பாகம்-13,14

Vaishnavi Vijayaraghavan | 27 Apr 2026 | Share

பாகம் 13


விருத்திகா கிட்ட ஏன்டா சொல்ல வேணாம்னு சொல்ற என்றான் விஹான்.


 இப்போதைக்கு தெரிய வேணாம்னு தான் சொன்னேன், தீபக் எங்க இருக்காருன்னு தெரிஞ்ச அப்புறமா விருத்திகா கிட்ட சொல்லிக்கலாம் என்றான் ரோஹித்.


 சரி அப்போ நம்ம தீபக் ஆபீஸ்ல போய் விசாரிச்சதை பத்தி அவ கேட்டான்னா என்ன சொல்றது?


 இன்னைக்கு ஆபீஸ் லீவ் மண்டே தான் விஷயம் தெரியும்ன்னு செக்யூரிட்டியும் ஓட்டி பண்ணிகிட்டு இருக்குறவங்களும் சொன்னாங்கன்னு சொல்லு.


 இந்த ரெண்டு நாள்ல என்னடா ஆயிட போகுது.

 எப்படி இருந்தாலும் மண்டே உண்மையை சொல்லித்தான் ஆகணும்.


 இல்லடா, அவ பிரக்னண்டா இருக்கா. உண்மை தெரிஞ்சா கண்டிப்பா சாப்பிடாமல் தூங்காம இருப்பா, அது அவளுக்கும் நல்லது இல்ல, அவ வயித்துல வளருர குழந்தைக்கும் நல்லது இல்ல.


 அதுக்காக எவ்வளவு நாளைக்கு நீ மறைக்க முடியும் என்று நினைக்கிறேன். இப்ப மட்டும் ஒழுங்கா சாப்பிடுறாளா என்ன? தீபக் கிட்ட இருந்து கால் வராமல் அவ நார்மலா இருக்க மாட்டா. நேத்து நைட்டே அவளை கஷ்டப்பட்டு தான் சாப்பிட வச்சேன்.


 இப்ப என்ன பண்ணலாம்னு சொல்ற?


 உண்மையை சொல்லி விடுவது தான் பெஸ்ட் ன்னு நினைக்கிறேன்.


 சரி அதுக்கு முன்னாடி ஒன்னு பண்ணலாம்.


என்னடா?


ராஜா சொன்ன மாதிரி, அக்கவுண்ட் இருக்கிற பணமும், உன் தங்கச்சி உடைய நகையும் இருக்கான்னு அவளை செக் பண்ணி சொல்ல சொல்லு.


 என்னடா லூசு ஆயிட்டியா டா நீ? இப்பதான் அவகிட்ட விஷயத்தை சொல்ல கூடாதுன்னு சொல்ற. அப்புறம் அவளையே பேங்க்ல போய் செக் பண்ணிட்டு சொல்ல சொல்ற? நீ என்னதான் சொல்ல வர சத்தியமா எனக்கு புரியல.


மச்சி, வேற ஏதாவது ஒரு காரணம் சொல்லி பேங்க்ல இருந்து அவளோட நகையும் பணமும் எடுத்துட்டு வர சொல்லு.


என்னடா சொல்ல சொல்ற?


 கம்மிங் மண்டே நம்ம ஸ்கூல் ஃப்ரெண்ட் பிரியங்காவோட மேரேஜ் வருதுல்ல, விருத்திகாவுக்கு கூட அவளை நல்லா தெரியும் இல்ல, அவளை ஜுவல்லரி எடுத்து கிட்டு போட்டுட்டு வர சொல்லு. அப்போ பேங்க்ல போய் இல்லன்னு தெரிஞ்சா உண்மை தெரிஞ்சிடும்.


 அவளுக்கும் அப்போ உண்மை தெரிஞ்சிடும் இல்ல?


 ஆமாம், நம்ம சொல்ல வேண்டாம் அவளே தெரிஞ்சுக்கட்டும்.


 சரி வா வீட்டுக்கு போகலாம்,


 இல்ல நீ முதல்ல அவளுக்கு கால் பண்ணு.


 வீட்டுக்கு போய் நேரா பார்த்து பேசிக்கலாம் இல்ல.


