நிலா -38

Chellammal Bharathi | 09 Jan 2026 | Share

      “போற தரித்திரியத்த ஏன்டா கதிரு வெத்தல பாக்கு வச்சு கூப்பிடுறீங்க? பீடையோட புருஷனே கூட்டிட்டு போகட்டும்.. விடு கதிரு… ” என தெனாவெட்டாக கூறினார் அலமேலு.

     “இந்த கிழவிய இன்னக்கி போட்டு தள்ளிர்றேன்…” என நிலா அலமேலுவை நோக்கி முன்னேற அவளது கைப்பிடித்து தடுத்தான் இளா. 

       “என்னடி பண்ண போற? அவங்க வயசானவங்க நிலா…” இளா. 

       “வயசானவங்கனா அதுக்கேத்த மாதிரி பேசனும் நடந்துக்கனும்…” நிலா. 

       “அய்யோ அக்கா நீ பாட்டுக்கும் அலமேலு மண்டைய உடைச்சுறாத… அன்னக்கி ஒருத்தன் மண்டைய அலமேலுவோட எண்ணெய் பாட்டில வச்சே உடைச்சியே அது மாதிரி எதுவும் உடைச்சுறாத க்கா…” அபி. 

      “டேய் உன் அக்காக்கு நீயே சாமி ஆட சொல்லி குடுக்காத டா…” என இளா அபியின் காதில் முனுமுனுத்தான். 

     “அட விடுங்க மாமா… அலமேலுக்குலாம் பட்டா தான் புத்தி வரும்…” என இளாவின் காதில் மெல்லிய குரலில் கூறிவிட்டு,  “அய்யோ அக்கா அலமேலு பாவம் க்கா… கோபத்துல அது மண்டைய உடைச்சுறாத..” என சத்தமாக நிலாவிடம் கூறினான் அபி. 

     அபியின் வார்த்தைகளில் இருந்த பதட்டம் அவனது குரலில் இல்லை. அதை கவனித்த நிலா, ” டேய் இப்ப என்ன சொல்ல வர்ற நீ? அலமேலுவ அடிக்கனும் னு சொல்றியா? அடிக்க கூடாது னு சொல்றியா?” என்றாள். 

      “அய்யோ மாமா… உங்க பொண்டாட்டி சுத்த மக்கு…” என இளாவின் காதில் முனுமுனுத்துவிட்டு “நா எப்பிடிக்கா நம்ம அப்பத்தாவ அடிக்க சொல்லுவேன்? தப்புத் தப்பு.. ரொம்ப தப்பு… ” என தன் இரு கன்னத்திலும் தன் கையால் தட்டிக் கொண்டான் அபி. 

     “ரொம்ப நடிக்காதீகடா… டேய் கதிரு… அந்த குட்டச்சிய அவ புருஷன இழுத்துட்டு போக சொல்லு மொதல்ல… அவனும் அவன் பேச்சும்…” என்றபடி வாயில் அரைத்த வெற்றிலையை அருகில் வைத்திருந்த கொட்டாங்குச்சியில் பொழிச்சென துப்பினார் அலமேலு. 

      “அலமேலு… செத்த டி நீ…” என இளா பிடித்திருந்த தனது கையை விடுவித்துக் கொண்டு வேக நடையுடன் அலமேலுவை நெருங்கினாள் நிலா. 

       அலமேலுவை நெருங்கிய வேகத்தில் அவர் வைத்திருந்த அனைத்து வெற்றிலை பாக்கையும் அள்ளி அவரது வாயை வலுக்கட்டாயமாக திறக்கச் செய்து அனைத்தையும் அவரது வாய்க்குள் அமுக்கி அலமேலுவின் வாயை இறுக்கி தன் கரங்களால் மூடியபடி, “இப்ப பேசு… இப்ப பேசு அலமேலு… இங்க பாரு என்னைய நீ எவ்ளோ வேணுனாலும் பேசு.. உன் மகனுக்கு பொறந்த பாவத்துக்கு உன் பேச்செல்லாம் வாங்கிக்கிறேன். ஆனா என் புருஷன பத்தி ஏதாவது பேச வாயத் தொறந்த… இன்னக்கி வெத்தலையும் பாக்கையும் தான் வச்சேன்… இனி பேசுனா சுண்ணாம்ப அள்ளி வாய்க்குள்ள கொட்டிருவேன்… அப்புறம் யார பத்தியும் நீ பேச முடியாது…” என தன் குண்டு விழிகள் உருள மிரட்டினாள் நிலா. 

