பாகம் 10

Vaishnavi Vijayaraghavan | 04 May 2026 | Share

தொடர்பியல்….. பாகம் வாழ்க்கையில

கேஸ் – 1 (சங்கவி-கிஷோர்)


தேங்க் காட்…. நான் ரொம்ப பயந்துக்கிட்டே இருந்தேன்…. நீ வேற வரேன்னு சொல்லிட்டியே….. உனக்கோ உன் ஃபேமிலிக்கோ எதாவது பிரச்சனை வந்திடப்போகுதுன்னு…. என்றாள் ராகினி.


அதான் சொன்னேனே…. ஒண்ணும் இல்ல ன்னு…. நீ டென்ஷன் ஆகாத….. நாளைக்கு ஈவினிங் இதே டைம் வந்திடலாம் இல்ல?


கண்டிப்பா மம்தா…..


ஓகே….. 


ஏன் கேக்குற…..


இல்ல டேவிஸ் சார் கொடுத்த ஒரு வேலையை முடிக்க மறந்திட்டேன்…. அதான் நாளைக்கு ஈவினிங் வீட்டுக்கு போய் முடிச்சிட்டா மன்டே லேபிற்கு போகும் போது பிரச்சனை இருக்காது….. அதனால கேட்டேன்…. என்றாள் மம்தா.


ஓ…. அப்படியா…. என்றாள் ராகினி.


ஹூம்…. என்று சொல்லி ஜன்னல் வழியாக வெளியே வேடிக்கை பார்த்தவாறு வந்தாள் மம்தா.  


மம்தா நேத்து ராத்திரி சரியாக தூங்கல…. உன் மேல சாய்ந்து தூங்கிக்கவா?


இதை கேட்கனுமா ராகினி என்றாள் மம்தா.

ராகினி மம்தாவின் தோளில் சாய்ந்து கொண்டாள்.


ஜன்னலின் வழியே வெளியே பார்த்து கொண்டு வந்த மம்தாவின் கண்களில் இருந்து நீர் வழிந்தோடியது. அதை யாருக்கும் தெரியாமல் துடைத்துக் கொண்டாள்.


வெள்ளிக்கிழமை ராகினியிடம் ஏலகிரிக்கு

வருவதாக கூறிவிட்டு சென்ற மம்தா. வீட்டிற்கு சென்றதும் அவளுடைய அப்பா மிகவும் மோசமான நிலையில் இருந்தார்.

அவரை ஆஸ்பத்திரியில் அட்மிட் செய்தனர். அவளுடைய அம்மா அவரை பார்த்துக் கொண்டார். டாக்டர் அவர் சீரியஸாக இருப்பதாக கூறினார். பல்ஸ் லெவல் கம்மியாக இருப்பதாக கூறினார்.

மம்தா அவளுடைய அம்மாவிற்கு ஆறுதல் கூறி விட்டு….. அம்மா…. நான் உன் கூட இருக்கவா…. இல்ல ராகினி கூட போயிட்டு வரவா…. என்றாள்.


நீ போயிட்டு வாம்மா…. ஏன்னா உன்னோட அப்பான்னா உனக்கு உயிரு….. அவரு இந்த நிலைமைல இருக்கும் போது நீ போயிட்டு வரவா ன்னு கேட்குற ன்னா….. அந்த பொண்ணை நீ உன் ஃபிரெண்டா நினைக்கல செத்துப்போன உன் தங்கச்சியா நினைக்கிற ன்னு எனக்கு புரியுது. அவளுக்கு எதுவும் ஆபத்து வரக்கூடாது ன்னு நினைக்கிற…. அதனால நீ கூட போக நினைக்கிற சரியா…..


அம்மா….. உங்களுக்கு எப்படி தெரியும்? என்று சொல்லி கட்டிக் கொண்டாள் மம்தா.


