நெகிழா நெகிழி

PANAIYAN VELMURUGAN | 17 Dec 2025 | Share

நெகிழா நெகிழி 

பனியை சுமக்க 

வேண்டிய 

மார்கழிப் பூக்கள் 

மழைநீரில் பிறந்து 

மலர்ந்து 

வாசம் திரிந்து 

தேனை 

மழை நீரில் 

கலந்து 

தெருவெல்லாம் 

கோலங்கள் 

இட்டு 

சாலையின் 

ஓரம் 

ஓடையின் 

சாயலில் 

ஓடி களைத்து 

கேரி பேக் 

தடுப்பணைகளால் 

சில நேரம் 

தேங்கி

அங்கேயே 

கொஞ்சம் 

தூங்கி 

அளவில் 

அதிகமானதால்

ஆத்திரத்தில் 

பொங்கி

தடுப்பணைகளை

தலையில் 

தாங்கி 

சடசடவென 

கொட்டும் 

மழையென

பாயும் 

வாய்க்கால்களில்

கலந்து 

மிதக்கும் 

நெகிழி குப்பையோடு

புரண்டு 

சந்து பொந்துகளில்

நெகிழி

நெகிழாமல்

அடைத்து 

தாழ்ந்த 

வீடுகள் 

கடைகள் 

குடிசைகள் 

அலுவலகங்கள் 

முடிந்தால் 

அடுக்கு மாடிக் 

குடியிருப்புகள் 

எல்லாம் 

அலைந்து 

மலையின் 

சரிவில் 

பிறந்த 

மணலை

வாரி

மலைச்சரிவை

மறைத்த

குப்பை

கூளங்களை

சுருட்டி 

வந்த

நதியின் 

நீரோடு

சங்கமித்து 

ஊரும் பேரும் 

மாறி

உருண்டு திரண்டு 

உவர் 

நீரில் 

உருவம் 

இழந்து 

ஆழியில் 

ஐக்கியமாகி

அங்கும் 

கரையாமல் 

உடல்

நரையாமல் 

வாழும் 

நெகிழிக்கு 

நன்றி.

    

    No comments yet.