     அதைக் கேட்ட அபி வாயை பிளந்து நிற்க… இளா புன்னகையுடன் நிற்றான். அலமேலுவின் நிலைதான் அந்தோ பரிதாபம். அலமேலு அதற்கு மேல் பேச முடியாமல் வாயடைத்து போனார். 

       எவ்வளவு பேசினாலும் பாறாங்கல்லாக அமைதியாக இறுகி கடந்து சென்று விடுபவள் இன்று எதிர்த்து செய்த செய்கையும் நிலாவின் மிரட்டலும் அலமேலுவின் நெஞ்சில் பயத்தை ஏற்படுத்த… தன் வாயில் இருந்து நிலா கை எடுத்தும் அப்படியே வாயை பிளந்தபடி பேச வாய் வார்த்தை வராமல் திகைத்து நிலாவையே பார்த்தபடி இருந்தார் அலமேலு. நிலாவின் முந்தைய இறுகிய நிலைக்கு தாங்கள் காரணம் என்றும் தற்போதைய அவளது இளகிய நிலைக்கு இளஞ்சேரன் காரணம் என்பதை உணராமல் போனார் அலமேலு. 

       அலமேலுவின் அந்நிலையைக் கண்டு அபிக்கு சிரிப்பு கடுமையாக வெளி வர துடித்தாலும் அணையிட்டு அதை தடுத்துக் கொண்டிருந்தான். 

         கதிர்வேலுவும் வள்ளியும் நிலாவைத் தான் வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தனர். 

         “என்னய வீட்ட விட்டு தொறத்த தான இவ்ளோ பேச்சு பேசுன? நா எங்கயும் போக மாட்டேன்… இங்க தான் இருக்க போறேன்…  உன்னால எவ்ளோ பேச முடியுமோ பேசிக்க…” என அலமேலுவைப் பார்த்து அழுத்தமாக கூறியவள் தனது பையை எடுத்துக் கொண்டு தன் அறையில் வைத்து விட்டு கணவனின் கை பிடித்து வெளியே அழைத்துச் சென்றாள் நிலா. 

          அதைக் கேட்ட அலமேலு, “எஹ்ஹஉ…” என அதிர்ச்சியுடன் வாயில் வெற்றிலை பாக்கை நிலா அமுக்கி விட்ட நிலையிலேயே உலற… அதில் சில பாக்கு துகள்கள் அவரின் தொண்டைக்குள் இறங்க அசௌகரியத்தால் கண்ணில் நீர் வர இறுமி அனைத்தையும் துப்பினார் அலமேலு. 

       அவரின் நிலை கண்டு ஒரு புறம் சிரிப்பு வந்தாலும் அவருக்கு ஓடிச் சென்று தண்ணீர் எடுத்து வந்து கொடுத்தான் அபி. கதிர்வேல் வந்து அலமேலுவின் தலையில் தட்டி அவரை சமநிலை படுத்தினார். 

     சிறிது சரியானதும், “இருந்தாலும் உன் பொண்ணு ஓவரா ஆடுறா டா கதிரு…” என்றார் அலமேலு. 

      “என்ன அங்க சத்தம்?” என நிலா வெளியில் இருந்து குரல் கொடுக்க… அலமேலுவிற்கு மொத்த உடலும் உதறல் எடுக்க கப்பென்று வாயை மூடிக் கொண்டார். அதைக் கண்ட அபியின் சிரிப்பு அவன் போட்டிருந்த அணைக்கட்டை தாண்டி உடைப்பெடுத்து சத்தமாக வெளியில் வர… கண்ணில் நீர் வர சிரித்தான் அபி. 

       அதைக் கண்டு கதிர்வேல் அபியை முறைக்க… தலை குனிந்தவாறு வள்ளியும் லேசாக புன்னகைத்துக் கொண்டாள். 

         வெளியே சென்ற இளாவும் நிலாவும் வீட்டிற்கு வெளியே நின்றிருந்த இளாவின் பைக் அருகில் சென்று நின்றனர். 

          “என் கிட்ட என்ன சொல்லனும் சேரா?” என நேரடியாக விசயத்திற்கு வந்தாள் நிலா. 

        “எப்பிடி கண்டுபுடிச்ச நிலா?” என ஆச்சரியமாக விழி விரித்தான் இளா. 

