நிலாவின் நிழல் – 03

தமிழ் நிலா | 19 May 2026 | Share

ஹோட்டல் ரிஸப்ஷனில் இருந்து எக்ஸிக்யூடிவ் ரூம் சாவியை வாங்கி கொண்டு ரூமுக்கு சென்றாள் நிலாலினி.

குளித்து முடித்து பாத் டவலை சுற்றிக் கொண்டு வந்து பெட்டில் விழுந்தவள், 

ரிஸப்ஷனில் நிலாலினி இந்த எக்ஸிக்யூடிவ் ரூம் புக் செய்தப் பொழுது இந்திராவின் முகம் போன போக்கை நினைத்து பார்த்தாள்.

நிலாலினியிடம் அந்த ரூமை புக் செய்யும் அளவிற்கு காசு இருக்காது என்று நினைத்து அவளை ஏளனம் செய்தவள், நிலாலினி காலேஜ் படிக்கும் பொழுது பல போட்டிகளின் மூலம் பணத்தை பரிசாக பெற்று இரண்டு லட்சம் அளவிற்கு பேங்க்கில் சேமித்து வைத்துள்ளாள் என்பதை இந்திரா அறிய வில்லை.

” இந்திரா… நான் வேணா உன்ன மாதிரி மல்டி மில்லியினர் ஃபேமிலில இல்லாம மிடில் கிளாஸ் ஃபேமிலில இருந்து வந்துருக்கலாம். ஆனா பாரு… நீ புக் பண்ணவே யோசிச்சு பார்த்து பயந்த இந்த எக்ஸிக்யூடிவ் ரூம் எனக்கு ஜஸ்ட் ஒரே ஒரு காம்படிசன் உட பிரைஸ் மனி தான். அதுவும் முழுக்க முழுக்க என்னோட சொந்த உழைப்போட காசு. அப்பா காசுல மட்டுமே மினுக்கிட்டு இருக்க நீ என்னைய தப்பா எடை போட்டுடியே இந்திரா… ” என்று இதழ் வளைத்து சிரித்த நிலாலினிக்கு மனதில் அவள் மேல் அத்தனை கோபமும் இருந்தது.

இருந்தும் அந்த கோபத்திலே மிதந்து தன் எனர்ஜியை வேஸ்ட் பண்ண விரும்பாத நிலாலினி. மழையில் நழைந்து வந்ததிற்க்கு இதமாய் ஸ்ட்ராங்காய் ஒரு இஞ்சி டீ மட்டும் ரூமுக்கு ஆர்டர் செய்து குடித்து விட்டு படுத்து விட்டாள்.

நிலாலினி ஓர் அளவிற்கு ஆழ்ந்த தூக்கத்திற்கு செல்லும் பொழுது அவள் ரூமின் கதவு தட்டப்பட்டது.

சத்தம் கேட்டு எழுந்த நிலாலினி டோர் லென்ஸ் மூலம் பார்க்க அங்கு அவளுடன் காலேஜில் படித்த இந்திராக்கு பிரெண்ட்ஸ் என்னும் பெயரில் அவளுடன் சுற்றி திரியும் அவளின் முப்பெரும் தேவிகள் ஷாலினி, மகா, நிஷா வந்து நின்றுக் கொண்டிருந்தனர்.

அதை பார்த்ததும் நிலாலினி அவர்களை சமாளிக்க தன் மனதை ஒரு நிலை படுத்தி பெரும் மூச்சு ஒன்றை இழுத்து விட்டு கதவை திறந்தாள். 

