தொடர்பியல்…. பாகம் -13.
கேஸ் -1 முடிவு ( சங்கவி – கிஷோர்)

என்னடி…. என்னாச்சு உனக்கு….
மாதவா…. ஐ லவ் யூ ஸோ மச் டா…. எனக்காக நீ அவ்வளவு தூரம் போய்…. உண்மையிலேயே நான் ரொம்ப ரொம்ப ரொம்ப கொடுத்து வச்சவ டா…. என்றாள் ராகினி.
அதை வெறுமனே சொன்னா பத்தாது….
வேறு என்ன பண்ண சொல்றீங்க சார்?…. என்றாள் நக்கலாக….
நான் அங்கே வந்ததும் லிப் டூ லிப் கொடு….
போதுமா?
அடிப்பாவி…. நீயா பேசுற…. இப்படின்னு தெரிஞ்சு இருந்தா இன்னும் வேறு என்னவெல்லாமோ செஞ்சிருப்பேனே…. என்று சொல்லி சிரித்தான் மாதவன்.
சீ போடா…. சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னேன்…. எல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் தான்….
அதானே பார்த்தேன்…. எங்கடா இந்த டயலாக்கை காணோமே ன்னு…. என்று சொல்லி சிரித்தான்.
ஏய்…. லிப் டூ லிப் கிஸ் மட்டும் வேண்டும்…. அதுவும் கல்யாணத்துக்கு அப்புறம்ன்னு சொல்லிடாத டி….
இல்ல இல்ல…. சொல்ல மாட்டேன்…. என்று சொல்லி சிரித்தாள் ராகினி.
இன்னைக்கு நைட்டு உன் கூட உன் ரூமில் தங்கிடவா?
கொஞ்சம் இடம் கொடுத்தா ஓவரா பண்ணுவியே…. உனக்கு லிப் டூ லிப் கிஸ் கூட கிடையாது போ….
சரி சரி…. தங்கல…. கிஸ் மட்டும் வாங்கிட்டு போறேன்…. ஓகே வா….
ஹூம்…. ஓகே ஓகே….
நான் என்னோட கேஸை பார்க்காம இங்கே வந்திட்டேன்….
மாதவா…. நீ கேஸூ ன்னு சொன்னதும் நியாபகம் வருது….
என்னாச்சு டி…. வேறு எதாவது கனவு கண்டியா?….
ஏய்…. சொல்றதை கேளு….
என்ன சொல்லு….
நீ சொன்ன இல்ல அந்த நீலாங்கரை ஏஞ்சல் சூசைடு கேஸ்…..
ஆமாம்….
அது சூசைடு இல்ல…. மர்டர்….
வாட்….
ஆமாம் டா…. டேவிஸ் சார் ரிப்போர்ட்டை ரெடி பண்ணிட்டாரு…. அனேகமாக உங்க டிபார்ட்மெண்டுக்கு அனுப்பி வச்சிருப்பார்.
ஓ…. ஓகே…. அதை நாங்க பார்த்துக்கிறோம்….
அதே தான் டேவிஸ் சார் கூட சொன்னாரு….
ஏன் நீ என்ன கேட்ட?
யாரு கொலை செஞ்சிருப்பா ன்னு?
லூசா டி நீ…. அவரு கிரைம் சீனுக்கு கூட வரல…. அவர் கிட்ட போய் யாரு மர்டர் பண்ணிருப்பா ன்னு கேட்டா… என் கிட்ட மட்டும் நீ கேட்டிருந்தா…. பேசாமல் நீ போய் கண்டுபிடி மா ன்னு சொல்லியிருப்பேன்…. என்று சொல்லி சிரித்தான் மாதவன்.
ஏய் கரெக்ட் டா…. அவரும் அதே தான் சொன்னாரு…..
ஹா ஹா ஹா….. என்று சிரித்தான் மாதவன்.
ஏய் போதும் வாயை மூடு…. நான் ஃபோனை வைக்கிறேன்…. பை…. என்றாள் ராகினி.
ஏய் சாரி சாரி டி…. கோச்சிக்காத….
மத்ததை நேரா வந்து பேசிக்கலாம்…. பை….
