நிலா -35

Chellammal Bharathi | 27 Dec 2025 | Share

        சில்லென்ற இயற்கை காற்று வீசிக் கொண்டிருக்க நிலாவின் கூட்டம் சண்டை முடிந்ததும் மரத்தடியில் அமர்ந்து குச்சி மிட்டாயை சுவைத்துக் கொண்டிருந்தது. அனைவரும் குச்சி மிட்டாயின் சுவையில் மூழ்கி இருக்க.. திடீரென இசை இளாவின் தோளை உலுக்கினாள். 

       “டேய் அண்ணா…” இசை. 

        “சொல்லு குரங்கே..” என குச்சி மிட்டாயின் சுவையில் ஆழ்ந்தவாறே கேட்டான் இளா. 

         “கேக்குறேன் னு தப்பா நினைக்காத.. நீ நெனச்சாலும் பரவாயில்ல..” இசை. 

         “அச்சீ.. கேக்க வந்தத கேளு டி.. அத விட்டுட்டு பில்டப் பண்ணிட்டு இருக்க.. ” என இசையின் தலையில் தட்டினான் சேது. 

         “அண்ணே.. இவன் என் தலையில அடிச்சுட்டான்…” என அழும் முக பாவனையுடன் இளாவிடம் குற்றம் கூறினாள் இசை. 

        “டேய் ஏன்டா என் தங்கச்சிய அடிச்ச?” என்ற இளா சேதுவின் முதுகில் நான்கு அடிகளை இடிகளாக இறக்கினான். 

         “இப்ப சந்தோஷமா டி? இப்ப உன் மனசு குளுந்து போச்சா? புருஷன் அடி வாங்குறதுல அவ்ளோ சந்தோஷம் இந்த பொண்டாட்டிகளுக்கு..” என அடி வாங்கிய முதுகை தேய்த்தவாறு இசையை முறைத்தான் சேது. 

       “என்னது பொண்டாட்டிகளுக்கா? அப்பிடி ஸாருக்கு எத்துன பொண்டாட்டி இருக்கு?” என புசு புசு வென கோவத்தில் மூச்சை இழுத்து விட்டபடி கேட்டாள் இசை. 

       “ஏய் ஏய் அடியேய்… எனக்கு இருக்குற ஒரே ஒரு பொண்டாட்டியையே என்னால சமாளிக்க முடியல… ஏன்டி நீ வேற வெந்த புண்ணுல குச்சிய விட்டு ஆட்டுற?” என சலித்துக் கொண்டான் சேது. 

       “என்னடா புருஷா ரொம்ப சலிச்சுக்கிற? இந்த மொசக்கரக் கட்டைக்கு நா கிடைச்சதே பெருசு.. இதுல நா உனக்கு வெந்த புண்ணுல குச்சிய விட்டு ஆட்டுறேனா? இப்ப எப்பிடி ஆட்டுற னு பாருடா..” என மெதுவாக எழுந்து நின்று சேதுவின் தலைமுடியை கொத்தாக பற்றி ஆட்டினாள் இசை. 

        “வாவ்… செம டி பொண்டாட்டி.. அப்பிடியே ரைட்ல ஆட்டு.. இப்ப லெப்ட்…  செம டி செல்லம்.. ஹெட் மசாஜ் சூப்பரா பண்ற…” சேது. 

        “உனக்குலாம் என் மவன் தான்டா சரிபட்டு வருவான்.. டேய் தங்கப்புள்ள… அட்டாக்…” என இசை கூறிய உடன் அபியின் தோள் மீது அமர்ந்து இருந்த கவின் ஒரே தாவலில் சேதுவின் கழுத்திற்கு தாவினான்.

        கவின் தாவியதில் பட்டென்று மண்ணை முத்தமிட்ட சேது பாவமாக இளாவை நோக்கினான். இளாவோ சிரிப்பை அடக்க பெரும்பாடு பட்டுக் கொண்டிருந்தான். 

       சேதுவின் முதுகில் கவின் சறுக்கு மரம் சறுக்கி விளையாண்டதில் சேதுவிற்கு முதுகு இரண்டாக பிளப்பது போல் வலி எடுக்க.. இசையை நோக்கி கை எடுத்து கும்பிட்டான். 

