நெஞ்சம் 30:
தீவிர சிந்தனையுடன் பொம்மைப் போல் மௌனமாய் அமர்ந்திருந்தாள் தீந்தென்றல். அவளின் நிலைக் கண்டு என்னவோ போல் ஆகிவிட்டது அரசிக்கு.
“ஏய் என்னடி…” என்றாள் வருத்தமாய். அது தென்றலை சென்று சேர்ந்ததைப் போலவே தெரியவில்லை.
அவளுக்கு தலைவாறிக் கொண்டிருந்தவள், அதை அப்படியே விட்டுவிட்டு தோழியை தன் பக்கம் திருப்ப, “என்னம்மா…” என்றாள் வாஞ்சையாய்.
“ஹான்… என்ன…” என தடுமாற்றத்தோடு தென்றல் திருதிருத்து விழிக்க, பாவமாய் போய்விட்டது அரசிக்கு.
“ஏன் தென்றல் எதையோ பறிக் குடுத்தவ மாதிரி இப்படி இருக்க… உன்ன இப்படி பாக்கவே எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்குடி…” என்றாள் உண்மையான வருத்ததுடன் அரசி. கண்களை எட்டாத மென்னகை ஒன்று விரிந்தது பெண்ணிடம்.
அவளின் முன் மண்டியிட்டு அமர்ந்தவள், தோழியின் இருக்கைகளையும் தன் கரங்களுக்குள் பொதிந்து வைத்தபடி, “பழச எதையும் நினைச்சு மனச போட்டு குழப்பிக்காத தென்றல்… உன்னோட பாஸ்ட்ல என்ன நடந்துச்சுனு எனக்கு தெரியாது… தெரிய வேண்டிய அவசியமும் இல்ல… என்ன நடந்திருந்தாலும் அத அங்கையே அப்படியே விட்டுடு… இது உனக்கு கிடைச்ச இன்னொரு சான்ஸ் தென்றல்… இத கெட்டியமா புடிச்சுக்கோ… சிவா ரொம்ப ரொம்ப நல்லவன்… எந்த காரணத்துக்காகவும் உன்னையும் வேந்தனையும் விட மாட்டான்… அத மட்டும் நம்பு… ப்ளீஸ்…” என்றாள் ஆதுரமாய் அன்பொழுகும் குரலில்.
“சின்ன வயசுல இருந்து எதுவும் நான் ஆசைப்பட்டபடி, என் விருப்பப்படி என் வாழ்க்கையில நடந்ததில்லை அரசி… எப்பவுமே மத்தவங்களுக்காக, அவங்க எண்ணபடி ஆசைப்படி தான் நான் வாழ்ந்திருக்கேன்… இதோ இப்போ இந்த கல்யாணம்… இதுல எனக்கு முழு மனசா விருப்பமா இல்லையானு கூட எனக்கு தெரியல… இத எப்படி அடுத்த கட்டத்துக்கு நகர்த்திட்டு போகறதுனும் தெரியல… முழுசா கடந்த காலத்துல இருந்து வெளியவும் வர முடியல… மனசோட ஒரு ஓரத்துல எஃகு குண்ட தூக்கி வச்ச மாதிரி எப்பவும் கனமாவே இருக்கு… அத தூக்கி வெளிய போட்டுட்டு சாதாரணமா நடமாட முடியல… எங்க எனக்கே தெரியாம அவங்கள காயப் படுத்திடுவேனோனு பயமா இருக்கு… மறுபடியும் ஏதாவது தப்பா நடந்துச்சுனா என்னால தாங்கிக்கவே முடியாது அரசி…” என்றாள் தொண்டை அடைக்க, உடைந்த குரலில் தடுமாற்றமாய் தென்றல்.
முதல் முறை அவளின் மனதை திறந்து உள்ளத்தில் இருப்பதை வெளிப்படையாக அரசியிடம் பேசுகிறாள்.
