“உனக்கும் புடிக்குமா? எனக்கும் புடிக்கும்…” என சேதுவைப் பார்த்து ராகமாய் இழுத்தபடி புளிப்பு மிட்டாயை நன்றாக சப்பு கொட்டி சப்பினான் இளா.
“செமயா இருக்கு ல மச்சான்?” என சேதுவும் பதிலுக்கு இளாவைப் பார்த்து கேட்டபடி புளிப்பு மிட்டாயை சப்பினான்.
இருவரது காலணிகளும் ஒரு மூலையில் கிடக்க… ஒரு பெரிய வேப்ப மரத்தின் அடியில் குழந்தை போல கால் நீட்டி அமர்ந்து சேதுவும் இளாவும் புளிப்பு மிட்டாயை சப்பிக் கொண்டிருக்க… அபியும் கவினும் அழும் நிலையில் அவர்கள் இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தனர்.
“எனக்கு…” என அழும் நிலையில் கவின் கை நீட்ட… “நா ஓடி வர்றதுக்குள்ள முக்காவாசி முட்டாய வாய்க்குள்ள அமுக்கிட்ட ல… போ.. இது என் பங்கு.. நா தர மாட்டேன்…” என மகனிற்கு சரி சமமாய் மிட்டாய்க்காக சண்டை இட்டான் சேது.
“மாமா… “என இளாவைப் பார்த்து உதட்டைப் பிதுக்கினான் கவின்.
“எப்பிடி? எப்பிடி? நா அங்க ஓடி வர்றப்ப… சேரா மாமா வருது எல்லாத்தையும் எடுத்து ஒளிச்சு வை அபி.. அப்பிடித்தான சொன்ன? இன்னும் உன்னைய ஃபுல்லா செக் பண்ணல… உன் உடம்புல இன்னும் எங்கெங்கலாம் புளிப்பு முட்டாய மறைச்சு வச்சு இருக்கியோ… அழுகுற மாதிரி நடிக்காதடா கேடிப் பயலே…” என கவினைப் பார்த்து முறைத்தான் இளா.
“எப்பிதி தா இந்த மாமா கண்துபுதிக்குதோ.. எல்லாம் பத்தமா இதுக்கா அபி?” என தன் ஒரு கையால் வாயை மறைத்தபடி அபியிடம் இரகசியம் பேசினான் கவின்.
“அதெல்லாம் ரொம்ப பத்ரமா இருக்கு… நீ திரும்ப ஆக்டிங்க போடு.. நமக்கு முட்டாய் முக்கியம் மவனே.. ” என கவினின் காதுக்குள் இரகசியம் பேசினான் அபி.
இருவரும் மாறி மாறி இரகசியமாய் பேசுவதைக் கண்ட சேது, “என்னடா அங்க இரகசியம் பேசிட்டு இருக்கீங்க?” என மிரட்டினான்.
“ஒன்னும் இல்லயே…” என அவசரமாக அபியும் கவினும் தலையை அசைத்தனர்.
“இல்லயே… உங்கள பாத்தா எனக்கு சந்தேகமா இருக்கே…” என பார்வையால் அவர்கள் இருவரையும் ஆராய்ந்தான் இளா.
“டேய் மச்சான்.. உன் போலீஸ் செக்கப் எப்பிடி இருக்கும் னு இவனுங்க கிட்ட காமிடா… சொல்ல முடியாது, முட்டாய உடம்பு ஃபுல்லா பதுக்கி வச்சு இருந்தாலும் இருப்பானுக…” சேது.
“அதுவும் சரி தான்…” என்றபடி கவினை அழகாக தூக்கி தலைகீழாக திருப்பினான் இளா. கவினின் இரு கால்களையும் தனது கையில் இளா பிடித்து இருக்க… கவினின் தலை அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்தது.
“மாமா… சாலி… சாலி…” என இரு ஆட்காட்டி விரல்களையும் வாய்க்குள் திணித்து விசிலடித்து ஊஞ்சல் போல் ஆடிக் கொண்டிருந்தான் கவின்.