பை…. என்று சொல்லி ஃபோனை வைத்து விட்டு சிரித்துக் கொண்டே வெளியே சென்றாள் ராகினி.
மம்தா…. சங்கவி பிழைச்சுகிட்டாங்க…. என்று சொல்லி அவளை ஹக் செய்தாள் ராகினி.
ஏய் சூப்பர் ராகினி…. அப்போ உன் கனவு பலிக்குது…. ஸோ கேர்ஃபுல்லா இருக்கனும்…. அப்படித்தானே…. என்று சொல்லி சிரித்தாள் மம்தா.
ஹூம்…. என்று சொல்லி விட்டு தன் கேபினுக்கு சென்று அமர்ந்து தன் வேலையை தொடர்ந்தாள்.
வீட்டிற்கு சென்றதும் மாதவனுக்கு கால் செய்தாள் ராகினி.
பைக்கில் சென்றதால் அவன் எடுக்கவில்லை.
இன்னும் சென்னைக்கு வரலையா அவன்…. என்று நினைத்து கொண்டாள் ராகினி. டைம் பார்த்தாள் மணி 7. ஃபிரிட்ஜில் ஸ்நாக்ஸ் இருக்கிறதா என்று தேடிப் பார்த்தாள்…. இல்லை…. மிச்…. என்று சொல்லி விட்டு…. தன் துப்பட்டாவை போட்டுக் கொண்டு அருகில் இருந்த கடைக்கு சென்றாள்.
அண்ணா…. ஒரு பாஸ்தா பேக்கட்….. பிரெட், கெட்சப் அப்புறம் டீ தூள் சின்ன பேக்கட்…. என்றாள். அதை வாங்கிக் கொண்டு திரும்பியபோது ஒரு பெரியவர் தள்ளாடி விழப்போனார். அவரை பிடித்து அவரது கைத்தடியை சரியாக வைத்து கொடுத்தாள் ராகினி.
நன்றி மா….. என்றார் அந்த முதியவர்.
பரவாயில்லை தாத்தா…. நீங்க ஜாக்கிரதையா வீட்டுக்கு போங்க…. என்றாள்.
ஸ்மைல் செய்து விட்டு சென்றார் அந்த முதியவர்.
வீட்டிற்கு வந்ததும். மறுபடியும் மாதவனுக்கு கால் செய்தாள்.
ஹலோ…. சொல்லுடி….
எங்கடா இருக்க?
இன்னொரு அரைமணி நேரத்தில உன் வீட்ல….
ஓகே ஓகே…. டின்னர் பண்ணி வைக்கிறேன்….
ஓகே டி…. பை….
தக்காளி பாஸ்தா செய்துவிட்டு…. வெஜிடபிள் சூப் தயார் செய்து வைத்தாள் ராகினி.
மாதவன் வந்தான்.
அவன் உள்ளே நுழைந்ததும் அவனை கட்டி கொண்டாள் ராகினி.
ஏய் ராகினி…. இருடி நான் அழுக்கா இருக்கேன்…. பைக்ல வந்தேன் இல்ல…..
பரவாயில்லை…. என்று சொல்லி இறுக்கமான அணைத்து கொண்டாள்.
அவளுடைய நெற்றியில் முத்தம் கொடுத்தான். இரு வரேன்…. ரெஸ்ட் ரூம் போகனும்…. ரொம்ப அர்ஜென்ட்…. என்றான் மாதவன்.
சீ…. போடா…. என்று சொல்லி சிரித்துவிட்டு வழியை விட்டாள்.
அவன் முகம் கழுவி கை, கால்கள் கழுவிவிட்டு வந்து சோஃபாவில் அமர்ந்தான்.
இரண்டு கப்பில் சூப் எடுத்து வந்து வைத்தாள்.
ஏய் தேங்க்ஸ் டி…. என்று சொல்லி விட்டு அதை குடித்தான்.
சங்கவி பிழைச்சது ரொம்ப சந்தோஷமா இருக்கு டா…. மேலும் அந்த கிஷோருக்கு டைவர்ஸ் கொடுக்கிறது நினைச்சு இன்னும் சந்தோஷம்…. பாவம் சங்கவி அவங்களை எப்படி அடிச்சான் தெரியுமா?…. இப்போ நினைச்சா கூட எனக்கு பயமா இருக்கு….