“எல்லாம் ஒரே நாள்ல சரியாகிடும்னு நான் சொல்ல மாட்டேன் தென்றல்… உனக்கு எப்படியோ அதே மாதிரியான ஒரு வலி சிவாவுக்கும் இருக்கு… வாழ்க்கை எந்த வழியில உங்கள கூட்டிட்டு போகுதோ அமைதியா அந்த பாதையில போங்க… காலம் எல்லாத்தையும் மறக்கடிக்கும் தென்றல்… நம்பு ப்ளீஸ்… உன் மனசுக்கு நிச்சயமா நீ நல்லா தான் இருப்ப…” என்றாள் அவளை எப்படியாவது இலகு நிலைக்கு கொண்டு வந்து நோக்கத்துடன் அரசி.
ஆழ்ந்து மூச்சை உள்ளிழுத்து கண் மூடி நிதானமாய் வெளியிட்டவள், தன்னை சமன் படுத்திக் கொள்ள சில நொடிகள் பிடித்தது. “இதெல்லாம் இன்னைக்கே நடக்கணும்னு அவசியம் என்ன அரசி… ஏன் இந்த உறவ ஏத்துக்கறதுக்கான டைம யாருமே எனக்கு குடுக்க மாட்டேங்கறீங்க…” என்றாள் உள்ளே சென்றுவிட்ட குரலில் வருத்தமாய் தென்றல்.
“இது இப்படி தான் நடக்கும்னு உனக்கும் தெரியும் தென்றல்… அப்பறம் ஏன் இப்படி நடக்குதுனு கேட்டா நான் என்ன சொல்ல..? இன்னைக்கே எல்லாம் நடக்கணும்னு இல்லையே… இரண்டு பேரும் மனசுவிட்டு பேசுங்க… ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சுக்க ட்ரை பண்ணுங்க… அதே நேரம் சிவாவோட ஃபீலிங்ஸ்க்கும் மதிப்பு குடு… ஏற்கனவே ரொம்ப அடிபட்டுட்டான்… எதையாவது நினைச்சு அவன காயப்படுத்தி வாழ்க்கைய சிக்கலாக்கிகாத…” என்றாள் தவிப்பாய் அரசி.
“பாரு... நீயே நான் அவங்கள காயப் படுத்திடுவேனு தான் சொல்லற…” என்றாள் விரக்தியாய் தென்றல்.
இதற்கு மேல் என்ன சொல்லி அவளை தேற்றுவது என்றே அரசிக்கு தெரியவில்லை. என்ன சொன்னாலும் அது அவளை தவறாக போய் சேருமோ என்றிருந்தது.
“ரொம்ப யோசிக்காத தென்றல்… சில விசயங்கள் நம்ம கைய மீறி நடக்கும் போது கடவுள் பாத்துப்பாருனு அது போக்குல அப்படியே ஏத்துக்கணும்…” என்றாள் அரசி.
அதற்குள் தென்றலை அழைக்க வந்துவிட்டிருந்தாள் கயல். “அண்ணிய அழைச்சுட்டு சொன்னாங்க க்கா… நல்ல நேரத்து ஆரம்பிச்சுடுச்சாம்…” என்றாள் அவள்.
“பைவ் மினிட்ஸ் கயல்… தலை சீவி பூ வச்சா முடிஞ்சுடும்…” என்றாள் அரசி.
“வேந்தன் எழுந்துக்கலையே அண்ணி…” என்றாள் கயலிடம் தென்றல். இப்பொழுது தான் பிள்ளையே அவளே உறங்க வைத்துவிட்டு வந்தாள் என்றாலும் கேட்காமல் இருக்க முடியவில்லை. பிள்ளைகளோடு குணவதியுமே விருந்தினர் அறையில் தான் இருந்தார்.
“நல்லா தூங்கறான் அண்ணி…” என்றாள் கயல்.