நான் உன் அம்மா டி கண்ணு….. சரி…. அப்பாவை பத்தி நீ கவலைப்படாதே…. நான் பார்த்துக்கொள்கிறேன்….. நீ ஜாக்கிரதையா போயிட்டு வா….. என்று சொல்லி அனுப்பி வைத்ததை நினைத்து கொண்டாள் மம்தா.


இரவு 9 மணி அளவில் ஏலகிரிக்கு போய் சேர்ந்தனர். ஏற்கனவே ரூம் புக் செய்து வைத்திருந்தாள் ராகினி. அங்கே போய் தங்கினார்கள். 


காலை எழுந்தவுடன் ஃபோனை எடுத்து மேப்பில் சங்கவி வீட்டு லொகேஷனை போட்டாள். ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது. டிபன் சாப்பிட்டு விட்டு ஒன்பது மணி அளவில் கேப் புக் செய்து கிளம்பினார்கள் ராகினி மற்றும் மம்தா.


பத்து மணிக்கு அந்த பங்களாவை அடைந்தனர்.


ஸெக்கியூரிட்டி அவர்களை கேட்டிலேயே நிறுத்தி யாரென்று விசாரித்தான்.


 நாங்க ரெண்டு பேரும் சங்கவியோட ஃபிரெண்ட்ஸ்….. வீட்ல இருக்காளா அவ?….. என்றாள் மம்தா அவனிடம்.


மேடம் வீட்ல இல்லையே…… அவங்களோட அப்பாவோட முப்பதாம் நாள் நினைவஞ்சலிக்கு போயிருக்காங்க….


அப்படியா?….. எந்த ஊர்?


பேங்களூர்….


வாட் பேங்களூரா?


என்ன மேடம் நீங்க….. சங்கவி மேடத்தோட ஃபிரெண்டு ன்னு சொல்றீங்க…. அவங்க அப்பா எந்த ஊரு ன்னு தெரியல…. அவர் இறந்ததும் தெரியல…..


இல்ல…. அது வந்து நாங்க ஃபேஸ் புக் ஃபிரெண்ட்ஸ்….‌‌அதான் எங்களுக்கு தெரியாது.


என்னா புக்கோ….. போங்க…. என்று சொல்லிவிட்டு கேட்டை மூடிக் கொண்டு உள்ளே சென்றார்.


திரும்பி காரில் ஏறினார்கள் ராகினி மற்றும் மம்தா.


ஒரு நிமிஷம் மம்தா இதோ வரேன்…. என்று சொல்லி விட்டு காரை விட்டு இறங்கி சென்று அந்த செக்கியூரிட்டியிடம் பேசினாள் ராகினி.


பின்னர் வந்து காரில் ஏறி…. அண்ணா மார்க்கெட்டுக்கு போறீங்களா?….. என்றாள்.


என்னாச்சு ராகினி…. செக்கியூரிட்டி கிட்ட என்ன கேட்ட?….. எதுக்கு இப்போ நம்ம மார்கெட் போகணும்?


சங்கவியோட ஃபோன் நம்பர் கேட்டேன்.


ஓ சூப்பர்…. கிடைச்சதா?


இல்லை…..


ஏன்?


கிஷோர் நம்பர் தான் அவரிடம் இருக்காம்….


ஓ…. இப்போ என்ன பண்ணப் போற?


அதான் மார்க்கெட் போய்…. என் ஃபிரெண்டு ரம்யா அனுப்பிய ஃபோட்டோக்களை பிரின்ட் அவுட் எடுத்து லெட்டர் எழுதி அந்த செக்கியூரிட்டியிடம் கொடுத்து விட்டு வரலாம்.


ஓ…. சூப்பர் ஐடியா டி….


வேறு ஆப்ஷன் எதுவும் நமக்கு இல்லை. ஏன்னா இன்னைக்கு மிட் நைட் தான் பேங்களூர்ல இருந்து சங்கவி வருவாங்கன்னு அவர் சொன்னாரு …. நம்ம இன்னைக்கு ஈவினிங் போயாகனும்…. அதான்.


