” அவரு ஏன் அப்படி சொன்னாரு ! ” என்று கேள்வி நிலாலினியின் மனதை குடைந்து எடுத்தது.
” மித்தவங்களுக்கு தான் நான் மாறன். உங்களுக்கு நான் நிழல் ” என்ற அவன் வார்த்தைகள் மீண்டும் மீண்டும் நிலாலினி காதில் ரீங்காரம் மிட்டுக் கொண்டு இருந்தது.
கோவிலில் இருந்து திரும்பி ஹோட்டலுக்கு வந்தவள் தனது சூட் ரூம் ஸ்டே இன்றே கடைசி என்று பாத் டப்பில் ரோஸ் இதழ்கள் தூவிய நீரின் இடையே ஓய்வெடுத்துக் கொண்டு இருந்தவளின் மூலையும் கொஞ்சம் கொஞ்சமாக மாறனின் நிழல்களை மறந்து ஓய்வு பெற்றது.
மாலை நேரம் போல் நிலாலினி ஹோட்டலில் இருந்து செக் அவுட் செய்ய போக,
அங்கு ரிசப்ஷனுக்கு அருகில் கேமராக்களையும் மைக்கைகளையும் தூக்கிக் கொண்டு நின்றிருந்த பத்திரிக்கையாளர்கள் எல்லாம் நிலாலினியை பார்த்தவுடன், ” ஹே… இது அவங்க தான ! “, ” ஆமா… இது அந்த பொண்ணு தான். வாங்க வாங்க ” என்று எல்லோரும் இனிப்பை மொய்க்கும் ஈ போல நிலாலினியை சுற்றி கொண்டனர்.
” மேம்… நீங்க தான் மாறன் சாரோட லவ்வரா ! “,
” தி கிரேட் பிசினஸ் மேக்னெட் மிஸ்டர். மாறனும் நீங்களும் கூடிய சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்க போறதா தகவல் வந்ததே அது உண்மையா ? “,
” இது வரைக்கும் மாறன் சார் லைஃப்ல எந்த பொண்ணுமே வந்தது இல்லைன்னு சொல்லுறாங்க. அப்போ நீங்க தான் அவரோட ஃபர்ஸ்ட் லவ்வா ! “
” இன்னைக்கு காலைல கூட நீங்களும் சாரும் ஒரு கல்யாணத்தை ஜோடியா பண்ணி வெச்சீங்கலாமே அடுத்து உங்க கல்யாணம் தானா மேடம் ! சொல்லுங்க மேடம் ” என்று பலரும் பலவாறு கேள்விகளை அடுக்கிக் கொண்டே போக, நிலாலினிக்கு என்ன பதில் சொல்லுவது என்றே தெரிய வில்லை.
மற்றவர்களிடம் இது எல்லாம் நடிப்பு என்றா சொல்ல முடியும் ! அப்படி சொன்னாலும் கூட அவளுடன் சேர்ந்து அவளுக்காக உதவிய மாறனின் நிலைமையும் அல்லவா மோசம் ஆகி விடும் !
நிலாலினிக்கு முதலிலே மாறன் இவ்வளவு பெரிய ஆள் என்று தெரிந்து இருந்தால் அவன் பக்கமே உதவி என்று சென்று இருக்க மாட்டாள்.
என்றும் விழிப்புணர்வுடனே இருக்கும் நிலாலினி அன்று இருந்த மனநிலைக்கு யாராவதுடன் டான்ஸ் பண்ணினால் போதும் என்று தான் இருந்தாள். பின்பு அவனுடனே இப்படி கல்யாணத்திற்கு ஜோடியாக செல்ல வேண்டிய நிலை வரும் அதனையே வால் பிடித்துக் கொண்டு இப்படி பத்திரிக்கையாளர்கள் எல்லாம் வருவார்கள் என்று நிலாலினி என்ன கனவா கண்டாள் !
” சொல்லுங்க மேடம்… சொல்லுங்க… ” என்று நீட்டிய மைக்கை அவள் முகத்தில் அடிக்காத குறையாக இருந்த பத்திரிக்கையாளர்களின் செயல் நிலாலினியை தன்னர்ச்சையாக பின்னால் நகர செய்தது.
” எங்காவது ஓடி விடுலாமா ! ” என்று நிலாலினியின் மனதில் முதல் முறையாக ஒரு கோழை தனமான முடிவு எட்டிப் பார்க்க, அதற்கு நான் ஒத்துழைக்க மாட்டேன் என்று அவள் கால்கள் வலுவிழந்தது.
பத்திரிக்கையாளர்களின் நச்சரிப்பில் பதற்றம் ஆகிய நிலாவுக்கு மூச்சு முட்டுவது போல் ஆக தளர்ந்து விழ போனவளை விழுக விடாமல் தன்னுடன் சேர்த்து பிடித்துக் கொண்டது ஒரு உருவம்.
வேறு யாரு ! நம் நிலாவின் நிழல் தான்.
