பாகம் -11

Vaishnavi Vijayaraghavan | 17 Apr 2026 | Share

பாகம் -11



“நான் ரஞ்சனி” என்றதும் நிர்மலாவிற்கு ஒன்றும் புரியவில்லை.


“அர்ஜூன் ஒயிஃப், உங்க மருமகள்” என்றாள் ரஞ்சனி.


“ஹலோ” என்றாள் நிர்மலா.


“அம்மா கேட்குதா? நான் பேசுவது?”


“ஹூம்”


“நீங்க எல்லாரும் எங்க ரெண்டு பேர் மேலயும் கோபமா தான் இருப்பீங்கன்னு தெரியும். தப்பா நினைக்காதீங்க. எங்களுக்கு வேறு வழி தெரியல. என்னைக்கு எங்க லவ் பத்தி உங்க கிட்ட சொல்ல நினைச்சாறோ? அன்னைக்கு தான் இவரோட அத்தை மாமா வந்து ஹர்ஷிதாவுக்கு இவரை கல்யாணம் பேசியிருக்காங்க. அதுக்குள்ள தாத்தாவுக்கு ஹார்ட் அட்டாக்” என்று சொல்லி கொண்டே போனவளிடம்.


“ஒரு நிமிஷம்” என்றாள் நிர்மலா.


“சொல்லுங்க அம்மா”


“நீ முதலில் என்னை அம்மான்னு கூப்பிடாத. என் பசங்களை தவிர வேற யாரும் என்னை அம்மா ன்னு கூப்பிட்டா எனக்கு பிடிக்காது”


“சரிங்க, இனிமே அப்படி கூப்பிடல. நான் சின்ன வயசா இருக்கும் போதே எங்க அம்மா இறந்திட்டாங்க. எங்க அப்பா வேற கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்தாரு. அவங்களை அம்மான்னு கூப்பிட்டேன். ஏய், அம்மான்னு எல்லாம் கூப்பிடாதன்னு சொல்லிட்டாங்க. கல்யாணம் ஆன பிறகு என்னோட மாமியாரை அம்மான்னு கூப்பிட ஆசைப்பட்டேன். எனக்கும் அம்மா என்ற வார்த்தைக்கும் ஒத்து வராது போல?”


நிர்மலாவிற்கு அவள் சொன்னதை கேட்டு சங்கடமாக இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல், 


“சரி, அதை எல்லாம் விடு. எதுக்காக கால் பண்ணின” என்றாள்.


“உங்களை அத்தைன்னு கூப்பிடலாமா?”


“ஹூம்”


“அத்தை, எனக்கு உங்க எல்லாரோடையும் இருக்க ஆசையா இருக்கு. எனக்கு தனிக் குடித்தனம் பிடிக்காது. உங்க எல்லாருக்கும் எப்போ எங்க மேல கோபம் குறையுதோ அப்போ சொல்லுங்க. அடுத்த நொடி அங்கே இருப்போம். மாமா கிட்ட நாளைக்கு நான் பேசறேன்”


“உன் பேரு என்ன சொன்ன?”


“ரஞ்சனி”


“இங்க பாரு ரஞ்சனி, தயவுசெய்து இவருக்கு கால் பண்ணிடாத. அவரை பத்தி உனக்கு தெரியாது. இப்போதைக்கு அவருக்கு கோபம் குறைல. அதனால தான் சொல்றேன்”


“சரிங்க அத்தை, உங்களுக்கு டெய்லி கால் பண்ணலாமா?”


அமைதியாக இருந்தாள் நிர்மலா.


“தேங்க்ஸ் அத்தை, நான் நாளைக்கு கால் பண்றேன். பை” என்று சொல்லி விட்டு ஃபோனை வைத்தாள் ரஞ்சனி.


சிவராமனுக்கு கால் செய்தாள் நிர்மலா நாட் ரீச்செபிள் என்று வந்தது.


‘இவரு இருக்காறே? முக்கியமான விஷயம் பேசணும் நினைச்சா உடனே பேச முடியுதா?’ என்று சலித்து கொண்டாள்.


