பாகம் 15

Vaishnavi Vijayaraghavan | 18 May 2026 | Share

தித்திக்கும் தேன்பாவை

பாகம் 15

திரும்பி நின்றாள் நந்தினி.

” தயவு செஞ்சு உண்மைய சொல்லுங்க நந்தினி ” என்று கண்கள் கலங்க அவள் கையைப் பிடித்துக் கொண்டு கேட்டான்.

நந்தினிக்கு என்னவோ போல இருந்தது.

” சரி நான் உண்மைய சொல்றேன். நான் சொன்ன அப்புறமும் நீங்க இவ்ளோ நாளா எப்படி ஷிவானி லவ் பண்ணிக்கிட்டு இருந்தீங்களோ அதே மாதிரி இதுக்கு மேலயும் லவ் பண்ணுவீங்களா? “

” சத்தியமா, என் உயிர் இருக்கிற வரைக்கும் ” என்றான் ரோஹித்.

” இருங்க எதுக்கும் நான் ஒரு முறை ஷியாம் கிட்ட கால் பண்ணி கேட்டுக்குறேன் சொல்லலாமான்னு? அவன் யார்கிட்டயும் சொல்லக்கூடாது என்கிட்ட சத்தியம் வாங்கி இருக்கான் “

அவளிடம் இருந்து ஃபோனை வாங்கிக் கொண்டு,

“ப்ளீஸ் நந்தினி,” என்று அவள் காலை பிடிக்காத குறையாக கேட்டான் ரோஹித்.

அதற்கு மேல் மறுக்க முடியாததாலும். வேறு வழி இல்லாமலும்  நந்தினி பேச ஆரம்பித்தாள்.

” ரோஹித், இந்த விஷயம் நான் உங்ககிட்ட சொன்னேன்னு யார்கிட்டயும் காட்டிக்காதீங்க. இப்ப கூட நான் ஏன் உங்ககிட்ட சொல்றேன்னா. நீங்க கெஞ்சி கேட்கிறதுனால இல்ல. 

நாளைக்கு நீங்க ஷிவானியை கல்யாணம் பண்ணிக்க போறீங்கன்னா இந்த விஷயம் உங்களுக்கு கண்டிப்பா தெரியணும். இல்லனா பின்னாடி உங்க வாழ்க்கையில பிரச்சனை வரும். அதனாலதான் சொல்றேன்.

இதனால எனக்கும்  ஷியாமிற்கும் பிரச்சனை வந்தாலும் பரவாயில்லை ஷிவானி நல்லா இருந்தா போதும் ” என்று ஆரம்பித்து அவளும் ஷியாமும் ஷிவானியை பார்த்தது முதல் டாக்டர் கூறியதாக ஷியாம் கூறியதும். ஷிவானியிடம் ஷியாம் பேசியது என்று அனைத்து விஷயங்களையும் கூறி முடித்தாள் நந்தினி.

இதைக் கேட்டதும் ரோஹித்தின் கண்கள் சிவந்தன. பதில் எதுவும் பேசாமல் அங்கிருந்து கிளம்பிச் சென்றான்.

“ரோஹித் ரோஹித்” என்று கூப்பிட்டாள் நந்தினி.

அவன் வேகமாக அங்கிருந்து சென்று விட்டான். ‘இப்போது ஷியாம் கிட்ட நான் என்ன சொல்றது?’ என்று யோசித்துக் கொண்டிருந்தவள் சுற்றம் முற்றும் பார்த்தாள் தான் தனியாக அங்கு நின்று கொண்டிருக்கிறோம் என்றது புரிந்த அடுத்த நொடி வேகமாக தன் பைக்கை எடுத்துக்கொண்டு வேறு பக்கமாக வீட்டை சுற்றி விட்டு தன் வீட்டிற்கு வந்தாள்.

வெறும் கையுடன் வந்த தன் மகளை பார்த்த கௌசல்யா,

” என்னடி என்னென்னமோ வாங்கணும்னு சொல்லிட்டு போன, ஆனா ஒன்னும் வாங்காம திரும்பி வர? “

அப்போது தான் அவள் அம்மாவிடம் சொல்லிவிட்டு சென்றது ஞாபகம் வந்தது. “நாளைக்கு நான் காலேஜ் போகும்போது வாங்கிக்கிறேன் மா”

” இப்ப போனியே, ஏன் வாங்காம 

வந்த? “

‘ஐயோ இந்த அம்மா விடமாட்டாங்க போல இருக்கே’ என்று நினைத்துக் கொண்டு 

” சண்டே இல்ல கடை மூடி இருக்கு போதுமா? ” என்று சொல்லிவிட்டு அவர் பதிலுக்கு காத்திராமல் உள்ளே சென்றாள் நந்தினி.

