பாகம் 11

Vaishnavi Vijayaraghavan | 04 May 2026 | Share

தொடர்பியல்….. பாகம் -11


கேஸ் -1 ( சங்கவி – கிஷோர்)


சிறிது நேரம் கழித்து ஏதோ நியாபகம் வந்தவளாய் தன் லேப்டாப்பை ஓப்பன் செய்து தன்னுடைய கிரானைட் கம்பெனி டீடெயில்ஸை பார்த்தாள். அதில் ஷேர் ஹோல்டர்ஸ் நேம் லிஸ்டில்…. சங்கவி, கிஷோர் அடுத்து ரோஸியின் பெயர் இருந்தது. பிறகு தன்னுடைய டைல்ஸ் கம்பெனி டீடெயில்ஸை பார்த்தாள். அதிலும் அதே போல் இருந்தது…. அவளுடைய நான்கு கம்பெனிகளிலுமே அதே போல் அதிக ஷேர் பர்சன்டேஜில் அவளுடைய பெயர் இருந்தது. அதுவும் எல்லாமே அவளுடைய அப்பா இறந்த பிறகு மாற்றப் பட்டு இருந்தது.


சே….. அடப்பாவி கிஷோர்…. உன்னை ரொம்ப நல்லவன் ன்னு நினைச்சேனே…. இப்படி பண்ணிட்டியே…. உன் மேல உயிரே வச்சிருந்தேனே…. எனக்கே துரோகம் பண்ணிட்டியே…. என்று அவனுடைய ஃபோட்டோவை பார்த்து பேசினாள்.


பிறகு அந்த லெட்டரை ஒட்டி படிக்க முயற்சி செய்தாள் சங்கவி…. நீங்க தப்பான முடிவுக்கு…. என்று இருந்தது…. அவளுடைய ஃபோன் நம்பர் கிழிந்ததில் சேர்த்தாலும் படிக்க முடியவில்லை. தலையில் கையை வைத்து அமர்ந்து இருந்தாள் சங்கவி.


அப்போது கிஷோரின் நம்பரில் இருந்து கால் வந்தது. சங்கவி எடுக்க வில்லை. திங்கட்கிழமை காலை ரோஸி ஷேர் ஹோல்டரை பற்றி தன் கம்பெனி மேனேஜரிடம் கேட்டாள். ஆமாம் மேடம் அவங்க பேரு ரோஸி…. கிஷோர் சார் சொன்னதால எந்த டீடெயில்ஸூம் அவங்க கிட்ட கேட்க முடியல…. 


ஓ…. ஓகே…. அவங்க ஃபோட்டோ எதாவது இருக்கா….


ஃபோட்டோ இல்ல மேடம்…. அவங்க கம்பனிக்கு வந்த சிசிடிவி ஃபூட்டேஜ் இருக்கு அதிலிருந்து உங்களுக்கு ஃபோட்டோ எடுத்து அனுப்பறேன்…. என்றார்.


ஓகே மேனேஜர்…. சீக்கிரமா அனுப்புங்க….


சரிங்க மேடம்…. என்று சொல்லி இரண்டு மணி நேரத்திற்கு பிறகு ஃபோட்டோவை அனுப்பினார் மேனேஜர்.


தேங்க்ஸ் மேனேஜர்….


வெல்கம் மேடம்….


அப்புறம் மேனேஜர்…. ஒரு விஷயம் உங்க கிட்ட கேட்கணும்….


கேளுங்க மேடம்…..


நான் உங்களை என் பிரதரா நினைச்சு தான் கேட்குறேன்…. என் ஹஸ்பண்ட்டுக்கும் ரோஸிக்கும்…. என்று இழுத்தாள்.