சிறிது நேரம் கழித்து ஹாஸ்பிடலில் இருந்து ஃபோன் வந்தது.


“உடனே வாங்க. பாண்டியராஜன் சாருக்கு பல்ஸ் டவுனா இருக்கு” என்றனர்.


மறுபடியும் சிவராமனுக்கு கால் செய்தாள் நிர்மலா. லைன் கிடைக்கவில்லை.


விஜயாவுக்கு கால் செய்து தகவலை கூற, அவள் பதட்டத்துடன் வேணுகோபாலுக்கு கால் செய்தாள்.


வேணுகோபால் ராஜகோபாலிடம் விஷயத்தை சொல்ல,


“வேணு, நீ கிளம்பு. வீட்டுக்கு போய் விஜயாவை கூட்டிக்கிட்டு போ. இங்க இருக்கிற வேலை எல்லாம் நான் பார்த்துக்கிறேன்” என்றார் ராஜகோபால்.


வேணுகோபால் அதிர்ச்சியாக தன் அண்ணனை பார்த்தார்.


“என்ன வேணு?”


“இல்ல அண்ணா, நீங்க அந்த குடும்பத்து மேல கோபமா இருந்தீங்களே? அதான்”


“வேணு, ஒருத்தருக்கு பிரச்சினை வரும்போது அவங்க பண்ண தப்பு, சண்டை அதெல்லாம் யோசிச்சிக்கிட்டு அவங்களுக்கு உதவாம இருக்கிறதை விட கீழ்தரமான செயல் வேற எதுவும் இல்லை. நம்ம பகையாளியாகவே இருந்தாலும் அப்படி நினைக்கக்கூடாது. அப்படி இருக்கும் போது அவரு உன்னோட மாமனார். சரி சரி சீக்கிரம் கிளம்பு, டைம் ஆகுது”


கண்கள் கலங்க,

“சரி அண்ணா” என்று சொல்லி விட்டு கிளம்பினார் வேணுகோபால்.


வீட்டிற்கு சென்று விஜயாவை அழைத்து கொண்டு ஹாஸ்பிட்டலுக்கு சென்றார் வேணுகோபால். விஜயா அழுதுகொண்டே இருந்தாள். வேணுகோபால் அவளை சமாதானம் செய்து கொண்டே வந்தார்.


நிர்மலா ரஞ்சனிக்கு கால் செய்தாள்.


“சொல்லுங்க அம்மா, ஸாரி அத்தை”


“அர்ஜூன் இருக்கானா?”


“இருக்காரு, ஃபோனை கொடுக்கவா?”


“இல்ல வேண்டாம். தாத்தாவுக்கு பல்ஸ் டவுனா இருக்குன்னு ஹாஸ்பிடலில் இருந்து ஃபோன் வந்தது. அர்ஜூனோட அப்பாவுக்கு லைன் கிடைக்கல. விஜயாவிற்கு சொல்லிட்டேன். அதான் அர்ஜூனோட அத்தை”


“ஹாங், தெரியும் அத்தை”


“அவன் கிட்ட தகவலை மட்டும் சொல்லிடு”


“நாங்க வரலாமா?”


“அது உங்க இஷ்டம்”


“எந்த ஹாஸ்பிடல்?”


“அது அர்ஜூனுக்கு தெரியும்” என்று சொல்லி விட்டு ஃபோனை வைத்தாள் நிர்மலா.


ஹாஸ்பிடலில் டென்ஷனாக அமர்ந்து இருந்தாள் நிர்மலா.


“அண்ணி” என்று விஜயா அழுதுகொண்டே வந்து நிர்மலாவை கட்டிக் கொண்டாள்.


அவளுக்கும் அழுகை வர, அழுதுகொண்டே விஜயாவை தேற்றினாள்.


“இதோ பாரு விஜயா, கவலைப்படாதே மாமாவுக்கு ஒண்ணும் ஆகாது” என்றாள்.


“டாக்டர் என்ன சொன்னார்?” என்றார் வேணுகோபால்.