“டேய் மாப்ள… என்னடா உன் புள்ள இப்பிடி இருக்கான்? தலைகீழா தொங்கிட்டு இருக்குறப்ப ஜாலி னு விசிலடிச்சு ஆடிட்டு இருக்கான்..” இளா.
“அட அவன் அப்பிடியே அவுங்க அம்மா ஜெராக்ஸ்… அரசி எப்பிடி நிலாக்கு மட்டும் பயப்படுவாளோ.. அதே மாதிரி தான் இவனும்.. அவன் அத்தம்மாக்கு மட்டும் தான் கொஞ்சம் அடங்குவான்…” என சேது முகத்தை சுழித்தாலும் அவனின் குரலில் பெருமை மிளிர்ந்தது.
“அய்.. அப்ப என் புள்ளையும் நிலா மாதிரி பொறக்குமாடா?” என ஆவலாக கேட்டான் இளா.
“நிலா மாதிரி பொறந்தா பயப்பட வேணாம்.. உன்னய மாதிரி மட்டும் பொறக்க கூடாது…” சேது.
“ஏன்டா? எனக்கு என்ன கொறைச்சல்?” என முகத்தை சுழித்தபடி கரத்தில் இருந்த கவினை ஒரு குலுக்கு குலுக்கினான் இளா. அதை சற்றும் எதிர்பாராத கவின் தன் உடல் பகுதியில் மறைத்து வைத்து இருந்த புளிப்பு மிட்டாய் அனைத்தையும் தவற விட்டு திருட்டு முழி முழித்தான்.
அதைப் பார்த்த சேது, “என்னடா புளியம்மரத்துல இருந்து புளியம்பழம் கொட்டுற மாதிரி உன்னைய உலுக்குனதும் இவ்ளோ முட்டாய் கொட்டுது?” என ஆச்சரியப்பட்டுக் கொண்டே ஒன்று விடாமல் எடுத்து பதுக்கி கொண்டான்.
“இதே மாதிரி அபியையும் உலுக்குனா நிறைய கொட்டும் போல…” என அபியைப் பார்த்து இளா கூற.. “அய்யையோ மாமா… என்னைய விட்ருங்க… ப்ளீஸ் இத மட்டும் நாங்க சாப்பிட்டுக்கிறோம்..” எனக் கெஞ்சினான் அபி.
“சரி.. பொழச்சு போ.. மச்சானா வேற போய்ட்ட… உன் அக்காவ கட்டுன பாவத்துக்கு புளிப்பு முட்டாய லாம் விட்டுக்குடுக்குற மாதிரி இருக்கு…” இளா.
“நம்ம வாழ்க்கை இப்பிடித்தான்டா தியாகத்துல போய்ட்டு இருக்கு..” என வராத கண்ணீரை துடைத்துக் கொண்டான் சேது.
“இது இசைக்கு தெரியுமா ண்ணே?” என மிகப் பரிவுடன் கேட்டான் அபி.
“உன் ப்ளான் எனக்குத் தெளிவா தெரியுது… ஸோ.. மூடிட்டு உக்காரு… இல்லனா உனக்கு குச்சி முட்டாய் தர மாட்டேன்.. குச்சி முட்டாய் முக்கியமா? இல்ல இசையும் நிலாவும் முக்கியமா?” சேது.
“எனக்கு குச்சி முட்டாய் தான் முக்கியம்.. அவங்க ரெண்டும் பேரும் யாருன்னே எனக்குத் தெரியாது அண்ணா…” என சமத்தாக அவர்களுடன் மரத்தடியில் அமர்ந்து கொண்டான் அபி.
“அப்பிடித்தான் இருக்கனும்.. வில்லங்கம் ரெண்டும் கூடி பேசிட்டு வர்றதுக்குள்ள நாம முட்டாய தின்னு முடிச்சுறலாம்… எடு மச்சான்..” என இளாவைப் பார்த்து கை நீட்டினான் சேது.
“என்னது மாப்ள?” என அப்பாவியாக சேதுவைப் பார்த்தான் இளா.
