
தொடர்பியல்….. பாகம் -16
கேஸ் -2 ( நடேசன் தாத்தா – ரங்கசாமி)
பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்பினாள் ராகினி.
பை மம்தா….
பை ராகினி…. சும்மா அதையே நினைச்சுக்கிட்டு இருக்காத…. ரிளாக்ஸாக இரு…. என்றாள் மம்தா.
ஹூம்…. ஓகே…. பை…. என்று சொல்லி கிளம்பி சென்றாள் ராகினி.
பிரவீன் மம்தாவிடம் வந்து….
ஹாய் மம்தா….
இன்னைக்கு காலைல இருந்து இப்போ தான் என்னை பார்க்கறீயா?…. என்றாள் மம்தா.
இல்லையே…. என்றான் பிரவீன்.
அப்புறம்…. எதுக்கு இப்போ ஒரு ஹாய்….
சும்மா தான்….
மிச்….
ஒண்ணு கேட்கவா மம்தா….
என்ன?
என்னை ஏன் உனக்கு பிடிக்கல…. கருப்பா இருக்கறதுனாலையா?
பிரவீன் காம்ப்லெக்ஷன் எல்லாம் எனக்கு ஒரு பிரச்சனையே இல்லை…அப்படி பார்த்து பழகும் ஆள் நான் கிடையாது….. உன்னை மட்டும் இல்ல…. எனக்கு பொதுவாகவே எந்த ஆம்பளைங்களையும் லவ் பண்ண கல்யாணம் பண்ண பிடிக்கல…..
ஏன்….
அதை நான் உன் கிட்ட சொல்லனும் ன்னு அவசியம் இல்லை….
என்னை ஃபிரெண்டா கூட ஏத்துக்க மாட்டீயா….
ஆரம்பத்துல நான் உன்னை ஃபிரெண்டா நினைச்சு தான்…… உன் கூட பேசி பழகினேன்….எப்போ உனக்கு என் மேல இன்ட்ரெஸ்ட் வந்துச்சு எனக்கு தெரிஞ்சுதோ…. அப்பவே உன் கிட்ட இருந்து விலக நினைச்சேன்…. பிளீஸ் டோன்ட் டிஸ்டர்ப் மீ….
சாரி மம்தா…. ஒரு பொண்ணு இன்ட்ரெஸ்ட் இல்லன்னு சொன்ன பிறகும் அவளை லவ் டார்ச்சர் பண்ற கேரக்டர் நான் இல்ல…. நான் கிண்டல் பண்ணி விளையாடறது உனக்கு பிடிச்சிருக்கு ன்னு நினைச்சு தான் அப்படி பேசினேன். நான் இனிமே உன்னை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்…. சாரி…. ஆனா ஒண்ணு மட்டும் சொல்றேன்…. உன்னை நான் முதல் முதல்ல பார்த்த போதே லவ் பண்ண ஆரம்பிச்சிட்டேன்….. பை…. என்று சொல்லி விட்டு சென்றுவிட்டான் பிரவீன்.
இவ்வாறு அவன் பேசுவான் என்று சற்றும் எதிர்பார்க்காத மம்தா உறைந்து போனாள். சில நிமிடங்களுக்கு பிறகு அவளும் வீட்டிற்கு சென்றாள். ஆனால் இப்போது பிரவீன் பேசிய வார்த்தைகள் அவள் செவிகளில் ஒலித்துக் கொண்டே இருந்தது.
வீட்டிற்கு சென்றதும் தன் அப்பாவை பார்த்து விட்டு…. ஹாலில் வந்து அமர்ந்தாள்.
அப்போது அவளுடைய அம்மா வந்து அவளருகில் அமர்ந்து….
என்ன அம்மு…. ஏன் டல்லா இருக்க….
அம்மா…. என்று அவளுடைய தோளில் சாய்ந்து கொண்டாள் மம்தா.
என்னாச்சு கண்ணு….
அம்மா…. நான் சொல்லி இருக்கேன் இல்ல…. என் கூட லேப் ல பிரவீன் ன்னு ஒருத்தன் வேலை செய்யறான் ன்னு….
ஹூம்…. ஆமாம்…..
அவன் என்னை லவ் பண்றான் மா….
