இந்திரா அப்படி சொல்லி சென்ற பிறகு தனியாக நின்று இருந்த நிலாலினி, ” கம்முன்னு நாளைக்கு கல்யாணத்துக்கு போகாம இருந்தடலாமா ? ” என்று யோசிக்க,
அப்படி மட்டும் போகவில்லை என்றால் அதை வைத்தே பெரிய பிரச்சனை செய்து இன்னும் பல புரலிகளை கிளப்பி விட்டுவிடுவார்கள் என்று நிலாலினி வேறு வழயில்லாமல் மீண்டும் அவனிடமே உதவி கேட்கலாமா என்று யோசிக்க,
டான்ஸ் பார்ட்னரா கூப்பிடதுக்கு அவன் வந்தான் சரி… இப்போ லைஃப் பார்ட்னரா நடிக்க கூப்பிட்டா அவன் வருவானா ! ஆளு வேற பார்க்க ரொம்ப ஹன்ட்சம்மா இருக்கான். இப்போ நான் போய் அவன் கிட்ட என் லவ்வரா நடிங்கன்னு கேட்டா, நான் அவன நெருங்கதான் இப்படி எல்லாம் பண்ணுறேன்னு தப்பா நினைச்சுக்க மாட்டானா ! என்று நிலாலினி உள்ளுக்குள் தன் தயக்கத்தை கேள்வியாய் கேட்க,
அவள் மனமோ, ” அவன் யாருன்னே நமக்கு தெரியாது. அவன அகைன் மீட் பண்ணுவோமானும் தெரியாது. அவன் என்ன நினைச்சா தான் என்ன ?
இதோ பாரு… நமக்கு இப்போ காரியம் ஆகனும். அதனால டிரை பண்ணி பாக்கலாம். இதுல எதும் தப்பு இல்லை ” என்று சொன்னது.
சரி என்று நிலாலினி அவனிடம் வந்தவள், அவன் யாரிடமோ பேசிக் கொண்டு இருக்க, அவனுக்கு பின்னாலே இரண்டு அடிகள் இடைவெளி விட்டு நிலாலினி தயங்கி தயங்கி நின்றுக் கொண்டிருந்தாள்.
அவன் அவர்களிடம் பேசி விட்டு செல்ல திரும்பவும் நிலாலினி, ” ஒரு நிமிசம்… உங்க கிட்ட நான் ஒன்னு கேக்கனும்… ” எங்க,
என்ன என்பது போல் அவன் பார்க்கவும் நிலாலினி, ” அது… அது… நம்ம டான்ஸ் பண்ணினது வெச்சு என் காலேஜ் மேட்ஸ் எல்லாம் நீங்க என்… லவ்வருன்னு நினச்சுட்டாங்க… அதனால… நாளைக்கு இவங்க முகூர்த்தத்தில நீங்க… என் பார்ட்னரா நிக்க முடியுமா ? ” என்று தயங்கி தயங்கி கேட்டவள் கடைசில் மட்டும் தைரியத்தை வரவழைத்து அவனை நேர்க்கொண்டு பார்த்துக் கேட்டிட,
” வாட் ? ” என்று அவன் கொடுத்த ஷாக்கிங் ரியாக்ஷனிலே, அவன் இதற்கு சம்மதிக்க மாட்டான் என்று நிலாலினிக்கு உறுதி ஆகி விட்டது.
அவனிடம், ” சாரி… ” என்று விட்டு ஓடி விட்டாள் நிலாலினி.
ஆனால் அவனோ… நிலா அப்படி கேட்டவும் தான் கேட்டது உண்மையா ! என்று நம்ப முடியாத அதிர்ச்சியில் தான் அந்த வாட் என்பதை கேட்டு இருந்தான். நிலாலினி சாரி கேட்டு ஓடிட அது கனவு அல்ல நிஜம் தான் என்று புரிந்திட, பல பிசினஸ் டீலிங்யில் கிடைக்காத சந்தோஷம் அவள் வார்த்தைகளில் கிடைத்திட அவன் துள்ளி குதிக்காத குறை தான். ஆனால் என்ன ! அவன் அவளிடம் அதற்கு சம்மதம் என்று சொல்லத்தான் வாய்ப்பு கொடுக்காமல் நிலாலினி அங்கிருந்து சென்று விட்டாள்.