ஓகே ராகினி…. இது தான் சரி…. என்று சொல்லி விட்டு அனைத்தும் பிரிண்ட் அவுட் எடுத்து ஒரு கவரில் போட்டு அதனுடன் ஒரு லெட்டரையும் எழுதி வைத்தாள் ராகினி.


தயவு செய்து எந்த ஒரு தப்பான முடிவுக்கும் போகாதீங்க சங்கவி….. உங்கள் கணவர் வீட்டிற்கு வரும்போது உங்களுக்கு இதுதான் நடக்கும்…. என்று தன் கனவில் வந்த அனைத்தையும் எழுதி வைத்தாள்….. எந்த ஒரு பிரச்சனையும் தீர்க்க முடியும். தைரியமாக முடிவு எடுங்கள்….. உங்கள் கணவருக்கு பயந்து உங்களுடைய வாழ்க்கையை முடித்துக் கொள்ளாதீர்கள். அனைத்தையும் எழுதி கவரில் போட்டு கம் போட்டு ஒட்டி எடுத்து வந்து செக்கியூரிட்டியிடம் கொடுத்து விட்டு…. 


அங்கிள்…. இது ரொம்ப ரொம்ப முக்கியமான ஒரு தகவல் சங்கவிக்கு தெரிவிக்க தான் நாங்கள் வந்தோம்…. அவங்க எத்தனை மணிக்கு வந்தாலும் மறக்காம இதை கொடுத்திடுங்க…. என்று சொல்லி ஒரு ஐநூறு ரூபாய் நோட்டை கொடுத்து விட்டு வந்தாள் ராகினி.


புன்சிரிப்புடன்…. நீ கவலைப்படாதே மா…. நான் கண்டிப்பா கொடுத்திடறேன்…. உன் பேரு என்னம்மா சொன்ன?


ராகினி….


சரிம்மா நான் கொடுத்திடறேன்.


தேங்க்ஸ் அங்கிள்…. தேங்க் யூ ஸோ மச்…. என்று சொல்லி விட்டு காரில் ஏறி பஸ் ஸ்டாண்டு சென்று சென்னைக்கு செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்தனர்.


நான் சொல்லல மம்தா…. எனக்கு கூட தடங்கள் வரும் ன்னு…. பார்த்தீயா?


ஆமாம் ராகினி…. நான் நம்பறேன்…. ஏன்னா நானும் ஒரு தடங்களைத் தாண்டி தான் வந்திருக்கேன் என்று ஆரம்பித்து தன் அப்பாவை ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டு வந்தது வரை அனைத்தையுமே கூறி முடித்தாள் மம்தா.


கண்கள் கலங்கியது ராகினிக்கு….


என்ன மம்தா நீ…. எனக்கு என்ன ஆகப்போகுது…. எதுக்கு நீ உங்க அப்பா அவ்வளவு சீரியஸா இருக்கும் போது வந்த…. என்றாள் ராகினி.


எங்க அம்மா சொன்னது போல…. உன்னை நான் என் தோழியா பார்க்கல என்னோட தங்கச்சியா பார்க்கிறேன்…. என்று சொல்லி கண்கள் கலங்கினாள் மம்தா.


ராகினி மம்தா வை கட்டி அணைத்து கொண்டாள். உண்மையிலேயே நீ எனக்கு கிடைக்க நான் கொடுத்து வச்சிருக்கேன்…. என்று சொல்லி அழுதாள்.


சென்னை வந்து சேர்ந்தனர். மம்தாவுடன் ஆஸ்பத்திரிக்கு சென்று அவளுடைய அம்மா அப்பாவை பார்த்து விட்டு…. அவளுடைய அம்மாவிற்கு நன்றி சொல்லி விட்டு பின்னர் தன் ரூமிற்கு வந்தாள் ராகினி.