நிலாலினி பாத் ரோப் உடன் இருப்பதைக் கண்டு அந்த கூட்டத்தில் வேண்டா வெறுப்பாய் அங்கு நிற்பது போல் நின்று இருந்த ஷாலினி, ” ஹே… நான் சொல்லல ! இவ வர மாட்டான்னு. பாரு இன்னும் இவ கிளம்பாம கூட இப்படியே இருக்க ” எங்க

உடனே அவள் பக்கத்தில் இருந்த நிஷா, ” ஆமா டி. இவ பின்னாடியே சுத்திட்டு இருந்த திலிப் இப்போ இந்திராவ கல்யாணம் பண்ணிக்க போறன்னதும், இப்போ தான் இவளுக்கு அவன மிஸ் பண்ணிட்டோம் இன்னு புத்தி வந்து ஃபீல் பண்ணிட்டு இருக்க போல. என்ன நிலா !!! உன் சோகத்த போக்குறதுக்கு நான் வேணா உனக்கு இரண்டு பாட்டில் ஆர்டர் பண்ணாட்டா ? ” என்று கேலியாய் சிரிக்க,

மகா, ” எய்… சும்மா இருங்க டி. அவளே சோகத்துல இருக்க இதுல நீங்க வேற… ” என்று அவர்களை அடக்கியவள், 

” நீ ஃபீல் பண்ணாத நிலா. நாங்க உன்ன பார்ட்டிக்கு கூப்பிட்டு போலாம்ன்னு தான் வந்தோம். ஆனா நீ இன்னும் கிளம்புற இடியாவே இல்லாமா இப்படி இருக்க. சரி… நாங்க பார்ட்டிக்கு போறோம் உனக்கு ஓகே ஆ இருந்தா மட்டும் நீ கிளம்பி வா… இல்லைன்னா நீ இங்கேயே ரெஸ்ட் எடு ” என்று அவள் பெருமிதமாய் சொல்லுவது போல் பேச,

நிலாலினி, ” அச்சச்சோ… அதுக்குள்ள பார்ட்டிக்கு டைம் ஆகிடுச்சா ! நான் பார்ட்டிக்கு இன்னும் டைம் இருக்குன்னு நினைச்சு தான் படுத்த, ஆனா பாருங்க… டிராவல் பண்ணி வந்த டையர்டுல இவ்வளோ நேரம் தூங்கிருக்க. நல்ல வேளை நீங்க வந்து எழுப்பிடீங்க. தேங்க்ஸ் கைஸ்… நீங்க முன்னாடி போங்க நான் போய் கிளம்புற ” என்று கதவை சாற்றி விட்டாள்.

நிலாலினியை சீண்டுவதற்காகவே வந்தவர்கள் அவள் இப்படி சொல்லியதும், ” என்ன டி இவ… எப்படியும் பார்ட்டிக்கு வரமாட்டான்னு சொல்லி நம்ம இவளை கலாய்க்க வந்தா இவ வரேன்னு சொல்லிட்டு போற ! “, நிஷா

ஷாலினி ” ஒரு வேளை உண்மையாவே வந்துருவாளோ !!! ” எங்க

மகா, ” அப்படி எல்லாம் வரமாட்டா டி. இவ நம்ம வாயை அடைக்க அப்படி சொல்லிட்டு போற. வாங்க… ” என்று இந்திராவின் முப்பெரும் தேவியர்கள் பார்ட்டிக்கு கிளம்புவதற்காக அங்கிருந்து சென்று விட்டனர்.

அந்த பார்ட்டிக்கு எல்லாம் போக வேண்டாம் நிம்மதியாய் படுத்து தூங்கலாம் என்று இருந்த நிலாலினி இப்பொழுது அவர்கள் பேசியதில் கண்டிப்பாக அந்த பார்ட்டிக்கு போயே ஆக வேண்டும் என்று முடிவுக்கு வந்து விட்டாள்.

இந்திரா சொல்லியதை நினைவில் வைத்துக் கொண்டு நிலா, சில்க் ஒயிட் ஷர்ட்டும் ப்ளூ ஹை வெஸ்ட் ஜீன்னும் போட்டு ஷர்ட்டை முன்னாடி மட்டும் டக் இன் செய்து ஃப்ரீ ஹேர் விட்டு காதில் ஒரு மெல்லிய கொடி போல் நீண்டு தொங்கும் டிசைனிர் ஸ்டட்டும் அணிந்து, பார்த்ததும் எடுப்பாய் கான்பிடன்ட்டாக தெரியும் சேரி ரெட் கலர் லிப்ஸ்டிக் போட்டு எலகன்ட் ஆக ரெடி ஆகி பார்ட்டி நடக்கும் இடத்திற்கு சென்றாள்.