“இன்னைக்கு எல்லாம் ஓவர் ஆட்டம்… நாளைக்கு காலையில வரைக்கும் ஏந்திரிக்க மாட்டாங்க…” என்றாள் அரசி.
“நாங்க எல்லாம் இருக்கோம்ல… பாத்துக்கறோம் அண்ணி…” என்றாள் அவளின் தவிப்பை உணர்ந்தவளாய் கயல்.
“இடையில எழுந்து என்ன கேட்டு அழுதானா… எதையும் யோசிக்காம தூக்கிட்டு வந்துடுங்க… ப்ளீஸ்…” என்றாள் அப்படியும் தவிப்பு குறையாமல்.
“அதான் நான் இங்க தானே இருக்கேன்… அவன் கண்ண முழிச்சு அம்மாவுல ‘அ’னாவ சொல்லறதுக்குள்ள உன்கிட்ட தூக்கிட்டு வந்து குடுத்தறேன்… போதுமா…” என்றாள் அரசி.
“ம்ம்ம்… பாத்துக்கோடி…” என்றாள் அப்பொழுதும் தென்றல். ஒரு நாள் கூட பிள்ளை இல்லாது உறங்கியதில்லை அவள். வீட்டிற்கு ஒதுக்கமான நாட்களில் கூட பிள்ளை அவளுடன் தான் உறங்குவான். ‘இனி தினமும் இப்படி தானோ..!’ என்ற எண்ணம் அவளை பெரிதாய் அரிக்க தொடங்கி இருந்தது.
“முடிஞ்சுச்சு…” என்றபடியே இரண்டடி தள்ளி நின்று தோழியைப் பார்த்தாள் அரசி. அவளின் தோற்றம் அத்தனை திருப்தியாய் இருக்க, முகம் வழித்து நெட்டி முறித்தவள், ” அழகா இருக்கடி தங்க பொண்ணு…” என்றாள் பேரன்போடு ஆதுரமாய் அரசி.
அவர்கள் மூவரும் ஒன்றாய் வெளியில் வர, ஏற்கனவே தயாராகி பூஜையறை வாயிலில் நின்றிருந்தான் நேசன். இருவருமாய் இறைவனை வணங்கி, அடுத்து கந்தவேல் – வள்ளிக்கண்ணு தம்பதியையும் விழுந்து வணங்கி கொண்டனர்.
பெயருக்கு கூட விசாலமோ குணவதியோ அவர்களின் கண்ணில் படவில்லை. இருவருமே கணவனை இழந்திருக்க, பெரும்பாலான சடங்குகளில் ஒதுங்கியே தான் நின்றனர். பிள்ளைகள் இருவருக்கும் மனதில் அது சுறுக்கென்று குத்த தான் செய்தது. ஆனால், எல்லா நேரங்களிலும் எல்லா இடங்களிலும் பகுத்தறிவையும் புரட்சியையும் பேசிவிட முடியாதே!
நேசன் மாடி ஏறிவிட, வழகத்தின் வழக்கமாக அவளின் கைகளில் பால் சொம்பை திணித்து அவன் அறை வாசல் வரை கொண்டு விட்டு வந்தாள் அரசி.
நொடிகள் கரைந்து நிமிடங்கள் யுகங்களாய் நீண்டுக் கொண்டிருந்தது. இது எதுவும் அவளுக்கு புதிதில்லை, முதல் முறையில்லை. அதுவே அவளுள் ஒரு குற்றவுணர்வை, தன்னையே கீழாக நினைக்க வைத்தது. கோடி முறை தனக்குள்ளையே கேட்டு சலித்தும், ‘எனக்கு மட்டும் ஏன் இப்படி..?’ என மீண்டும் ஒரு முறை கேட்க வைத்திருந்தது.
