நிலாவின் நிழல் – 04

தமிழ் நிலா | 19 May 2026 | Share

இந்திரா பிளான் பண்ணி தான் எல்லாரும் நிலாவை தவறாக பேச வேண்டும் என்று இப்படி எல்லாம் செய்திருக்கிறாள் என்று நிலாலினிக்கு புரிந்து விட்டது. 

அதுவும் திலிப், இன்னும் உனக்கு என் மேல விருப்பம் இருக்கா என்கிற கேள்வியே இந்திரா பிளான் சரியாக வொர்க் அவுட் ஆகி விட்டதை எடுத்து காட்டியது. 

திலிப்பிடம், ” நான் ஆக்சுவல்லி டிரஸ் கோர்ட் சரியா தெரியாம மாத்தி போட்டுட்டு வந்துட்ட. இரு நான் போய் இந்தரா கிட்ட அவ அரேஞ்ச் பண்ண பிளாக் டிரஸ் எக்ஸ்டிரா இருக்கான்னு கேட்டு சேன்ஞ் பண்ணிடுற ” என்று அங்கிருந்து விலக போன நிலாலினியை வழி மறித்து அவளுக்கு நெருமாக நின்றான் திலிப்.

நிலாலினி என்ன என்பது போல் பார்க்க திலிப், ” நிலா… அது… அது இனி… எக்ஸ்டிரா பிளாக் டிரஸ் இல்லை. நீ இப்படியே இரு. ஒன்னும் பிராப்ளம் இல்லை “, எங்க

நிலாலினி, ” ப்ச்… அது எப்படி பிராப்ளம் இல்லைன்னு சொல்லுவ ! எல்லாரும் எதோ நான் இந்திராவுக்கு போட்டியா தான் வந்துருக்க உன்ன மயக்க பாக்குறேன்னு சொல்லுவாங்க. பிளாக் டிரஸ் இல்லைன்னா நான் ரூமுக்கு போய் வேற கலர்ல ஆது டிரஸ் மாத்திட்டு வர. இரு ” என்று அவனை தாண்டி செல்ல,

திலிப்பின் மனதில் சொல்ல முடியாத ஏக்கம், ” எல்லா சான்ஸ்யும் மிஸ் ஆகிருச்சு. இதுவே கடைசியா இருந்தாலும், லெட்ஸ் கிராப் இட். லாஸ்ட்டா ஒரே ஒரு டைம் மட்டும் ” என்று அவன் மனம் ஏக்கத்தில் துடிக்க, நிலாலினி அவனை தாண்டி செல்லவும் அவள் கையை பிடித்து நிறுத்தினான்.

திலிப்புக்கு எந்நேரமும் கை கோர்த்தே இருக்க வேண்டும் என்று ஆசை. அவன் நிலாலினி பின் சுற்றி திரிந்த பொழுதும் சரி அவள் அவனின் காதலுக்கு சம்மதம் சொன்ன பொழுதும் சரி, நிலாலினி கை பிடிக்க ஏன்! கையை தொட கூட விட்டது கிடையாது. ஆனால் இன்று இந்திரா அவன் கை பிடித்துக் கொண்டே தான் சுற்றி திரிகிறாள் அதுவும் அவன் விருப்பப்பட்ட படியே. திலிப்புக்கு இந்திரா காதல் தேவன் கொடுத்த வரம் ஆகதான் தெரிகிறாள். அதனால் தான் இப்பொழுது கல்யாணம் வரை வந்து நிற்கிறது. 

ஆனாலும் திலிப்புக்குள் ஏனோ நிலா அவனை கடந்து செல்ல அவளை போக விட முடியவில்லை. இந்திரா அவளாக திலிப்பை தேடி வந்தவள், ஆனால் நிலாலினி திலிப்பாக தேடி காதலித்தவள்.

திலிப்பின் மனமோ, ” ஏன் அவங்க சொன்னது எல்லாம் உண்மையா இருந்திட கூடாது ! நிலாவுக்கு என் மேல் இன்னும் ஆசை இருந்திட கூடாதா ! அவள் இப்பொழுது சரி என்று சொன்னால் கூட எல்லாத்தை விட்டுவிட்டு என் வாழ்க்கைக்கு அவள் மட்டுமே போதும் என்று இருந்து விடலாமே ” என்று தான் தவித்தது. 

