பாகம் 11

Vaishnavi Vijayaraghavan | 18 May 2026 | Share

தித்திக்கும் தேன்பாவை 

பாகம் 11 

சாப்பிட்டுவிட்டு தேவி மற்றும் ரம்யா இருவரும் கிளம்ப இருந்தார்கள்.

அவர்களை பிடித்து அமர வைத்து அவர்கள் பக்கத்தில் அமர்ந்தாள் நந்தினி.

அவளுக்கு பக்கத்திலேயே அவனுடைய நண்பர்களுடன் அமர்ந்திருந்தான் விஷ்வா.

அங்கே பேசினாலும் பார்வை மட்டும் அடிக்கடி நந்தினி பக்கம் வந்து சென்றது. மேலும் அவள் அவர்களிடம் என்ன பேசுகிறார்கள் என்று கேட்பது போல அமர்ந்திருந்தான்.

“டைம் ஆகுதுடி நாங்க கிளம்புறோம் வீட்டுக்கு “

என்றாள் தேவி.

” ஆமாம் டி” என்றாள் ரம்யா.

” இருடி நம்ம மூணு பேரும் ஃபோட்டோவே எடுத்துக்கல” என்றாள் நந்தினி.

” அதான் ஸ்டேஜ்ல நின்னு அர்ஜுன் அண்ணா ஓடவும் உங்க அண்ணியோடவும் எடுத்தோம் இல்ல? “

” நம்ம மூணு பேரு மட்டும் தனியா எடுத்துக்கலன்னு சொன்னேன் “

” சரி சரி சீக்கிரம் எடுத்துக்கோ போகணும் “

” என்னடி இவ சுடு தண்ணிய கால்ல கொட்டின மாதிரி இப்படி பறக்கிறா, இரு ஒரு நிமிஷம் ” என்று அவர்களிடம் சொல்லிவிட்டு.

“அண்ணா” என்று போட்டோகிராஃபரை பார்த்து கூப்பிட்டாள் நந்தினி.

” சொல்லுங்க மேடம் “

” அண்ணா எங்க மூணு பேரையும் ஒரு போட்டோ எடுக்குறீங்களா? “

” ஓகே நில்லுங்க “

மூவரையும் ஒரு ஃபோட்டோ எடுத்தார் போட்டோகிராஃபர்.

” அண்ணா அண்ணா அப்படியே இதுலயும் ஒன்னு எடுத்து கொடுத்திருங்க” என்று சொல்லி தன் மொபைல் ஃபோனை கொடுத்தாள். 

அதிலும் ஒரு ஃபோட்டோ எடுத்துக் கொடுத்து விட்டு அவர் வேலையை பார்க்கச் சென்றார் போட்டோகிராபர்.

” அதான் கேமராவிலேயே எடுத்தாச்சு இல்ல? அப்புறம் எதுக்கு தனியா ஃபோன்ல வேற எடுக்க சொன்ன? “

அனைத்தையும் பார்த்தும் கேட்டும் கொண்டிருந்தான் விஷ்வா.

” ஆல்பம் இப்போதைக்கு வராது 

இல்ல? “

” அதுக்கு  இப்ப என்ன அவசரம்? “

” என்னோட ஆளுக்கு 

அனுப்புவதற்காக “

” ஆமாம் நானே கேட்கணும்னு நினைச்சேன். ஏன் அவன் வரல? “

” அவங்களோட பாட்டி இறந்துட்டாங்க இல்ல? அதனால அவங்க ரெண்டு பேரும் ஊருக்கு போய் இருக்காங்க. “

” ஆமாம் ஆமாம், காலேஜ்ல பேசிகிட்டு இருந்தாங்க சீனியர்ஸ். “

” சீனியர்ஸா யார் பேசிட்டு 

இருந்தாங்க? ” என்று கேட்டாள் நந்தினி.

” ரோஹித் , சரத், காவேரி, அலீஷா “

“ஓ, ஷியாம் ஷிவானி டிபார்ட்மெண்ட் ஃபிரெண்ட்ஸை தான் சொல்றியா? சீனியர்ஸ் சொன்ன உடனே ஃபைனல் இயர் படிக்கிறவங்களை சொல்றன்னு நினைச்சேன்”

” நம்ம செகண்ட் இயர், அவங்க எல்லாம் தேர்ட் இயர். அப்ப நமக்கு அவங்க சீனியர்ஸ் தானே? “

என்று சொல்லி சிரித்தாள் தேவி.

” அய்யே, இது காமெடியா? அதை சொல்லிட்டு நீயே வேற சிரிச்சுக்குவியா? ” என்றாள் நந்தினி.

” உன் ஆளை பார்க்காததால வந்த கோவத்தை எல்லாம் இவ மேல காட்டுறியா? ” என்றாள் ரம்யா

” அதெல்லாம் ஒன்னும் இல்லடி.  “

” அதான் தெரியுதே உன் முகத்திலேயே.  ஷியாமை நீ எவ்வளவு மிஸ் பண்றேன்னு” என்று சொல்லி சிரித்தாள் தேவி. 