இன்னும் எத்தனை நேரம் தான் அப்படியே நின்றுக் கொண்டிருக்க முடியும். லேசாய் திறந்திருந்த கதவை முழுமையாய் திறந்துக் கொண்டு உள்ளே நுழைந்தாள் பெண். காலையில் எப்படி அமர்ந்திருந்தானோ அதேப் போல் கால்களை நீட்டி அமர்ந்து ஏதோ புத்தகத்தை புரட்டிக் கொண்டிருந்தான் நேசன். பெரிதாய் இல்லையென்றாலும் முதலிரவிற்கு உண்டான அலங்காரத்தோடு இருந்தது அறை.
“என்ன அதுக்குள்ள உள்ள வந்துட்ட… இந்த கதைய படிச்சு முடிச்சதும் தான் வருவேனு நினைச்சேன்…” என்றான் சின்ன சிரிப்போடு தலை சாய்த்து நேசன். ஆக, அவள் வந்து நின்றது அவனுக்கும் தெரிந்தது தான் இருந்திருக்கிறது.
முணுக்கென்று ஒரு சின்ன கோபம். அவனாக வந்து அழைத்தால் தான் என்னவாம் என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை.
“இந்த அறைக்குள்ள நீயா தான் வரணும் தென்றல்… எனக்குள்ள நீ வந்த மாதிரி…” ஆழ்ந்த அடர்ந்த குரலில் சொன்னவனை வெடுக்கென நிமிர்ந்து பார்த்தாள் பெண். அவன் கண்களில் என்ன இருந்தென்று பெண்ணால் வரையறுக்க முடியவில்லை.
பெரிதாய் ஒப்பனை என்று சொல்வதற்கு எதுவுமில்லை. வெங்காய நிறத்தில் (Onion pink) டிஸ்யூ கார்டன் சோலை அணிந்திருந்தாள். தளர தலையை வாறி நிறைய மல்லிகையை சூடி இருந்தாள். பச்சை முத்துக்கள் கோர்த்த பெரிய குடை ஜிமிக்கியும், அதே டிசைனில் நீண்ட ஹாரமும் கை நிறைய பச்சை வர்ணத்தில் மழைத்துளி கண்ணாடி (Raindrop Bangles) வளையல்களை அணிந்திருந்தாள்.
ரசனையாய் அவளில் படிந்த பார்வையை விலக்க முடியவில்லை நேசனால். விலக்கவும் நினைக்கவில்லை. “இன்னும் எத்தன நேரம் கதவுக்கு முட்டு குடுத்துட்டு நிக்க போற…” என்றான் அமைதியாய்.
அமைதியாய் அடி மீது அடி வைத்து நடந்து வந்தவள், பாலை அவனிடம் நீட்டினாள். ‘நீ முதலில் குடி…’ என்பதையாய் கண்ணை காட்டினான் அவன். பருகாமல் ஏன் என்பதாய் பார்த்து நின்றாள் தென்றல்.
“உனக்கு பிடிக்காதுல… நீ குடிச்சுட்டு குடுத்தா மீதிய நான் குடிச்சுப்பேன்…” என்றான் நேசன்.
“அப்போ உங்களுக்கு பால் ரொம்ப பிடிக்குமோ..?”
“பிடிக்குமா பிடிக்காதானு யோசிக்கற அளவுக்கு வாழ்க்கை எந்த இடத்திலையும் எனக்கு ஆப்ஷன் குடுத்ததில்ல தென்றல்…” அவன் வெகு சாதாரணமாக சொல்லிவிட்டான் தான். இவளுக்கு தான் ஏன் கேட்டோம் என்றாகிவிட்டது.
அவள் குடித்துவிட்டு கொடுக்க, வாங்கிக் கொண்டவன், “உக்கார இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்…” என்றான் நமட்டு சிரிப்போடு. வெடுக்கென்று கட்டிலின் இன்னொடு பக்கத்தில் சென்று அமர்ந்தாள் பெண்.
குடித்து முடித்து எழுந்து ஓய்வறைக்கு சென்றவன், அந்த பாத்திரத்தை கழுவி கொண்டு வந்து மேசை மீது வைத்தான்.