“பல்ஸ் டவுனா இருக்குன்னு ஃபோன் வந்தது. இங்கே வந்ததிலிருந்து வெயிட் பண்ணுங்கன்னு மட்டும் தான் சொன்னாங்க. வேறு எதுவும் சொல்லல அண்ணா”


“சரி இருங்க, நான் போய் டாக்டர் கிட்ட பேசிட்டு வரேன்” என்றார் வேணுகோபால்.


அவர் சென்றதும்,


“விஜயா, ஹர்ஷிதா எதாவது சொன்னாளா?”


“நான் அடிச்சதுனால அவளுக்கு ஒரு வருத்தமும் இல்லை”


“இல்ல விஜயா நான் அதை கேட்கலை. அவினாஷ் பற்றி எதாவது சொன்னாளா?”


விஜயா ஒரு முறை திரும்பி வேணுகோபால் அங்கு இல்லையா என்பதை உறுதி செய்து கொண்டு,


“ஆமாம், ரெண்டு பேரும் லவ் பண்றோம்ன்னு சொன்னா. எனக்கு ஒண்ணுமே புரியல அண்ணி”


“இதுக்கு எதுக்கு நீ சங்கட படற. நம்ம உறவு உறுதியாக போகுது. அதை நினைச்சு சந்தோஷப் படு”


“அதுக்கு எல்லாரும் ஒத்துக்கணுமே?”


“எனக்கு தெரிஞ்சு ராஜகோபால் அண்ணா மட்டும் தான் ஒத்துக்க மாட்டார்ன்னு நினைக்கிறேன்”


“அவருக்கு பிடிக்கலைன்னா இவரும் ஒத்துக்க மாட்டார்” என்றாள் விஜயா.


“ஹூம், பார்கலாம். குறைஞ்சது இரண்டு வருஷம் ஆகும். அது வரைக்கும் பொறுத்திருக்கனும்” என்றாள் நிர்மலா.


“ஹூம்” என்று இருவரும் பேசிக்கொண்டு இருக்கும் போது, அர்ஜூன் மற்றும் ரஞ்சனி வந்தனர்.


“என்னாச்சு அம்மா?” என்றான் அர்ஜூன்.


கோபமாக தலையை திருப்பி கொண்டாள் நிர்மலா.


விஜயா அருகில் அமர்ந்த அர்ஜூன். விஜயாவின் கைபிடித்து.


“அத்தை என்னை மன்னிச்சிடுங்க. ஹர்ஷிதா ரொம்ப சின்ன பொண்ணு. அவளை என்னால ஒயிஃபா நினைச்சு கூட பார்க்க முடியல. இதை எல்லாம் முன்னாடியே உங்க கிட்ட சொல்லனும்ன்னு தான் வீட்டுக்கு வந்தேன். ஆனா அங்க வேற பிரச்சினை நடக்கவே சொல்லாம வந்திட்டேன். பிளீஸ் அத்தை என்னை புரிஞ்சிக்கோங்க” என்று கண்கள் கலங்க சொன்னான் அர்ஜூன்.


“முடிஞ்சதை பேசி எந்த பலனும் இல்லை பா. எனக்கு உன் மேல வருத்தம் இருந்தது உண்மை தான். ஆனா ஹர்ஷிதா அதனால பாதிக்கப்படல. ஆகையினால உன் மேல எனக்கு கோபம் இல்லை” என்றாள் விஜயா.


“தேங்க்ஸ் அத்தை” என்றான்.


“இவரு மேல கோபம் இல்லைன்னா கண்டிப்பா என் மேலேயும் கோபம் இருக்காது இல்லலீங்க?” என்றாள் ரஞ்சனி.


“இல்லடா மா. நீயும் எனக்கு ஷர்ஷிதா மாதிரி தான்” 


“உங்களை அம்மான்னு கூப்பிட லாமா?” என்றாள் ரஞ்சனி.


“கண்டிப்பா மா” என்றாள் விஜயா.


விஜயாவை கட்டிப்பிடித்து கொண்டு

“ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் அம்மா” என்றாள்.


அவள் ஏன் அவ்வாறு நடந்து கொள்கிறாள் என்று அர்ஜூனுக்கும் நிர்மலாவுக்கும் புரிந்தது.