அங்கு தன் பாடிகாட்ஸ் படை சூழ வந்த மாறன் பத்திரிக்கையாளர்களுக்கும் அவளுக்கும் இடையில் வந்து அரணாக அவளை மறைத்து நின்று விழுக போனவளை தன் மீதே சாய்த்து பிடித்து இருந்தான்.
பயத்தில் மூச்சுவாங்க நின்று இருந்த நிலாலினியின் காதை பொற்றி தன்னை பார்க்க செய்தவன், ” காம் டவுன் நிலா… காம் டவுன்… இட்ஸ் ஆல்ரைட்… ஐ வில் டேக் கேர் ஆப் இட் ஆல்… யூ காம் டவுன்… ( Calm down Nilaa… Calm down… It’s alright… I will take care of it all… You calm down ) ” எங்க நிலா அவன் மீதே சரிந்து விழுந்தாள்.
அதற்குள் அவனின் பாடிகாட்ஸ்களும் செக்யூரிட்டிகளும் சேர்ந்து அந்த பத்திரிக்கையாளர்களை எல்லாம் அந்த இடத்தை விட்டு அகற்றி இருந்தனர். அவர்களின் கேமராகளையும் அபகரித்து விட்டனர்.
சண்டைக்கு நின்ற பத்திரிக்கையாளர்களின் முன் ஹைட்டாக வாட்ட சாட்டமாக கோட் சூட்டில் வந்து நின்ற மாறனின் அத்தை மகனும் இந்த ஹோட்டலின் சிஇஓயும் ஆன மிதுன், ” எங்க 5 ஸ்டார் ஹோட்டல் உள்ளே நுழைஞ்சு எங்க கெஸ்ட்ட அவங்க பெர்மிஷன் இல்லாம அத்துமீறி ஃபோட்டோ எடுத்ததுக்காக உங்க எல்லார் மேலையும் லீகல்லா ஆக்க்ஷன் எடுக்கப் போறோம்… இன்னும் டென் மினிட்ஸ்ல போலீஸ் இங்க வந்துருவாங்க. யார் யாருக்கு உங்க கேமரா வேணுமோ இருந்து அவங்க கிட்ட வாங்கிக்கோங்க ” என்று சொன்னதும்,
போலீஸில் மாட்டிக் கொண்டால் இவர்களை எதிர்த்து நம் கம்பெனி கூட நமக்காக சாதக நிற்க மாட்டார்கள். எப்படியும் இவர்கள் கம்பெனி மேல் லீகல் ஆக்க்ஷன் எடுத்தால் இதற்கு கம்பெனி பொறுப்பேற்காது அந்த பத்திரிக்கையாளர்கள் மேல் தான் முழு தவறும் என்று சொல்லி நம்மை சிக்க வைப்பது மட்டும் அல்லாது நம் வயிற்று பிழைப்பிற்கு இருக்கும் வேலையும் பரி போய் விடும் என்று பயந்த எல்லோரும் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓடி விட்டனர்.
ஒரே ஒரு பெண் மட்டும் போகாமல் கையை பிசைந்துக் கொண்டு நின்று இருந்தாள். ஹோட்டல் வாசலில் நின்று இருந்த மிதுன் உள்ளே செல்ல எத்தனிக்க, ” சார்… ” என்று அந்த பெண்ணின் குரல் அவனை தடுத்து நிறுத்தியது.
அவளை திரும்பி பார்த்தவன், ” என்ன வேணும் ? ” எங்க,
அவள், ” என் கேமரா… “
மிதுன், ” அதான் போலீஸ் கிட்ட சொல்லி வாங்கிக்க சொல்லிட்டேன்ல ! “
” சார் போலீஸ் எல்லாம் வேண்டாம் சார்… நீங்க ஃபோட்டோஸ் எல்லாம் வேணா டெலிட் பண்ணிக்கீங்க சார். எனக்கு என் கேமரா மட்டும் திருப்பி கொடுத்திருங்க சார். நான் இப்படியே போய்டுற ” என்று அவள் கெஞ்சினாள்.
” இப்போ நான் கேமராவ திரும்பிக் கொடுத்தா நீ திரும்பியும் இதே தப்பத்தான் பண்ணுவ. கேமரா எல்லாம் தர முடியாது ” என்று சொல்லிவிட்டு மிதுன் திரும்பி சொல்லவும்,
அவன் கை பிடித்து நிறுத்தியவள், ” சார் சார்… பிளீஸ் சார்… கேமரா மட்டும் திருப்பி கொடுத்திருங்க சார். நான் கண்டிப்பா இனி மேல் இந்த மாதிரி பண்ண மாட்ட ” எங்க,
” உன்ன எப்படி நான் நம்புறது ? ” என்ற மிதுனின் கேள்விக்கு,
” நான்… நான்… நான் வேணா பிங்கி ப்ராமிஸ் ” என்றாள் அவள்.
” பிங்கி ப்ராமிஸா ! ” என்ற மிதுன் அப்பொழுது தான் அவளை முழுவதுமாக நன்றாக பார்த்தான்.