        “என் பொண்டாட்டி தெய்வமே.. உன்னய விட்டா இந்த அநாதைப் பயல யாரும் திரும்பிக் கூட பாக்க மாட்டாங்க டி. முடியலடி.. உன் புருஷன் பாவம் டி..” என வராத கண்ணீரை வரவழைக்க முயற்சி செய்தபடி இசையைப் பார்த்து கதறினான் சேது. 

        அவனின் ஒற்றை வார்த்தையில் அடிபட்டவள், “கவின்.. அப்பா மேல இருந்து இறங்குடா.. “எனக் கூறியபடி சேதுவின் கரம் பற்றி அமர்ந்தாள் இசை.

        “இப்ப ஏன்டா அநாதை னு சொல்ற? பொண்டாட்டி நா இருக்கேன். உனக்கு ஒரு பையன் இருக்கான். உன் குடும்பம் னு சொல்ல இத்தனை பேரு இருக்கோம்..அப்புறம் எப்பிடி நீ.. ” என அதற்கு மேல் கூற முடியாமல் கண்ணீர் சிந்தினாள் இசை. 

         “ஹேய்.. இப்ப எதுக்கு டி அழுகுற? நா சும்மா விளையாட்டுக்குத் தான் சொன்னேன்..” என இசையை தன் கை வளைவில் வைத்துக் கொண்டு தேற்றினான் சேது. 

         “காரணம் நீ தான்டா.. புண்ணாக்கு பயலே… என் தங்கச்சிய அழ வைக்கிற நீ..” என சேதுவின் காதைப் பிடித்துத் திருகினான் இளா. 

         “அவன் கிடக்குறான்.. நீ என்னமோ என் கிட்ட கேக்க வந்தியே அத கேளு இசை.. ” என இசையின் தலையை மென்மையாக வருடினான் இளா. 

         “ஆமா ல… உனக்கு வேற தங்கச்சி யாராவது இருக்கா?” இசை. 

          “ஏன் இப்படி கேக்குற?” இளா. 

           “இல்ல… கொஞ்ச நாளா என் தங்கச்சி பாசத்துக்கு யாரோ பங்கு போட வர்ற மாதிரியே ஒரு பீலிங்… அதான் கேட்டேன்… சொல்லு அப்பிடி யாராவது இருக்காங்களா?” இசை. 

           “ஹா ஹா ஹா… இருந்தா என்ன பண்ணுவ?” இளா. 

           “உன்னைய கொலை பண்ணிட்டு ஜெயிலுக்கு போயிருவேன்..” இசை. 

           “ஏய்.. புள்ளதாச்சி பேசுற பேச்சா இது? வாயில அடி… ” என மென்மையாக இசையின் வாயில் அடித்தான் சேது. 

           “ஏன் இந்த கொல வெறி?” இளா. 

           “பின்னே.. என் அண்ணே எனக்கு மட்டும் தான்.. யாருக்கும் பங்கு தர மாட்டேன்… அப்பிடி யாராவது வந்தா உன் சங்குல மிதி விழும்.. ” இசை. 

          “யாத்தேய்… நிலா… உன் புருஷன இந்த மிரட்டு மிரட்டுறா நீ என்ன னு கேக்க மாட்டியா?” இளா. 

           “மாட்டேன்… என் இசைக்கு மட்டும் தான் நீங்க அண்ணனா இருக்கனும். இல்லனா நானும் தூக்கி போட்டு மிதிப்பேன்.. ” நிலா. 

           “சரி… அண்ணனா இருக்கல.. மத்த எல்லாருக்கும் கண்ணனா இருக்கவா?” என நிலாவைப் பார்த்து கண்ணடித்தான் இளா. 

       “அபி… அந்த செருப்ப எடு…” என சேது குரல் கொடுக்க.. தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பது போல் மிகவும் நல்ல பிள்ளையாக செருப்பை எடுத்து வந்து சேதுவின் கரங்களில் கொடுத்தான் கவின். 

        “விடு ண்ணே… இது ஒரு வெத்து பீஸூ.. ” என நிலா சேதுவிடம் கூற.. அவளது அண்ணா என்ற சொல்லில் கண் கலங்கி செருப்பை கை விட்டான் சேது. 