என்ன அம்மு சொல்ற….
ஆமாம் மா என்று ஆரம்பித்து…. அவன் சொன்ன அனைத்தையும் கூறினாள் மம்தா.
சரி…. விடு…. அதான் அவன் இதுக்கு மேல உன்னை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்னு சொல்லிட்டான் இல்ல…..
ஹூம்….. அதான் அவன் அப்படி பேசினது இல்லையா…. எனக்கு ஒரு மாதிரியாக ஆயிடிச்சு…. என்றாள் மம்தா.
உனக்கு அவனை பிடிக்குமா?
அப்படின்னு சொல்ல முடியாது மா…. நல்ல பையன் தான்…. ஆனா எனக்கு ஃபிரெண்டா மட்டும் இருந்தா போதும்…..
சரி…. எனக்கு ஒண்ணு சொல்லு…..
என்னம்மா?
இப்படியே கல்யாணம் பண்ணிக்காம வாழ் நாள் பூரா இருந்திடுவியா?
தெரியல மா…. ஆனா இப்போதைக்கு லவ் பண்ணனும்…. கல்யாணம் பண்ணிக்கனும் என்ற எண்ணம் எனக்கு சுத்தமா இல்லை…. அதுவும் நம்ம மனீஷாவை நினைச்சா லவ் பண்ண…. கல்யாணம் பண்ணிக்க தோணவே இல்லை மா….
இல்ல அம்மு…. அப்படி நினைக்காத….. ஒரு ஆம்பளை துணை இல்லாம வாழறது கஷ்டம் மா….. மனீஷா அவளுக்கான ஆளை சரியா தேர்ந்தெடுக்கல….. அதான் அவ…. என்று சொல்லி கண்கள் கலங்கினார் மம்தாவின் அம்மா.
அம்மா…. பிளீஸ் அழாதீங்க…. நீங்க அழுதா எனக்கும் அழுகை வரும்…. என்று சொல்லி அழுதாள் மம்தா.
இல்ல அம்மு…. நான் அழல…. நீ அழாத…. என்று சொல்லி கண்களை துடைத்துக் கொண்டு….
சரி வா…. சாப்பிடலாம்…. என்று சொல்லி மம்தாவை அழைத்து கொண்டு டைனிங் டேபிளுக்கு சென்றார் அவளுடைய அம்மா.
அப்பாவுக்கு டின்னர் கொடுத்திட்டீங்களா அம்மா?
கொடுத்திட்டேன் மா…. சாப்பிட்டு தூங்கிட்டார்….
சரி மா…. வாங்க நம்ம சாப்பிடலாம்….. என்று சொல்லி இருவரும் சாப்பிட்டனர்.
**************
மாதவனுக்கு கால் செய்தாள் ராகினி.
ஹாய் டா…. ரீச் ஆயிட்டியா?
ஜஸ்ட் நௌ டி….. இன்னைக்கு ஸ்டேஷன்ல நிறைய வேலை.
ஓ…..
இரண்டு விஷயம் கேட்க உனக்கு கால் பண்ணேன்.
என்னது?
ஒண்ணு….. மம்தா சொன்ன டாக்டர் கிட்ட பேசினியா?
இல்ல…. அவ நம்பர் அனுப்பி இருக்கா…. எனக்கு டைம் இல்ல பேச…. சொன்னேன் இல்ல கொஞ்சம் டைட் ஒர்க் ன்னு…..
ஹூம்…. ஓகே…..
அப்புறம்…. இன்னொன்று என்ன?
மாமா கிட்ட பேசினியா?
ஹூம்….
பேசிட்டியா?
என்ன சொன்னாரு?….
அது வந்து…..
சொல்லுடா…..
ஏய் இருடி…. என்னோட அப்பா தான் லைன்ல வராரு…. நான் பேசிட்டு சொல்றேன்…..
ஏய் ஏய்…. இதை மட்டும் இப்போ சொல்லிட்டு போ டா….. ஓகே சொன்னாறா?…. இ…. என்று ராகினி கேள்வியை கேட்டு முடிப்பதற்குள் மாதவன் ராகினியின் காலை ஹோல்டில் போட்டு விட்டு அவனுடைய அப்பாவிடம் பேசினான்.