“என்னாச்சு இவளுக்கு, ஏன் வாங்கிட்டு வரலன்னு தானே கேட்டோம் அதுக்கு எதுக்கு இவ்ளோ கோபப்படுறா? ” என்று நினைத்துக் கொண்டே தன் வேலையை பார்க்க  கிச்சனுக்கு சென்றார் கௌசல்யா.

ஹாஸ்பிடலில் இருந்த ஷியாம் தன் தங்கையின் ஃபோனை எடுத்துப் பார்த்தான்.

ரோஹித் சொன்னது உண்மைதான். இருவரும் ஒரு வருடத்திற்கு மேலாக காதலித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று அவர்கள் எடுத்துக்கொண்ட ஃபோட்டோ மற்றும் வாட்ஸ் அப் சேட் இரண்டிலும் தெரிந்தது. முழுமையாக படிக்கவில்லை என்றாலும் மேலோட்டமாக பார்த்தான்.

ரோஹித் ஷியாமிற்கு கால் செய்தான். 

” ஹலோ” என்று ரோஹித் சொல்லும் போது 

வழக்கம்போல  சொல்லுடா மச்சான் என்று பேச வந்தது ஷியாமிற்கு. ஆனால் அமைதியாக

” சொல்லுடா” என்று மட்டும் சொன்னான்.

” நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும்”

” நான்தான் நாளை காலையில விசிட்டிங் டைம்ல உன்னை வந்து பார்க்க சொன்னேன் இல்ல? அப்புறம் இப்ப என்ன? “

” இல்ல மச்சி, நான் உன்கிட்ட பேசியே ஆகணும், நான் அங்க வரவா இல்ல நான் சொல்ற இடத்துக்கு நீ வரியா? “

ஒரு நிமிடம் யோசித்தவன்.

“சரி நானே வரேன்” என்றான்.

” நான் லொகேஷன் அனுப்புறேன் இன்னொரு அரை மணி நேரத்துல வந்துடு “

“எதுக்குடா?” என்று அவன் கேட்பதற்குள் ஃபோனை கட் செய்தான் ரோஹித்.

மிச் என்று சொல்லிக்கொண்டே நந்தினிக்கு கால் செய்தான். தான் வரும் வரை ஹாஸ்பிடலுக்கு வந்து ஷிவானியை பார்த்துக் கொள்வாளா என்று கேட்பதற்காக. ஆனால் அவளுடைய ஃபோன் சுவிட்ச் ஆஃப் என்று வந்தது.

ஃபங்ஷனில் அலைந்ததனால் டயர்ட் ஆகி தூங்கி இருப்பாளோ என்று நினைத்து விட்டு விட்டான். 

பிறகு நர்சி இடமே சென்று,

” சிஸ்டர் ஒரு முக்கியமான வேலையா வெளியே போக வேண்டி இருக்கு. என்னோட தங்கச்சிய கொஞ்சம் பார்துக்கறீங்களா? ” என்றான் ஷியாம்.

” சார் டூ ஹவர்ஸ்ல என்னோட டியூட்டி முடிந்துவிடும். அதுக்குள்ள வந்துருவீங்களா? “

” கண்டிப்பா சிஸ்டர் அதுக்குள்ள வந்துடறேன். பேமென்ட் இன்னைக்கு ஒன்னு பண்ணிட்டேன். மெடிசின்ஸ் மட்டும் ஏதாவது வாங்கி தரணும்னா நீங்க வாங்கிட்டு சொன்னீங்கன்னா நான் ஜிபே கூட பண்ணிடறேன்” என்று முந்தைய நாள் கேட்டது போலவே கேட்டான்.

” அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்ல சார் அப்படி வேணும்னா நாங்க வாங்கி கொடுத்துடுவோம் ஃபைனல் பில்லுல உங்களுக்கு ஆட் பண்ணிடுவோம் “

” ஓகே சிஸ்டர் தேங்க்யூ சோ மச் ” என்று பேசிவிட்டு தன் ஃபோனை எடுத்து பார்த்த போது லொகேஷன் அனுப்பி இருந்தான் ரோஹித்.

பத்து நிமிடத்தில் அந்த பார்க்கிற்கு சென்றான் ஷியாம்.

யாரும் இல்லாத இடமாக பார்த்து அங்கே ரோஹித் வெயிட் செய்து கொண்டு இருந்தான்.

” என்ன விஷயம்னு சொல்லு. ஷிவானியை ஹாஸ்பிடல்ல நான் தனியா விட்டுட்டு வந்து இருக்கேன் ” 

” ஷிவானியை யார் அப்படி பண்ணாங்கன்னு எனக்கு தெரியும் “

ரோஹித் அப்படி சொன்னதும் ஷியாமின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தன. இருந்தாலும் பொறுமையாக.

