தொடர்பியல்…. பாகம் –12கேஸ் -1 ( சங்கவி–கிஷோர்)
ஜார்ஜ் டேவிஸ் ஏஞ்சல் சூசைடு கேஸ் ரிசல்ட் சூசைடு இல்லை என்றதும் அனைவருக்கும் ஆச்சரியம்.
எஸ்…. இது மர்டர்….
வாட்….. என அனைவரும் ஒருவருக்கொருவர் திரும்பி பார்த்து தங்களின் ஆச்சரியத்தை வெளிப்படுத்தினார்கள்….
அன்பரசன் நீங்க பண்ண டெஸ்ட் ரிசல்ட் சொல்லுங்க…. என்றார் டேவிஸ் சார்.
எஸ் ஸார்….
ஹலோ ஆல்…. ஸ்டொமக்ல இருந்து எடுத்த சேம்பில் டெஸ்ட்ஸ் ரிசல்ட்…. அவங்க….என்று ஆரம்பித்தவனை ஜார்ஜ் டேவிஸ் கையை காண்பித்து தடுத்தார்.
சார்….
எத்தனை முறை உங்களுக்கு சொல்றது அன்பரசன்…. அவங்க/ இவங்க/ அவர்/இவர் எல்லாம் சொல்லக் கூடாது ன்னு…. என்றார் டேவிஸ்.
சாரி சார்….. என்றான் அன்பரசன்.
கன்டினியூ….
ஓகே சார்….
விக்டிம் ஸ்டொமக்ல டிரக்ஸ் இருந்துச்சு…. அவங்க குடிச்ச டீ ல கலந்திருந்தது…. அது அவங்களுக்கு தெரியாம யாரோ கலந்து கொடுத்திருக்கனும்….
சார்…. என்று கையை தூக்கினாள் ராகினி….
எஸ்….. என்றார் டேவிஸ்.
அவங்க சூசைடு பண்ணிக்க பயந்து கூட டிரக்ஸ் எடுத்துக்கிட்டு சூசைடு டிரை பண்ணிருக்கலாம் இல்ல?
வெரிகுட் டவுட் ராகினி…. ஆனா ரிசல்ட் எல்லாம் சொன்ன பிறகு… உங்களோட டவுட்ஸ் கேளுங்க…. என்றார் டேவிஸ்.
சாரி சார்…. ஓகே சார்…. என்றாள் ராகினி.
சேகர் வில் எஸ்ப்ளெயின் யூ ஆல் கிளியர்லி…. என்றார் டேவிஸ் சார்.
குட் மார்னிங் கய்ஸ்…. டேவிஸ் சார் சொன்னது போல இது மர்டர் தான்…. ஏனென்றால்…. அந்த விக்டிம் லெஃப்ட் ஹேன்ட் பழக்கம் உள்ளவங்க…. ஆனா அவங்க லெஃப்ட் ஹேன்ட் தான் கட் ஆகியிருக்கு…. மோஸ்ட்லி லெஃப்ட் ஹேன்ட் பழக்கம் உள்ளவங்க ரைட் ஹேன்ட் தான் கட் பண்ணிக்குவாங்க…. அதுவும் இல்லாம போஸ்ட் மார்டம் ரிப்போர்ட் படி அந்த நைஃப் ரொம்ப டீப்பா இறங்கி இருக்கு…. லெஃப்ட் ஹேன்ட் பழக்கம் உள்ளவங்க அந்த அளவுக்கு ஃபோர்ஸா ரைட் ஹேன்ட் யூஸ் பண்ண முடியாது…….. மேலும் அங்கிருந்து விக்டிமோடது இல்லாம இன்னொரு பிளட் சாம்பிள் கிடைச்சிருக்கு…. மே பீ மர்டரரோடதா(murderer) கூட இருக்கலாம்…. இல்லாமலும் இருக்கலாம்….. என்றான் சேகர்.