        “ஏதோ என் கிட்ட சொல்லனும் னு நினைச்சு தான நீங்க திரும்பி வந்தீங்க? சரி சொல்லுங்க என்ன னு?” நிலா. 

        “அது.. உன் கிட்ட ஒரு விசயத்த மறைச்சுட்டேன் டி…” இளா. 

        “என்ன?” நிலா. 

        “அது… அன்னக்கி ஒரு பொண்ண கடத்திட்டாங்க னு சொன்னேன் ல… அது வேற யாரும் இல்ல என் தங்கச்சி தான்…” இளா. 

        “உங்களுக்கு ஒரு அக்கா மட்டும் தான?” நிலா. 

        “இவ என் கூட பொறக்காட்டியும் என்னோட தங்கச்சி தான்… அதுல எந்த மாற்றமும் இல்ல. பார்த்தசாரதி பண்ற தில்லு முல்லு லாம் தெரிஞ்சு ஆதாரம் இல்லாம முழிச்சுட்டு இருந்தப்ப தான் என் தங்கச்சி கனி அவன பத்துன டாக்குமென்டரி பண்றேனு அவன பத்துன எல்லாத்தையும் கலக்ட் பண்ண ஆரம்பிச்சா. அப்ப அவ ஏதோ ஒன்ன பெருசா கண்டு புடிச்சு இருக்கா. அத தெரிஞ்ச அவன் என் தங்கச்சிய கடத்திட்டான். அவள கடத்தி இந்த ஊருல தான் வச்சு இருக்கான். அது தெரிஞ்சு தான் உன்னைய இங்க அனுப்பிட்டு உன் பின்னாடியே நானும் இங்க வந்தேன். கனி எனக்கு ஏழு நாள் டைம் குடுத்து இருக்கா அதுக்குள்ள அவ இருக்குற இடத்துக்கு வந்துரனும் னு. அப்பிடி இல்லனா அவளே அவனுங்கள கொன்ருவேன் னு சொல்லி இருக்கா. இப்ப கொஞ்ச நேரம் முன்னாடி தான் தகவல் வந்துச்சு. அத வச்சு பாத்தா அவ அந்த இடத்த விட்டு தப்பிச்சு வந்து தகவல் குடுத்து இருக்கா. அவனுங்க எனக்கு உயிரோட வேணும் நிலா. இந்த கனி உன்னைய விட ரொம்ப மோசம். நீயாச்சும் நிதானிச்சு அடிப்ப… இவ அடிச்சுட்டு தான் நிதானமா யோசிப்பா… அதான் இப்ப என்ன பண்றது னு தெரியாம திரும்ப வந்தேன்… எனக்கு அவனுங்கள நினைச்சு பயம் இல்ல… கனிய நினைச்சா தான் பயமா இருக்கு நிலா…” என கைகளை பிசைந்தவாறு கூறினான் இளா. 

         அனைத்தையும் கேட்ட நிலா சத்தமாக வாய் விட்டு நகைத்தாள். அவளின் சிரிப்பு சத்தம் கேட்டு அபி, கதிர்வேல், வள்ளி மூவரும் எட்டிப் பார்த்து ஆச்சரியப்பட… அலமேலு பயத்தில் உள்ளே சுருண்டு படுத்து இருந்தார். 

        “இப்ப நா என்ன சொல்லிட்டேன் னு இப்பிடி சிரிக்கிற?” இளா. 

         அதைக் கேட்ட நிலா மீண்டும் சத்தமாக சிரிக்க… “என்ன னு சொல்லுடி…” என்றான் இளா. 

        “இல்ல… இந்த விசயம் இசைக்கு தெரிஞ்சா உங்க நிலைமை என்ன ஆகும் னு நெனச்சேன்… சிரிச்சேன்… ” என தொடர்ந்து சிரித்தாள் நிலா. 

         “அய்யோ… ஆமா ல… அவ கிட்ட சொல்லிறாத நிலா…” என கெஞ்சும் குரலில் கூறினான் இளா. 

         “இட்ஸ் டூ லேட் பேபி…” என சிரிப்புடன் தனது அலைபேசியை தூக்கி காட்டினாள் நிலா. அதில் இசை அனைத்தையும் கேட்டு விட்டதற்கு அடையாளமாய் அந்த புறம் ஏதோ பட்டென்று உடையும் சத்தம் ஃபோனில் சத்தமாக கேட்டது. 

                            (சேரநிலா மிளிர்வாள்…)

                          -செல்லம்மாள்பாரதி 

    No comments yet.