பாகம் 13

Vaishnavi Vijayaraghavan | 18 May 2026 | Share

தித்திக்கும் தேன்பாவை 

பாகம் 13.

” ஆமாம் வேற என்ன ஃபங்ஷன் நினைச்ச?”

” இல்லப்பா நான்  ஃபோன்ல செமஸ்டர் எக்ஸாம்ஸ் போர்ஷன்  பார்த்துகிட்டு இருந்தேன் அதனால நீங்க எதை பத்தி கேக்குறீங்கன்னு ஒரு நிமிஷம் கன்ஃப்யூஸ் ஆயிட்டேன்”

” ஓ சரிப்பா சரி, “

” அம்மாகிட்ட கொடுங்கப்பா”

” ஹலோ ஷிவானி, “

” அம்மா நான் ஷியாம் பேசுறேன் “

” ஓ, சாரி டா கண்ணா, ஷிவானின்னு நெனச்சேன். உங்க அப்பா ரெண்டு பேரையும் வாப்பா, போப்பா, கண்ணான்னு பேசுவாரா அதான். நல்லா இருக்கீங்களா ரெண்டு பேரும்?”

” என்னம்மா நேத்து தானே போனீங்க ரொம்ப நாள் ஆன மாதிரி இப்படி கேள்வி கேக்குறீங்க? “

” உங்க ரெண்டு பேரையும் பார்க்காம என்னால இருக்கவே முடியல டா. இதுவே வேற யாராவது இருந்தா உங்க அப்பாவ போக சொல்லிட்டு நான் வீட்டிலேயே நின்னுட்டு இருப்பேன். பாட்டி என்றதால வேற வழி இல்லாம வந்தேன் “

” அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்லம்மா, நான் நல்லா தான் இருக்கேன். “

” சரிப்பா ஷிவானி கிட்ட ஃபோனை கொடு”

” அவ நந்து வீட்டில் இருக்கா மா. “

” சரி நான் அவளோட ஃபோனுக்கு கால் பண்றேன் “

” இல்ல அம்மா,  அவ ஃபோனை நம்ம வீட்லயே வச்சிட்டு போயிட்டா “

” நீ மட்டும் ஏன் பா இங்க இருக்க நீயும் அங்கேயே போக வேண்டியது தானே? “

” நைட்ல தான அம்மா தனியா நம்ம வீட்ல தங்க வேண்டாம்னு சொன்னீங்க. பகல்ல நான் என்ன பண்ணுவேன் அங்க போய். நான் ஃபோன்ல படிச்சுக்கிட்டு இருக்கேன் மா செமஸ்டர் எக்ஸாம் வருது இல்ல? “

” சரி சரிப்பா நீ படி நான் அப்புறமா ஷிவானி கிட்ட பேசிக்கிறேன், பை”

“பை” என்று சொல்லி ஃபோனை வைத்துவிட்டு தன் பாக்கெட்டில் இருந்து ஷிவானியின் ஃபோனை எடுத்து அதை ஸ்விட்ச் ஆன் செய்தான். ஏற்கனவே சார்ஜ் போட்டுவிட்டு உடைந்த ஸ்கிராட்ச் கார்டை எடுத்துவிட்டான்.

ஷிவானியின் ஃபோன் கீழே விழுந்து ஸ்கிரீன் கார்டு உடைந்திருந்தது மட்டுமில்லாமல் ஸ்விச் ஆஃப் ஆகி இருந்தது.

அவளிடம் இப்போது பேசியபோது தான்.

அவன் வந்து ஷிவானியின் தலையில் அடித்த போது கையில் வைத்திருந்த ஃபோன் கீழே விழுந்தது. “அப்படியும் உனக்கு கால் பண்ண நினைச்சேன் டா.

ஆனா விழுந்த வேகத்தில ஃபோன் ஆஃப் ஆயிடிச்சு ஷியாம்” என்று கண்கள் கலங்க ஷிவானி சொன்னது ஞாபகம் வந்தது.

ஃபோன் ஆன் செய்த உடனே ஷிவானியின் தோழி காவிரி  பத்து மிஸ்டு கால் இருந்தது.

மறுபடியும் காவேரி நியூ நம்பர் காலிங் என்று வந்தது.

ஃபோனை எடுத்து காதில் வைத்தான் ஷியாம்.

“ஹலோ” என்று ஆண் குரல் கேட்டது.

“சொல்லு காவேரி” என்று சொல்ல வாய் எடுத்தவன் அந்தப் பக்கத்திலிருந்து ஆண் குரல் ஹலோ என்று கேட்கவும் அமைதியாக இருந்தான்.

” ஹலோ ஷிவானி” என்னாச்சு உனக்கு நேத்துல இருந்து ஃபோன் பண்றேன் ஏன் ஸ்விச்சிடு ஆஃப் என்று வருது? சரி ஷியாமுக்கு கால் பண்ணலாம்னு பார்த்தா அவனும் ஃபோனை எடுக்கல. நம்ம விஷயம் தெரிஞ்சிருச்சா என்ன?” என்று பதட்டத்தில் யார் பேசுகிறார்கள் என்று கூடத் தெரியாமல் பேசினான் ரோஹித்.