அடுத்த நாள் அதிகாலை சூரியனின் பொன் மஞ்சள் கீற்று அந்த கோபுரத்தில் பட்டு தெறிக்க, அதற்கு போட்டியாக மஞ்சள் மற்றும் பொன் நிறம் போட்டி போட்டும் டிசைனில் வானத்து நீலத்தை தொட்டு ஓரசிய பார்டரில் பொன் நிற மயில் தொகைகள் நெய்யப்பட்ட அவளின் பட்டு புடவையின் மடிப்புகளில் செதுக்கிய தேவ லோகத்து மங்கையர்களின் சிலைகளே தோற்றுப் போகும் அளவிற்கு அழகாய் வந்தாள் நிலாலினி.
அவள் காதில் தொங்கும் பெரிய ஜிமிக்கியும், காதில் இருந்து பின்னந்தலை வரை நீண்டு தொங்கும் இரண்டு அடுக்கு மாட்டலும், அந்த கோபுரங்களை செதுக்கி வடித்த அட்டிகையும் ஆரமும், கையில் பொன் நிற மயில் மேல் வெள்ளை கற்கள் பதித்த பெரிய வலைவிலும், இஞ்சி இடுப்பில் மெல்லிய இரண்டு பொன் கொடிகள் தழுவி பின்னல் இட்டது போல் ஒட்டியாணமும், ஜல் ஜல் ஜல் ஓசையில்லாது கணுக்காலை சுற்றி கட்டிய பட்டை கொழுசுமும், இது நேற்று பார்த்த மாடல் அழகி நிலாலினி இல்லை, மண்ணின் மணம் மாறா தமிழ் அழகி நிலாலினி என்று தான் சொல்ல தோன்றும்.
மன்னவன் வருவான் மல்லிகை சூடுவான் என்று காத்திருந்ததோ என்னவோ ! ஆயிரம் நூலிழை எடுத்து பின்னப்பட்ட அவளின் நீர் வீழ்ச்சி கூந்தல் மலர்கள் எதுவும் சூடாமல் வெருமான மினுக்கிட்டது.
இந்திராவின் குலதெய்வமாக அந்த மீனாட்சி அம்மன் கோவிலை நோக்கி மற்றவர்கள் எல்லாம் தங்கள் ஜோடியுடன் குடும்பத்துடன் நண்பர்களுடன் என்று வர, நிலாலினி மட்டும் தனியாக வந்து சேர்ந்தாள் திலிப் இந்திரா முகூர்த்தத்திற்கு.
கோவில் வாசல் முன்பு நின்று அந்த கோபுரத்தை அண்ணார்ந்து பார்த்தவள் மனத்தில் எப்படியாவது இன்றைக்கு ஒரு நாள் மட்டும் சமாளித்து விட வேண்டும்… என்று நினைத்துக் கொண்டிருக்க,
அவளுக்கு பின்னால் நின்று முதல் முறை அவளை புடவையில் நேரில் பார்த்து அவள் அழகில் மலைத்து போய் மூச்சு விட மறந்து நின்று இருந்தான் நிலாவின் நிழல் அவன்…
நிலாலினி எது வந்தாலும் சமாளிப்போம் என்று பொருமூச்சு ஒன்றை எடுத்து விட்டு கோவிலுக்குள் செல்ல முற்பட அதற்குள் அவளை வந்து பிடித்து விட்டாள் அவளின் காலேஜ் மேட் ஒருத்தி,
” ஹே நிலா… ஹௌ ஆர் யூ ? பார்த்தே ரொம்ப நாள் ஆச்சு… “, எங்க