ராகினி கால் கட் செய்து விட்டு ஃபோனை பார்த்து கொண்டே தூங்கிவிட்டாள்.
ஹலோ….அப்பா….
மாதவா…..
சொல்லுங்க பா…. அம்மா எப்படி இருக்காங்க……
நல்லா தான் பா இருக்கா…..
சொல்லுங்க பா…..
சாரி மாதவா……
என்னப்பா…. என் கிட்ட போய் சாரி எல்லாம் சொல்றீங்க…..
இல்ல டா….. நான் அப்படி எல்லாம் பேசி இருக்கக் கூடாது…..நீ நினைச்சிருந்தா என் கிட்ட சொல்லாமலே ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணி இருக்கலாம்….. ஆனா என் கிட்ட கேட்ட….. நான் தான் உன்னை புரிஞ்சிக்கல…..
இல்ல பா….. அப்படி எல்லாம் ஒண்ணும் இல்ல…..
இல்ல டா கண்ணா….. என் மேல நீ வச்சிருந்த
நம்பிக்கையை நானே கெடுத்துக்கிட்டேன்…. என்றார் மாதவனின் அப்பா.
அப்பா தயவு செஞ்சு இப்படி எல்லாம் பேசாதீங்க…. பிளீஸ்…. எனக்கு ரொம்ப ரொம்ப கஷ்டமா இருக்கு….
இல்ல மாதவா…. நானும் ஒரு சராசரி அப்பா மாதிரி நடந்துக்கிட்டேனே…. நீ என்னை ஃபிரெண்டு மாதிரி நினைச்சுக்கோ ன்னு நான் தான் உன் கிட்ட சொல்லி வளர்த்தேன்…. நீ அப்படி நினைச்சு தான் சொல்லி இருக்க…. ஆனா நான் உன்னை ஃபிரெண்டா நினைக்கல…. சாரி டா கண்ணா….. என்று கண்கள் கலங்க கூறினார்.
அப்பா…. இன்னொரு முறை சாரி சொன்னீங்க ன்னா நான் உங்க கிட்ட பேச மாட்டேன்…. நீங்க அப்போ பேசியதை விட இப்போ பேசறது தான் ரொம்ப ரொம்ப கஷ்டமா இருக்கு….
சரி டா கண்ணா…. இனிமேல் உன்னை எந்த வகையிலும் ஹர்ட் பண்ற மாதிரி பேச மாட்டேன்….. எனக்கு நீ ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கிறதுல ஒரு அப்ஜெக்ஷனும் இல்ல…..
தேங்க்ஸ் பா…. தேங்க் யூ ஸோ மச்…..
இன்னொரு விஷயம் சொல்லவா?
சொல்லுங்க பா….
நீ உங்க அம்மா கிட்ட சொல்ல பயந்த இல்ல…. அவ தான் என்னை திட்டி ஒத்துக்க சொன்னா…. இன்ஃபேக்ட் அவ தான் எனக்கு புரிய வச்சா….
அப்போ அம்மா கிட்ட சொல்லிட்டீங்களா?
ஆமாம் டா கண்ணா….
அம்மா ஒத்துக்கிட்டாங்களா?
அவ தான் டா என்னையே ஒத்துக்க வச்சா…. அப்போ அவளுக்கு சம்மதம் இல்லாமயா?
அப்பா…. எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு….. இப்பவே உங்க ரெண்டு பேரையும் கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கனும் போல இருக்கு…. என்று சொல்லி ஆனந்த கண்ணீர் வடித்தான் மாதவன்.
ரெஜிஸ்டர் மேரேஜ் முடிஞ்சதும் வீக் என்டுல வாங்க…. சின்னதா ஒரு ரிசெப்ஷன் மட்டும் வச்சிக்கலாம்…….. ஒரே பையனுக்கு இப்படி கல்யாணம் பண்றது கஷ்டமா தான் இருக்கு….. ஆனா கல்யாணம் பண்ணிக்க வேண்டிய கட்டாயத்தில நீ இருக்க ன்னு சொன்னதால நாங்க ரெண்டு பேரும் மனசார சம்மதிக்கிறோம் டா கண்ணா…. மறக்காம வீடியோ கால் பண்ணு மேரேஜ் பண்ணும் போது…..என்றார் மாதவனின் அப்பா.