ஹூம்…. விடு அதான் பிராப்ளம் எல்லாம் சரி ஆயிடிச்சு இல்ல?
ஹூம்…. இருந்தாலும் அந்த கிஷோருக்கு பயந்து சங்கவி வெளிநாடு போற மாதிரி இருக்கு…. அவனை எதிர்த்து இங்கேயே அவங்க பிசினஸ் பண்ணனும்…. அப்போ தான் அவனை மாதிரி ஆளுங்களுக்கு ஒரு பாடமாக இருக்கும்…. என்றாள் ராகினி.
நீ ரொம்ப சினிமா பார்க்குற…. அதான் இப்படி எல்லாம் டயலாக் பேசுற…. என்றான்.
போடா எப்போ பார்த்தாலும் இப்படி சொல்ற….
சரி… அதை விடு….பாஸ்தா எடுத்து கொண்டு வரவா டா….
பாஸ்தா வா?
ஏன்டா உனக்கு தான் டூமாடோ பாஸ்தா பிடிக்குமே?
பிடிக்கும்…. ஆனா அதை சாப்பிட்டா பசி அடங்காதே….
ஓ…. சாரி டா…. மாவு இல்ல…. இருந்திருந்தா தோசையோ இட்லியோ செஞ்சிருப்பேன்….
பரவாயில்லை டி….கொடு…. என்றான் மாதவன்.
சாப்பிட்டு முடித்து விட்டு இருவரும் சோஃபாவில் அமர்ந்து டிவி பார்த்தனர்.
அவனுடைய தோளில் சாய்ந்து கொண்டாள் ராகினி.
ஏ ஆர் ரஹ்மான் ஹிட்ஸ் பாடல்கள் ஒளிபரப்பு ஆகிக் கொண்டிருந்தது டிவியில். உயிரே படத்தில் இருந்து…. “நெஞ்சினிலே நெஞ்சினிலே….”
என்னடி உனக்கு பிடிச்ச பாட்டா போடறாங்க….
ஹூம்….
என்னடி எதுவும் பேசாம ஹூம் மட்டும் சொல்ற….. என்று சொல்லி அவளுடைய முகத்தை திருப்பி அவளை பார்த்தான் மாதவன்.
ஐ லவ் யூ மாதவா…. என்று சொல்லி அவனுடைய உதட்டில் முத்தம் கொடுத்தாள் ராகினி. அவளை இறுக்கமாக அணைத்து கொண்டு அவனும் அவளுக்கு முத்தம் கொடுத்தான். சில நிமிடங்களுக்கு பிறகு அவர்கள் தங்களை மறந்து அடுத்த கட்டத்திற்கு செல்ல ஆரம்பித்தார்கள். அப்போது ராகினி யின் ஃபோன் அடித்தது.
சுயநினைவுக்கு வந்தார்கள் இருவரும். விலகி அமர்ந்து கொண்டாள் ராகினி.
ஃபோனை எடுத்து
ஹலோ…. என்றாள் ராகினி.
ஹாய் டி…. என்னாச்சு சங்கவி கதை…. என்றாள் ரம்யா.
ரம்யா…. நான் நைட்டு பேசறேன்…. அவங்க நல்லா இருக்காங்க….
ஏன் டி….
மாதவன் வந்திருக்கான்….
ஓ…. சாரி சாரி…. சிவ பூஜைல கரடி மாதிரி கால் பண்ணி டிஸ்டர்ப் பண்ணிட்டேனா….
சீ சீ…. அதெல்லாம் ஒண்ணும் இல்லை…. நான் அப்புறம் பேசறேன்….. பை.
ஓகே டி பை…. என்று சொல்லி ஃபோனை வைத்தாள் ரம்யா.
சாரி டி…. கொஞ்சம் அவசர பட்டுட்டேன்…. என்றான் மாதவன்.
நானும் தான் டா…. நம்ம கல்யாணம் பண்ணிக்கலாமா?… என்றாள் ராகினி.