இவர்கள் பேசுவதை கேட்ட விஷ்வாவிற்கு,

நந்தினி யாரையோ லவ் பண்ணுகிறாள் என்று புரிந்து கொண்டான். அதனால அங்கிருந்து எழுந்து தன் நண்பர்களை அழைத்துக் கொண்டு வேறு இடம் சென்று அமர்ந்தான்.

” சரிடி வேலை முடிஞ்சிடுச்சு நீங்க கிளம்புங்க ” என்றாள் நந்தினி.

தேவியும் ரம்யாவும் ஒன்றும் புரியாமல் விழித்தார்கள்.

” என்ன வேலை டி முடிஞ்சிடுச்சு? “

” அதான் ஃபோட்டோ எடுக்கிற வேலை. டைம் ஆகுது கிளம்பனும்னு சொன்னீங்க இல்ல? கிளம்புங்க கிளம்புங்க, பை.” என்று சொல்லி அவர்கள் இருவரையும் அனுப்பி வைத்தாள்.

” அடிப்பாவி என்னடி இவ” இன்று இருவரும் பேசி சிரித்துக் கொண்டே  அங்கிருந்து கிளம்பினார்கள்.

அர்ஜுனும் ஊர்மிளாவும் மிகவும் சந்தோஷமாக இருந்தனர்.

லஞ்ச் சாப்பிட்ட பிறகு அனைவரும் மண்டபத்தில் இருந்து கிளம்பினார்கள்.

நந்தினி தனியாக ஒரு சாரில் அமர்ந்து ஷியாமிற்கு மெசேஜ் அனுப்பினாள். 

ஒருவேளை தூங்குவனோ என்று நினைத்து கால் செய்யவில்லை. அவன் பதிலுக்காக காத்திருந்தாள்.

அப்போது விஷ்வா நந்தினி இடம் வந்து,

“ஹாய், உங்க பேரு நந்தினி தானே? ” என்றான்.

என்னடா இவன் இவ்ளோ கிளியரா சொன்னா அப்புறமும் இப்படி வந்து பேசுறானே என்று நினைத்துக் கொண்டே,

” ஆமாம் விஷ்வா “

” என் பெயர் உங்களுக்கு தெரியுமா? “

” என்னோட பெயர் உங்களுக்கு தெரியும் போது உங்களோட பெயர் எனக்கு தெரியாதா? “

” நீங்க ஏதோ என் மேல கோவமா இருக்குற மாதிரி தெரியுது. நான் ஃபிராங்காவே சொல்லிடுறேன்” என்றான் விஷ்வா.

‘அடக்கடவுளே ஐ லவ் யூ என்று ஏதாவது சொல்லிட போறான். இதனால அண்ணன் அண்ணிக்கு ஏதாவது பிரச்சனை வருமா? கடவுளே கடவுளே கடவுளே!’ என்று மனதிற்குள் வேண்டிக் கொண்டாள்.

” நீங்க யாரையாவது லவ் 

பண்றீங்களா? “

மனதிற்குள் ‘அப்பாடா இந்த கேள்வியை கேட்டானே ஐ லவ் யூ ன்னு சொல்லாம’ என்று நினைத்துக் கொண்டு.

சுற்றும் முற்றும் பார்த்து யாரும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு,

” ஆமாம் பிரோ, இப்போதைக்கு யார் கிட்டேயும் சொல்லிடாதீங்க “

” என்னது பிரோவா? ” 

” அதான் எனக்கு ஆள் இருக்குன்னு சொல்லிட்டேன் இல்ல? அப்புறம் என்ன பிரதர்? “

” உங்களுக்கு ஆள் இருந்தாலும் சரி, கல்யாணம் ஆனாலும் சரி, தயவு செஞ்சு என்னை பிரதர் என்று மட்டும் கூப்பிடாதீங்க. விஷ்வா என்றே கூப்பிடுங்க. எனக்கு ஒரு அக்கா போதும். தங்கச்சி எல்லாம் வேண்டாம், லெட்ஸ் பீ ஃபிரண்ட்ஸ் ” என்று சொல்லி கையை நீட்டினான்.

ஸ்மைல் செய்தபடி அவன் கையை குலுக்கி,

” ஓகே விஷ்வா” என்றாள்  நந்தினி. 

பங்க்ஷன் நல்லபடியா முடிந்ததற்கு கடவுளுக்கு முதல் நன்றி. இரண்டாவது உங்களுக்கு என்றார் ராஜசேகர்.

அதை நான் சொல்லணும் சம்பந்தி. ரொம்ப தேங்க்ஸ்.

அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்து பேசி விடைபெற்று அவரவர் வீட்டிற்கு சென்றனர்.

ஊர்மிளா மற்றும் அர்ஜுன் இருவரும் போட்டோகிராஃபரின் ஸ்டில்ஸுக்கு போஸ் கொடுத்து கொண்டு இருந்தனர்.