“பைட் என்ட்ரில வாயில குச்சி முட்டாயோட என்டர் ஆனத நா பாத்துட்டேன். அந்த சண்டையிலயும் நீ முட்டாய முழுசா தின்னுட்டு குச்சிய மட்டும் வெளில துப்புனதையும் பாத்துட்டேன். ஸோ நடிக்காத… நீயா இப்ப எடுத்து தர்றியா இல்ல என் மவன விட்டு உன் பேண்ட் பாக்கெட்டுக்குள்ள கை விட்டு எடுக்க சொல்லவா?” சேது.
” இதெல்லாம் எப்ப டா பாத்த?” என்றபடி தனது பாக்கெட்டில் உள்ள அனைத்து குச்சி மிட்டாய்களயும் எடுத்து அவர்கள் முன் வைத்தான் இளா.
இளா எடுத்த வைத்த அடுத்த நொடி அனைத்தும் காணாமல் போனது. கவின், அபி, சேது என மூவரும் தங்கள் கைகளில் பாய்ந்து எடுத்துக் கொள்ள இளாவிற்கு ஒன்று மட்டும் தான் மிஞ்சியது.
“அத மட்டுமா பாத்தேன்.. சண்டைங்கிற பேருல நீங்க ரெண்டு பேரும் ரொமான்ஸ் பண்ணுனதயும் பாத்தோம்…” என குச்சி மிட்டாயை பிரித்து வாயில் வைத்தபடி கூறினான் சேது.
“ஹி…ஹி…ஹி….” என அசடு வழிந்தான் இளா.
“அது எப்பிடிடா டைப் டைப்பா லவ் பண்ற? க்ரவுண்ட்ல… அன்னக்கி நடு வீட்டுல… இன்னக்கி அந்த ரணகளத்துலயும் உனக்கு லவ்ஸ்… எப்பிடி மச்சான்?” என இளாவை தோளோடு தோளாக அணைத்துக் கொண்டான் சேது.
“அந்த அளவுக்கு நா நிலாவ காதலிக்கிறேன் டா… அவ எங்க இருந்தாலும் நா எங்க இருந்தாலும்.. எங்கள சுத்தி யார் இருந்தாலும் என்ன நடந்தாலும் ஏன் இந்த உலகமே சுத்துறத நிறுத்திட்டாலும் நா என் நிலாவ காதலிக்கிறத நிறுத்த மாட்டேன்…” என சற்று தொலைவில் நின்று இசையுடன் பேசிக் கொண்டிருக்கும் நிலாவை பார்த்தவாறு கூறினான் இளா.
“ப்பா…செம போ…” சேது.
“இதெல்லாம் கம்மி தான் மாப்ள… நா இன்னும் அதிகமா என் நிலாவ காதலிக்கனும்…” என ஆசையாக நிலாவை பார்வையால் வருடியபடி கூறினான் இளா.
“ஆக்சூவலி… உங்க ரெண்டு பேரையும் பாக்க எனக்கு பொறாமையா தான் இருக்கு.. பட் இருந்தாலும் லவ் யூ மச்சான்…நீங்க ரெண்டு பேரும் இத விட நிறைய சந்தோஷமா இருக்கனும்..” என இளாவின் கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டான் சேது.
“டேய்… வேணாம்டா மாப்ள…” என கன்னத்தை அழுந்த தேய்த்தவாறு சேதுவை பாவமாகப் பார்த்தான் இளா.
“லவ் யூ சோ மச் மச்சான்…” என இளாவின் மறுகன்னத்தில் முத்தமிட்டான் சேது.
“நோ…” இளா.
“பட் எனக்கு வேணுமே மச்சான்…” என மீண்டும் இளாவை முத்தமிட்டான் சேது.
“எனக்கும் வேணும்… எனக்கு இப்பிடி ஒரு மாமா கிடைச்சதுக்கு… லவ் யூ மாமா…” என அதுவரை அவர்கள் பேசுவதை அமைதியாக கேட்டபடி இருந்த அபி, இளாவை கட்டி அணைத்து முத்தமிட்டு வெட்கம் கொண்டான்.
“அய்யோ… இவன் என்னடா இப்பிடி வெக்கப்படுறான்…” என அபியைப் பார்த்து சிரித்தான் இளா.
“புதுசு ல மச்சான்.. அதான்.. போக போக சரி ஆகிருவான்….” சேது.