நிலாலினியின் கையை பிடித்து நிறுத்திய திலிப், ” நிலா… நீ டிரஸ் மாத்த வேண்டாம். இப்போ இருக்க மாதிரியே… இப்படியே இருந்துடு. உனக்கு ஒயிட் அழகா இருக்கு. ரொம்ப… எனக்கு நீ ஒயிட்ல இருக்குறது தான் பிடிச்சு இருக்கு. 

எனக்காக நீ இப்படியே ஒயிட் டிரஸ்ல இருப்பியா… என்… பக்கத்துல… ” என்று திலிப் தட்டு தடுமாறி அவன் மனதில் இருந்ததை மறைமுகமாக நிலாலினியிடம் சொன்னான்.

திலிப்பின் கண்ணில் அத்தனை காதலும் ஏக்கமும் போட்டி போட்டு மலையின் விலும்பி நிற்பது போல் ஒரு வித பதட்டத்துடனே இது தான் கடைசி என்பது போல் இருக்க, அதை பார்த்த நிலாலினிக்கு பாதி புரிந்தும் பாதி புரியாதது போலும் இருந்தது. 

” அத்தனை காதல் இருக்கிறவன் எதற்காக நான் வருவதற்கு முன்பே இத்தனை அவசரமாக இன்னொருத்திக்கு வாக்க பட எல்லா ஏற்ப்பாடையும் செய்யனும் ! 

இப்படி இன்னொருத்தி கூட இரண்டு நாளில் கல்யாணத்தை வெச்சுட்டு இப்போ எதுக்கு வந்து என்கிட்ட இப்படி எல்லாம் பேசணும் ? 

அதுவும் இதே மாதிரி ஒயிட் டிரஸ்ல அவன் கூட இருக்க சொல்கிறான் !!! அதுவும் இவன் என்னைய இந்திரா இடத்தில நிக்க சொல்லுறான் !!!

அப்போ இவனையே நம்பி ஊரைக் கூட்டி தம்பட்டம் அடிச்சு இப்படி கிராண்ட்டா கல்யாணம் பண்ண அவன் கூட வந்து நிக்கிற இந்திரா நிலைமை ? 

அவளுக்காக என்னைய கை விட்டான். இப்போ… எனக்காக அவளையும் இவன் கை விட போறானா ! அப்போ நாளைக்கு இன்னொருத்தி வந்தா ! ச்ச… என்ன ஜென்மம்மோ !!! “

என்று நினைத்த நிலாலினி இது வரை திலிப்பின் காதலை மட்டும் தான் வெறுத்திருந்தாள் ஆனால் இப்பொழுது திலிப்பின் கேரக்டர்ரையே முழுதாக வெறுத்து விட்டாள். 

திலிப் நிலாலினி கையை பிடித்து இருக்க, எங்கு இவன் மீண்டும் நிலா புறம் சாய்ந்து விடுவானோ என்று அச்சத்தில் அவர்களை நோக்கி வேகமாக இந்திரா வந்தாள்.

அதற்குள் திலிப்பின் ஃபேமிலி ஃப்ரெண்ட் ஒருத்தன் வந்தவன், ” டேய்… மச்சா… இதுதான் உன் ஃபியான்சி ஆ ! சூப்பர் ஜோடி டா ” எங்க, அவர்கள் அருகில் வந்த இந்திராவுக்கு முகம் கருத்து விட்டது. 

திலிப்புக்கு இதுவே உண்மையாக கூடாதா என்று இருக்க அவன் அவனிடம் அதை மறுக்கவில்லை.

நிலாலினி திலிப்பின் கையை எடுத்து விட்டவள், ” சாரி. நான் அவங்க ஃபியான்சி இல்லை. இதோ… இவங்க தான் திலிப்போட ஃபியான்சி இந்திரா. நான் இவங்க இரண்டு பேருக்கும் ஃப்ரெண்ட் ” என்று அவளையும் இந்திராவையும் சரியாக அறிமுகப்படுத்தினாள்.