இல்ல வேண்டாம். இப்ப ஃபோன்ல பேசு. நம்ம பிரிப்பேர் ஆகாம போனா அவ எதாவது கேட்கும் போது நம்ம உளரிடுவோம். ஃபோன்லன்னா அதை அவாய்ட் பண்ணலாம்.


 ஓகே, என்ற சொல்லிவிட்டு தன் தங்கையின் நம்பருக்கு கால் செய்தான் விஹான். 


 ஃபோனை எடுத்த உடனே,


 அண்ணா, சொல்லு அண்ணா , தீபக் பத்தி ஏதாவது தெரிஞ்சுதா?


 இல்லம்மா.


 என்ன அண்ணா சொல்ற?


 இன்னைக்கு சாட்டர்டே இல்ல அதனால மண்டே வர சொல்லி சொல்லிட்டாங்க. யாருமே இல்ல. செக்யூரிட்டிக்கு எதுவும் தெரியல. ஒன்னு ரெண்டு பேரு இருக்காங்க ஆபீஸ்ல அவங்க யாருக்குமே தீபக்கை தெரியல.


 சரி அண்ணா, மண்டே நானும் வரட்டுமா ஆபீசுக்கு.


 இல்ல இல்ல இந்த நேரத்துல அலையாத நீ வீட்டிலேயே இரு. நானே விசாரிச்சிட்டு உங்க கிட்ட சொல்றேன்.


 சரி அண்ணா.


 அப்புறம் விரு,


 சொல்லு அண்ணா.


 என் பிரண்டு பிரியங்கா இருக்கா இல்ல?


 ஆமா.


 அவளுக்கு மண்டே கல்யாணம். நாளைக்கு ஈவினிங் ரிசப்ஷன். நானும் ரோஹித்தும் போக போறோம். நீயும் வரியா?


 நான் எதுக்கு அண்ணா, நீங்க ரெண்டு பேரும் போயிட்டு வாங்க.


 உனக்கு தான் அவள நல்லா தெரியுமில்ல. அதுவும் இல்லாம இன்வைட் பண்ணும் போது அவ உன்னையும் தான் வர சொன்னா. நான்தான் நீ உன் வீட்ல இருக்க அவ்வளவு தூரம் டிராவல் பண்ணி வர முடியாதுன்னு சொன்னேன்.


 உண்மைய சொன்னா எனக்கு இப்போ மூடு இல்லனா. மைண்டே ஒரு மாதிரி இருக்கு.


 அதுக்கு தான் போகலாம்னு சொல்றேன். நீயும் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகுவ, உன்ன பார்த்து நாங்களும் ரிலாக்ஸ் ஆகுவோம்.


 அண்ணா டிரஸ், ஜுவல்லரி எதுவுமே இல்லை அண்ணா.


 வாங்கி தரவா,


 இல்லன்னா டிரஸ் வீட்ல இருக்கு, அப்புறம் நகை எல்லாம் பேங்க் லாக்கர் ல இருக்கு.


 சரி வா உன் வீட்டுக்கு போய் டிரஸ் எடுத்துக்கிட்டு அப்படியே பேங்க்ல லாக்கர் ல இருந்து நகையை எடுத்துட்டு வரலாம்.


 ஆபீஸ்க்கு வர்றதுக்கே டிராவல் பண்ண வேண்டாம்னு சொன்ன? இப்ப இதுக்கு மட்டும் டிராவல் பண்ணலாமா?


 ஆபீஸ்க்கு வேண்டாம்னு சொன்னதுக்கு காரணம் இருக்கு. உனக்கு என்ன விஷயம்ன்னு தெரியிற வரைக்கும் ரொம்ப டென்ஷனா இருப்ப, ஒவ்வொருத்தரையும் மீட் பண்ணும் போது இவங்க என்ன சொல்லுவாங்களோ அவங்க என்ன சொல்லுவாங்களோ நினைச்சு பயந்துகிட்டே இருப்ப. அதனாலதான் ஆபீசுக்கு வேண்டாம்னு சொன்னேன். ஆனால் உன்னை ரிலாக்ஸ் பண்ணிக்கிறதுக்காக தான் இந்த பங்ஷனுக்கு போகலாம் என்று கேட்டேன். இதுக்கு அப்புறமும் உனக்கு விருப்பம் இல்லைன்னா விட்டுடுமா நான் கம்பெல் பண்ணல.