        “ஹைய்யோ… இப்பிடியே பேசிட்டே இருக்கப் போறீகளா? இல்ல வீட்டுக்கு கிளம்புற ஐடியா உங்க யாருக்கும் வரலயா? எனக்கு செமயா பசிக்குது…” என்ற அபியின் கத்தலில் அக்கூட்டம் அப்போதைக்கு கலைந்தது. 

         “சரி… கிளம்புவோம்… நிலா.. இளா… என்ன பிரச்சனையா இருந்தாலும் நாம எல்லாரும் சேந்து தான் அத பேஸ் பண்ணனும். சும்மா நீங்க தனியா பாத்துக்கலாம் னு கிளம்பிறக் கூடாது.. இல்லனா உங்க ரெண்டு பேரையும் டிவோர்ஸ் பண்ணிருவேன்.. ” என இருவரையும் மிரட்டி விட்டு இசையையும் கவினையும் அழைத்துக் கொண்டு புறப்பட்டான் சேது. 

        அபி பசியில் வேகமாக வீட்டை நோக்கி நடக்க… இளாவும் நிலாவும் மெதுவாக நடந்தனர். 

        “டோர்னமென்ட் பத்தி என்ன யோசிச்சு இருக்க நிலா?” இளா. 

         “நீங்க என்ன நினைக்கிறீங்க?” நிலா. 

          “இதுல நா நினைக்க என்ன இருக்கு? தெளிவா தெரியுது இது அந்த மினிஸ்டர் உனக்கு வச்ச ட்ராப் னு.. நீ தான் சொல்லனும்.. ” இளா. 

         “நீங்களே சொல்லுங்க… உங்க பொண்டாட்டி என்ன பண்ணனும் னு? ” என அழகாக புன்னகைத்தாள் நிலா. 

         “என் பொண்டாட்டி என்ன செஞ்சாலும் அதுக்கு துணையா நா நிப்பேன்..” இளா. 

        “அப்பிடியா? அப்ப நா இந்த டோர்னமென்ட் ல விளையாடல னு சொன்னா?” நிலா. 

         “என் பொண்டாட்டி கண்டிப்பா அப்பிடி சொல்ல மாட்டா.. தன்னை எதித்து நிக்கிறவங்கள எதித்து நின்னு ஜெயிக்க தான் என் நிலா நினைப்பா…  எதைப் பாத்தும் பயந்து பின் வாங்க மாட்டா…” இளா. 

          “சரித்தான்…” என புன்னகைத்தாள் நிலா. 

           “அப்ப ஆடலாமா?” இளா. 

            “ம்ம்… ஆடலாமே…” நிலா. 

            “க்ரவுண்ட் க்கு உள்ள நீ ஆடு… க்ரவுண்ட் க்கு வெளில நா ஆடுறேன்… யாரோட ஆட்டம் சம்பவமா மாறுது னு பாத்துறலாம்.. ” இளா. 

              “அதையும் பாத்துறலாம்… க்ரவுண்ட்ல என்னோடது தரமான சம்பவமா இருக்கும்.. ” என ஒரு புருவத்தை உயர்த்தி இளாவிற்கு சவால் விட்டாள் நிலா.

              “க்ரவுண்ட்டுக்கும் வெளில என்னோடது சிறப்பான சம்பவமா இருக்கும்.. நீயா நானா னு ஒரு கை பாத்துறலாம்..” என தன்னவளின் சவாலை ஏற்றுக் கொண்டு அவளை இல்லத்தின் முன்னே விட்டுவிட்டு தனியே பிரிந்து சென்றான் இளா. 

            அவனை காதலுடன் பார்த்தவாறே அவன் உருவம் மறையும் வரை நின்றவள் வீட்டின் உள்ளே நுழைந்தாள் நிலா. 

            வீட்டின் உள்ளே அவளுக்காக சிறப்பான தரமான சம்பவம் ஒன்று காத்துக் கொண்டு இருந்தது. 

                              (சேரநிலா மிளிர்வாள்…)

                       -செல்லம்மாள்பாரதி 

    No comments yet.