உடனே திலிப்பின் ஃபேமிலி ஃப்ரெண்ட், ” ஓ… சாரி சாரி… நீங்களும் ஒயிட் டிரஸ் போட்டு இருந்தீங்களா அதான் கண்பியுஸ் ஆகிட்ட ” தவறு செய்து விட்டமே என்று அவன் உண்மையிலுமே வருந்தி சாரி கேட்க,

” இந்த ஒயிட் டிரஸ்னால தான் இவ்வளோ கண்பியுஷன். ஒன் மினிட் ” என்று அங்கிருந்து நகர்ந்தவள் அந்த கார்டனை டிகரேட் செய்து விட்டு மிச்சத்தை எடுத்து வைத்துக் கொண்டிருந்தவர்களிடம் சென்றவள், அதில் எக்ஸஸ் ஆக இருந்த ஒரு பிளாக் கலர் டிசைனர் கிளாத் மட்டும் காசு கொடுத்து வாங்கிய நிலாலினி அவர்களிடம் இருந்து கத்தரிக்கோலை வாங்கி அந்த கிளாத்தை நாங்காக மடித்து மூர்மையான முக்கிலும் சின்ன வட்டமாகவும் பறந்திருந்த மற்றொரு புறத்தில் அதிகமாக இருந்த இடத்தை மட்டும் வெட்டி வட்டமாக ஆக்கினாள். 

அந்த கிளாத்தை அவள் விரிக்க அது சுற்றியும் வட்டமாகவும் நடுவில் சிறிய வட்டமான வெட்டப்பட்டும் தெரிந்தது.

அந்த மின்னும் பிளாக் கிளாத்தின் சிறிய வட்ட இடத்தை நிலாலினி தலையில் நுழைத்துக் கொள்ள அவள் கழுத்தை சுற்றி இருந்து கீழே இடுப்பு வரை அவளின் ஒயிட் ஷர்ட்டை மறைக்கும் கேபி கோட் ( cape coat ) ஆக அது மாறியது. அதிலும் நிலாலினி அவளின் ஒயிட் ஷர்ட் காலரை மட்டும் வெளியில் எடுத்து விட அவளுக்கு அது படும் ஜோர்ராக இருந்தது. 

இரண்டே நிமிடத்தில் இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் போல் நிலாலினி இரண்டே நிமிடத்தில் இன்ஸ்டன்ட்டாக ஒரு டிரஸை ஸ்டைல் செய்ததில் அங்கிருந்த அனைவருமே வாய் அடைத்து போய் விட்டனர். 

அவள் போட்டிருந்த ஒயிட் டிரஸை காரணம் காட்டி நிலாலினியை பற்றி ” இந்திரா மேல் பொறாமை பட்டு அவளுக்கு போட்டியாக வந்து விட்டாள், இந்திராவிடம் இருந்து திலிப்பை பறிக்க வந்து விட்டாள் ” என்று எல்லாம் தவறாக பேசிய வாய் அனைத்தும் இப்பொழுது அனபாண்ட் போட்டது போல் பட்டுன்னு ஒட்டிக் கொண்டது.

நிலாலினியிடம் திலிப் ஒயிட் டிரஸிலே இருக்க சொல்லி கேட்டும் அவள் பிளாக் டிரஸ்க்கு மாறியதுமே, அவள் தன்னை நிகாரித்து விட்டாள் என்று திலிப்புக்கு பிரிந்தது.

நிலாலினியை நிழல் எனவே பின்தொடர்ந்து கொண்டிருந்தவன் அவளுக்காக கொண்டு வர சொல்லியிருந்த பிளாக் டீ ஷர்ட்டை அவன் கையிக்கு வந்து சேரவும் அதற்கு அவசியமே இல்லை என்பது போல் நிலா செய்த செயலில் மீண்டும் ஒரு முறை அவளை பார்த்து பெருமிதம் கொண்டான் நிலாவின் நிழல் அவன். 

அவன் அருகில் இருந்த நெட் கிளாத்தால் செய்யப்பட்ட ஒரு ஒயிட் ரோஸை அங்கிருந்த டிகரேசன் செய்யும் பணி பெண்ணிடம் கொடுத்து நிலாலினியிடம் கொடுக்க சொன்னான். 