 இல்லை இல்லை அண்ணா, நான் வரேன், போகலாம்.


 சரி இப்ப நானும் ரோஹித்தும் வரோம். உங்க வீட்டுக்கு போய் டிரெஸ் எல்லாம் எடுத்துக்கிட்டு அப்படியே பேங்க்கு போயிட்டு நகையை எடுத்துக்கிட்டு நம்ம ஈவினிங் வந்துடலாம்.


 ஓகே அண்ணா. ஆனா அவரையும் எதுக்கு தொல்லை பண்றீங்க. நம்ம ரெண்டு பேர் மட்டும் போயிட்டு வரலாம் இல்ல. 


 இல்ல அவன் தான் கார்ல கூட்டிட்டு போறேன்னு சொன்னான். நாளைக்கு ஃபங்ஷனுக்கும் அவன் கூட தான் போக போறோம்.


 எனக்கு என்னமோ அவரை ரொம்ப தொல்லை பண்ற மாதிரி இருக்கு அண்ணா.


 அவன் அப்படியெல்லாம் நினைக்க மாட்டான் மா.


தெரியும் அண்ணா, ஆனா எனக்கு கஷ்டமா இருக்கு.


 நான் சொன்னா அவன் கேட்க மாட்டான். உனக்கு விருப்பம் இல்லைன்னு வேணும்னா அவன் கிட்ட சொல்லிடவா?


 வேண்டாம் அண்ணா, நீங்க ரெண்டு பேரும் வாங்க நான் ரெடியா இருக்கேன். 


 சரி நாங்க இன்னொரு 15 மினிட்ஸ்ல வீட்ல இருப்போம் நீ ரெடியா இரு.  


 ஓகே அண்ணா என்று சொல்லி ஃபோனை வைத்து விட்டு சுடிதார் மாற்றிக் கொண்டு ரெடியாக அமர்ந்து இருந்தாள்.

தொடரும்…..

அ. வைஷ்ணவி விஜயராகவன்.


பாகம் 14 



தன் ஃபோனை எடுத்து மறுபடியும் தீபக்கிற்கு கால் செய்தாள் விருத்திகா. நாட் ரீச்சபிள் என்று வரும் பொழுதே விருத்திகாவின் கண்களில் இருந்து நீர் வழிந்தது. அதை துடைத்துக் கொண்டு தன் ஃபோனில் அவர்கள் இருவரும் எடுத்துக் கொண்ட ஃபோட்டோவை பார்த்துக் கொண்டு இருந்தாள்.


 அந்த ஃபோட்டோ எடுக்கும் போது நடந்தவற்றை நினைத்துப் பார்த்தாள்.


 விரு வாடி ஒரு செல்ஃபி எடுத்துக்கலாம் என்று சொல்லி கிட்சனில் வேலை செய்து கொண்டு இருந்த அவளை இழுத்து வந்தான் தீபக். லெமன் ரைஸ் செய்வதற்காக லெமனை அறிந்து கொண்டிருந்தவள் பாதி லெமனை கையில் எடுத்து வந்தாள். 


 வாடி என் செல்ல பொண்டாட்டி என்று சொல்லிக் கொண்டே அவள் கன்னத்தில் முத்தமிடுவது போல ஒரு செல்ஃபி எடுக்க வந்தான். அப்போது சரியாக அவன் கண்ணில் அந்த எலுமிச்சம் பழத்தை பிழிந்தாள். ஆ என்றவன் கத்தும் போது செல்ஃபி கிளிக் ஆகியது. அவன் முகம் சுளித்தபடியும் இவள் அவனை பார்த்து சிரிக்கும் படியும் அந்த ஃபோட்டோ இருந்தது. 


 அந்த நினைவுகள் வந்ததால், அதை நினைத்து ஒரு நொடி சிரித்தவள் பின்னர் அழத் தொடங்கினாள். அப்போது வாசலில் கார் சத்தம் கேட்டது.


 கண்களை துடைத்துக் கொண்டு ஃபோனை ஹேண்ட் பேக்கில் வைத்துவிட்டு வெளியே வந்தாள்.


 ரெடியா விரு, போலாமா என்றான் விஹான்.