மேடம்…. நீங்க என்ன கேட்க வரீங்க ன்னு புரியுது…. எனக்கும் அப்படித்தான் தான் தோணுது…. அவங்க ரெண்டு பேரும் கிளோசா தான் இருக்காங்க…. பழகுறாங்க…. சாரி மேடம் இதை நான் உங்க கிட்ட சொல்றதுக்கு…. முதலில் நான் கூட அவங்க சகஜமாக தான் பேசி பழகுறாங்க ன்னு நினைச்சேன்…. ஆனால் கார் பார்க்கிங்கில் நான் கார் எடுக்க செல்லும் போது எதேச்சையாக பார்த்தேன்…. கிஷோர் சாரும் அந்த பொண்ணு ரோஸியும் சாரோட காருக்குள்ள முத்தம் கொடுத்து கிட்டு இருந்தாங்க…. இதை நான் இவ்வளவு நாளா சொல்லாம இருந்ததிற்கு மன்னிச்சிடுங்க…. நீங்க என்னை பிரதர் மாதிரின்னு சொன்னதால என்னால உண்மையை மறைக்க முடியல…. சாரி மேடம்….


கண்கள் கலங்கியது…. வார்த்தை திக்கியது சங்கவிக்கு….


ஓகே மேனேஜர்…. தேங்க்ஸ்…. இன்ஃபர்மேஷன் சொன்னதுக்கு…. பை….


பை… மேடம்…. சாரி…. டேக் கேர்…..


ஓகே…. பை…. என்று சொல்லி ஃபோனை வைத்து விட்டு மேனேஜர் அனுப்பிய ஃபோட்டோவை பார்த்தாள்….. ஆம்…. ராகினி பிரின்ட் அவுட் எடுத்து கொடுத்த ஃபோட்டோவில் இருந்த அதே பெண் தான்….தேம்பி தேம்பி அழுதாள் சங்கவி. 


கிஷோர் கால் செய்தான். சங்கவி எடுக்க வில்லை….அடுத்த நாளும் கால் செய்தான்….. ஆனால் அவனுடைய ஃபோனை எடுக்கவில்லை. கடுப்பாகினான் கிஷோர். வீட்டிற்கு போய் அவளை என்ன பண்றேன் பாரு…. என்று கோபப் பட்டான். கூல் டார்லிங்…. உன்னோட கோபத்தை அங்கே போய் காட்டு….. இங்க வந்தது நம்ம ஜாலியா இருக்கத்தான்…..என்று சொல்லி அவனை சந்தோஷப்படுத்தினாள் ரோஸி.


செவ்வாய்க்கிழமை இரவு வீட்டிற்கு வந்தான் கிஷோர்.


சங்கவி…. சங்கவி….


பயத்தில் பாத்ரூம் கதவிற்கு பின்னால் நின்று கொண்டு இருந்தாள்.


இப்போ வரப்போறீயா இல்லையா?…. என்று கோபத்துடன் பேசினான்.


என்னடி புருஷன் ஒரு வாரம் கழித்து வந்திருக்கானே…. என்பது முதல் அவளை அடித்து லாயரிடம் கேட்டு சொல்லு…. என்பது வரை ராகினி யின் கனவில் வந்தது போலவே நடந்தது.


மறுநாள் காலை லாயரிடம் பேசிய பிறகு…. விரக்தியாக இருந்தாள் சங்கவி…. இவனுடன் சேர்ந்து வாழவே பிடிக்கல இதுல குழந்தை வேறு பெத்துக்கனுமா…. என்று நினைத்து அங்கிருந்த கத்தியை எடுத்து தன் மணிக்கட்டு நரம்பை அறுத்து கொண்டாள் சங்கவி. சாரி ராகினி…. நீ அப்பவே சொன்ன…. நான் தான் நம்பல…..ரத்தம் வழிந்தோடியது. தரையில் சரிந்தாள் சங்கவி.


************

புதன் கிழமை….


மாதவன் காலை ஜங்ஷனில் ராகினியை பார்த்து பேசினான்.


எப்போது டா வந்த?…..


நேத்து மிட் நைட்…..


அத்தை எப்படி இருக்காங்க?


நீ சொன்ன மாதிரியே அவங்க சன்டே ஈவினிங் நார்மலா ஆயிட்டியாங்க….. நேத்து டிஸ்சார்ஜ் செய்து வீட்ல விட்டு விட்டு தான் வந்தேன்….. 