லெட்டரில் தன் ஃபோன் நம்பரை எழுதி வைத்துவிட்டு தான் வந்தாள் ராகினி. எப்போது சங்கவியிடம் இருந்து தனக்கு ஃபோன் வரும் என்று காத்திருந்தாள் ராகினி.


**************


இரவு பதினோரு மணி அளவில் வீட்டிற்கு வந்தாள் சங்கவி.


செக்கியூரிட்டி அவளிடம் அந்த லெட்டரை கொடுத்து….


மேடம் உங்க ஃபிரெண்ட்ஸ் ரெண்டு பேர் வந்தாங்க…. அவங்க கொடுக்க சொன்னாங்க….


ஃபிரெண்ட்ஸா…. யாரு….. பேர் என்ன சொன்னாங்க?


பேரு…. என்னம்மோ சொல்லுச்சு அந்த பொண்ணு…. மறந்திட்டேன் மேடம்…. இது உள்ளே லெட்டர் எழுதி வச்சிருக்கேன்னு சொல்லுச்சு…. என்றார்.


ஓகே…. தேங்க்ஸ் அங்கிள்…. என்று சொல்லி விட்டு அந்த லெட்டரை வாங்கி கொண்டு உள்ளே சென்றாள் சங்கவி.


குளித்து விட்டு உடையை மாற்றி கொண்டு பெட்டில் படுத்தாள். அப்போது கிஷோருக்கு கால் செய்தாள். அவன் எடுக்கவில்லை. தூங்கிக்கொண்டு இருப்பான் என்று நினைத்து கொண்டாள் . அவன் அங்கு ரோஸியுடன் உல்லாசமாக இருந்ததால் தான் ஃபோனை எடுக்கவில்லை என்று அவளுக்கு தெரியவில்லை பாவம்.


அப்போது பெட் மேல் வைத்த லெட்டரை பார்த்தாள். யாரு வந்தாங்க…. என்று நினைத்து கொண்டே அந்த கவரை பிரித்தாள்.


ரோஸியுடன் கிஷோர் மிக நெருக்கமாக டிரெயினில் அமர்ந்து இருந்த புகைப்படங்களின் பேப்பர் பிரிண்ட் அவுட் இரண்டு இருந்தது.


அதைப் பார்த்ததும் சங்கவிக்கு தலை சுற்றியது…. அந்த பொண்ணு சொன்னது உண்மைதானா?…. இல்லை யாராவது கிராஃபிக்ஸ் இல்ல ஃபோட்டோ ஷாப் பண்ணி இருக்காங்களா…. ஒன்றும் புரியவில்லை அவளுக்கு.


தன் லேப்டாப்பை எடுத்து ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் அனைத்திலும் ரோஸியை பற்றி தேடினாள். அந்த பெயரில் எதுவும் இல்லை. தன் கணவன் கிஷோர் அக்கவுண்ட்டில் சென்று ஃபிரெண்ட்ஸ் லிஸ்டில் ரோஸியை தேடினாள். அதிலும் எதுவும் கிடைக்கவில்லை. பிறகு தன் கணவனின் கப்போர்டில் தேடிப் பார்த்தாள். எதுவும் இல்லை. சே…. என்று சலித்து கொண்டாள். அப்போது அந்த லெட்டரை எடுத்து பார்த்தாள்.


ராகினி என்று இருந்தது. இந்த ராகினி யாரு…. ஏன் நம்ம வாழ்க்கையில இப்படி விளையாடுறா…. சீ…. என்று சொல்லி அந்த லெட்டரை படிக்காமலே தூள் தூளாக கிழித்து போட்டாள் சங்கவி.



தொடரும்….

அ. வைஷ்ணவி விஜயராகவன்.




இந்த episode பிடிச்சிருந்தா எழுத்தாளரை உற்சாகப்படுத்துங்க!!
இப்போதே உற்சாகப்படுத்துங்கள்

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

No votes so far! Be the first to rate this post.

    No comments yet.