” நான் ஷியாம் பேசுறேன்”

” மச்சான் நீயா? அது வந்து நான். ” என்று திக்கி திணறி பேசியவனிடம்.

” நான் லொகேஷன் அனுப்புறேன் அங்க வந்துரு ” என்று சொல்லி ஃபோனை வைத்து விட்டான் ஷியாம்.

ஃபோனை வைத்த ரோஹித் ஷியாமிடமிருந்து ஏவி ஹாஸ்பிடல் என்று லொகேஷன் வந்ததை பார்த்து என்னாச்சு என்று ஒரு நிமிடம் பயந்தான்.

‘மறுபடியும் ஷியாமிற்கு  கால் பண்ணி கேட்கலாமா?’ என்று நினைத்தான். பிறகு நேராகவே போய் பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்து அவசரமாக கிளம்பி ஹாஸ்பிடலுக்கு வந்தான்.

” மச்சான் என்ன ஆச்சு?  யாருக்கு உடம்பு சரியில்லை எதுக்கு ஹாஸ்பிடல் வந்து இருக்கீங்க?” என்றான் ரோஹித்.

” வா, உன் கிட்ட தனியா பேசணும்” என்று சொல்லி ரோஹித்தை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடல் கேன்டினுக்கு சென்றான். அங்கே ஓரமாக இருந்த டேபிளில் அமர்ந்தான். ரோஹித் அவனுக்கு எதிரே அமர்ந்தான்.

“சொல்லு ரோஹித்”

“என்ன மச்சான், சொல்ல சொல்ற?”

” உண்மையை சொல்லு “

” எனக்கு புரியல”

” என் தங்கச்சியை என்னடா பண்ண? “

” என்னடா சொல்ற ஷிவானிக்கு என்ன ஆச்சு? “

” நடிக்காதடா. நான் கொலைவெறியில் இருக்கேன். தயவு செஞ்சு உண்மைய சொல்லிடு”

” சரி சொல்றேன் கேளு. நானும் ஷிவானியும் ஒரு வருஷமா லவ் பண்றோம் “

“வாட்? என்ன புது கதை சொல்ற?”

” ஷிவானி தான் முதலில் என்கிட்ட ப்ரொபோஸ் பண்ணா. எனக்கும் அவளை பிடிக்கும். முதல்ல இதனால நம்ம பிரண்ட்ஷிப் கட்டாயிடுமேன்னு யோசிச்சேன். ஆனா ஷிவானி  பிடிவாதமா இருந்தா. என்னால அவளுக்கு ஓகே சொல்லாமல் இருக்க முடியல. “

” இதையெல்லாம் நான் நம்பனும்னு சொல்றியா? “

” நீ நம்பலனா ஷிவானியே கேளு. காவிரி என்ற பெயரில் என் நம்பரை அவதான் அவளோட ஃபோன்ல ஸ்டோர் பண்ணி வச்சிருக்கா. ஒரு ஒரு முறையும் காவிரி வீட்டில் போய் ஸ்டடி பண்றேன்னு சொல்லி என் கூட தான் வெளியே வந்து இருக்கா. நாங்க போகாத இடமே கிடையாது. என்கிட்ட போட்டோஸ் இருக்கு காட்டவா? “

ரோஹித் சொல்ல சொல்ல ஒன்றும் புரியாமல் விழித்தான்  ஷியாம்.  

ஷியாமின் கையைப் பிடித்து,

” சாரி ஷியாம் நான் முதலிலேயே உன்கிட்ட சொல்லி இருக்கணும். ஷிவானி தான் இப்போதைக்கு சொல்ல வேண்டாம்னு சொன்னா “

என்ன பேசுவது என்று தெரியாமல் அமைதியாக இருந்தான் ஷியாம்.

” நீ நம்பல இல்ல? எனக்கும் ஷிவானிக்கும் மட்டுமே தெரிந்த ஒரு விஷயம் உன்னை பத்தி சொல்லவா? அப்போ நீ என்னை நம்புவ” என்றான் ரோஹித்.

என்ன என்பது போல அவனைப் பார்த்தான் ஷியாம்.

” நேற்று நீயும் நந்துவும் கிஸ் பண்ணிக்கிட்டீங்களா? அதுவும் நந்து ஓட வீட்டுல? ” 

அதிர்ச்சியாக அவனைப் பார்த்தான் ஷியாம்.

“இது எப்படி எனக்கு தெரியும்னு தான நினைக்கிற? ஷிவானி தான் சொன்னா” என்றான் ரோஹித்.

” ரோஹித் நேத்து ஃபோன்ல ஷிவானி உன் கிட்ட என்ன எல்லாம் சொன்னா என்பதை எனக்கு கிளியரா சொல்லு ” என்றான் ஷியாம்.