 நான் ரெடி அண்ணா, போலாம் என்று சொல்லி வீட்டை பூட்டிக்கொண்டு காரில் ஏறினாள்.


 விருத்திகாவின் வீட்டிற்கு சென்றனர்.


 அங்கே சென்றபோது தீபக்கின் ஞாபகம் அதிகமாக வந்தது. கடைசியாக அவன் பக்கத்தில் அவள் உட்காரும்போது அவன் சட்டு என்று எழுந்தது. பின்னர் இரண்டு நாட்களுக்கு உன் அண்ணன் வீட்டில் இருந்து விட்டு வா என்று அவன் சொன்னது, அவனுடன் கடைசியாக காரில் வந்தது எல்லாம் நினைவுக்கு வர அவளுடைய கண்கள் குளமானது.


 தன் அண்ணனுக்கும் ரோஹித்துக்கும் அவள் கஷ்டப்படுவது தெரிய வேண்டாம் என்று நினைத்தவள், தன் சோகத்தை அடக்கிக் கொண்டு ரூமிற்கு சென்று இரண்டு புடவைகளும் இரண்டு நல்ல சுடிதாரும், இன்னும் சில துணிகளையும் எடுத்துக் கொண்டாள். அப்படியே தீபக்கின் கப்போர்டில் இருந்து அவனுடைய இரண்டு மூன்று துணிகளை எடுத்துக் தன் பேகினிலே வைத்துக் கொண்டாள். பின்னர் பேங்க் பாஸ்புக், லாக்கர் கீ அனைத்தையும் எடுத்துக்கொண்டு கிளம்பினார்கள்.


 பேங்கிற்கு சென்றனர் மூவரும்.


 விஹானும் ரோஹித்தும் வெளியே காரிலேயே அமர்ந்திருந்தனர். பேங்கிற்குள் சென்ற விருத்திகா லாக்கரில் இருந்து நகைகளை எடுத்துக் கொண்டு ஏடிஎம்மில் கொஞ்சம் பணமும் எடுத்துக் கொண்டு வந்தாள்.


 என்னம்மா எடுத்துக்கிட்டியா போலாமா என்றான் விஹான்.


 எடுத்துக்கிட்டேன் அண்ணா போகலாம் என்றாள்.


 ரோஹித்துக்கும் விஹானுக்கும் நிம்மதியாக இருந்தது. நல்லவேளை தீபக் பணமும் நகையும் எடுத்துக்கிட்டு போகல என்று நினைத்துக் கொண்டனர். விருத்திகா மிகவும் டல்லாகவே இருந்தாள். அவள் தீபக்கை மிகவும் மிஸ் செய்கிறாள் என்று இருவருக்கும் புரிந்தது. அதனால் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்து விட்டனர். வீட்டிற்கு வரும்போதே டின்னர் சாப்பிட்டு விட்டு வந்து விட்டனர் மூவரும்.


 அவர்கள் இருவரையும் விஹான் வீட்டில் இறக்கி விட்டு விட்டு, ரோஹித் தன் வீட்டிற்கு சென்றான்.


ஓகே அண்ணா நான் போய் தூங்குறேன் என்றாள் விருத்திகா.  


சரி மா என்றான் விஹான்.


தன் ரூமிற்கு சென்று மறுநாள் திருமண ரிசெப்ஷனுக்கு போட வேண்டிய புடவை மற்றும் நகைகளை எடுத்து வைத்து விட்டு பெட்டில் வந்து படுத்தாள். மறுபடியும் தீபக்கிற்கு கால் செய்தாள். நாட் ரீச்சபிள் என்று வந்தது. பெருமூச்சு விட்டபடி தன் வயிற்றில் இருக்கும் குழந்தையிடம் பேசினாள் விருத்திகா.


செல்லம், உங்க அப்பா எங்க போயிருக்காருன்னே தெரியல. எனக்காக இல்லை என்றாலும் உனக்காகவாவது வந்து விடுவாருன்னு நினைக்கிறேன் என்று சொல்லும் போதே அவளுடைய கண்கள் கலங்கியது. வெகு நேரமாக தீபக்கை பற்றியே நினைத்துக் கொண்டிருந்தவள், பிறகு அப்படியே தூங்கி விட்டாள்.