அவள் அணிந்து இருந்த பிங்க் நிற சுடிதார் அவளுக்கு கொஞ்சம் பெரியதாகவே இருந்தது. அவளின் தலைமுடி கூட பார்க்க அதே ஒட்டவைத்த டோப்பா செட் போல் தான் இருந்தது. அவள் கழுத்தில் தொங்கி இருந்த ஐடி கார்ட்டில் இருந்த முகம் இவளது போல் தான் இருந்தது ஆனால் இவளுடையது அல்ல. அவளின் பால் வடியும் முகமும் முட்டை முட்டை கண்ணும் அவளின் பிங்கி ப்ராமிஸ் என்ற பேசும் வைத்து இவள் இன்னும் சிறு பெண் என்று மிதுனின் மூலை சிஐடி போல் சரியாக கண்டு பிடித்து விட்டது.
அவளின் ஐடி கார்டை கையில் எடுத்தவன், ” உன் பேரு என்ன ? ” எங்க, சரியாக ஐடி கார்ட்டில் இருக்கும் நிரஞ்சனா என்ற பெயரையே சொன்னாள் அவள்.
மிதுன், ” உன் டேட் ஆஃப் பர்த் ? ”
அதுவும் அந்த ஐடி கார்ட்டில் இருந்தது போலவே சொன்னாள்.
” அப்போ… உனக்கு வயசு 24 ஆச்சா ? ” என்று மிதுன் அவளை உற்றுப் பார்க்க, ஆமா ஆமா என்று வேகமாக தலையை ஆட்டினாள் அவள்.
” ஃப்ராட்டு… என்கிட்டையே பொய் சொல்லுறியா ? ” என்று மனதில் நினைத்தவன், ” உன் கேமராவ ஃபுல்லா செக் பண்ணிட்டு அப்பறம் தான் தர முடியும். இவர் கிட்ட உன் நம்பர கொடுத்துட்டு போ. அப்பறம் கூப்பிடுவோம்… ” என்று பக்கத்தில் இருந்த பாடிகாட்டை கைக் காட்டி விட்டு நிற்காமல் உள்ளே சென்று விட்டான் மிதுன்.
மாறனுக்கு பல பிசினஸ்கள் இருப்பதால் இந்த ஹோட்டலை மிதுனின் பொறுப்பில் தான் விட்டு இருக்கிறான். இங்கு மாறனுக்கு அடுத்து எல்லாமே மிதுன் தான். வயது ஜஸ்ட் 26. மாறன் அளவிற்கு அழகும் அறிவும் இருந்தாலும், அவனின் அம்மா அப்பா தவம் இருந்து பல வருடங்கள் கழித்து பெற்று எடுத்த ஒற்றை செல்வம் என்பதால் வீட்டில் செல்லம். கொஞ்சம் விளையாட்டு தனமும் இப்பொழுது இருக்கும் சொத்துக்களே போதும் என வாழும் கொள்கை உடையவன். பெண்கள் மயங்கும் மஞ்சள் நிறத்து அழகன் மீசை தாடி வளர்க்கும் பழக்கம் இல்லாததினால் பார்க்க கொரியன் ஹீரோகள் போலவே இருப்பான். பல பெண்களுக்கு இவன் மேல் ஈர்ப்பு இருந்தாலும், மிதுனின் கவனத்தை ஈர்த்தவர்கள் யாரும் இல்லை.
இங்கு பதற்றத்தில் தலை சுற்றி அவன் மேலே சரிந்த நிலாலினியை தூக்கிக் கொண்டு அவனின் பெர்சனல் ரூமுக்கு சென்று இருந்தான் மாறன்.
அவன் ஆர்டர் செய்து கொடுத்த ஆரஞ்சு ஜூசை குடித்து கொஞ்சம் தெம்பானவள், ” சாரி சார்… என்னால தான எல்லாம். எனக்கு ஹெல்ப் பண்ண வந்து இப்போ உங்களுக்கு சேர்த்து ப்ராப்ளம் ” என்று புலம்ப மாறன் அதற்கு எதுவும் சொல்லாமல் அமைதியாகவே தான் இருந்தான்.
கொஞ்ச நேரம் தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்த நிலாலினி, ” நானே இத சரி பண்ணிடுற. நானே போய் பிரஸ்ல எல்லா உண்மையும் சொல்லிடுற. உங்களுக்கு எந்த ப்ராப்ளமும் வராது ” என்று எழுந்து செல்ல,
அவள் கை பிடித்து தடுத்து நிறுத்திய நிலாவின் நிழல் அவன், ” எனக்கு இதுல எந்த ப்ராப்ளமும் இல்ல நிலா… லெட்ஸ் பி லவ்வர்ஸ்… ( Let’s be lovers… ) ” என்றான்.
நிலாவின் நிழல் தொடரும்…
____________________________
கதையை படித்து விட்டு பிடித்து இருந்தால் உங்கள் கருத்துக்களை என்னுடன் கமெண்டில் பகிர்ந்து கொள்ளுங்கள் மக்காஸ்…
– தமிழ் நிலா
No comments yet.