யாரு பாத்துக்கிறாங்க?


அப்பாவும்…. ஒரு நர்ஸ் ஏற்பாடு செய்து விட்டு வந்திருக்கேன்.


ஓகே டா…..


என்னடி ஆச்சு உனக்கு…..


ஒண்ணும் இல்லையே…..


என் கிட்ட மறைக்கிறதுக்கு கூட உன் கிட்ட விஷயங்கள் இருக்கா டி?


கண்கள் கலங்க அவனை பார்த்து அவனுடைய மார்பில் சாய்ந்து கொண்டாள் ராகினி.


ஏய் என்னாச்சு ராகினி…. பப்ளிக் பிளேஸ்ல கையையே பிடிக்க மாட்ட….. இப்போ கட்டி பிடிக்குற?…. என்றான் மாதவன்.


சாரி டா…. உன்னை டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னு நானே அந்த சங்கவியை பார்க்க போனேன்….


வாட்…. லூசாடி நீ….. உனக்கு எதாவது பிரச்சனை ஆயிருந்தா…. என்னடி நீ?…. தனியா வா போன?


இல்ல மம்தா என் கூட வந்தா…..


நீ பிரச்சனைல மாட்டறது இல்லாம அவளை வேறு மாட்டிவிட பார்த்தியா…..


நான் மம்தாவை வரவேண்டாம் ன்னு தான் சொன்னேன்…. அவ தான் கேட்கல…. நான் தனியா போறேனே ன்னு அவ வீட்ல அவங்க அப்பா சீரியஸா இருக்கும் போது அவரை ஹாஸ்பிடலில் சேர்த்து விட்டு என் கிட்ட சொல்லாம என் கூட வந்தா….


வாட்…. அந்த பொண்ணுக்கு என்ன பைத்தியமா?…. யாராவது இப்படி பணாணுவாங்களா?


அதான் நானும் அவ கிட்ட கேட்டேன்…. அதுக்கு அவ என் கிட்ட…. நான் உன்னை என் ஃபிரெண்டா மட்டும் நினைக்கல என் தங்கச்சியா நினைக்கிறேன் ன்னு சொன்னா…. எனக்கு அப்படியே புல்லரிச்சு போச்சு….


சரி…. போன விஷயம் என்ன ஆச்சு…..


அது வந்து…. என்று ஆரம்பித்து அவர்கள் சென்றதையும் சங்கவி அங்கு இல்லாததால் லெட்டர் எழுதி கொடுத்து விட்டு வந்ததையும் கூறினாள்.


என்னடி இப்படி பண்ணிருக்க…. அந்த லெட்டரை அந்த செக்கியூரிட்டி சங்கவி கிட்ட கொடுக்காம….. அந்த பொண்ணோட புருஷன் பேரு என்ன சொன்ன?


 கிஷோர்….


ஹாங்…. அந்த கிஷோர் கிட்ட கொடுத்தா என்ன செய்வ?


இல்ல…. முக்கியமான விஷயம் ன்னு சொல்லி தான் கொடுத்தேன்…. காசு கூட கொடுத்தேன்….


எல்லாரும் நீ நினைக்கிற மாதிரி இருக்க மாட்டாங்க டி…. சங்கவியோட ஃபோன் நம்பர் கூட அந்த செக்கியூரிட்டி கிட்ட இல்ல ன்னு சொல்ற…. அப்போ எந்த அளவுக்கு கிஷோர் அந்த வீட்டை கன்ட்ரோல்ல வெச்சிருக்கான் பாரு…. ஒருவேளை அவனோட அடியாளாக இருந்தா அந்த செக்கியூரிட்டி…. நீயே சங்கவிக்கு பிரச்சனையை ஏற்படுத்தி விட்டுட்டு வந்திருப்ப….