” என்ன உளர்ற? “

” அவளை யார் ரேப் பண்ணினாங்க என்று எனக்கு தெரியும் என்று சொல்ல வரேன்”

அவனுடைய சட்டையை பிடித்து உளுக்கி 

“யார் உனக்கு இதை எல்லாம் சொன்னது”

” யார் என்கிட்ட சொன்னது உனக்கு தெரியனுமா? ஷிவானியை அப்படி பண்ணினது யாருன்னு உனக்கு தெரியனுமா? “

” உன்கிட்ட சொன்னது நந்தினி தான்னு எனக்கு தெரியும். ஏன்னா எங்க மூணு பேரை தவிர வேறு யாருக்கும் இந்த விஷயம் தெரியாது. ஷிவானி சொல்லக்கூடிய நிலைமையில் இல்ல. நான் சொல்லல ஸோ அவ தான் சொல்லிருப்பான்னு எனக்கு தெரியும். அவளுக்கு அப்புறம் இருக்கு.

அவன் யாருன்னு சொல்லுடா? ” என்று கோபத்துடனும் ஆத்திரத்துடனும் கேட்டான் ஷியாம்.

“நான் சொல்றேன், ஆனா அவனை தண்டிக்கிற உரிமையை நீ எனக்கு தான்  தரணும்.”

” சரி யாருன்னு சொல்லு? “

“கிஷோர் “

” கிஷோரா?”

” ஆமாம், எந்த கிஷோரோட ஷிவானிக்கு பிரச்சனை இருந்துச்சோ அவனே தான்”

“அவனா? அவன் ஜெயில்ல தான இருக்கான் “

“போன வாரம் தான் ஜெயில்ல இருந்து வந்து இருக்கான்.”

” அவன்தான் உனக்கு எப்படி தெரியும்? “

“ஷிவானி தான் சொன்னா” என்றான் ரோஹித்.

“என்னடா சொல்ற? அவ எப்போ உன் கிட்ட பேசினா?”

” நான் நந்தினி கிட்ட பேசிட்டு வீட்டுக்கு போகும்போது ஒரு அன்நோன் நம்பரில் இருந்து கால் வந்துச்சு “

அப்போது அவர்கள் பேசியதை கூறினான் ரோஹித்.

“ஹலோ ரோஹித்”

“ஷி, ஷிவானி… நீயா?”

“ஆமாம் ரோஹித், உன் கிட்ட பேசறதுக்கு இங்க ஒரு நர்ஸ் கிட்ட ஃபோன் வாங்கி கால் பண்றேன்”

“சொல்லுமா, எப்படி இருக்க?”

“ரோஹித், நான் ஒன்னு சொன்னா என்னை வெறுத்து ஒதுக்கிடுவியா டா?”

“சே சே, ஏன்டி இப்படி எல்லாம் பேசுற? நீ என்னோட உயிர் டி”

“என்னை ரேப் பண்ணிட்டாங்க டா” 

என்று சொல்லும் போதே ஷிவானியின் வார்த்தைகள் குழறியது.

” ஷிவானி, நீ டென்ஷன் ஆகாத. உனக்கு ஒரு ஆக்ஸிடெண்ட் ஆகி இருக்கு அவ்வளவு தான். அதனால எந்த வித பாதிப்பும் நம்ம உறவுக்குள் ஏற்படாது”

“உண்மையாகவே தான் சொல்றீயா டா?”

“நீ எப்பவுமே என் தேன்பாவை தான் டி”

“என்னை கல்யாணம் பண்ணிக்குவியா டா?”

“நீ ஏற்கனவே என் பொண்டாட்டி டி. எப்போ உன்னோட காதலுக்கு நான் சம்மதம் சொன்னேனோ அப்பவே நீ என் பொண்டாட்டியா ஆயிட்ட. கடவுள் சாட்சியாகவும் உறவினர்கள் சாட்சியாகவும் உன் கழுத்தில தாலி கட்ட வேண்டியது மட்டும் தான் பாக்கி. நீ பரிபூரணமா குணமாகி வந்த பிறகு உனக்கும் எனக்கும் கல்யாணம்”

“உண்மையாகவே வா ரோஹித்”

“சத்தியமா டி”

“தேங்க்ஸ் டா. எங்கே என்னை வெறுத்து ஒதுக்கி விடுவியோன்னு நினைச்சேன் டா”

தொடரும்….

அ. வைஷ்ணவி விஜயராகவன்.

இந்த episode பிடிச்சிருந்தா எழுத்தாளரை உற்சாகப்படுத்துங்க!!
இப்போதே உற்சாகப்படுத்துங்கள்

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

No votes so far! Be the first to rate this post.

    No comments yet.