ஓகே…. நம்ம கிட்ட வரும் எல்லா கேஸோட ரிசெல்ட் எல்லாம் இங்கு வேலை செய்யும் உங்களுக்கு தெரியனும்…. அதுக்காக தான் இந்த மீட்டிங்….மீட்டிங் ஓவர்…. டிஸ்பர்ஸ்….. என்றார் டேவிஸ்.
அனைவரும் சென்றவுடன்…..
சாரி சார்…. என்றாள் ராகினி டேவிஸ் சாரை பார்த்து.
உங்க ஆர்வம் கரெக்ட் தான் ராகினி…. ஆனா பொறுமையும் முக்கியம்…. என்றார் டேவிஸ்.
யாரு குற்றவாளியாக இருக்கும்…. என்றாள் ராகினி.
அதை போலீஸ் கண்டுப்பிடிச்சுப்பாங்க…. நம்ம வேலை அவங்க கொடுக்கிற சேம்பிள்களை கரெக்டா டயக்நைஸ் பண்ணி கரெக்ட் ரிப்போர்ட் கொடுக்கிறது மட்டும் தான்…. என்றார் டேவிஸ்.
ஓகே சார்…. ஒருவேளை போலீஸ் இதை கண்டுபிடிக்கலைன்னா?
அது நம்ம பிராப்ளம் இல்ல….
இல்ல சார்…. அந்த பொண்ணு ஏஞ்சல் சூசைடு தான் பண்ணிக்கிட்டா ன்னு ஆயிடுமே….
அது நம்ம பிரச்சனை கிடையாது மிஸ் ராகினி…. வீ ஆர் நாட் ரெஸ்பான்ஸிபிள் ஃபார் தட்….
பட் சார்….
மிஸ் ராகினி…. உங்களுக்கு மனசு கேட்கலைன்னா இந்த ஜாபை ரிசைன் பண்ணிட்டு போலீஸ்ல ஜாயின் பண்ணிடுங்க…நீங்களே போய் அந்த விக்டிமோட மர்டரரை கண்டுபிடிங்க….. என்றார் டேவிஸ்.
சாரி சார்…. என்று சொல்லி விட்டு வெளியே வந்து தன் கேபினில் அமர்ந்தாள் ராகினி.
என்னாச்சு ராகினி…. என்றாள் தேவி.
ஒண்ணும் இல்ல…. என்று சொல்லி ஸ்மைல் செய்தாள் ராகினி.
ஓகே…. என்று சொல்லி விட்டு தன் கேபினுக்கு சென்றாள் தேவி.
ராகினி…. என்றாள் மம்தா.
ஹாங்…. என்றாள் ராகினி ஏதோ சிந்தனையில் இருந்து கலைந்தவளாய்….
மாதவன் பிரோ கால் பண்ணியிருக்காறா ன்னு பார்த்தியா?
அச்சோ…. மறந்திட்டேன் மம்தா…. தேங்க்ஸ்…. என்று சொல்லி விட்டு ஃபோனை எடுத்து பார்த்தாள் ராகினி.
அவள் நினைத்தது போலவே பத்து மிஸ்டுகால்ஸ் இருந்தது.
ஒன் மினிட் மம்தா…. நான் வெளியே போய் கால் பேசிட்டு வந்திடறேன்…. டேவிஸ் சார் வந்தா சொல்லிடு…. என்று சொல்லி விட்டு ஃபோனை எடுத்து கொண்டு வெளியே வந்தாள்.
மாதவனுக்கு கால் செய்தாள் ராகினி.
அவன் எடுக்கவில்லை. வாட்ஸ் அப் ஓப்பன் செய்தாள்.
ஹாய் ராகினி…. உன் கனவு பலித்துவிட்டது…. சங்கவி சூசைடு அட்டெம்ப்ட் பண்ணி இப்போ ஹாஸ்பிடலில் இருக்காங்க…. என்று மெஸேஜ் செய்திருந்தான்.
மெஸேஜ் டைம் பார்த்தாள்…. மணி 11…..