என்னென்னவோ சொல்ற டா…. எனக்கு தலையே சுத்துது…‌


சரி சரி விடு…. நீ ரிலாக்ஸாக இருடி….. எனக்கு தொன்றியதை சொன்னேன்…. எல்லா பக்கமும் யோசிச்சு ஒரு வேலை பண்ணனும்…. என்றான் மாதவன்.


புரியுது டா….. இப்போ என்ன பண்றது?


சரி…. டைம் ஆகுது…. நீ லேபுக்கு போ…. நான் ஸ்டேஷன் போயிட்டு.‌.‌‌.. ஏலகிரி போலீஸ் ஸ்டேஷனில் சாதாரணமா என்கொய்ரி ன்னு அங்கே எப்படி இருக்கு ன்னு விசாரிச்சிட்டு உனக்கு சொல்றேன்….


சரிடா…. பை…. சாரி டா….


பரவாயில்லை டி…. இதனால உனக்கோ மத்தவங்களுக்கோ எதுவும் பிரச்சனை வராத வரைக்கும் நீ பண்ணது சரிதான்….


ஹூம்…. அங்கே கால் பண்ணி கேட்டுவிட்டு சொல்லுடா….


சரிடி…. கண்டிப்பா…. பை….


பை மாதவா….


**************


லேபில்….


ஹாய் ராகினி…. ஹாய் தேவி…. குட் மார்னிங்…. என்றாள் மம்தா.


ஹாய் மம்தா…. குட் மார்னிங்…. என்றாள் தேவி.


ஹாய் மம்தா…. என்று சொல்லி விட்டு ஏதோ யோசனையில் இருந்தாள் ராகினி.


மம்தா அவளருகே சென்று….


என்ன ராகினி…. என்னாச்சு?


இல்ல மம்தா…. சங்கவி கிட்ட இருந்து ஃபோன் வரல…. அதான் ஒரே டென்ஷனா இருக்கு…. நேத்து ராத்திரி கண்டிப்பா கிஷோர் வந்திருப்பான்.


நீ எப்படி இவ்வளவு கான்ஃபிடென்டா சொல்ற உன் கனவு பலிக்கும் ன்னு….


தெரியல மம்தா…. ஆனா அப்படித்தான் தோணுது…. என்றாள் ராகினி.


அப்போது டேவிஸ் சார் வந்ததால் அத்துடன் பேசுவதை நிறுத்தி விட்டு வேலையில் கவனம் செலுத்தினார்கள் அனைவரும்.


ஏஞ்சல் சூசைடு கேஸ் ரிசல்ட் கான்ஃபரன்ஸ் மீட்டிங் அட் லெவன் ஓ கிளாக்…. என்று சொல்லி விட்டு செல்லும் போது…. ஆல் தி மொபைல் ஃபோன் அட் யுவர் கேபின் டெஸ்க் இட்செல்ஃப்…..( ஏஞ்சல் தற்கொலை டெஸ்ட் முடிவு பதினோரு மணிக்கு மீட்டிங் ரூமில் சொல்கிறேன்…. அனைவரும் ஃபோனை அவரவர் டேபிளில் வைத்து விட்டு வரவும்)……என்றார் டேவிஸ்.


பதினோரு மணிக்கா…. மாதவன் கால் செய்வானே…. என்று நினைத்து கொண்டாள் ராகினி.


ஃபோனை வைத்து விட்டு மீட்டிங்கிற்கு சென்றாள் ராகினி.


அப்போது டேவிஸ் ஏஞ்சல் சூசைடு கேஸ் ரிசல்ட் என்று ஆரம்பித்து….


இது நமக்கு கிடைத்த தகவல் படி சூசைடு கிடையாது…. என்றார் டேவிஸ்.


அனைவருமே ஆச்சரியமாக ஜார்ஜ் டேவிஸை பார்த்தார்கள்.


************ 

தொடரும்…..

அ. வைஷ்ணவி விஜயராகவன்.























இந்த episode பிடிச்சிருந்தா எழுத்தாளரை உற்சாகப்படுத்துங்க!!
இப்போதே உற்சாகப்படுத்துங்கள்

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

No votes so far! Be the first to rate this post.

    No comments yet.