கண்டிப்பா பா…. தேங்க்ஸ்….. தேங்க்ஸ்….. தேங்க் யூ ஸோ மச்…. பை…. என்றான் மாதவன்.
பை டா கண்ணா…. என்று சொல்லி ஃபோனை வைத்தார் மாதவனின் அப்பா.
உடனே தன் ஃபோனை எடுத்து ராகினிக்கு கால் செய்தான் மாதவன்.
ஹலோ ராகினி…..
சொல்லுடா….. என்று தூக்க கலக்கத்தில் சொன்னாள் ராகினி.
அதுக்குள்ளயே தூங்கிட்டியா?…..உனக்கு ஒரு குட் நியூஸ்…..
அப்படியா?….. நடேசன் தாத்தா வீட்டை கண்டு பிடிச்சிட்டியா…..
இன்னும் அதிலிருந்து நீ வெளியே வரலையா?
ஓ…. வேற விஷயமா…. சாரி டா…. சொல்லு…..
ஹூம்…. எங்க அப்பா கால் பண்றாரு ன்னு சொல்லி தான கால் கட் பண்ணேன்….
ஏய்…. ஆமாம் டா….. தூங்கிட்டேன் இல்ல…. அதான் மறந்துவிட்டேன்….. என்ன சொன்னாரு மாமா….. குட் நியூஸ் ன்னு சொன்னீயே…. அப்போ…. நம்ம ரெஜிஸ்டர் மேரேஜ் க்கு ஓகே சொல்லிட்டாரு தான?
நான் பேசலாமா?….. இல்ல நீயே கேள்வியும் கேட்டு பதிலும் சொல்லிட்டு ஃபோனை வச்சிடுவியா?
ஏய்…. சாரி டா மாதவா….. ஏன் கோச்சிக்கிற….. ஒரு ஆர்வத்தில பேசிட்டேன்…..
சரி…. சரி…. மன்னிச்சிட்டேன்…..
சரி…. விஷயத்தை முதலில் சொல்லு……
நீ சொன்னது கரெக்ட் தான்…. அப்பா மேரேஜூக்கு ஒத்துக்கிட்டாரு…..
வாவ்…. சூப்பர்…..
இரு இரு…. இன்னொரு விஷயம்….
ஹூம்?
அம்மாவும் ஒத்துக்கிட்டாங்க…..
வாட்…. நிஜமாகவேவா டா….. ஏய்….. என்னால நம்ப முடியல டா…. அத்தை தான் ஒத்துக்க மாட்டாங்க ன்னு சொல்லுவ….. இப்போ எப்படி….
நானும் அப்படி தான் நினைச்சேன்…. ஆனா எங்க அப்பாவை சம்மதிக்க வச்சதே எங்க அம்மா தானாம்…..
ஓ…. சூப்பர் சூப்பர் டா….. எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு…..
இப்போ மட்டும் நீ இங்க இருந்த உன்னை கட்டி பிடிச்சு….. உனக்கு உம்மா கொடுத்திருப்பேன்…..
அச்சச்சோ….
என்னாச்சு டா….
மிஸ் பண்ணிட்டேனே…..
எல்லாத்தையும் சேர்த்து வைத்து நம்ம ஃபர்ஸ்ட் நைட்ல தரேன்….
என்ன டி ஃபர்ஸ்ட் நைட்டு பத்தி எல்லாம் பேசி மூட ஏத்துற….
மாதவா…. என்றாள் ஹஸ்கி வாய்ஸில்…
என்னடி…. என்றான் மாதவன் மிக ஆர்வமாக….
குட் நைட்டு…. ஸ்வீட் டிரீம்ஸ்…. பை…. என்று கத்தி சொல்லி விட்டு சிரித்துக் கொண்டே ஃபோனை வைத்தாள் ராகினி.
மாதவனும் ஃபோனை வைத்தான். இருடி…. உன் வச்சிக்கிறேன்…. என்று சொல்லி சிரித்துக் கொண்டே.
****************
தொடரும் ……
அ. வைஷ்ணவி விஜயராகவன்.
No comments yet.