அவளை பார்த்ததும் கொஞ்சம் சந்தோஷமும் சிரிப்பு பிறந்தது நிலாலினி முகத்தில். ஏனென்றால் காலேஜில் படிக்கும் பொழுது அவள் க்ளாஸிலேயே பெரிய இடத்து பெண்ணாக இருந்தாலும் துளியில் தலைகனம் இல்லாமல் இருந்த ஒரே ஒரு ஜீவன் இவள் தான். அது மட்டும் அல்ல நிலாலினி விரும்பி போட்டி போட ஆசைப்படும் ஆப்போனென்ட்டும் கூட,
நிலாலினி யாரையும் எளிதாக தன் ஆப்போனென்ட்டாக கருதி விட மாட்டாள். அதற்கு அவர்களிடம் நிலாலினியிடம் போட்டி போடும் அளவிற்கு தகுதி இருக்க வேண்டும். அந்த அளவிற்கு திறமையும் நேர்மையும் பண்பும் கொண்டு நிலா போட்டி போட்ட ஆசை கொள்ளும் தகுதியாக ஆப்போனென்ட் இவள் தான். பெயர் மாலினி…
” ஐ’ம் ஃபைன் டா… நீ எப்படி இருக்க மாலினி ! “, என்று நிலாலினி சிரித்த முகத்துடன் கேட்க,
” அத நீயே பார்த்து சொல்லு பார்க்கலாம் ” என்று அவள் கொஞ்சம் தள்ளி நின்று காட்ட,
” யூ ஆர் சோ… கார்ஜஸ்… ” என்று நிலா அவள் அழகை பாராட்டாவும்,
” ப்ச்… அவ்வளோ தானா ! நல்லா பாரு நிலா… ” என்று அவள் தன் நகைகளை சரி செய்வது போல் செய்து காட்ட,
நிலாலினியோ, ” ஹே… நீ எக்ஸ்ட்டிரா கோர்ஸ் பண்ணியே… அது வெச்சு இத நீயே டிசைன் பண்ணியா ! சூப்பர் மாலினி… ” என்றதும்,
மாலினி, ” உக்கும்… கிலிஞ்சது போ… ஜூவல்ஸ் டிசைன் பார்த்த சரி என் கழுத்துல தாலி இருக்கிறத பார்த்தியா நீ… ” என்று கேட்டாள்.
அப்பொழுது தான் அவள் ஜூவல்ஸ்க்கு நடுவில் தொங்கிக் கொண்டிருக்கும் தாலியை பார்த்தாள். “ஹா… ” என்று நிலாலினி வாய் பிளந்து ஆட்ச்சரியமாக பார்க்கவும்,
கொஞ்சம் வெட்கம் கலந்து சிரித்த மாலினி, ” மேரேஜ் ஆகிடுச்சு… அதுவும் நான் ஆசப்பட்டவர் கூடையே… ” என்றாள்.
” ரியலி !!! ஐ’ம் சொ ஹேப்பி ஃபோர் யூ… ” என்று நிலா அவளை இரு கைகளையும் பிடித்து துள்ள,
மாலினி, ” நீ பார்த்து இருக்க தானா அவர ! நம்ம அன்னைக்கு மும்பைக்கு காம்பிடிஷன் போன அப்போ காட்டினேன்ல ! அவரே தான்… லவ் மேரேஜ் நிலா… வீட்டுல ஒத்துக்கல வேற பக்கம் பார்த்தாங்க… அதான் திடிருன்னு இப்படி ஓட்டி போய் கல்யாணம் பண்ண வேண்டியதா போச்சு… யாரையும் கூப்பிட முடியல ” எங்க,
நிலாலினி, ” புரியுது மாலினி… ” என்றதும்,
மாலினி, ” ஆமா… நீயும் இப்போ லவ் பண்ணுறியாமே ! நேத்து என்கேஜீமென்ட் பார்ட்டிக்கு அவரு கூட டான்ஸ் எல்லாம் பண்ணுனியாமா ! குரூப்ல உங்க இரண்டு பேரோட ஃபோட்டோ கூட போட்டு இருந்தாங்க. இப்போ எங்க அவரு ! இன்ட்ரொட்யூஸ் பண்ணு… ” என்று அவள் ஆவலாக கேட்க, நிலாலினிக்கு தான் என்ன பதில் சொல்வது என்றே தெரியில்லை.