அந்த ஹோட்டலின் பின்புறம் இருந்த கார்டனில் பார்ட்டி லைட்கள் போட்டு கேக்ஸ், ஸ்நாக்ஸ், ட்ரிங்க்ஸ் என அலங்கரிக்கப் பட்டு இருந்தது.

நிலாலினி உள்ளே நடந்து செல்ல அங்கிருந்தவர்கள் எல்லாம் அவளை பார்த்து கிசு கிசுத்தனர்.

எப்படியும் தான் பார்ட்டிக்கு சென்றாலே எதாவது கிசுகிசுப்பு வரும் அதை எல்லாம் கண்டுக்க கூடாது என்ற மைண்ட் செட்டில் வந்த நிலாலினி முதலில் அதை எல்லாம் கண்டுக் கொள்ளாது உள்ளே சென்றாள்.

அங்கு ஸ்டேஜ் போன்ற ஒரு இடத்தில் திலிப்பும் இந்திராவும் நெருக்கமாய் பல விதங்களில் ஃபோட்டோவிற்கு போஸ் கொடுத்து கொண்டு இருந்தனர். 

அதை பார்த்த பின்பு தான் நிலாலினி கவனித்தாள். அங்கு திலிப் இந்திராவை தவிர வேறு யாரும் ஒயிட் டிரஸ் போட்டு இருக்கவில்லை.

பார்ட்டிக்கு வந்தவர்கள் எல்லாம் பிளாக் டிரஸ் போட்டு இருக்க அவர்களில் தனித்து தெரிந்தாள் நிலாலினி.

அவளை பார்த்ததும் திலிப்பை கை கோர்த்து கூட்டி வந்த இந்திரா, ” என்ன நிலா !!! நான் தான் உன்கிட்ட சொன்னன்ல பார்ட்டிக்கு டிரஸ் கொர்ட் பிளாக்ன்னு… ” என்று திலிப்பின் முன் நல்லவள் போல் பேச,

” இல்லையே… நீ சொன்ன மாதிரியே தான் நான் ஒயிட் ஷர்ட் ப்ளூ ஜீன் போட்டு வந்துருக்க ” என்று நிலாலினி இந்திராவை மாட்டி விடவும்,

திலிப்புக்கு உண்மை தெரிந்து விடுமோ என்று பதறிய இந்திரா, ” இல்லை நிலா. நான் உன்கிட்ட தெளிவா தான் சொன்ன, எனக்கும் திலிப்புக்கும் ஒயிட் ஷர்ட் ப்ளூ ஜீன், பார்ட்டிக்கு வரவங்க எல்லாருக்கும் பிளாக் டீ ஷர்ட் ப்ளூ ஜீன். நான் கூட உனக்கும் டிரஸ் நானே அரேஞ்ச் பண்ணுறேன்னு கேட்டேன்ல ! “, என்று சமளித்தவள், அங்கு அவள் அருகில் நின்று இருந்த பெண்ணிடம், ” நீயும் தான அப்ப எங்க கூட இருந்த ! ” என்று இந்திரா தெரியாதது போல் கேட்கவும், 

நிலாலினிக்கு புரிந்து விட்டது இது எல்லாம் இந்திரா வேண்டும் என்றே பிளான் செய்தது தான் என்று.

அந்த பெண்ணோ நிலாலினி ஹோட்டலுக்கு வரும் பொழுது இந்திரா உடன் ரிஸப்ஷனில் நின்று இருந்த அந்த மிக் செட் வாய், அவள் இந்திரா இப்படி கேட்கவும், ” ஆமா ஆமா. நீயும் இவ கிட்ட டிரஸ் கோர்ட் சொல்லி, நீயே தான் எல்லாருக்கும் டிரஸ் அரேஞ்ச் பண்ணுறேன்னு சொல்லியும் கூட என் டிரஸ நானே பாத்துக்குறேன்னு இவ தான் சொன்ன. இவ அப்படி சொல்லுறப்பவே இவ எதோ பண்ண போறான்னு எனக்கு தோனிச்சு. இப்போ பாரு உனக்கே போட்டிய டிரஸ் பண்ணிட்டு வந்து நிக்குறா ” என்று அவள் சொல்லவும், அந்த கூட்டம் சலசலத்தது. 