மறுநாள் ஞாயிற்று கிழமை என்பதால் அனைவருமே லேட்டாக எழுந்தனர். 


விஹான் மற்றும் விருத்திகா இருவரும் ஒன்பது மணி அளவில் எழுந்தனர். ரோஹித் அவனுடைய வீட்டில் பதினோரு மணி அளவில் எழுந்தான்.


விஹான் ரோஹித்திற்கு மெஸேஜ் அனுப்பினான்.


மச்சி, லஞ்சுக்கு வந்திடு டா, அதுக்கப்புறம் நம்ம மூணு பேரும் ஈவினிங் ரிசெப்ஷனுக்கு போகலாம் என்று.


பன்னிரெண்டு மணி அளவில் தான் மெஸேஜை பார்த்தான் ரோஹித்.


சாரி மச்சி, இப்போது தான் எழுந்தேன். ரொம்ப பசிக்குது. நான் இங்கேயே சாப்பிட்டு விட்டு வரேன். டின்னர் ரிசப்ஷனில் சாப்பிடலாம் என்று ரிப்ளை மெசேஜ் அனுப்பினான் ரோஹித்.


விருத்திகா சமைத்தாள். விஹான் அவளுக்கு உதவி செய்தான்.


ஒரு மணி அளவில்,


அண்ணா, ரோஹித் வருவாரா லஞ்சுக்கு?


இல்ல மா, அவன் வரலைன்னு சொல்லிட்டான். ரொம்ப பசிக்குதாம் அதனால ஆர்டர் பண்ணி சாப்பிடப் போறானாம்.


ஓ, ஓகே என்று சொன்ன விருத்திகா ரோஹித்துக்கு மெஸேஜ் செய்தாள்.


நான் லஞ்ச் பண்ணி இருக்கேன்னு அண்ணா உங்க கிட்ட சொன்னாரா என்ன? 

பயந்து லஞ்சுக்கு வரலைன்னு சொல்லிட்டீங்க என்று மெஸேஜ் அனுப்பினாள்.


வெகுநேரமாக டிவி பார்த்துக் கொண்டிருந்தான் ரோஹித். வீட்டு வாசலில் ஸ்விகியில் ஆர்டர் செய்த ஃபுட் வந்ததும் அதை வாங்கிக் கொண்டு சோஃபாவில் அமர்ந்தான். அப்போது ஃபோனை எடுத்துப் பார்த்தவன் விருத்திகாவிடம் இருந்து வந்த மெஸேஜை பார்த்தவுடன் வாய் வரை எடுத்து சென்ற சாப்பாட்டை அந்த இலையிலேயே வைத்து விட்டு அதையும் எடுத்துக் கொண்டு ஈவினிங் ரிசெப்ஷனுக்கு போட வேண்டிய டிரெஸ் எடுத்துக் கொண்டு காரில் விஹான் வீட்டிற்கு சென்றான்.


என்னடா மச்சி, ஆர்டர் பண்ணிட்டேன், இங்கேயே சாப்பிட்டு விட்டு சாயங்காலமா வருவேன்னு சொன்ன. இப்போ என்ன ஆச்சு? என்று கிண்டல் செய்தான் விஹான்.


நீ சொல்லி இருந்தா வந்திருக்க மாட்டேன். ஆனா விருத்திகா மெஸேஜ் அனுப்பினா, அதனால வந்தேன்.


விரு வா, உன்னை லஞ்சுக்கு வரச் சொன்னாளா?


இல்ல அப்படி சொல்லல என்று அவள் அனுப்பிய மெஸேஜை சொன்னான் ரோஹித்.


ஓ, ஓகே. ஓகே. ஆனா விரு லஞ்ச் சாப்பிட்டு விட்டு தூங்கிட்டாளே? என்றான் விஹான்.


அதனால என்ன பரவாயில்ல, நான் அவ செஞ்ச சாப்பாட்டை தான் சாப்பிட வந்தேன் என்றான் ரோஹித்.




தொடரும்…..

அ. வைஷ்ணவி விஜயராகவன்.


இந்த episode பிடிச்சிருந்தா எழுத்தாளரை உற்சாகப்படுத்துங்க!!
இப்போதே உற்சாகப்படுத்துங்கள்

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

No votes so far! Be the first to rate this post.

    No comments yet.