“அர்ஜுன் நாங்க வீட்டுக்கு போறோம் பா,  நீ ஊர்மிளாவை ட்ராப் பண்ணிட்டு அப்புறமா வரியா?” என்றார் ரங்கநாதன்.

” ஓகே பா, நீங்க கிளம்புங்க நான் 

பாத்துக்குறேன் ” என்றான் அர்ஜுன்.

ரங்கநாதன் கவுசல்யா மற்றும் நந்தினி மூவரும் வீட்டிற்கு சென்றனர்.

ஹாஸ்பிட்டலில் இருந்து ஷிவானி கண் விழித்து விட்டாள் என்று உமென் போலீஸ் ஸ்டேஷனிற்கு தகவல் கொடுக்க நர்ஸ் சரஸ்வதி கால் செய்தார்.

“ஹலோ மேடம், நாங்க ஏவி ஹாஸ்பிடலில் இருந்து பேசுறோம்”

“சொல்லுங்க” என்றார் கான்ஸ்டபிள் வாணி.

“பேஷண்ட் ஷிவானி மயக்கத்தில் இருந்து எழுந்திட்டாங்க”

” ஒரு நிமிஷம் இருங்க ” என்று சொல்லிவிட்டு எஸ்ஐ மதிவதனியிடம் விஷயத்தை கூறினாள் கான்ஸ்டபிள் வாணி.

“ஓ, அந்த ரேப் கேஸ் விக்டிம் ஷிவானியா?” என்றார் மதிவதனி.

” ஆமாம் மேடம்” 

“ஓகே, இன்னும் அரைமணி நேரத்தில் வந்திடுவோம். அதுவரைக்கும் அவங்க சொந்தக்காரங்க முக்கியமா அந்த பொண்ணோட அண்ணனை அவளைப் பார்க்க அலோ பண்ண வேண்டாம்னு சொல்லு வாணி”

“ஓகே மேடம்” என்று சொல்லி எஸ்ஐ மதிவதனி சொன்னதை அந்த நர்ஸிடம் சொன்னாள் கான்ஸ்டபிள் வாணி.

“ஓகே மேடம்” என்றாள் நர்ஸ் சரஸ்வதி.

எஸ்ஐ மதிவதனி மற்றும் கான்ஸ்டபிள் வாணி இருவரும் சொன்னது போலவே அரைமணி நேரத்தில் ஹாஸ்பிட்டலில் இருந்தனர்.

உள்ளே சென்று ஷிவானியிடம் பேசினார்கள்.

கான்ஸ்டபிள் வாணிக்கு ஷிவானியை பார்க்க மிகவும் வருத்தமாக இருந்தது. கண்கள் கூட கலங்கியது.

ஏனென்றால் வாணிக்கு வயது இருபத்தி ஐந்து. வேலைக்கு சேர்ந்து ஒரு வாரம் தான் ஆகிறது. இது அவள் பார்க்கும் முதல் ரேப் கேஸ்.

எஸ்ஐ மதிவதனிக்கும் ஷிவானியை பார்க்க பாவமாக தான் இருந்தது. இருப்பினும் தனது வேலையில் அவளைப் போன்ற பல பெண்களைப் பார்த்ததால் அதை ஒரு பக்கமாக வைத்து விட்டு கேள்விகளை கேட்கத் தொடங்கினார்.

கான்ஸ்டபிள் வாணியிடம் ரெக்கார்ட் செய்யவும் மற்றும் அவளுடைய வாக்கு மூலத்தை எழுதிக் கொள்ளவும் சொன்னார் மதிவதனி. ஓகே மேடம் என்று சொல்லி வாணியும் தயாராக இருந்தாள்.

” உன் பேரு என்னம்மா? “

“ஷிவானி”

“முழுப்பெயர்?”

“ஷிவானி சிவஞானம்”

“என்ன படிக்கறீங்க?”

“பி. எஸ்சி. கம்பியூட்டர் சைன்ஸ், செகண்டு இயர். ராம்லால் காலேஜ்”

“உங்க வீட்டில் மொத்தம் எத்தனை பேர்?”

“நான், என் அண்ணா ஷியாம், அக்கா ஷைலஜா, அப்பா சிவஞானம், அம்மா சிவகாமி”

“அக்கா இருக்காங்களா? என்ன பண்றாங்க?”

“கல்யாணம் ஆகி வெளிநாட்டில் செட்டில் ஆயிட்டாங்க”

‘எதுக்கு இதையெல்லாம் உடம்பு சரியில்லாத இந்த பொண்ணு கிட்ட கேட்கனும். ஏற்கனவே தான் இந்த கேள்வியை எல்லாம் அந்த ஷியாம் கிட்ட கேட்டாச்சே?’ என்று நினைத்து கொண்டாள் கான்ஸ்டபிள் வாணி.

தொடரும்…

அ. வைஷ்ணவி விஜயராகவன்.

இந்த episode பிடிச்சிருந்தா எழுத்தாளரை உற்சாகப்படுத்துங்க!!
இப்போதே உற்சாகப்படுத்துங்கள்

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

No votes so far! Be the first to rate this post.

    No comments yet.