என்னடி திடீர்னு….இப்போ தான் என் அம்மாவுக்கு உடம்பு சரி ஆகி இருக்கு…. இப்போ போய் நான் பர்மிஷன் கேட்க முடியாது.
மாதவா…. ஒண்ணு சொல்லவா….
ஹூம் சொல்லு….
நம்ம ரெஜிஸ்டர் ஆஃபீஸ்ல போய் மேரேஜ் பண்ணிக்கலாம்…. அப்புறமா உங்க அப்பா அம்மா கிட்ட சொல்லி உங்களோட முறைப்படி கல்யாணம் பண்ணிக்கலாம்.
என்னடி….
எனக்கு உன் கூடவே இருக்கனும் போல இருக்கு…. பிளீஸ் டா…. என்றாள் ராகினி.
சரி டி…. நாளைக்கு ஒரு நாள் டைம் கொடு…. நான் எங்க அப்பா கிட்ட விஷயத்தை சொல்லிடறேன்…. லவ் மேரேஜ்ல அவருக்கு எந்த அப்ஜெக்ஷனும் இல்ல….
ஹூம்…. ஓகே டா…. ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ண எவ்வளவு டேஸ் வெயிட் பண்ணனும்….
மினிமம் 15 டூ 20 டேஸ்….
அவ்வளவு நாள் ஆகுமா….
என்னடி ஆச்சு உனக்கு….
தெரியல டா…. ஆனா ஏதோ ஒரு பயமா இருக்கு…. தனியா தூங்கறதுக்கு….
அடிப்பாவி கிராதகி…. நான் கூட என்னை கிஸ் பண்ண பிறகு உனக்கு என் மேல லவ் அதிகமாயிடிச்சு அதனால தான் இப்போ நீ இப்படி சொல்ற….
ஹா ஹா ஹா…. என்று சிரித்தாள் ராகினி.
சரிடா…. மாமா கிட்ட நாளைக்கு பேசிட்டு சொல்லு…. என் ஃபிரெண்டு ரம்யாவோட அம்மா நல்ல நாள் எல்லாம் பார்த்து சொல்லுவாங்க அவளுக்கு….
அவளுக்கு கல்யாணம் ஆயிடிச்சா?
இல்லடா…. சொல்றதை முழுசா கேளு….
சரி சரி…. சொல்லு….
அவ எந்த ஒரு வேலையும் புதுசா தொடங்க நல்ல நாள், நேரம் பார்த்து சொல்லுவாங்க…. அவங்க கிட்ட கேட்டு நாள் குறித்து நம்ம கல்யாணம் பண்ணிக்கலாமா?
அவங்க சன்டே சொன்னா?…. ரெஜிஸ்டர் ஆஃபீஸ் திறந்து இருக்குமா டி செல்லம்?
ஏய்…. வீக் டேல பார்த்து சொல்ல சொல்றேன் டா….
சரி டி…. எங்க அம்மா கூட இதை எல்லாம் நம்புவாங்க…. அவங்களுக்கு ஏத்த மாதிரி இருக்க….
தேங்க்ஸ் டியர்…. என்று சொல்லி கண்ணடித்தாள் ராகினி.
ரொம்பவே டெவலப் ஆயிட்ட டி….
சிரித்தாள் ராகினி.
சரி டி…. நான் கிளம்பவா?
ஓகே டா…. பை….
இன்னொன்று கிடைக்குமா?
அவன் இதழருகில் சென்று…. இப்போ வேண்டாம்…. இதோட நம்ம ஃபர்ஸ்ட் நைட்டுக்கு தான்…. என்று சொல்லி அவனை வெளியே தள்ளி விட்டாள் ராகினி.
இருடி…. அன்றைக்கு உனக்கு சேர்த்து வச்சிக்கிறேன்…. என்று சொல்லி விட்டு கிளம்பி சென்றான் மாதவன்.
பை….நாளைக்கு காலைல ஜங்ஷனில் மீட் பண்ணலாம்….. என்று சொல்லி விட்டு கதவை சாத்திக் கொண்டு உள்ளே சென்றாள் ராகினி.
***************
தொடரும்….
அ. வைஷ்ணவி விஜயராகவன்.
No comments yet.