பேசாமல் இவளிடம் உண்மையை சொல்லி விடலாம் உள்ளே சென்று எதாவது மற்றவர்களால் வம்புகள் வந்தால் இவள் நமக்கு எதாவது வகையில் உதவி செய்வாள் என்று நிலாலினி மாலினியிடம் உண்மையை சொல்ல வாய் எடுக்க,
அதற்குள் அங்கு ஈக்கள் போல் சுற்றி வரும் சில பிசினஸ் மேன்களை அவன் அருகில் விடாமல் தடுக்கும் தன் பாடிகாட்ஸ் படை சூழ வந்தான் அவன். நேற்று அவளுடன் டான்ஸ் பண்ணிய அதே பிளாக் கோட் தான். ஆனால் இன்று ஒயிட் கலரில் மில்ட்டான ஒயிட் அண்ட் கோல்டன் கலர் கலந்து கிளாசிக்காக டிசைன் செய்யப் பட்ட ஜோத்புரி சூட் அழகாக அணிந்து கண்ணில் ப்ளூ ஷேட் கூலருடன் மாஸாக கிளாஸாக வந்துக் கொண்டிருந்தான்.

அவனை பார்த்ததும் மாலினி, ” ஹே… உன் ஆளு வந்துட்டாரு பா… ” என்று பேச வாய் திறந்த நிலாலினிவை விட்டுவிட்டு அவன் அருகில் செல்லவும்,
அவன் பாடிகாட்ஸ் மாலினியை தடுக்க நிறுத்தவும் மாலினி, ” அட வழி விடுங்க நான் ஒன்னும் தீவிரவாதி எல்லாம் இல்லை… நான் அவருட லவ்வர் நிலா ஓட ஃப்ரெண்ட்… ” எங்க,
அதை கேட்டு அவனை சுற்றி இருந்த மற்றவர்களுக்கு எல்லாம் ” எதெய்… ” என்பது போல் தான் இருந்தது, ஆனால் அதை கேட்டு அவனின் கண்ணிலும் உதட்டிலும் சிறு புன்னகை பூத்தது.
அவன் தன் பாட்காட்ஸ்க்கு அவளை விட சொல்லி சைகை செய்ய, ” ஹாய் ப்ரோ… நான் நிலாலினியோட ஃப்ரெண்ட் மாலினி… ” என்று அவளை அறிமுகப்படுத்திக் கொண்டாள்.
அதற்கு அவன் லேசாக தலை அசைத்தானோ தவிற வேறு எதுவும் பதில் சொல்ல வில்லை. மாலினி தான் அவன் நடக்க நடக்க அவனிடம் நிலாவை பற்றி பேசிக் கொண்டே வந்தாள்.
நிலாலினியோ மாலினி அவனிடம் போய் பேசியதிற்கு அவன் என்ன சொல்ல போறானோ ! என்று பயத்தில் நின்று கொண்டிருக்க, அவன் நேராக கோவில் வாசல் அருகே நிற்கும் நிலாலினியிடம் வந்தவன், அவளை ஒரு சைடாக ஹக் செய்து, ” என்ன உங்க ஃப்ரெண்ட்ஸ் எல்லாருகிட்டையும் நான் தான் உங்க லவ்வருன்னு சொல்லிட்டீங்க போல ! “, என்று அவள் காதோரம் கிசுகிசுக்க,
நிலாலினி, ” சாரி… ” என்று கண்ணை சுருக்கி கெஞ்சுதலாய் சொல்ல,
அவனோ, ” எனக்கு ஓகே தான் ” என்றான்.
” ஆங்… ” என்று அவனை புரியாமல் பார்த்தாள் நிலாலினி.
அவன் தன் கூலர் கிளாஸை கழட்டி விட்டு, ” நேத்து என்கிட்ட ஹெல்ப் கேட்டிங்கள ! ” என்று கேட்கவும்,
” ஆமா… ” என்ற நிலாலினியின் கண்களை ஊடுருவி, ” எனக்கு ஓகே… ” என்றான்.
அவன் தன் லவ்வராக நடிக்க சம்மதம் தெரிவித்ததில் நிலாலினிக்கு மனதில் இருந்த பரமே இறங்கி விட்டது.
அவர்களுக்கு பின்னிருந்து வந்த, ” மாறன் சார்… ” என்று அழைப்புக்கு திரும்பினான் அவன்…
நிலாவின் நிழல் தொடரும்…
____________________________
கதையை படித்து விட்டு பிளாக் கோட் தான் நிழல் என்று நினைத்த அனைவருக்கும் இது எப்படி ஷாக்கிங் ஆ இருக்கா !!! அவன் மாறன்…
ஷாக்கில் கமெண்ட் செய்ய மறந்து விடாதீர்கள்…
– தமிழ் நிலா
No comments yet.