அவளும் அவன் சொன்னது போலவே நிலாலினியிடம், ” அ ஸ்மால் கிஃப்ட் ஃபார் யூவர் கன்பிடன்ஸ் மேம்… ” என்று சொல்லி கொடுக்க, அது ஒரு பெண்ணே பெண்ணை பாராட்டி கொடுத்தனால் நிலாலினியும் அதனை முகமலர்ச்சியுடன் வாங்கியவள், தன் மின்னும் பிளாக் கேபி கோட்டில் குத்திக் கொள்ள, அவ்வளோ தான் அங்கிருந்த பல ஆண்கள் அவளை பார்த்து ஃபிளாட் ஆகினர்.

அவன் எதற்காக அதை கொடுத்தானோ அதையே நிலாவும் சொல்லி வைத்தது போல் சரியாக செய்ததில் நிலாவின் நிழல் அவனுக்கு அத்தனை மகிழ்ச்சி. 

எப்பொழுதும் போல் அவன் இருப்பதே அவளுக்கு தெரியாது போல் இருந்து அவளின் ஒவ்வொரு அசைவுக்கும் மறைவில் இருந்து அசந்தான் நிழல் அவன்.

நிலாலினி பார்த்து அனைவரும் வாய் அடைத்து போய் நிற்க, அவளின் ஒயிட் டிரஸை பார்த்து அவள் தான் திலிப்பின் ஃபியான்சி என்று தவறாக நினைத்த திலிப்பின் அந்த ஃபேமிலி ஃப்ரெண்ட்டைப் பார்த்து, ” இப்போ கண்பியுஷன் இல்லை தானா ! ” என்று நிலாலினி கேட்க,

அவன் இல்லை என்று தலை அசைக்கவும் அவனை பார்த்து சினேகமாக சிரித்து வைத்து விட்டு நிலாலினி நகர்ந்துவிட்டாள்.

ஆனால் அவன் தான் அவளை பார்த்து அசந்து நகர மறந்த மரம் போல் நின்று விட்டான். பின் திலிப் உழுக்கத்தான் அசைந்தவன், காற்றாடி போல் நிலா இருக்கும் இடத்திற்கு அங்கும் இங்கமாகவே உலாவிய படியே அவளை சைட் அடித்துக் கொண்டிருந்தான்.

பார்ட்டிக்கு வந்த பல பேரின் கண்ணும் நிலாலினி மேல் தான் இருந்தது,” யார்டா அந்த பொண்ணு. அவங்க சிங்கிள் ஆ ! என்னைய அந்த பொண்ணுக்கு இன்றோ பண்ணு விடு ” என்று பலரும் திலிப் மற்றும் இந்திராவிடம் கேட்டனர்.

வந்தவர்கள் அனைவரும் நிலாலினி பற்றியே பேச அதை கேட்க கேட்க பத்திக் கொண்டு வந்தது இந்திராவுக்கு.

அவளை எதாவது பண்ணனுமே என்று இந்திரா பார்ட்டியில் கிளப்பி விட்ட நிலாலினியை பற்றிய ஒரு புரலியால் நாளை என்கேஜ்மெண்ட்டில் நிலாலினிக்கு இதயமே உடையும் அளவிற்கு ஒரு வலி காத்துக் கொண்டிருக்கிறது என்று தெரியாத நிலாலினியோ இன்று பார்ட்டியில் அனைவரின் கண் படும் அளவிற்கு புன்னகை பூத்த முகமாய் ஜொலித்துக் கொண்டிருந்தாள்.

நிலாவின் நிழல் தொடரும்…

____________________________

கதையை படித்து விட்டு பிடித்து இருந்தால் உங்கள் கருத்துக்களை என்னுடன் கமெண்டில் பகிர்ந்து கொள்ளுங்கள் மக்காஸ்…

– தமிழ் நிலா 🖤 

இந்த episode பிடிச்சிருந்தா எழுத்தாளரை உற்சாகப்படுத்துங்க!!
இப்போதே உற்சாகப்படுத்துங்கள்

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

No votes so far! Be the first to rate this post.

    No comments yet.