விஜயா ஒன்றும் புரியாமல் அவளை தோளை தடவி விட்டாள்.


“விஜயா” என்று குரல் கேட்டு திரும்பி பார்த்தாள்.


வேணுகோபால் அங்கே நின்றுக் கொண்டு இருந்தார்.


ரஞ்சனி அர்ஜூன் பக்கத்தில் போய் நின்றுக் கொண்டாள்.


“உங்க அப்பா இப்போ நார்மலா இருக்காருன்னு டாக்டர் சொன்னாரு. அவரை பார்த்துட்டு அப்படியே கிளம்பலாம்” என்றார்.


“மாமா” என்று பேச வந்த அர்ஜூனை ஆட்காட்டி விரலை காட்டி விட்டு, விஜயா கை பிடித்து கூட்டிச் சென்றார்.


சென்ற அவர்களை பார்த்து கொண்டு நின்றிருந்தனர் அர்ஜூன், ரஞ்சனி மற்றும் நிர்மலா.


****************


ஈவினிங் காலேஜில் இருந்து வெளியே வந்ததும் தன் ஃபோனில் இருந்த மெஸேஜை பார்த்தாள் ஹர்ஷிதா.


“கேத்தரின், என்னோட தாத்தாவுக்கு உடம்பு சரியில்லைன்னு அம்மா மதியம் மெஸேஜ் பண்ணியிருக்காங்க. நான் எக்ஸாம் இருந்ததால ஸ்விட்ச் ஆஃப் பண்ணியிருந்தேன். என் கூட வரீயா டி தாத்தாவை பார்த்திட்டு அப்படியே உன்னை வீட்ல விட்டிடறேன்”


“வரேன் டி, இதெல்லாம் கேட்கணுமா?”


தன் ஃபோனை எடுத்து அம்மாவுக்கு கால் செய்தாள். ஸ்விட்சிடு ஆஃப் என்று வந்தது. உடனே வாட்ஸ் அப் ஓபன் செய்து, 


‘அம்மா நான் இப்போது தான் உங்க மெஸேஜ் பார்த்தேன். நான் காலேஜ்ல இருந்து கிளம்பிட்டேன். வரும் போது ஆஸ்பத்திரிக்கு போய் தாத்தாவை பார்த்திட்டு வந்திடறேன்’ என்று வாய்ஸ் மெஸேஜ் அனுப்பினாள் ஹர்ஷிதா.


பிறகு ஹர்ஷிதாவும் கேத்தரினும் கிளம்பினார்கள்.


ஹாஸ்பிடலின் உள்ளே சென்ற போது அங்கே அர்ஜூன் ரஞ்சனி மற்றும் நிர்மலா அமர்ந்து இருந்தனர்.


“வாம்மா ஹர்ஷிதா” என்றாள் நிர்மலா.


“மாமி, தாத்தா எப்படி இருக்காரு?”


“இப்போ பரவாயில்லை மா. வா உள்ளே போய் பார்க்கலாம்” என்று சொல்லி விட்டு அவளை ரூமுக்கு அழைத்து சென்றாள் நிர்மலா.


பாண்டியராஜன் தூங்கிக் கொண்டிருந்தார்.


“மாமா, மாமா” என்று நிர்மலா கூப்பிட்டாள்.


“வேண்டாம் மாமி எழுப்பாதீங்க. தாத்தா ரெஸ்ட் எடுக்கட்டும்”


கண்களை மெல்லத் திறந்தார் பாண்டியராஜன்.


“தாத்தா” என்று சொல்லி அவர் அருகில் அமர்ந்தாள் ஹர்ஷிதா.


“அம்மாடி என்னை மன்னிச்சிடு மா. நான் தான் பேரன் பேத்தி கல்யாணத்தை பார்க்க ஆசைப்பட்டேன்”


“இப்பவும் ஒண்ணும் பிரச்சினை இல்லை தாத்தா. உங்க பேரனுக்கும் எனக்கும் கல்யாணம் நடக்கும்”


ஆச்சரியமாக பார்த்தார் பாண்டியராஜன்.