“இந்த டிரஸ் உனக்கு கம்ஃபோர்டா இல்லைனா மாத்திக்கோ தென்றல்…” என்றான் அடுத்ததாய்.
“இல்ல… இதுவே எனக்கு வசதியா தான் இருக்கு…”
“ஆனா எனக்கில்லையே…” என்றான் கள்ள சிரிப்போடு கேலிமாய் நேசன். அதுவரை கைவிரல்களின் நகங்களை ஆராய்ந்துக் கொண்டிருந்தவள் ‘என்ன..?’ என்பதைப் போல வெடுக்கென நிமிர்ந்துப் பார்த்தாள்.
“ஐ மீன்… எனக்கு வேட்டி வசதியா இல்ல… நான் ட்ரஸ் சேஞ்ச் பண்ணனும்…” என்றான் அமர்த்தலாய் அவன். ‘அதுக்கு…’ என்பதைப் போல புரியாமல் அவனைப் பார்த்தாள் பெண். காலையில் போல இப்பொழுதும் பட்டு வேட்டி சட்டை அணிந்திருந்தான் அவன்.
“ஹலோ… இப்படி பாத்தா… எங்களுக்கு மட்டும் இந்த வெட்கம் கூச்சமெல்லாம் இருக்காதா..? போய் பால்கனில நில்லு… நான் ட்ரஸ் மாத்தணும்…” என்றான் இதழ்களினோரம் புன்னகையை அடக்கியபடி தீவிர குரலில்.
வேகமாய் எழுந்து அவள் பால்கனியின் பக்கம் நகர, “ஹலோ மேடம்… இந்த தெரியாம பாக்கறது… ரகசியம பாக்கறது… ஒளிஞ்சு பாக்கறது… மறைஞ்சு பாக்கறது… இந்த மாதிரி வேலையெல்லாம் வச்சுக்க கூடாது… பேசிக்கலி நான் ரொம்ப கூச்ச சுபாவம்… யூ நோ…” என்றான் விரிந்துவிட்ட நமட்டு சிரிப்போடு.
“போய்யா யோவ்…” என்றவள், “ரொம்ப தான் பண்றான்…” என முணுமுணுத்தபடியே விறுவிறுவென பால்கனியின் பக்கம் நகர்ந்து விட்டாள். இது வரை அவள் மனதிலிருந்த கனம் கரைந்து மெல்லிய இதம் பரவியது.
இருள் படர்ந்த இரவையும் மினுக்கிக் கொண்டிருந்த நட்சத்திர கூட்டத்தையும் வேடிக்கை பார்த்தபடி நின்றிருந்தாள் தென்றல். சில நிமிடங்களிலேயே இரவு உடைக்கு மாறி அவளின் பக்கத்தில் வந்து நின்றான் நேசன்.
சில நொடிகள் அவளையே பார்த்திருந்தவன், “சொன்னேனே… உன்னோட சம்மதம் இல்லாம நம்ம வாழ்க்கையில எதுவும் நடக்காது… அது எத்தனை நாளானாலும் மாசமானாலும் வருஷமானாலும் சரி… முழு மனசா என்ன எப்ப உன்னால ஏத்துக்க முடியுதோ அது வரைக்கும் நான் காத்திட்டு இருக்கேன்…” என்றான் அழுத்த குரலில் நேசன்.
“உனக்கு மட்டும் இல்ல… எனக்குமே இதெல்லாம் பழக, ஏத்துக்க கொஞ்சம் டைம் வேணும் தான்… அப்பறம் ஏன்டா இத்தன அவசரம்னு நீ கேக்கலாம்… நீ வேற அலைன்ஸ் பாக்காம இருந்திருந்தா நிச்சயம் நான் பொறுமையா தான் இருந்திருப்பேன்… நீ வேற இடம் பாக்கவும் எங்க உன்னையும் வேந்தனையும் இழந்துடுவேனோனு பயம்… உங்கள இழக்க நான் தயாரா இல்லை தென்றல்…”
“ரொம்ப யோசிச்சு மனச போட்டு குழப்பிகாத… வாழ்க்கைய அது போக்குல வாழ்வோம்… இப்ப வந்து நிம்மதியா படுத்து தூங்கு…” என்றவன் அவளை மென்மையாய் அணைத்து நெற்றியில் அழுத்தமாய் இதழ் பதித்து அதே வேகத்தில் விலகியும் இருந்தான்.