“நேத்து ஈவினிங்  வழக்கம் போல  நான் கால் பண்ணி ஷிவானி கிட்ட பேசிக்கிட்டு இருந்தேன்.” என்றான் ரோஹித்.

“எத்தனை மணிக்கு?”

” டைம் சரியா தெரியல. ஃபர்ஸ்ட் நான் கால் பண்ணும் போது. ஒரு பத்து நிமிஷம் கழிச்சு நானே கூப்பிடுறேன் டா, என்று சொல்லி வச்சுட்டா” 

” அப்புறம் மறுபடி எத்தனை மணிக்கு கால் பண்ணா? “

” என்னாச்சு ஷியாம், எதுக்கு இப்படி எல்லாம் கேள்வி கேக்குற? “

” தயவு செஞ்சு நான் கேக்குறதுக்கு மட்டும் பதில் சொல்லு”

” என்னவோ பிரச்சனை என்ன பிரச்சனைன்னு சொல்லு. நீ ஏதோ கொலைவெறியில் இருக்கேன்னு சொன்ன. எதுக்கு அப்படி சொன்ன? ஷிவானி எங்கே? ஷிவானிக்கு தான் உடம்பு சரியில்லையா அதுக்கு தான் ஹாஸ்பிடல் வந்து இருக்கியா? “

” நான் உன்னை கேள்வி கேட்டேன் முதலில் அதற்கு பதில் சொல்லு அப்பறமா நீ கேட்கிற கேள்விக்கு நான் பதில் சொல்றேன் “

” மறுபடியும் அவ கால் பண்ணி பேசினா. “

“என்ன சொன்னா?”

அவர்கள் இருவரும் பேசியதை அப்படியே கூறினான்.

” பாட்டி இறந்துட்டாங்க டா, அதனால அப்பா அம்மா ஊருக்கு போயிருக்காங்க , நந்தினி சரியான பயந்தாங்கோலில? அதனால ஷியாமை அவ கூட துணைக்கு விட்டுட்டு வந்து இருக்கேன். வீட்ல கொஞ்சம் வேலை இருந்தது அதெல்லாம் முடிச்சுட்டேன். அதனாலதான் நீ முதல்ல கால் பண்ணும் போது நானே கொஞ்ச நேரம் கழிச்சு கால் பண்றேன்னு 

சொன்னேன் ” என்றாள் ஷிவானி.

” அப்ப வேலை எல்லாம் முடிச்சிட்டியா? “

” முடிச்சிட்டேன்டா, இப்போ நந்தினி வீட்டுக்கு போக போறேன். நான் போயிட்டு ஷியாமை வீட்டுக்கு அனுப்புவேன். அவன் குளிச்சிட்டு ரெஃப்ரெஷ் ஆயிட்டு. அதுக்கு அப்புறமா அங்க வருவான்”

“ஓ, ஓகே. சரி எப்ப தான் நம்மளோட காதலை உங்க அண்ணன் கிட்ட சொல்றது?”

” அதுக்கும் ஒரு கால நேரம் வரும். அப்ப சொல்லிக்கலாம். “

“எப்ப வரும்?”

” எனக்கு எப்படிடா தெரியும்? “

” எந்த காலம் வரணும்னு சொல்ற? “

” ஷியாமுக்கும் லவ் வரும் இல்ல? அப்ப நம்மளோட லவ்வை சொன்னா கண்டிப்பா ஏத்துப்பான்.”

” ஒருவேளை உங்க அண்ணனுக்கு லவ்வே வரலைன்னா? “

” லவ் வராம எல்லாம் இருக்காது”

” ஒருவேளை “

” நம்ம காலேஜ் முடிச்சிட்டு, லைஃப்ல செட்டில் ஆகுற வரைக்கும் ஷியாமுக்கு லவ் வரலைன்னா, அப்போ நானே நம்ம லவ்வ பத்தி சொல்லிடறேன்”

” உன்கிட்ட பேசி ஜெயிக்க முடியுமா என்ன? “

” சரி, ஃபோனை வைக்கிறேன். பை”

” எனக்குத் தேன் குடிக்கணும் போல இருக்குடி “

” லயன் பிராண்ட் ஹனி வேணுமா இல்ல டாபர் ஹனி வேணுமா? “

” என்ன கிண்டலா நான் ஹனீனு எதை சொல்லுவேன்னு தெரியாதா? “

” தெரியும் தெரியும் ” என்று வெட்கப்பட்டு கொண்டே சிரித்தாள் ஷிவானி.

தொடரும்….

அ. வைஷ்ணவி விஜயராகவன்.

இந்த episode பிடிச்சிருந்தா எழுத்தாளரை உற்சாகப்படுத்துங்க!!
இப்போதே உற்சாகப்படுத்துங்கள்

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

No votes so far! Be the first to rate this post.

    No comments yet.