திலிப் உடனே இந்திராவிடம் இருந்து தன் கையை விடுவித்து நிலாவை தனியே ஓரமாய் அழைத்து சென்றவன், ” என்ன நிலா இது எல்லாம் ! அவங்க சொல்லுறது எல்லாம் உண்மையா ? நீ இந்திராவுக்கு போட்டியா தான் இது எல்லாம் பண்ணுனியா ? உனக்கு… என்மேல… இன்னும் அப்படி விருப்பம் இருக்கா ? ” என்று அவன் கேட்க,

” வாட் !!! விருப்பமா ? ” என்று கேட்ட நிலாலினிக்கு, ” உன்மேல விருப்பப்பட்டு தான காலேஜ் முடிஞ்சதும் உனக்கு ஓகே சொன்ன ! உன்மேல விருப்பப்பட்டு தான இன்டர்ஷிப் முடிஞ்சதும் அவங்க கொடுத்த நல்ல வேலையை கூட வேண்டான்னு ஒதரி தள்ளிட்டு வந்த ! உன்மேல விருப்பப்பட்டு தான உன்ன கல்யாணம் பண்ணி குழத்தை குட்டின்னு வாழனும்ன்னு உன் முன்னாடி வந்து நின்ன ! நீ தான நான் இங்க இல்லாத இந்த மூணு மாசத்துல வேற ஒருத்திய கல்யாணம் பண்ணிக்க எல்லாம் ரெடி பண்ணிட்டு இப்போ புது மாப்பிளையா என் முன்னாடி நிக்குற !!! ” என்று தன் மனதில் இருந்ததை கத்தி அவன் புத்தியில் உரைப்பது போல் சொல்ல வேண்டும் என்று தான் நிலாலினிக்கு வாய் துடித்தது.

ஆனால் இனி அதை எல்லாம் சொல்லி என்ன மாறி விட போகிறது ? அப்படி நான் சொல்லி இவன் இப்பொழுது அவளை விட்டுட்டு என்னை கட்டிகிறேன் என்று சொன்னலும் கூட, இவனை எல்லாம் நம்பி நம் வாழ்க்கையை இவனுடனா வழ முடியும் ? என்று அவனை மனதில் முழுவதும் வெறுத்த நிலாலினி,

திலிப்பிடம், ” எனக்கு… உன்மேல… விருப்பமா ? ” என்று கலகலவென்று சிரித்த நிலாலினி, ” அதுக்கு எல்லாம் வாய்ப்பே இல்லை ராஜா… ” என்று விட்டாள்.

எதையோ எதிர்பார்த்து கேட்ட திலிப்புக்கு தான் அவள் பதிலில் முகம் வாடி விட்டது.

” நான் ஆக்சுவல்லி டிரஸ் கோர்ட் சரியா தெரியாம மாத்தி போட்டுட்டு வந்துட்ட. இரு நான் போய் இந்தரா கிட்ட அவ அரேஞ்ச் பண்ண பிளாக் டிரஸ் எக்ஸ்டிரா இருக்கான்னு கேட்டு சேன்ஞ் பண்ணிடுற ” என்று அங்கிருந்து விலக போன நிலாலினியை வழி மறித்து அவளுக்கு நெருமாக நின்றான் திலிப்.

அடுத்து அவன் சொல்லிய வார்த்தைகளில் நிலாலினி செய்த செயலை பார்த்து அனைவரும் வாய் அடைத்து போய் விட்டனர்.

நிலாவின் நிழல் தொடரும்…

____________________________

கதையை படித்து விட்டு பிடித்து இருந்தால் உங்கள் கருத்துக்களை என்னுடன் கமெண்டில் பகிர்ந்து கொள்ளுங்கள் மக்காஸ்…

– தமிழ் நிலா 🖤 

இந்த episode பிடிச்சிருந்தா எழுத்தாளரை உற்சாகப்படுத்துங்க!!
இப்போதே உற்சாகப்படுத்துங்கள்

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

No votes so far! Be the first to rate this post.

    No comments yet.