ஓ மை காட்…. இப்போ மணி ஒண்ணு ஆகப்போகுதே…. என்று சொன்னாள் ராகினி.
1.30 மணி அளவில் மறுபடியும் மாதவனுக்கு கால் செய்தாள்…. அப்போது அவனுடைய நம்பர் நாட் ரீச்சபிள்…. என்று வந்தது.
டென்ஷனாக இருந்தாள் ராகினி. அரைமணி நேரத்திற்கு ஒரு முறை வெளியே சென்று அவனுக்கு கால் செய்தாள்.
3.30 மணிக்கு வேறு ஒரு நம்பரில் இருந்து கால் வந்தது. கட் செய்து விட்டு மறுபடியும் மாதவனுக்கு கால் செய்தாள். அப்போது அவுட் ஆஃப் நெட்வொர்க் கவரேஜ் என்று வந்தது.
பத்து நிமிடத்திற்கு பிறகு மறுபடியும் அந்த நம்பரில் இருந்து கால் வந்தது.
எடுத்து…. ஹலோ யாருங்க?….. என்றாள் ராகினி சற்றே சலிப்புடன்.
சாரி ராகினி…. நீங்க சொன்னதை நான் நம்பல…. என்றாள் சங்கவி.
சங்கவி நீங்களா?
ஆமாம்…..
உங்களுக்கு ஒண்ணும் ஆகலையே….
இல்ல காப்பாத்திட்டாங்க…..
அப்போ நீங்க சூசைடு அட்டெம்ப்ட் பண்ணீங்களா?
ஆமாம் ராகினி…. என்னால கிஷோர் பண்ண துரோகத்தை தாங்கிக்க முடியல அதுவும் இல்லாம அவன் கூட சேர்ந்து வாழ பிடிக்கல…. என்னோட அப்பா எங்களுக்கு பிறக்கப் போகும் குழந்தைக்கு தான் சொத்து மொத்தமும் எழுதி வச்சிருக்காரு…. அதனால அந்த கிஷோர் சொத்துக்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம்…. இதையெல்லாம் தவிர்க்க தான் அப்படி ஒரு முடிவு எடுத்து விட்டேன்.
இல்ல சங்கவி…. நீங்க உங்க லாயரை பார்த்து பேசுங்க…. அவர் உங்களுக்கு நல்ல ஒரு சஜெஷன் சொல்லுவார்…. அவனுக்கு…. சாரி …. உங்க ஹஸ்பண்டுக்கு பயந்து நீங்க உங்க உயிரை போக்கிக்க நினைக்கிறது நியாயமா சொல்லுங்க…. என்றாள் ராகினி.
இப்போ தான் அதை ரியலைஸ் பண்றேன் ராகினி….ரொம்ப தேங்க்ஸ் …. இப்போ எனக்கு பயம் இல்லை…. டைவர்ஸ் அப்ளை பண்ணிட்டேன்…. என்னோட சித்தப்பா வெளிநாட்டில் இருந்து வந்திருக்காரு…. அவரு எல்லாத்தையும் பார்த்துக்குவாரு…. என்னையும் வெளிநாட்டுக்கு கூட்டிக்கிட்டு போயிடுவாரு… இதுக்கு மேல எனக்கு பிரச்சனை இல்லை….
கேட்கவே சந்தோஷமா இருக்கு சங்கவி…. உங்களுக்காக ஒரு குடும்பம் இருக்கு….இனி நீங்க தனி ஆள் இல்லை…. இந்த கிஷோரை மறந்திட்டு உங்களோட வாழ்க்கையை நீங்க நடத்துங்க…. உங்க அப்பாவோட கம்பெனிகள் எல்லாம்?….
எல்லாத்தையும் லாயர் அங்கிள் கிட்ட பவர் கொடுத்து விட்டு போகப்போறேன்….
ஓ… ஓகே சங்கவி…. டேக் கேர்….
தேங்க்ஸ் ராகினி…. ஒன் மினிட் உங்களுக்கு வீடியோ கால் பண்ணவா….
கண்டிப்பா….