“அப்ப நா இல்லயா?” என சோகமாக கேட்டான் கவின்.
“உனக்கு இல்லாததா பட்டு…”என கவினிடம் தன் முகத்தை காட்டினான் இளா. உடனே இளாவின் முகத்தை தன் எச்சிலால் குளிப்பாட்டி எடுத்தான் கவின்.
இவர்கள் இங்கு பேசி சிரித்து கொட்டமடிக்க… அங்கு இசையும் நிலாவும் தீவிரமாக பேசிக் கொண்டிருந்தனர்.
“வீட்டுக்கு போன நீங்க இங்க எப்பிடி வந்தீங்க?” என இசையிடம் கேட்டாள் நிலா.
“அதுவா… போற வழியில ஒருத்தன் எங்களயே மொறச்சி பாத்துட்டு இருந்தான். நாங்க பாக்காத மாதிரி வீட்டுக்கு போய்ட்டு வீட்ட உள் பக்கமா பூட்டிட்டு பின் வழியா உன்னைய தேடி வந்தோம்… அவன பாத்ததுமே உன்னைய சுத்தி என்னமோ நடக்குது டவுட் ஆகிருச்சு. எதுக்கும் இருக்கட்டுமே னு தான் புளிப்பு மிட்டாய் லாம் எடுத்துட்டு வந்தேன்… இங்க வந்ததுனால தான் சண்டை காட்சியுடன் இணைந்த அழகிய காதல் காட்சியையும் பாக்க முடிஞ்சது…” என சிரித்தவாறு தன் முந்தானையில் தன் தோழிக்காக பத்திரபடுத்தி இருந்த புளிப்பு மிட்டாய்களை எடுத்து நிலாவிற்கு கொடுத்தாள் இசை.
“புருஷனும் பொண்டாட்டியும் சேந்து செமயா நடிக்க கத்துக்கிட்டீங்க..” என புன்னகையுடன் புளிப்பு மிட்டாயை சப்பினாள் நிலா.
“நீ மட்டும் தான் எங்க கிட்ட நடிப்பியா? நாங்களும் நடிப்போம்…” என நிலாவைப் பார்த்து சிரிப்புடன் கண்ணடித்தாள் இசை.
“நா க்ரவுண்ட்ல நடிச்சேன் னு உனக்கு எப்படித் தெரிஞ்சுச்சு இசை?” என ஆச்சரியத்தில் விழி விரித்தாள் நிலா.
“நா உன்னோட ப்ரண்ட் நிலா… உன் சுண்டு விரல அசைச்சாக் கூட எதுக்கு அசைக்கிற னு எனக்குத் தெரியும்…அதவிட இவனுங்கள யாரு அனுப்புனது னு எனக்குத் தெரியும்…” என தன் இரு கண்களையும் நிலாவைப் பார்த்து சிமிட்டினாள் இசை.
“யாரு? அந்த முரளி தான? அவன தான நீங்க ரெண்டு பேரும் வழியில பாத்தீங்க?” நிலா.
“அவனே தான் நிலா… எங்க ரெண்டு பேரையும் பாத்ததும் அவன் மூஞ்சி எப்பிடி போனுச்சு தெரியுமா?” இசை.
“அவன் வருவான் னு தான் எதிர்பாத்தேன். ஆனா அவன், ஆளுங்கள மட்டும் அனுப்பிட்டு இருக்கான்…” நிலா.
“விடு நிலா… ஒரு நாள் அவனே உன் கிட்ட சிக்குவான்.. அப்ப அவன் மூஞ்சிய அடிச்சு பேத்துரு…” இசை.
“அதுக்காகத் தான் வெயிட் பண்றேன்…”என கூறியபடி இசையின் கை பிடித்து தங்கள் கணவன்மார்கள் இருந்த மரத்தடியை நோக்கி நடந்தாள் நிலா.
அங்கு, நிலாவிற்கு வேலை வைக்காமல் முரளியின் முகத்தை அடித்து உடைத்து இருந்தான் துரை.
(சேரநிலா மிளிர்வாள்…)
-செல்லம்மாள்பாரதி
No comments yet.