாதம் செய்தார்.


பிறகு தன் அப்பாவிற்கும் அண்ணனிற்கும் தன் இன்டர்வியூ பற்றி பற்றி மெஸேஜ் அனுப்பினான் அவினாஷ்.


அர்ஜூன் “ஆல் தி பெஸ்ட் டா” என்று ரிப்ளை செய்தான்.


“தேங்க்ஸ் பிரதர்” என்று அவினாஷூம் அனுப்பினான்.


சிவராமனுக்கு மெஸேஜ் டெலிவரி ஆகவில்லை.


***************


வேலன் ஹர்ஷிதாவை அவளுடைய அப்பா மற்றும் பெரியப்பாவிடம் மாட்டி விட்ட சந்தோஷத்தில் தன் நண்பர்களுடன் தண்ணி அடித்தான்.


“என்னை லூசு மாமான்னு சொன்னாளே? இப்போ தெரியும் யாரு லூசுன்னு” என்று புலம்பினான்.


“டேய், ஒருவேளை அவ இஷ்டப்படி அந்த அவினாஷூக்கே கட்டி வச்சிட்டாங்கன்னா என்ன பண்ணுவ?”


சொன்னவனின் சட்டையை பிடித்து,


“ஏய், அந்த மாதிரி எதாவது முடிவு பண்ணினாங்கன்னா? என்னோட முடிவு வேற மாதிரி இருக்கும்”


“ஏய், விடுடா. லூசுன்னு சொன்னவள விட்டுட்ட. உனக்கு கல்யாணம் பண்ணி தரமாட்டேன்னு சொன்ன உங்க மாமனுங்களை விட்டுட்ட, என் சட்டையை பிடிக்கிறீயா?” என்றான் அவன் நண்பன்.


கோவத்தில் இன்னொரு கிளாஸ் விஸ்கியை குடித்தான்.


“உங்களுக்கு மட்டும் இல்லடா என் மாமனுங்க குடும்பத்துக்கும் நான் யாருன்னு காட்டுறேன்” என்று கத்தினான்.


**************


மறுநாள் ஆஃபீஸில் ராஜகோபால் மற்றும் வேணுகோபால் பேசிக்கொண்டு இருந்தார்கள்.


“வேணு, வர சன்டே மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வராங்க. ஹர்ஷிதா கிட்ட இப்போதைக்கு சொல்ல வேண்டாம்”


“ஆனா அண்ணா”


“வேணு”


“ஓகே அண்ணா,

எப்போ பார்த்தீங்க பையனை?”


“ஜோசியரை பார்த்திட்டு வந்ததிலிருந்தே மாப்பிள்ளை தேடிக் கொண்டு தான் இருக்கேன். இப்போதைக்கு நாலு பையன் ஃபைனல் பண்ணிருக்கேன். அதுல எது நமக்கும் ஹர்ஷிக்கும் பிடிச்சிருக்கோ?” 


ஒரு நிமிடம் மௌனமாக இருந்துவிட்டு, 


“நம்ம எல்லாருக்கும் பிடிச்சிருக்கோ, அவனை ஃபிக்ஸ் பண்ணிக்கலாம். இந்த பையன் அமேரிக்காவுல வேலை பார்க்கிறான். வீட்டில் ஒரே பையன். நம்ம ஹர்ஷிக்கு ஏத்த சம்பந்தம்னு தோணுது. முதலில் இந்த சம்மந்தத்தை வரவழைச்சு பார்க்கலாம்” என்று ஃபோட்டோவை காண்பித்தார் ராஜகோபால்.


“பையன் நல்லா தான் இருக்கான். ஆனா ஹர்ஷியை எப்படி சம்மதிக்க வைக்கிறதுன்னு தான் அண்ணா தெரியல?”


“நம்ம தான் டா பேசி அவளுக்கு புரிய வைக்கனும். அவ சின்ன பொண்ணு. எது நல்லது எது கெட்டதுன்னு நாம தான் எடுத்து சொல்லி புரிய வைக்கனும்” என்றார் ராஜகோபால்.


“சரிங்க அண்ணா” என்றார் வேணுகோபால்.



இந்த episode பிடிச்சிருந்தா எழுத்தாளரை உற்சாகப்படுத்துங்க!!
இப்போதே உற்சாகப்படுத்துங்கள்

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

No votes so far! Be the first to rate this post.

    No comments yet.