வீடியோ கால் செய்தாள் சங்கவி.
கையில் கட்டுப்போட்டுக் கொண்டு ஹாஸ்பிடல் பெட்டில் படுத்து இருந்தாள்.
உங்களை பார்க்கவே கஷ்டமா இருக்கு சங்கவி…. ஆனா நீங்க நல்லா ஆயிட்டீங்க…. அதை நினைச்சு சந்தோஷமா இருக்கு…. என் கனவில் நீங்க இறந்திட்டீங்க ன்னு நினைச்சேன்…. அது நடக்கக்கூடாது ன்னு தான் முயற்சி பண்ணேன்…. உங்களை பார்க்க அங்கே வந்தேன்….
தெரியும்…. கேள்விப்பட்டேன்…. என்னோட செக்கியூரிட்டி சொன்னாரு….
லெட்டர் கொடுக்கலீயா?
கொடுத்தாரு…. நான் படிக்கல…. உங்களை நம்பாம அதை கிழிச்சு போட்டுட்டேன்…. உண்மை தெரிஞ்ச பிறகு கால் பண்ண முடியல…. நம்பர் தெரியல கிழிஞ்சு இருந்தது….
இப்போ எப்படி தெரிஞ்சது?
இதோ…. இப்படித்தான்…. என்று ஃபோனை திருப்பினாள். அங்கே மாதவன் அமர்ந்து இருந்தான்.
மாதவா…. நீ எப்படி அதுக்குள்ள…. அங்கே போன?…..
நான் ஸ்டேஷன் போன உடனே எனக்கு விஷயம் தெரிஞ்சது…. அதான் பைக்ல கிளம்பி வந்தேன்…. என் ஃபோனுக்கு இங்க சிக்னல் கிடைக்கல…. அதான் அவங்க நம்பர்ல இருந்து கால் பண்ண சொன்னேன்.
வீடியோ கால் கட் பண்ணிட்டு நார்மல் கால் பண்றீயா டா…. என்றாள் ராகினி.
மாதவன் சங்கவியிடம்….
மேம்…. ஒன் மினிட் கால் பேசிட்டு தரேன் என்று சொன்னான்.
டேக் யுவர் ஓன் டைம்…. நோ இஷ்யூஸ்…. என்று சொல்லி சிரித்தாள் சங்கவி.
தேங்க்ஸ்…. என்று சொல்லி விட்டு வீடியோ காலை கட் செய்து விட்டு நார்மல் கால் செய்தான் மாதவன்.
ராகினி ரெஸ்ட் ரூமிற்கு சென்று பேசினாள்….
மாதவா….
சொல்லுடி….
எனக்காகவா போன?
பின்ன…. எனக்கு சங்கவியை தெரியுமா என்ன?…. நீ ரிஸ்க் எடுத்து இவ்வளவு தூரம் வந்தும் அவங்களை காப்பாற்ற முடியலையே ன்னு நினைச்சு தான் நானும் இங்கு வந்தேன்…. ஏன்னா….நான் சென்னையில் இருந்து கிளம்பும் போது சங்கவியை ஹாஸ்பிடலில் அட்மிட் பண்ணிருக்காங்க ன்னு மட்டும் தான் தெரியும்…..அதைத்தான் உனக்கு மெஸேஜ் அனுப்பி விட்டு கிளம்பினேன்…. ஆனா நான் இங்கு வந்த பிறகு தான் அவங்க சுயநினைவுக்கு வந்தாங்க…. அவங்க நார்மலாக ஆன பிறகு….. உண்மையை சொல்லி உனக்கு கால் பண்ண சொன்னேன்…. என்றான் மாதவன்.
பாத்ரூமில் தண்ணீர்
டேப்பை திறந்து விட்டுவிட்டு….
இச் இச் இச்….. என்று ஃபோனில் மாதவனுக்கு முத்தம் கொடுத்தாள் ராகினி.
***************
தொடரும்…..
அ. வைஷ்ணவி விஜயராகவன்.
No comments yet.