‘அப்ப இது என்னவாம்…’ என்பதாய் விழிகளை உருட்டி முறைத்துப் பார்த்தாள் பெண்.
அவளின் பார்வைக்கு பதிலாய், “குட்நைட் கிஸ்…” என்றான் கன்னத்தில் குழி விழ புன்னகைத்தபடி வசீகரிக்கும் மோன குரலில்.
“தூங்கலாம்…” என்றபடி அவளின் கைப்பிடித்து அறைக்குள் அழைத்து சென்றவன், இரவு விளக்கை மட்டும் எரியவிட்டு படுத்தும் விட்டன். படுத்த சில நிமிடங்களில் உறங்கியும் இருந்தான்.
ஜிமிக்கியையும் ஹாரத்தையும் மட்டும் மேசை மீது கழட்டு வைத்துவிட்டு படுத்தவளுக்கு, உடல் அவ்வளவு சோர்வாய் இருந்தும் சீக்கரத்தில் உறக்கம் வருவேனா என்றது. இப்படியும் அப்படியுமாய் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தாள் அவள்.
அதில் உறக்கம் களைய பாதியாய் இமைகளை பிரித்து அவளைப் பார்த்தவன், “என்னம்மா…” என்றான் உறக்கம் சுமந்த கரகரத்த குரலில்.
“இல்ல… லைட் எரிஞ்சா எனக்கு தூக்கம் வராது…” என்றாள் சங்கடமான குரலில் தென்றல்.
“முன்னாடியே சொல்லி இருக்கலாம் இல்ல…” என்றவன் எட்டி இரவு விளக்கை அணைத்துவிட்டு, “இப்ப தூங்கு…” என்றபடியே குப்புற படுத்து விட்ட உறக்கத்தை தொடர முயன்றான்.
அப்படியும் அவள் உறங்காது புரண்டு கொண்டிருக்க, அவள்புறம் திரும்பி படுத்து “இன்னும் என்னவாம்..?” முழுவதும் உறக்கம் களைந்த ஆழ்ந்த அடர்ந்த குரலில்.
“புது இடம்… அதுவுமில்லாம எப்பவும் வேந்தன் என்ன கட்டிகிட்டு கைகால மேல போட்டுட்டு தான் தூங்குவானா..? இப்ப அவன் இல்லாம என்னவோ போல இருக்கு…” என்றாள் பரிதாபமாய் பெண்.
“இன்னைக்கு மட்டும் தானே… நாளைக்கு குட்டி பையன நம்ம ரூம்க்கு தூக்கிட்டு வந்திடலாம்… கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ…” என்றபடியே அவள் எதிர்பாரா நேரத்தில் தன்னோடு சேர்த்து அணைத்து, நெற்றியில் அழுத்தமாய் முத்தம் பதித்து மார்போடு சாய்த்துக் கொண்டு, பூக்குட்டிக்கு செய்வதைப் போலவே முதுகில் மென்மையாய் தட்டிக் கொடுக்க தொடங்கி இருந்தான். சம்பித்து போனவள், ஆடாது அசையாது அவன் கரங்களுக்குள் அடங்கியிருக்க, மெல்ல மெல்ல அவளறியாமலே அவளை ஆட்கொண்டது நித்திரை. தொடர்ந்த அத்தனை இரவுகளிலும் அவனின் கரங்களுக்குள் தான் உறங்கினாள் பெண்.
– நேசம் ஒளிரும்…
No comments yet.