“மாமா, அவினாஷூம் ஹர்ஷிதாவும் ஒருத்தரை ஒருத்தர் லவ் பண்றாங்க”


“அப்படியா? ரொம்ப சந்தோஷம். இதுக்கு மேல எந்த பிரச்சனையும் இல்லை. இரண்டு குடும்பங்களும் மறுபடியும் ஒன்றாக ஆயிடும்” என்றார்.


“தாத்தா, நீங்க உங்க உடம்பை நல்லா பார்த்துக்கோங்க. உங்க விருப்பப் படி எங்களுக்கு கல்யாணம் நடக்க குறைஞ்சது ஒன்றரை இல்ல இரண்டு வருஷம் ஆகும். அவினாஷ் மாமா வேலைல சேரனும் இல்ல?” என்றாள்.


“சரிம்மா கண்ணு. உங்க ரெண்டு பேருக்காக நான் என் உயிரை உங்களுக்கு கல்யாணம் ஆகுற வரைக்கும் பிடித்து வச்சிக்கிறேன்” என்று சொல்லி சிரித்தார்.


அப்போது ரஞ்சனி மற்றும் அர்ஜூன் உள்ளே வந்தனர்.


“ஹர்ஷிதா எழுந்து, நான் கிளம்பறேன் தாத்தா. கிளம்பறேன் மாமி” என்றாள்.


“இரும்மா, காஃபி குடிச்சிட்டு போ”


“இல்ல மாமி வேண்டாம்”


தன் ஃபோனை பார்த்து கொண்டே வெளியே சென்றாள்.


தாத்தாவிடம் ஆசிர்வாதம் வாங்கினர் அர்ஜூன் மற்றும் ரஞ்சனி.


ரஞ்சனி பாண்டியராஜனிடம்,


“இப்போ எப்படி இருக்கீங்க தாத்தா?” என்றாள்.


“அம்மா, நான் இப்போ வரேன்” என்று சொல்லி வெளியே சென்றான் அர்ஜூன்.


“ஹர்ஷிதா” என்றான்.


கேத்தரினுடன் நடந்து சென்ற ஹர்ஷிதா திரும்பி பார்த்தாள்.


“ஒரு நிமிஷம், உன் கிட்ட தனியா பேசணும்”


கேத்தரின் சற்று தூரமாக நடந்து சென்றாள்.


“ஹர்ஷிதா, பிளீஸ் என்னை மன்னிச்சிடு”


“மாமா, அப்படி எல்லாம் சொல்லாதீங்க. எனக்கு வருத்தமாக இருந்தது உண்மை தான் ஆனால் உங்க தம்பி அந்த வருத்தத்தை விட அதிகமாக சந்தோஷத்தை கொடுக்க முன் வந்திருக்கிறார். அதனால நீங்க வருத்தம் பட அவசியமில்லை. நீங்க சங்கடப் படுவீங்கன்னு தான் நீங்க உள்ள வரும் போது கூட உங்க கிட்ட பேசல” என்றாள்.


“தேங்க்ஸ் ஹர்ஷிதா” என்றான் அர்ஜூன்.


“நான் வரேன் மாமா” என்று சொல்லி விட்டு கிளம்பியவள் ரஞ்சனி வருவதை பார்த்து விட்டு நின்றாள்.


“ஹாய் அக்கா” என்றாள்.


“ஹாய் ஹர்ஷிதா”


“என் பேர் தெரியுமா உங்களுக்கு?”


“எல்லாமே தெரியும்” என்று சொல்லி சிரித்தாள்.


“ஹேப்பி மேரிடு லைஃப்” என்று இருவருக்கும் விஷ் செய்து விட்டு கிளம்பினாள் ஹர்ஷிதா.


“வாடி போகலாம்” என்று கேத்தரினிடம் சொன்னாள்.


இந்த episode பிடிச்சிருந்தா எழுத்தாளரை உற்சாகப்படுத்துங்க!!
இப்போதே உற்சாகப்படுத்துங்கள்

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

No votes so far! Be the first to rate this post.

    No comments yet.